கடவுள் வாழ்த்து
பாலும்
தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும்
கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய்
துங்கக்
கரிமுகத்து தூமணியே நீ எனக்கு
சங்கத்
தமிழ் மூன்றும் தா
நல்வழி
1. புண்ணியம்ஆம் பாவம்போல்
போனநாள் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு
வைத்தபொருள் -எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை எச்சமயத்தோர்
சொல்லும்
தீதொழிய நன்மை செயல்
2. சாதி இரண்டொழிய வேறில்லை
சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் -
மேதினியில்
இட்டார் பெரியார் இடாதார்
இழிகுலத்தார்
பட்டாங்கில் உள்ள படி
3. இடும்பைக்(கு) இடும்பை
இயலுடம்(பு) இதன்றே
இடும்பொய்யை மெய்யென்(று)
இராதே - இடுங்கடுக
உண்டாயின் உண்டாகும் ஊழில்
பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு
4. எண்ணி ஒருகருமம்
யார்க்கும்செய் ஒண்ணாது
புண்ணியம் வந்தெய்து
போதல்லால் - கண்ணில்லான்
மாங்காய் விழவெறிந்த
மாத்திரைக்கோல் ஒக்குமே
ஆங்காலம் ஆகும் அவர்க்கு
5. வருந்தி அழைத்தாலும் வாராத
வாரா
பொருந்துவன போமி(ன்) என்றால்
போகா - இருந்தேங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம்
தாம்நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்
6. உள்ளது ஒழிய ஒருவர்க்(கு)
ஒருவர்சுகம்
கொள்ளக் கிடையா குவலயத்தில்
-வெள்ளக்
கடலோடி மீண்டும் கரையேறினால்
என்
உடலோடு வாழும் உயிர்க்கு
7. எல்லாப்படியாலும் எண்ணினால்
இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலிநோய்
புன்குரம்பை -நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால்
ஆம்கமல நீர்போல்
பிறிந்திருப்பார் பேசார்
பிறர்க்கு
8. ஈட்டும் பொருள்முயற்சி
எண்ணிறந்த ஆயினும்ஊழ்
கூட்டும் படியன்றிக்
கூடாவாம் - தேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர்
கேண்மின்
தரியாது காணும் தனம்.
9. ஆற்றுப் பெருக்கற்
றடிசுடுமந் நாளுமவ்வா(று)
ஊற்றுப் பெருக்கால்
உலகூட்டும் - ஏற்றவர்க்கு
நல்ல குடிபிறந்தார்
நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை என மாட்டார் இசைந்து
10. ஆண்டாண்டு தோறும் அழுது
புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர்
- வேண்டா
நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும்
எமக்கென்? என்(று) இட்டு, உண்டு, இரும்
11. ஒருநாள் உணவை ஒழியென்றால்
ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய்
- ஒருநாளும்
என்நோ(வு) அறியாய்
இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அறிது
12. ஆற்றங் கரையின் மரமும்
அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழும்
அன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு
ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு
13. ஆவாரை யாரே அழிப்பர்
அதுவன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர்-
ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்
மெய்அம் புவியதன் மேல்
14. பிச்சைக்கு மூத்த
குடிவாழ்க்கை பேசுங்கால்
இச்சைபல சொல்லி இடித்துண்கை
- சிச்சீ
வயிறு வளர்க்கைக்கு மானம்
அழியாது
உயிர்விடுகை சால உறும்
15. சிவாய நம என்று சிந்தித்
திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை -
உபாயம்
இதுவே மதியாகும் அல்லாத
எல்லாம்
விதியே மதியாய் விடும்
16. தண்ணீர் நிலநலத்தால் தக்கோர்
குணம்கொடையால்
கண்ணீர்மை மாறாக் கருணையால்
- பெண்ணீர்மை
கற்பழியா ஆற்றல் கடல்சூழ்ந்த
வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி
17. செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இருநிதியம்?- வையத்து
ஏஅறும்-பாவம்ஸ்ரீஏ என்ன
அறிந்து அன்றிடார்க்கு இன்று
வெறும்பானை பொங்குமோ மேல்?
