தாழ்ந்த அறிவையே உயர்ந்த அறிவாகக் கருதிக்கொண்டு ஒழுகும் இயல்பு.

321 அருளின் அறமுரைக்கும் அன்புடையார் வாய்ச்சொல்
பொருளாகக் கொள்வர் புலவர்; -பொருளல்லா
ஏழை அதனை இகழ்ந்துரைக்கும் பாற்கூழை
மூழை சுவையுணரா தாங்கு.

(பொ-ள்.) அருளின் அறம் உரைக்கும்அன்புடையார் வாய்ச்சொல் பொருளாகக் கொள்வர்புலவர்-அருள் காரணமாக அறம் அறிவுறுத்தும் அன்புடையபெரியயோரது வாய்மொழியை அறிவுடையோர்பெரும்பயனுடையதாக மதித்தேற்றுக்கொள்வர்; பாற்கூழை மூழை சுவையுணராதாங்கு பொருளல்லா ஏழை அதனைஇகழ்ந்துரைக்கும் - ஆனால் அகப்பை பாலடிசிற்சுவையுணராமைபோல ஒரு பொருளாகக் கருதற்கில்லாதஅறிவிலான் அவ்வாய் மொழியை மதியாதுஇகழ்ந்துரைப்பான்.

(க-து.) புல்லறிவாளர் நல்லோர்பொருளுரையை மதியாதொழுகுவர்.

(வி-ம்.) அன்பிருந்தன்றி அருள்பிறவாதாகலின், அருளோடு, அன்பும் உரைக்கப்பட்டது.பொதுவாக அறிஞரென்றற்கு ஈண்டுப் ‘புலவ'ரெனப்பட்டது மூழை சுவையுணராமை போல அறிவிலான்அன்புடையார் வாய்ச்சொல்லின் பெருமையுணரானென்க. "பொருளுணர்வாரில்வழிப்பாட்டுரைத்தல் இன்னா" என்றதூஉங்காண்க. உவமை: ஏழைக்கு உணரும் இயல்பில்லாமைஉணர்த்திற்று; காரணம் புல்லறிவின் இயல்புஅத்தகைத்தென்றபடி.

322 அவ்வியம் இல்லார் அறத்தா றுரைக்குங்கால்
செவ்விய ரல்லார் செவிகொடுத்துங் கேட்கலார்;
கவ்வித்தோல் தின்னும் குணுங்கர்நாய் பாற்சோற்றின்
செவ்விய கொளல்தேற்றா தாங்கு.

(பொ-ள்.) கவ்வித் தோல்தின்னும் குணுங்கர் நாய் பால் சோற்றின்செவ்விகொளல் தேற்றாதாங்கு - தொரைக் கவ்வித்தின்னும் புலையருடைய நாய்கள் பாலடிசிலின்நன்மையைத் தெரிந்து கொள்ளாமைபோல,அவ்வியமில்லார் அறத்தாறு உரைக்குங்கால்செவ்வியரல்லார் செவி கொடுத்தும் கேட்கலார் -அழுக்காறு முதலிய மனமாசுகளில்லாதவர் அறநெறிஅறிவுறுத்தும் போது நல்லறிவில்லாப்புல்லறிவாளர் அதனைக் காது கொடுத்துங்கேட்கமாட்டார்.

(க-து.) புல்லறிவுடைய கீழ்மக்கள்சான்றோர் அறிவுரைகளை ஏலார்.

(வி-ம்.) உரைக்குங்கால் என்றுநிகழ்கால வினையாற் கூறினார், அஃதவர்க்கு"முந்நிலைக் காலமுந்தோன்றும் இயற்கை"யாதலின், அஃது அவர்பால் அல்லாதார்க்குள்ளஅழுக்காற்றையுங் குறிப்பானுணர்த்திற்று. செவிகொடுத்தும் என்றார், அற விலக்குதல்பற்றி,குணுங்கர், புலையராதல் திவாகரத்திற் காண்க.‘செவ்வி' என்றது, அதன் நன்மையை.

323 இமைக்கும் அளவிற்றம் இன்னுயிர்போம் மார்க்கம்
எனைத்தானும் தாங்கண் டிருந்தும் -தினைத்துணையும்
நன்றி புரிகல்லா நாணின் மடமாக்கள்
பொன்றிலென் பொன்றாக்கா லென்?

