தற்பொழுது நம் நடை முறையில் இருக்கும் சொற்களும் அதற்கான தமிழ்ச் சொற்களும்

கதாபாத்திரம் - நடிகலம்

கர்ப்பக்கிருகம் - கருவறை

கர்மம் - செயல்

கலாச்சாரம் - பண்பாடு

கலாரசனை - கலைச்சுவை

கல்யாணம் - மணவினைதிருமணம்

கருணாநிதி – அருட்செல்வன்

கருணை - அருள்

கருமி - கஞ்சன்

கர்நாடக சங்கீதம் - தமிழிசை

கர்வம் – செருக்கு

கர்ஜனை - முழக்கம்

கலாநிதி – கலைச்செல்வன்

கவி – பாட்டு, செய்யுள்

கவியோகி – பாவோகி

கஷ்டம் – துன்பம்

காரணம் - கரணியம்

காரியம் - கருமியம்

கார்த்திகேயன் - அரலன்

கார்த்திகை (விண்மீன்) - ஆரல்

காவியம் – வனப்பு, செய்யுட் தொடர்

காளமேகம் - கார்முகில்

கிருபை - இரக்கம்

கஷ்டம் - தொல்லைதுன்பம்

கீதம் - பாட்டுஇசை

கீர்த்தி - புகழ்

கீர்த்தனை- பாமாலைபாடல்

கும்பாபிஷேகம் - குடமுழுக்கு

கோத்திரம் - சரவடி

கோவனம் - நீர்ச்சீலை

கோஷம் - ஒலி

சகலம் - எல்லாம்அனைத்தும்

சகலன் – ஓரகத்தான்

சகஜம் - வழக்கம்

சக்தி - ஆற்றல்

சக்கரவர்த்தி - பேரரசன், மாவேந்தன்

சகாப்தம் – ஆண்டுமானம

சகி - தோழி

சகுனம் – குறி

சகோதரன் - உடன்பிறந்தான்

சகோதரி - உடன் பிறந்தவள்

சங்கடம் - இக்கட்டுதொல்லை

சங்கம் - கழகம்

சங்கதி - செய்தி

சங்கோஜம் - கூச்சம்

சங்கற்பம் - மனவுறுதி

சங்கிலி – தொடர், இருப்புத் தொடர்

சங்கீதம் – இன்னிசை

சட்னி - துவையல்

சதம் - நூறு

சதவீதம்சதமானம் - விழுக்காடு

சதா - எப்பொழுதும்

சதி- சூழ்ச்சி

சத்தம் - ஓசைஒலி

சத்தியம் – உண்மை

சத்துரு - பகைவன்

சந்தானம் - மகப்பேறு

சந்ததி - வழி மரபு, பிறங்கடை

சந்தர்ப்பம் - சமயம், சூழல்

சந்திரன் – மதி, நிலை

சந்தேகம் - ஐயம்

சந்தோஷம் - மகிழ்ச்சி

சந்நிதி – முன்னிலை

சந்நியாசி - துறவி

சபதம் - சூளுரை

சமத்துவம் – சமன்மை

சமாச்சாரம் – செய்தி

சமீபம் – அண்மை

சமுதாயம் – குமுகாயம்

சமுத்திரம் – வாரி, பெருங்கடல்

சமூகம் – இனத்தார்

சம்சாரம் - குடும்பம்மனைவி

சம்பந்தம் - தொடர்பு

சம்பவம் - நிகழ்ச்சி

சம்பாதி - ஈட்டுபொருளீட்டு

சம்பிரதாயம் - மரபு

சம்மதி - ஒப்புக்கொள்

சரணாகதி - அடைக்கலம்

சரித்திரம் - வரலாறு

சரீரம் - உடல்

சருமம் -தோல்

சர்வம் - எல்லாம்

சாதாரணம் - எளிமைபொதுமை

சாதித்தல் - நிறைவேற்றுதல்விடாது பற்றுதல்

சாதம் - சோறு

சாந்தம் - அமைதி

சாகசம் - துணிவுபாசாங்கு

சாராமிசம் - பொருட்சுருக்கம்

