341 கப்பி
கடவதாக் காலைத்தன் வாய்ப்பெயினும்
குப்பை கிளைப்போவாக் கோழிபோல், - மிக்க
கனம்பொதிந்த நூல்விரித்துக்
காட்டினும் கீழ்தன்
மனம்புரிந்த வாறே மிகும்.
(பொ-ள்.) கப்பி கடவதா காலை தன்வாய்ப்பெயினும் குப்பை கிளைப்பு ஓவாக்கோழிபோல் -
கடமையாக நாடோறும்நொய்யரிசியைத் தன் வாயிற் பெய்தாலும் குப்பைகிளைத்தலைவிடாத
கோழியைப்போல், மிக்கனம்பொதிந்த நூல் விரித்துக்
காட்டினும் கீழ் தன்மனம் புரிந்தவாறே மிகும் - மிக்க பெருமை நிறைந்தமெய்ந்
நூலுண்மைகளைப் பொருள் விளக்கிஅறிவுறுத்தாலும் கீழ்மகன் தன் மனம் விரும்பியவழியே
முனைந்தொழுகுவான்.
(க-து.) கீழ்மை யென்பது பிறர்கூறும் அறிவுரையை ஏலாது.
(வி-ம்.) கடவது, கடமை, "கடவதுதிரியாக்கடவுளர்க் கண்டு" என்புழிப்போல. மிகும் என்றார்,
தன்னியல்பேகாட்டிச் சேறலின்.
342 காழாய
கொண்டு கசடற்றார் தஞ்சாரல்
தாழாது போவாம் எனஉரைப்பின் - கீழ்தான்
உறங்குவம் என்றெழுந்து போமாம், அஃதன்றி
மறங்குமாம் மற்றொன் றுரைத்து.
(பொ-ள்.) காழ் ஆய கொண்டு கசடுஅற்றார் தம் சாரல் தாழாது போவாம் எனஉரைப்பின் -
உறுதியாகிய மெய்ந்நூலுணர்வு கொண்டுவினை நீங்கிய மேலோர் பக்கல் நாம் காலம்தாழாது
சென்று பயனுறுவோம் என்று அறிந்தோர்எடுத்துக்காட்டினால், கீழ்தான் உறங்குவம் என்றுஎழுந்துபோம் அஃதன்றி
மறங்கும் மற்றொன்றுஉரைத்து - கீழ்மகன் தூங்குவோம் வம்மின் என்றுஎழுந்து போவான்,
அஃதன்றி வேறு வம்பு பேசிமாறுபடுவான்.
(க-து.) இருந்தால் வாளா கிடத்தலும்யாதேனுஞ் செய்தால் பழுது செய்தலுங்
கீழோர்இயல்பாகும்.
(வி-ம்.) காழ் என்றது ஈண்டுமெய்யுணர்வு; "காழ் இலா மம்மர்கொள்மாந்தர்" என்றார் முன்னும்.கலங்குதலில்லாததென்பது
பொருள். தம், தான்:சாரியை. உறங்குவம் என்னும் உளப்பாட்டுப் பன்மை,உரைத்தோரையும் உட்கொண்டு நின்றது. ஆம்இரண்டும் அசை.
மற்றொன்றென்றதுகுறிப்பாற்றீமைமேற்று.
343 பெருநடை
தாம்பெறினும் பெற்றி பிழையா
தொருநடைய ராகுவர் சான்றோர்; - பெருநடை
பெற்றக் கடைத்தும் பிறங்கருவி நன்னாட!
வற்றாம் ஒருநடை கீழ்.
(பொ-ள்.) பெரு நடை தாம் பெறினும்பெற்றிபிழையாது ஒரு நடையராகுவர் சான்றோர்
-உலகிற் பெருமித நிலையைத் தாம் பெற்றாலும் தம்பெருந்தன்மையாகிய இயல்பு வழுவாது
என்றும் ஒருதன்மையாராய் விளங்குவர் மேலோர்; பெருநடைபெற்றக்கடைத்தும் பிறங்கு அருவி நல் நாடவற்றாம் ஒரு நடை
கீழ்-பெருமித நிலையைப்பெற்றவிடத்தும், விளங்குகின்ற
அருவிகளையுடையசிறந்த மலைநாடனே, கீழ் மகனும் என்றுந்
தனதுகீழ்மையியல்பு தோன்ற ஒரு நடையாய்ஒழுகவல்லவனாவன்.
(க-து.) செல்வநிலையிலும் கீழோர்கீழோராகவேயிருப்பர்.
(வி-ம்.) நடையென்றது,செல்வப்போக்கு;
பெறினுமென்னும் உம்மைபெறாதிருந்த காலத்துமென் இறந்தது தழீஇயது.பெற்றக்கடைத்து
மென்னும் உம்மையும் அற்று.கீழுமென எச்சவும்மை கொள்க. வல்லதென்னுங்குறிப்பானும் ஒரு
நடையென்னுங் குறிப்பானும் கீழுஞ்சான்றோரொப்ப ஒரு நடைய ராகுவரென்றுரைக்கப்பட்டது.