(பொ-ள்.) இமைக்குமளவில் தம்இன்னுயிர் போம் மார்க்கம் எனைத்தானும் தாம்கண்டிருந்தும் -கண்ணிமைக்கும் அத்துணைச் சிறுபொழுதில் தமது இனிய உயிரானது பிரிந்துபோம்இயல்பை எவ்வகையாலுந் தாம் தெரிந்திருந்தும்,தினைத் துணையும் நன்றி புரிகல்லா நாண் இல்மடமாக்கள் பொன்றிலென் பொன்றாக்கால்என்-உலகில் உயிரோடிருப்பதற்குள்தினையளவாயினும் நற்செயல்கள் செய்து பிறவியைப்பயனுடையதாக்கிக் கொள்ளாத வெட்கமில்லாஅறியாமை மாந்தர் இறந்தாலென்ன, இறவாதுஇருந்தாலென்ன? இரண்டும் ஒன்றே.

(க-து.) புல்லறிவுடையோர் தமதுவாழ்க்கையைப் பயனுடையதாக்கி இன்புறல் அறியார்.

(வி-ம்.) தாம் இனிதாகக் கருதிவளர்க்கும் உயிர் என்றற்கு, இன்னுயிர் என்றார்.மார்க்கமறிதல், பிறருயிர் பிரியும் வழிகளைக்காண்டலென்க. எனைத்தானுமென்றது, எல்லாப்படியாலுமென்றற்கு; "எனைப் பொருளுண்மை"  என்புழிப்போல.தாம் வறிதே உயிர்காத்து நிற்கும் பொருந்தாச்செயலில் உள்ள வொடுக்கமின்மையின், ‘நாணில்'எனவும், அதனைத் தடியும் அறிவாற்றலில்லாமையின்‘மடமாக்க' ளெனவுங் கூறினார்.

324 உளநாள் சிலவால் உயிர்க்கேமம் இன்றால்,
பலர்மன்னுந் தூற்றும் பழியால், -பலருள்ளும்
கண்டரோ டெல்லாம் நகாஅ தெவனொருவன்
தண்டித் தனிப்பகை கோள்.

(பொ-ள்.) உள நாள் சில, உயிர்க்குஏமம் இன்று, பலர் தூற்றும் பழி -இவ்வுலகில் உயிர்வாழ்ந்திருக்கும் நாட்கள் சில, அச் சிலநாட்களிலும் உயிர்க்குப் பாதுகாப்பில்லை, பலர்தூற்றும் பழி வேறு; பலருள்ளும் கண்டாரோடெல்லாம்நகாஅது எவன் ஒருவன் தண்டித் தனிப்பகை கோள்-ஆதலால், பலரோடும் மகிழ்ந்தொழுகாது விலகிஎதிர்ப்பட்டவரோ டெல்லாம் ஒருவன் கடும்பகைகொள்ளுதல் ஏன்?

(க-து.) பலரோடும் அளவளாவி மகிழாதுவிலகிப் பகைகொள்ளுதல் புல்லறிவாகும்.

(வி-ம்.) ஆலும் மன்னும் உம்மையும்ஆசை. பலருள்ளும்; மூன்றாவதனோடு உறழ்ந்தது நகுதல். அளவளாவி: மகிழ்ந் தொழுகுதல், தண்டுதல்,நீங்குதல் "கற்றல் வேண்டுவோன் வழிபாடுதண்டான்" என்பது. முதுமொழிக்காஞ்சி,தனிப்பகை, மிக்க பகையென்னும் பொருட்டு.

325 எய்தி யிருந்த அவைமுன்னர்ச் சென்றெள்ளி
வைதான் ஒருவன் ஒருவனை; -வைய
வயப்பட்டான் வாளா இருப்பானேல், வைதான்
வியத்தக்கான் வாழும் எனின்.

