தற்பொழுது நம் நடை முறையில் இருக்கும் சொற்களும் அதற்கான தமிழ்ச் சொற்களும்

ஸ்ரீ

க்ஷ

ஜனநாயகம் - குடியாட்சி

ஜனம் - மாந்தர்மக்கள்

ஜனனம் - பிறப்பு

ஜாதகம்- பிறப்புக் குறிப்பு

ஜாலம் - வேடிக்கை

ஜமீன்தார் - குருநில மன்னர்

ஜம்பம் – தற்பெருமை

ஜலம் – தண்ணீர்

ஜலதோஷம் - நீர்க்கோவை

ஜல்தி - விரைவு

ஜவான் – இளயன்

ஜனன மரணம் – பிறப்பு இறப்பு

ஜன்னல் – பலகணி

ஜாக்கிரதை – விழிப்பு, எச்சரிக்கை

ஜாதி - குலம்

ஜாமம் - யாமம்

ஜூரம் - காய்ச்சல்

ஜீரணம் – செரிமானம்

ஜீவனம் – பிழைப்பு

ஜீவன் – உயிர்

ஜீவியம் – வாழ்க்கை

ஜெயம் – வெற்றி

ஜென்மம் - பிறவி

ஜோசியர் – கணியர்

ஜோதிடம் - கணியம்

ஜோதி - ஒளி

ஜோடி - இணை

ஜோடித்தல் - அழகு செய்தல்

ஸந்ததி - கால்வழி

ஸமத்துவம் - ஒரு நிகர்

ஸமரசம் - வேறுபாடின்மை

ஸமீபம் - அண்மை

ஸம்ஹாரம் - அழிவு

ஸோபை - பொலிவு

ஸௌந்தர்யம் - பேரழகு

ஸ்தாபனம் நிறுவனம்

ஸ்தானம் - இடம்

ஷோக்கு - பகட்டு, தளுக்கு