சாயந்திரம் - மாலை வேளைஅந்திப் பொழுது

சாவகாசம் - விரைவின்மை

சாஸ்திரம் - நூல்

சாசுவதம் - நிலை

சிகிச்சை - மருத்துவம்

சித்தாந்தம் - கொள்கைமுடிவு

சித்திரம் - ஓவியம்

சிநேகிதம் - நட்பு

சிம்மாசனம் - அரியணை

சிரத்தை - அக்கறைகருத்துடைமை

சிரமம் - தொல்லை

சின்னம் - அடையாளம்

சீக்கிரமாக - விரைவாக

சுதந்திரம் - தன்னுரிமைவிடுதலை

சுத்தமான - தூய்மையான

சுபாவம் - இயல்பு

சுலபம் - எளிது

சுலோகம் – சொலவம்

சுவாரஸ்யமான - சுவையான

சுவாசம் – மூச்சு

சுவாமி – ஆண்டவன், கடவுள்

சுவாமிகள் - அடிகள்

சூது - விகற்பம்

சேவகன் – இளயன்

சேவை - பணி,தொண்டு

சேனாதிபதி - படைத்தலைவன்

சேஷ்டை - குறும்பு

சைவ உணவு - மரக்கறி உண்டி

சொகுசு - மகிழ்வு

சொப்பனம் - கனா

சொரூபம் – உண்மை வடிவம்

சொர்க்கம் - விண்ணுலகு

சௌகர்யம் - வசதிநுகர்நலம்

சௌகரியம் – ஏந்து

சௌக்கியம் - நலம்

ஞாபகம் - நினைவு

ஞானம் - அறிவு

ஞானியார் - ஓதியார்

தசம் - பத்து

தத்துவம் - உண்மை

தம்பதியர் - கணவன் மனைவிஇணையர்

தரிசனம் - காட்சி

தர்க்கம் - வழக்கு

தர்க்க வாதம் - வழக்காடல்

தட்சனை - காணிக்கை

தந்தம் - மருப்பு

தந்திரம் – வலக்காரம்

தயவு - இரக்கம்

தயார் – அணியம்

தருமம் - அறம்

தருமசங்கடம் - அறத்தடுமாற்றம்

தருணம் - சமயம்

தற்காலிகம் - இடைக்காலம்

தனுசு - சிலை

தாபம் - வேட்கை

தாசி - தேவரடியாள்

தாரகமந்திம் - மூலமந்திரம்

தாவரம் - நிலைத்திணை

தானம் - கொடை

தானியம் - தவசம்

திகில் - அதிர்ச்சி

தியாக சீலன் – ஈகச் செம்மல்

தியாகம் - ஈகம்

தியாகி - ஈகி

தியானம் - ஊழ்கம்

திராட்சை - கொடி முந்திரி

திரிமூர்த்தி - முத்திருமேனி

திருப்தி - நிறைவு

தினசரி - நாள்தோறும்

தினம் - நாள்

தீர்க்கதரிசி ஆவதறிவார்

தீபம் - சுடர்

தீட்சிதர் - தீர்க்கையர்

தீவிரவாதி - கொடுமுனைப்பாளி

துக்கம் - துயரம்

துப்பாக்கி - துமுக்கி

துர்க்கை – காளி

துரதிருஷ்டம் - பேறின்மை

துரிதம் - விரைவு

துரோகம் - வஞ்சனை

துரோகி - இரண்டகன்

துவம்சம் - அழித்தொழித்தல்அழித்துத் தொலைத்தல்

துஷ்டன் - தீயவன்

தேகம் - உடல்

தேசம் - நாடு

தேதி - பக்கல்

தைரியம் - துணிவு

நட்சத்திரம் - விண்மீன்நாள்மீன்

நதி - ஆறு

நந்தி - காளை, விடை

நமஸ்காரம் - வணக்கம்

நர்த்தனம் - ஆடல்நடனம்,கூத்து

நவீனம் - புதுமை