(பொ-ள்.) எய்தியிருந்த அவைமுன்னர்ச் சென்று எள்ளி ஒருவன் ஒருவனைவைதான்-ஒருவன் சென்று கலந்திருந்த தக்கோர்அவையின் முன் ஒருவன் போய் அவனை இகழ்ந்துதிட்டினானாக, வைய வயப்பட்டான்வாளா இருப்பானேல்வைதான் வியத்தக்கான் வாழும் எனின்-அவ்வாறுதிட்ட அதற்கு உட்பட்டவன் பொறுமையோடு சும்மாஇருந்துவிடுவானாயின் அந்நிலையில் வைதவன்நன்னிலைமையில் உயிர்வாழ்வா னென்றால் அவன்வியக்கத்தக்கவனே யாவான். (உயிர்வாழ்தல்அரிதென்றபடி.)

(க-து.) பலர் நடுவில் பிறரை வைதல்புல்லறிவின் இயல்பாகும்.

(வி-ம்.) வைதனனாகவெனவருவித்துரைக்க. வயப்பட்டான் : பெயர். வாளாவிருத்தல். தன் ஊழும் அவன் அறியாமையும் நினைந்துவாளாவிருந்தமையின் பிழைவை தான்றனக்கேஉரித்தாய் அவன் வாழ்வு கெடுதற்கேது வாயிற்று."உய்யார் பெரியார்ப் பிழைத்தொழுகுவார்" என்றது தமிழ்மறை.

326 மூப்புமேல் வாராமை முன்னே அறவினையை
ஊக்கி அதன்கண் முயலாதான் - நூக்கிப்
புறத்திரு போகென்னும் இன்னாச்சொல் இல்லுள்
தொழுத்தையாற் கூறப் படும்.

(பொ-ள்.) மூப்பு மேல் வாராமைமுன்னே அறவினையை ஊக்கி அதன்கண் முயலாதான் -கிழத்தனம் மேல் எழுந்து தோன்றாததற்கு முன்உலகில் அறச்செயலைத் தொடங்கி அதன்கண்முயன்றுவராதவன், நூக்கிப் புறத்திரு போக என்னும்இன்னாச்சொல் இல்லுள் தொழுத்தையால் கூறப்படும்- பின்பு வீட்டில் ஏவற்காரியாலும் நெட்டித்தள்ளப்பட்டு ‘வெளிப்புறத்தில் இரு' ‘ஒழிந்துபோ'என்னுங் கொடுஞ் சொற்களுஞ் சொல்லப்படுவான்.

(க-து.) புல்லறிவாளர் நல்லது செய்யஅறியாராய்ப் பிறரால் இகழவும் படுவர்.

(வி-ம்.) மூப்பு மேல் வருதலாவது, அதுமேலெழுதலென்க. நூக்குதல்-மோதித் தள்ளுதல்;"கரை நூக்கிப்புனல் தந்த" என்றார்பரிபாடலினும். போவென்னும் அகரவீறு தொக்கது.தொழுத்தையாலுமென இழிவு சிறப்பும்மைவிரித்துக்கொள்க. இல்லுட் பிறரும்அவ்வாறிகழ்தலின் தொழுத்தையும் இகழ்வளென்பது.அறவினை செய்யாதான் மூப்புப் புண்ணியப் பயன்இல்லாமையின் மிக நெளிந்து பேரின்னலுடையதாய்ப்பிறர்க்குப் பெருந்துன்பந்தந்து அவரங்ஙனம்எள்ளுதற் கேதுவாயிற்று.

327 தாமேயும் இன்புறார், தக்கார்க்கு நன்றாற்றார்
ஏமாஞ்சார் நன்னெறியுஞ் சேர்கலார்-தாமயங்கி
ஆக்கத்துள் தூங்கி அவத்தமே வாழ்நாளைப்
போக்குவார் புல்லறிவி னார்.

(பொ-ள்.) புல்லறிவினார்தாமேயும் இன்புறார் தக்கார்க்கும் நன்றாற்றார்ஏமம் சார் நல்நெறியும் சேர்கலார்தாழ்ந்தஅறிவினையுடையோர் தாமாகிலும் இன்புறல் அறியார்,தகுதியுடைய பிறர்க்கும் நன்மை செய்ய அறியார்,தம்முயிர்க்கு அரணாக அமைந்தஅறவொழுக்கங்களையும் சேர்ந்தொழுகார்; தாம்மயங்கி ஆக்கத்துள் தூங்கி அவத்தமே வாழ் நாளைப்போக்குவார் - தாம் மதிமயங்கி முன்னைநல்வினையாற் கிடைத்த செல்வச் செழுமையில்அழந்தி வீணே தம் வாழ் நாளைக் கழித்தொழிவர்.

