1. கருமம் அல்லாச் சார்பு என் கிளவிக்கு
உரிமையும் உடைத்தே கண் என்
வேற்றுமை.
2. சினை நிலைக் கிளவிக்கு ஐயும் கண்ணும்
வினை நிலை ஒக்கும் என்மனார்
புலவர்.
3. கன்றலும் செலவும் ஒன்றுமார் வினையே.
4. முதற்சினைக் கிளவிக்கு அது என் வேற்றுமை
முதற்கண் வரினே சினைக்கு ஐ
வருமே.
5. முதல் முன் ஐ வரின் கண் என் வேற்றுமை
சினை முன் வருதல் தெள்ளிது
என்ப.
6. முதலும் சினையும் பொருள் வேறுபடாஅ
நுவலும் காலை
சொற்குறிப்பினவே.
7. பிண்டப் பெயரும் ஆயியல் திரியா
பண்டு இயல் மருங்கின் மரீஇய
மரபே.
8. ஒரு வினை ஒடுச் சொல் உயர்பின் வழித்தே.
9. மூன்றனும் ஐந்தனும் தோன்றக் கூறிய
ஆக்கமொடு புணர்ந்த ஏதுக்
கிளவி
நோக்கு ஓரனைய என்மனார்
புலவர்.
10. இரண்டன் மருங்கின் நோக்கு அல் நோக்கம் அவ்
இரண்டன் மருங்கின் ஏதுவும்
ஆகும்.
11. அது என் வேற்றுமை உயர்திணைத் தொகைவயின்
அது என் உருபு கெட குகரம்
வருமே.
12. தடுமாறு தொழிற்பெயர்க்கு இரண்டும் மூன்றும்
கடி நிலை இலவே
பொருள்வயினான.
13. ஈற்றுப் பெயர் முன்னர் மெய் அறி பனுவலின்
வேற்றுமை தெரிப உணருமோரே.
14. ஓம்படைக் கிளவிக்கு ஐயும் ஆனும்
தாம் பிரிவு இலவே தொகை வரு
காலை.
15. ஆறன் மருங்கின் வாழ்ச்சிக் கிழமைக்கு
ஏழும் ஆகும் உறை நிலத்தான.
16. குத் தொக வரூஉம் கொடை எதிர் கிளவி
அப் பொருள் ஆறற்கு
உரித்தும் ஆகும்,
17. அச்சக் கிளவிக்கு ஐந்தும் இரண்டும்
எச்சம் இலவே பொருள்வயினான.
18. அன்ன பிறவும் தொல் நெறி பிழையாது
உருபினும் பொருளினும் மெய்
தடுமாறி
இரு வயின் நிலையும்
வேற்றுமை எல்லாம்
திரிபு இடன் இலவே
தெரியுமோர்க்கே.
19. உருபு தொடர்ந்து அடுக்கிய வேற்றுமைக் கிளவி
ஒரு சொல் நடைய பொருள் செல்
மருங்கே.
20. இறுதியும் இடையும் எல்லா உருபும்
நெறி படு பொருள்வயின்
நிலவுதல் வரையார்.
21. பிறிது பிறிது ஏற்றலும் உருபு தொக வருதலும்
நெறிபட வழங்கிய வழி மருங்கு
என்ப.
22. ஐயும் கண்ணும் அல்லாப் பொருள்வயின்
மெய் உருபு தொகாஅ இறுதியான.
23. யாதன் உருபின் கூறிற்று ஆயினும்
பொருள் செல் மருங்கின்
வேற்றுமை சாரும்.
24. எதிர் மறுத்து மொழியினும் தம்தம் மரபின்
பொருள் நிலை திரியா
வேற்றுமைச் சொல்லே.
25. கு ஐ ஆன் என வரூஉம் இறுதி
அவ்வொடு சிவணும்
செய்யுளுள்ளே.
26. அ எனப் பிறத்தல் அஃறிணை மருங்கின்
குவ்வும் ஐயும் இல் என
மொழிப.
27. இதனது இது இற்று என்னும் கிளவியும்
அதனைக் கொள்ளும்
பொருள்வயினானும்
அதனான் செயற்படற்கு ஒத்த
கிளவியும்
முறை கொண்டு எழுந்த
பெயர்ச்சொல் கிளவியும்
பால் வரை கிளவியும் பண்பின்
ஆக்கமும்
காலத்தின் அறியும்
வேற்றுமைக் கிளவியும்
பற்று விடு கிளவியும்
தீர்ந்து மொழிக் கிளவியும்
அன்ன பிறவும் நான்கன்
உருபின்
தொல் நெறி மரபின தோன்றல்
ஆறே.
28. ஏனை உருபும் அன்ன மரபின
மானம் இலவே சொல் முறையான.
29. வினையே செய்வது செயப்படுபொருளே
நிலனே காலம் கருவி என்றா
இன்னதற்கு இது பயன் ஆக
என்னும்
அன்ன மரபின் இரண்டொடும்
தொகைஇ
ஆயெட்டு என்ப தொழில்
முதனிலையே.
30. அவைதாம்,
வழங்கு இயல் மருங்கின்
குன்றுவ குன்றும்.
31. முதலின் கூறும் சினை அறி கிளவியும்
சினையின் கூறும் முதல் அறி
கிளவியும்
பிறந்தவழிக் கூறலும் பண்பு
கொள் பெயரும்
இயன்றது மொழிதலும்
இருபெயரொட்டும்
வினைமுதல் உரைக்கும்
கிளவியொடு தொகைஇ
அனை மரபினவே ஆகுபெயர்க்
கிளவி.
32. அவைதாம்,
தம்தம் பொருள்வயின் தம்மொடு
சிவணலும்
ஒப்பு இல் வழியான் பிறிது
பொருள் சுட்டலும்
அப் பண்பினவே நுவலும் காலை.
33. வேற்றுமை மருங்கின் போற்றல் வேண்டும்.
34. அளவு நிறையும் அவற்றொடு கொள்வழி
உள என மொழிப
உணர்ந்திசினோரே.
35. கிளந்த அல்ல வேறு பிற தோன்றினும்
கிளந்தவற்று இயலான்
உணர்ந்தனர் கொளலே.
0 Comments