18. பெற்றார் பிறந்தார்
பெருநாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் எனவேண்டார்
- மற்றோர்
இரணம் கொடுத்தால் இடுவர்
இடாரே
சரணம் கொடுத்தாலும் தாம்
19. சேவித்தும் சென்றிரந்தும்
தெண்ணீர்க் கடல்கடந்தும்
பாவித்தும் பாராண்டும்
பாட்டிசைத்தும் - போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கே நாம்
20. அம்மி துணையாக ஆறிழிந்த
வாறொக்கும்
கொம்மை முலைபகர்வார்
கொண்டாட்டம் -இம்மை
மறுமைக்கும் நன்றன்று
மாநிதியம் போக்கி
வெறுமைக்கு வித்தாய் விடும்
21. நீரும் நிழலும்
நிலம்பொதியும் நெற்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும்
- ஊரும்
வருந்திருவும் வாழ்நாளும்
வஞ்சமில்லார்க் கென்றும்
தரும்சிவந்த தாமரையாள் தான்
22. பாடுபட்டுத் தேடிப் பணத்தைப்
புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்
- கூடுவிட்டுங்(கு)
ஆவிதான் போயினபின் யாரே
அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்
23. வேதாளம் சேருமே
வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன்
குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை
24. நீறில்லா நெற்றிபாழ்
நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக் (கு) அழகுபாழ்
- மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ்
பாழே
மடக்கொடி இல்லா மனை
25. ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் -
போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய்
ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம்
நாடு
26. மானம் குலம் கல்வி வண்மை
அறிவுடைமை
தானம் தவர்உயர்ச்சி தாளாண்மை
- தேனின்
கசிவந்த சொல்லியர்மேல்
காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்
27. ஒன்றை நினைக்கின்
அதுஒழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும்
வந்தெய்தும் - ஒன்றை
நினையாத முன்வந்து
நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல்
28. உண்பது நாழி உடுப்பது
நான்குமுழம்
எண்பது கோடி நினைந்து
எண்ணுவன - கண்புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை
மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான்
29. மரம்பழுத்தால் வெளவாலை
வாவென்று கூவி
இரந்தழைப்பார் யாவருமங்
கில்லை - சுரந்தமுதம்
கற்றா தரல்போல் கரவாது அளiப்பரேல்
உற்றார் உலகத் தவர்
30. தாம்தாம்முன் செய்தவினை தாமே
அனுபவிப்பார்
பூந்தா மரை யோன் பொறிவழியே -
வேந்தே
ஒறுத்தாரை என்செயலாம்
ஊரெல்லாம் ஒன்றா
வெறுத்தாலும் போமோ விதி
31. இழுக்குடைய பாட்டிற்(கு)
இசைநன்று சாலும்
ஒழுக்கம் உயர்குலத்தின்
நன்று - வழுக்குடைய
வீரத்தின் நன்று விடாநோய்
பழிக்கஞ்சாத்
தாரத்தின் நன்று தனி
32. ஆறிடும் மேடும் மடுவும்போ
லாம்செல்வம்
மாறிடும் ஏறிடும்
மாநிலத்தீர் - சோறிடும்
தண்ணீரும் வாரும் தருமமே
சார்பாக
உண்ணீர்மை வீறும் உயர்ந்து
33. வெட்டெனவை மெத்தனவை
வெல்லாவாம் வேழத்தில்
பட்டுருவும் கோல்பஞ்சில்
பாயாது - நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்
34. கல்லானே ஆனாலும்
கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றங்
கெதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள்
மற்றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா(து) அவன்வாயிற் சொல்
35. பூவாதே காய்க்கும் மரமுள
மக்களுளும்
ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே
- தூவா
விரைத்தாலும் நன்றாகா
வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலும் தோன்றா(து)
உணர்வு
36. நண்டுசிப்பி வேய்கதலி
நாசமுறுங் காலத்தில்
கொண்ட கருவளiக்கும்
கொள்கைபோல் - ஒண்தொடீ
போதம் தனம்கல்வி பொன்றவரும்
காலமயல்
மாதர்மேல் வைப்பார் மனம்
37. வினைப்பயனை வெல்வதற்கு வேதம்
முதலாம்
அனைத்தாய நூலகத்தும் இல்லை -
நினைப்பதெனக்
கண்ணுறுவ தல்லால் கவலைப்
படேல் நெஞ்சே
விண்ணுறுவார்க் கில்லை விதி
38. நன்றென்றும் தீதென்றும்
நானென்றும் தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே
- நின்றநிலை
தானதாம் தத்துவமாம்
சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள்.
39. முப்பதாம் ஆண்டளவில்
மூன்றற்று ஒருபொருளைத்
தப்பாமல் தன்னுள் பெறானாயின்
- செப்பும்
கலையளவே ஆகுமாம் காரிகையார்
தங்கள்
முலையளவே ஆகுமாம் மூப்பு
40. தேவர் குறளும் திருநான்
மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும்
- கோவை
திருவா சகமும் திருமூலர்
சொல்லும்
ஒருவா சகமென் றுணர்.
- ஔவையார்
0 Comments