(க-து.) புல்லறிவாளர் தம்வாழ்நாளைத் தமக்கும் பிறர்க்கும் பயன்படவொட்டாமல் வீணாக்கிக்ளொள்வர்.

(வி-ம்.) ‘ஏமஞ்சார்நன்னெறியென்றது' வீடுபேற்று நெறி. அவத்தம், ஒருசொல்; "அவத்தமே பிறந்து" என்றார்தேவாரத்தினும்,

328 சிறுகாலை யேதமக்குச்செல்வுழி வல்சி
இறுகிறுகத் தோட்கோப்புக் கொள்ளார் - இறுகிறுகிப்
பின்னறிவாம் என்றிருக்கும் பேதையார் கைகாட்டும்
பொன்னும் புளிவிளங்கா யாம்.

(பொ-ள்.) சிறுகாலையே தமக்குச்செல்வுழி வல்சி இறுக இறுகத் தோட் கோப்புக்கொள்ளார் - இளம் பருவத்திலேயே தமதுசெல்லுமிடமாகிய மறுமைக்கு, அறமாகிய உணவு அழுந்தஅழுந்தக் கட்டுணவு தேடிக்கொள்ளாதவராய்; இறுகிஇறுகிப் பின் அறிவாம் என்று இருக்கும்பேதையார்-பொருளில் இறுக்கம் மிகக் கொண்டுஅறவினையைப் பிற்காலத்திற் காண்போம் என்றுசெம்மாந்திருக்கும் புல்லறிவினார்; கைகாட்டும்பொன்னும் புளிவிளங்காயாம்-இறுதிக்காலத்திற்சாக்காட்டுத் துன்பத்தினால் அறநினைவு வந்துஅந்நிலையிற் பேச நாவெழாமையால்அயலிலுள்ளார்க்கு அறஞ்செய்ம்மினெனக் கைக்குறியாகக் காட்டும் பொன்னும் அவராற்புளிச்சுவையுள்ள விளங்காய் கேட்டலாகக் கருதிமறுக்கப்படும்.

(க-து.) புல்லறிவு எதனையுங்காலத்திற் செய்து கொள்ளாது ஏமாந்து பின் கவலும்.

(வி-ம்.) ‘தமக்குச் செல்வுழி'யென்பதைத் ‘தம்செல்வுழிக்கு' என மாறுக. வல்சிஇறுகுதலாவது, கட்டுணாப் பொருட்டு நன்கு பிசைந்துசெறித்தலால் அவை ஒன்றோடொன்று அழுந்திப்பொருந்துதல்; கட்டுணவு கவளம் கவளமாக வைத்துச்செறித்துச் செறித்துக் கட்டப்படுவது போல்மறுமைக் குணவாகிய அறத்தையும் மேலுமேலுந் தேடிச்செறித்துக்கொள்ள வேண்டுமென்றற்கு, ‘இறுக இறுக'வென மிகுதிப் பொருளில் அடுக்குக் கூறினார். வழிநடையின்போது கட்டமுது தோளிற் கோக்கப்படுவதாகவின், ‘தோட்கோப்' பெனப்பட்டது.சாக்காட்டு நிலையிலிருப்பாருக்குப்புளிவிளங்காய் ஏலாததொன்றாகலின்,மறுக்கப்படும். "ஐயா விளம்பழமே யென்கின்றீராங்கதற்குப் பருவமன்றென்செய்கோ" என்றார்பிறரும்.  "மரப் பெயர்க்கிளவி என்பதனான் விளங்காய் இன மெல்லெழுத்துமிக்கது.

329 வெறுமை யிடத்தும் விழுப்பிணிப் போழ்தும்
மறுமை மனத்தாரே யாகி, - மறுமையை
ஐந்தை யனைத்தானும் ஆற்றிய காலத்துச்
சிந்தியார் சிற்றறிவி னார்.