நவீன பாணி - புது முறை

நவரசம் - தொண்சுவை

நஷ்டம் - இழப்பு

நாசம் - அழிவுவீண்

நாசூக்கு - நயம்

நாதசுரம் – இசைக்குழல்

நாதம் - ஒலி

நாத்திகம் - நம்பாமதம்

நாவல் - புதினம்

நாயகன் - தலைவன்

நாயகி - தலைவி

நிஜம் - உண்மைஉள்ளது

நிகண்டு - உரிச்சொற்றொகுதி

நிசபதமான - ஒலியற்றஅமைதியான

நிசப்தம் – அமைதி

நிச்சயம் - உறுதி

நிச்சயதார்த்தம் - மண உறுதி

நிதானம் - பதறாமை

நித்திய பூஜை - நாள் வழிபாடு

நித்திரை – தூக்கம்

நியதி – நயன்மை

நியமி - அமர்த்து

நியாயம் – நேர்மை, முறை

நிரூபி - மெய்ப்பிநிறுவு

நிருவாகம் - மேலாண்மை

நிருபணம் - மெய்ப்பு

நிர்ணயம் - தீர்மானம்

நிர்மூலம் - வேரறுப்பு

நிர்வாகி - ஆட்சியாளர்

நிதி - பொருள்,செல்வம்பணம்

நீசபாஷை – இழிமொழி

நீதி - அறம்நெறிஅறநெறிநடுவுநிலைநேர்நேர்நிறைநேர்பாடுமுறை

பகதூர் - ஆண்டகை

பகிரங்கம் – வெளிப்படை

பக்குவம் - பருவம், தெவ்வி

பக்தன் - அடியான்

பக்தி - இறை நம்பிக்கை

பசலி - பயிராண்டு

பசு - ஆவு

பசுப்பால் - ஆவின் பால்

பஞ்சாட்சரன்- ஐந்தெழுத்து

பஞ்சாங்கம் - ஐந்திரம்

பஞ்சாமிர்தம் – ஐயமது

பஞ்சேந்திரியம் – ஐம்புலன்

பதார்த்தம் – பண்டம், கறி

பதிலாக - பகரமாக

பத்திரிகை - இதழ், இதழிகை

பத்திரம் – ஆவணம்

பத்தினி - கற்புடையாள்

பத்மபூஷன் - தாமரைச் செல்வர்

பத்மவிபூஷன் - தாமரைப் பெருஞ்செல்வர்

பத்மஸ்ரீ – தாமரைத்திரு

பந்து - இனம்

பரவசம் - மெய்மறத்தல்

பரமாத்மா - பரவாதன்

பரவாயில்லை - தாழ்வில்லை

பரஸ்பரம் – தலைமாறு, இருதலை

பராக்கிரமம் - வீரம்

பராமரி - காப்பாற்று பேணு

பரிகாசம் - இகழ்ச்சிச் சிரிப்பு

பரிகாரம் – கழுவாய்

பரிசோதனை - ஆய்வு

பரீட்சை - தேர்வு

பலவந்தமாக - வற்புறுத்தி

பலவீனம் - மெலிவுவலிமையின்மை

பலாத்காரம் - வன்முறை

பக்ஷி - பறவை

பஜனை - தொழுகைப் பாடல்

பாகவதர் – பாடகர்

பாத்திரம் - கலம்

பாணம் - அம்பு

பாயாசம் - கன்னல்

பாதம் - அடி

பாரம் - சுமை

பாரத ரத்னா - நாவன்மணி

பாவம் - கரிசு, அறங்கடை

பாவனை - உன்னம்

பால்யம் - இளமை

பிம்பம் - நிழலுரு

பிடிவாதம் - ஒட்டாரம்

பிரகாசம் - ஒளிபேரொளி

பிரகாரம் - சுற்று

(அதன்)பிரகாரம் - (அதன்)படி

பிரசங்கம் - சொற்பொழிவு

பிரசாதம் - அருட்சோறு, திருச்சோறு

பிரசுரம் - வெளியீடு

பிரச்சினை - சிக்கல்

பிரச்சாரம் - பரப்புரை

பிரபந்தம் – பனுவல் (கலை நூல்)

