1. பண்ணைத் தோன்றிய எண் நான்கு
பொருளும்
கண்ணிய புறனே நால் நான்கு என்ப.
2. நால் இரண்டு ஆகும் பாலுமார்
உண்டே.
3. நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகை
என்று
அப் பால் எட்டே மெய்ப்பாடு என்ப.
4. எள்ளல் இளமை பேதைமை மடன்
என்று
உள்ளப்பட்ட நகை நான்கு என்ப.
5. இளிவே இழவே அசைவே வறுமை என
விளிவு இல் கொள்கை அழுகை நான்கே.
6. மூப்பே பிணியே வருத்தம் மென்மையொடு
யாப்புற வந்த இளிவரல் நான்கே.
7. புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு
மதிமை சாலா மருட்கை நான்கே.
8. அணங்கே விலங்கே கள்வர் தம்
இறை எனப்
பிணங்கல் சாலா அச்சம் நான்கே.
9. கல்வி தறுகண் புகழ்மை கொடை
எனச்
சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே.
10. உறுப்பறை குடிகோள் அலை கொலை
என்ற
வெறுப்பின் வந்த வெகுளி நான்கே.
11. செல்வம் புலனே புணர்வு விளையாட்டு
என்று
அல்லல் நீத்த உவகை நான்கே.
12. ஆங்கவை ஒரு பால் ஆக ஒரு
பால்
உடைமை இன்புறல் நடுவுநிலை அருளல்
தன்மை அடக்கம் வரைதல் அன்பு
எனாஅ
கைம்மிகல் நலிதல் சூழ்ச்சி வாழ்த்தல்
நாணுதல் துஞ்சல் அரற்று கனவு
எனாஅ
முனிதல் நினைதல் வெரூஉதல் மடிமை
கருதல் ஆராய்ச்சி விரைவு உயிர்ப்பு
எனாஅ
கையாறு இடுக்கண் பொச்சாப்பு
பொறாமை
வியர்த்தல் ஐயம் மிகை நடுக்கு
எனாஅ
இவையும் உளவே அவை அலங்கடையே.
13. புகு முகம் புரிதல் பொறி
நுதல் வியர்த்தல்
நகு நயம் மறைத்தல் சிதைவு பிறர்க்கு
இன்மையொடு
தகு முறை நான்கே ஒன்று என மொழிப.
14. கூழை விரித்தல் காது ஒன்று
களைதல்
ஊழ் அணி தைவரல் உடை பெயர்த்து
உடுத்தலொடு
ஊழி நான்கே இரண்டு என மொழிப.
15. அல்குல் தைவரல் அணிந்தவை
திருத்தல்
இல் வலியுறுத்தல் இரு கையும்
எடுத்தலொடு
சொல்லிய நான்கே மூன்று என மொழிப.
16. பாராட்டு எடுத்தல் மடம்
தப உரைத்தல்
ஈரம் இல் கூற்றம் ஏற்று அலர்
நாணல்
கொடுப்பவை கோடல் உளப்படத் தொகைஇ
எடுத்த நான்கே நான்கு என மொழிப.
17. தெரிந்து உடம்படுதல் திளைப்பு
வினை மறுத்தல்
கரந்திடத்து ஒழிதல் கண்டவழி
உவத்தலொடு
பொருந்திய நான்கே ஐந்து என மொழிப.
18. புறம் செயச் சிதைதல் புலம்பித்
தோன்றல்
கலங்கி மொழிதல் கையறவு உரைத்தலொடு
விளம்பிய நான்கே ஆறு என மொழிப.
19. அன்ன பிறவும் அவற்றொடு சிவணி
மன்னிய வினைய நிமித்தம் என்ப.
20. வினை உயிர் மெலிவு இடத்து
இன்மையும் உரித்தே.
21. அவையும் உளவே அவை அலங்கடையே.
22. இன்பத்தை வெறுத்தல் துன்பத்துப்
புலம்பல்
எதிர் பெய்து பரிதல் ஏதம் ஆய்தல்
பசி அட நிற்றல் பசலை பாய்தல்
உண்டியின் குறைதல் உடம்பு நனி
சுருங்கல்
கண் துயில் மறுத்தல் கனவொடு
மயங்கல்
பொய்யாக் கோடல் மெய்யே என்றல்
ஐயம் செய்தல் அவன் தமர் உவத்தல்
அறன் அளித்து உரைத்தல் ஆங்கு
நெஞ்சு அழிதல்
எம் மெய் ஆயினும் ஒப்புமை கோடல்
ஒப்புவழி உவத்தல் உறு பெயர்
கேட்டல்
நலத் தக நாடின் கலக்கமும் அதுவே.
23. முட்டுவயின் கழறல் முனிவு
மெய்ந் நிறுத்தல்
அச்சத்தின் அகறல் அவன் புணர்வு
மறுத்தல்
தூது முனிவு இன்மை துஞ்சிச்
சேர்தல்
காதல் கைம்மிகல் கட்டுரை இன்மை
என்று
ஆயிரு நான்கே அழிவு இல் கூட்டம்.
24. தெய்வம் அஞ்சல் புரை அறம்
தெளிதல்
இல்லது காய்தல் உள்ளது உவர்த்தல்
புணர்ந்துழி உண்மை பொழுது மறுப்பு
ஆக்கம்
அருள் மிக உடைமை அன்பு தொக நிற்றல்
பிரிவு ஆற்றாமை மறைந்தவை உரைத்தல்
புறஞ்சொல் மாணாக் கிளவியொடு
தொகைஇ
சிறந்த பத்தும் செப்பிய பொருளே.
25. பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு
உருவு நிறுத்த காம வாயில்
நிறையே அருளே உணர்வொடு திரு
என
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே.
26. நிம்பிரி கொடுமை வியப்பொடு
புறமொழி
வன்சொல் பொச்சாப்பு மடிமையொடு
குடிமை
இன்புறல் ஏழைமை மறப்பொடு ஒப்புமை
என்று இவை இன்மை என்மனார் புலவர்.
27. கண்ணினும் செவியினும் திண்ணிதின்
உணரும்
உணர்வுடை மாந்தர்க்கு அல்லது
தெரியின்
நல் நயப் பொருள்கோள் எண்ண அருங்குரைத்தே.
0 Comments