(பொ-ள்.) வெறுமையிடத்தும் விழுப்பிணிப் போழ்தும் மறுமை மனத்தாரேயாகி - கையிற்பொருளில்லாத வறுமைக் காலத்தும் மிக்கநோயுண்டான நேரத்தும் மறுமைக்குரியஅறநினைவினராயிருந்து, ஆற்றிய காலத்து - செல்வம்முதலியவற்றால் ஆற்றல் வாய்ந்த காலத்தில்,மறுமையை ஐந்தை யனைத்தானுஞ் சிந்தியார்சிற்றறிவினார் - அம்மறுமைக்குரிய அறத்தைச் சிறுகடுகி னளவாயினும் புல்லறிவினார் கருதார்.

(க-து.) புல்லறிவு,துன்பக்காலத்தில் மட்டுமே நன்மையை நினையும்இயல்புடையது.

(வி-ம்.) மறுமைக்குரிய அறம்ஈரிடங்களிலும் ‘மறுமை' யெனப்பட்டது. ஐந்தை :ஐயென்னுஞ் சிறுமையடியாகப் பிறந்த சொல். ஆற்றுந்தகுதி, பொருந்திய காலம் இங்கு ஆற்றிய காலம்எனப்பட்டது. "பின்னை வழி நினைந்து, நோய்காண்பொழுதின் அறஞ் செய்வார்க் காணாமை நாய்காணிற்கற் காணாவாறு" ஆதலின் அவரைச்சிற்றறிவினார் என்றார்.

330 என்னேமற் றிவ்வுடம்பு பெற்றும் அறம்நினையார்
கொன்னே கழிப்பர்தம் வாழ்நாளை, - அன்னோ
அளவிறந்த காதற்றம் ஆருயி ரன்னார்க்
கொளஇழைக்கும் கூற்றமுங் கண்டு.

(பொ-ள்.) அன்னோ அளவிறந்தகாதல் தம் ஆருயிரன்னார்க் கொள இழைக்கும்கூற்றமும் கண்டு - ஐயோ, தம்பால் அளவு கடந்தஅன்பினையுடைய தம் ஆருயிரன்ன உறவினரை உயிர்பிரித்துக்கொள்ள முயலுங் கூற்றுவனையும் உலகிற்பார்த்துக்கொண்டு, என்னே இவ் வுடம்பு பெற்றும்அறம் நினையார் கொன்னே தம் வாழ்நாளைக்கழிப்பர் - ஆ! பெறற்கரிய இம் மக்களுடம்பைப்பெற்றும் அறத்தை நினையாதவராய்ப்புல்லறிவினார் தம் வாழ்நாளை வீணேகழிக்கின்றனர்!

(க-து.) புல்லறிவானது, செய்திகளைநேரிற் கண்டும் தெளிவுபெறாதஇயல்புடையதாயிருக்கின்றது.

(வி-ம்.) என்னே அன்னோ என்னும்இரங்கல் புல்லறிவினாரின் ஏழைமை கருதிற்று.பெற்றும் என்னும் உம்மை, பெறற் கருமையுணர்த்திற்று. மேல் ஆருயிரன்னாரென்பதனால்தமதன்பு பெறப்படுதலின், அளவிறந்த காதல் என்பதுதம்பால் அவர் செலுத்தும் அன்பெனக்கொள்ளப்படும். எத்துணை அருமையாளரையுங் கூற்றுவன்பிரித்தெடுத்துக்கொள்ள முயலுதலால் மற்று யார்பொருட்டு அறத்தையுங் கருதாது பொருட் பற்றுதலோடுஇவ்வாறு சிக்கென்றிருந்து வாழ்நாளை வீணாக்கிக்கொள்ளுதலென்று அறிவுறுத்துமுகத்தால் இச் செய்யுள்புல்லறிவின் இழிந்த இயல்பை விளக்குவதாயிற்று.எனவே, "செல்வத்தைப் பெற்றார் சினங்கடிந்துசெவ்வியராய்ப. பல்கிளையும் வாடாமற் பாத்துண்டு -நல்லவாம் , தானம் மறவாத தன்மையராய்" விளங்கல் வேண்டும் என்பதறிந்து கொள்ளப்படும்.புல்லறிவினார் கழிப்பரென்று எழுவாய்வருவித்துக்கொள்க. மற்று : வினைமாற்று. ‘உடம்புபெற்றும் மற்றுக் கொன்னே கழிப்ப' ரென்க.