பிரபு - பெருமகன்

பிரதிநிதி - சார்பாளர்

பிரதிபலன் - கைமாறு

பிரதிபலித்தல் - எதிரியக்கம்

பிரதிபிம்பன் - எதிருரு

பிரத்தியோகம் - தனிச்சிறப்பு

பிரபலம் - புகழ்

பிரமாணம் – அளவு, ஆணை

பிரமாதமான - பெரிய

பிரமிப்பு - திகைப்பு

பிரயோகம் – ஆட்சி, வழங்கல்

பிரயோகி - கையாளு

பிரயோசனம் - பயன்

பிரவாகம் - பெருக்கு

பிரவேசம் - நுழைவுபுகுதல்வருதல்

பிராண வாயு - உயிர்வளி

பிராது - முறையீடு, வழக்கு

பிரார்த்தனை - தொழுகை

பிரியம் - விருப்பம்

பிரேமை - அன்பு

பீடிகை - முன்னுரை

புண்ணியம் - நல்வினை

புத்தி - அறிவு

புத்திரன் - புதல்வன்

புராணம் - பழங்கதை

புராதனம் - பழமை

புரோகிதர் - சடங்காசிரியர்

புனிதமான - தூய

புஷ்பம் - மலர்பூ

புஜபலம் - தோள்வன்மை

பூஜை - வழிபாடு

பூசுரர் - நிலத்தேவர்

பூமத்திய ரேகை - நண்ணிலக்கோடு

பூமி - வையகம்

பூரணம் – முழுமை, நிறைவு

பூர்த்தி - நிறைவு

பூஷணம் - அணிகலம்

பேட்டி - நேர்வுரை

போதனை - கற்பித்தல்

போதி மரம் - அரச மரம்

மகத்துவம் - பெருமை

மகான் - பெரியவர்

மகாசமுத்திரம் - மாவாரி

மகாத்மா - பேராதன்

மகாவித்துவான் - பெரும் புலவர்

மகாயுத்தம் -பெரும்போர்

மகிமை - மாண்பு, மாட்சிமை

மத்தியஸ்தர் - உடன்படுத்துபவர்

மத்தியானம் - நண்பகல்

மத்திய அரசு - நடுவணரசு

மத்திய தரைக்கடல் - நண்ணிலக்கடல்

மந்திரி - அமைச்சர்

மரியாதை - மதிப்புரவு

மனசு - உள்ளம்

மனிதன் - மாந்தன்

மனிதாபிமானம் - மக்கட்பற்று

மானசீகம் - கற்பனை

மாத்திரை (மருந்து) - முகிழம்

மாலுமி - வலவன்

மாஜி - மேனாள்

மல்யுத்தம் - மற்போர்

மிராசுதார் - பண்ணையார்

மிருதங்கம் - மதங்கம்

முகஸ்துதி - முகமன்

முகூர்த்தம் - முழுத்தம்

முக்கியமான – இன்றியமையாத

மூர்க்கன் - முரடன்

மேகம் - முகில்

மேஜை - நிலை மேடை

மோசம் – கேடு, ஏமாற்றம்

மோட்சம் – பேரின்ப வீடு

மைத்துனர் – கொழுந்தன், அளியர்

மையம் - நடுவம்

யந்திரம் - பொறி

யதார்த்தம் – உண்மை

யாகம் – வேள்வி

யுகம் – ஊழி

யுத்தம் – போர்

யூகம் - உய்த்துணர்தல்

யூகி - உய்த்துணர்

யோகம் – ஓகம்

யோகி – ஓகி

யோக்யதை - தகுதி

யோசி - எண்ணு

ரதம் - தேர்

ரத சாரதி- தேரோட்டி

ராணி - அரசி

ராத்திரி - இரவு

ராச்சியம் - நாடு,மாநிலம்

ராஜா - மன்னன்

ரசம் - சாறுசுவை

ரகசியம் – மறை பொருள்

ரங்கராஜன் - அரங்கராசன்

ரத்தம் - குருதி, அரத்தம்

ரத்தினம் - மணி

ரதி – காமி

ரம்பம் - வாள்

ராகம்- பண்

ராசி - ஓரை

ருசி - சுவை

ரொட்டி - அப்பம்

லட்சம் - நூறாயிரம்

லட்சணம் - அழகு

லட்சியம் - குறிக்கோள்

லக்னம் – ஓரை

லஞ்சம் - கையூட்டு

லக்ஷ்மி - திருமகள்

லாபம் - ஊதியம்

லாயம் - மந்திரம்

லிங்கம் - இலங்கம்

லுங்கி – மூட்டி

வசதி – ஏந்து

வசனம் - உரைநடை

வசூல் – தண்டல்

வதம் - அழித்தல்

வதனம் - முகம்

வம்சம் - மரபு

வஸ்திரம் - துணிஆடை

வாஞ்சை - பற்று

வாயு - காற்று

வயது - அகவை

வர்க்கம் – இனம்

வர்த்தகம் - வணிகம்

வருமானம் – சம்பளம்

வருஷம் - ஆண்டு

வாகனம் – ஊர்தி, இயங்கி

வாக்காளர் – நேரியாளர்

வாக்கு - சொல்

வாக்குச்சீட்டு – குடவோலை, நேரி

வாசஸ்தலம் - இருப்பிடம்

வாதம் (நோய்) - வளி, ஊதை

வாதம் - தருக்கம், போராட்டு

வாரிசு – பிறங்கடை, வழி மரபு

வார்த்தை - சொல்

விக்கிரகம் - வழிபாட்டுருவம்

விகற்பம் – வேறுபாடு

விசனம் – வருத்தம் – துக்கம்

விசாரம் - கவலை

விசாரி – வினவு, உசாவு

விசாலமான - அகன்ற

விசித்திரம் - வேடிக்கை

விசுவாசம் - நம்பிக்கை

விஷேசம் - சிறப்பு

விஞ்ஞானம் - அறிவியல்

விஷயம் - செய்தி

விதானம் - மேற்கட்டி

விநாடி - நொடி

விநோதம் – புதுமை

வித்தியாசம் - வேறுபாடு

விதி - நெறி

விபூதி - திருநீறு பெருமை

விமோசனம் - விடுபடுதல்

வியாதி - நோய்

வியாபாரம் - வணிகம்

விரதம் - நோன்பு

விரக்தி - பற்றின்பை

விரோதம் - பகை

விவகாரம் – வழக்காரம்

விவரம் - விளத்தம்

விவாகம் - திருமணம்

விவாதி -வழக்காடு

விவேகம் – அறிவுடைமை

விஷம் – நஞ்சு

விஷேசம் - சிறப்பு

விஸ்தீரனம் - பரப்பு

வீதம் - மேனி

வீதி - தெரு

வேசி – விலைமகள்

வேகம் - விரைவு

வேதம் - மறை

வேதவிற்பனன்ர் - மறைவல்லார்

வேதியர் - மறையவர்

வைணவம் – திருமாலியம்

வைத்தியம் – மருத்துவம், பண்டுவம்