நாயனாருந் ‘தேவரனையர்கயவர்" என்றிங்ஙனம் இகழ்ந்துரைமுறைமை மேற்கொண்டமை காண்க.
செல்வாக்குக்கேற்றபெரும்போக்கைப் பெறாமல் தமது கீழ்மையியல்பையே கீழோர்
மேற்கொண்டிருப்பரென்பது.
344 தினையனைத்தே
யாயினும் செய்தநன் றுண்டால்
பனையனைத்தா உள்ளுவர் சான்றோர் ;- பனையனைத்
தென்றுஞ் செயினும் இலங்கருவி நன்னாட.
நன்றில நன்றறியார் மாட்டு.
(பொ-ள்.) தினையனைத்தேயாயினும்செய்த நன்று உண்டால் பனையனைத்தா உள்ளுவர்சான்றோர்
- தினையளவினதேயாயினும் செய்த உதவிமுன் இருக்குமானால் அதனைப் பனையளவினதாகக்கருதிக்
கனிந்திருப்பர் மேலோர்; பனையனைத்துஎன்றும்
செயினும் இலங்கு அருவி நல் நாட நன்றுஇலநன்று அறியார்மாட்டு - நாளும்
பனையளவுஉதவிசெயினும், விளங்குகின்ற அருவிகளையுடையஉயர்ந்த
மலைநாடனே, நன்மையறியாக்கீழோரிடத்தில் அவை சிறிதளவும்
நன்றிபாராட்டுத லில்லாதனவாகும்.
(க-து.) கீழ்மை, நன்றி
மறக்கும்இயல்புடையது.
(வி-ம்.) உள்ளுதல், உள்ளிக்கனிதல்;
"கன்றுள்ளிய புனிற்றா" என்பதுகாண்க. ‘நன்றில' என்னுமிடத்து ‘நன்று'நன்றியையும் ‘நன்றறியார்'
என்னுமிடத்துஅதுமேன்மையையும் உணர்த்தும். "தினைத்துணைநன்றி
செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்றெரி வார்" என்னும் தமிழ்மறையை
ஈண்டுநினைவுறுக.
345 பொற்கலத்
தூட்டிப் புறந்தரினும் நாய்பிறர்
எச்சிற் கிமையாது பார்த்திருக்கும்; - அச்சீர்
பெருமை யுடைத்தாக் கொளினுங்கீழ்
செய்யுங்
கருமங்கள் வேறு படும்.
(பொ-ள்.) பொன் கலத்து ஊட்டிப்புறந்தரினும் நாய் பிறர் எச்சிற்கு
இமையாதுபார்த்திருக்கும் - பொன்னாற் செய்தஉண்கலத்தினால் உண்பித்துப்
பாதுகாத்தாலும்நாயானது பிறர் எறியும் எச்சிற் சோற்றுக்குக்கண்ணிமையாமல்
விழித்துக்கொண்டு காத்துக்கிடக்கும், அச்சீர்-அத்தன்மையாக,பெருமையுடையதாக் கொளினும் கீழ்
செய்யும்கருமங்கள் வேறுபடும் - பெருமைக்குரியவனாகப்பெருமைப்படுத்தினாலும் கீழ்மகன்
செய்யுஞ்செயல்கள் அந்நிலைமைக்கு வேறாகும்.
(க-து.) கீழ்மையியல்பு,திருத்தினாலுந்
திருந்தாது.
(வி-ம்.) பறந்தருதல், காத்தல்,பார்த்திருக்குமென்றது. காத்திருக்கு மென்றற்கு.அச் சீரென்றது, உவமப்பொருட்டு. ‘அன்ன பிறவே'என்பதனாலும், ‘பல் குறிப்பினவே'என்பதனாலும் இது கொள்ளப்படும்.
வேறுபடும் என்பது,கீழ்மைத் தொழில்களாகவே நிகழும்
என்னுங்குறிப்பிற்று.
346 சக்கரச்
செல்வம் பெறினும் விழுமியோர்
எக்காலுஞ் சொல்லார் மிகுதிச்சொல்; - எக்காலும்
முந்திரிமேற் காணி மிகுவதேற்
கீழ்தன்னை
இந்திரனா எண்ணி விடும்.
(பொ-ள்.) சக்கரச் செல்வம்பெறினும் விழுமியோர் எக்காலும் சொல்லார்மிகுதிச் சொல்
- ஆட்சிச் செல்வம் பெற்றாலும்மேலோர் எந்தக் காலத்திலும் வரம்பு கடந்தசொற்களைச்
சொல்லமாட்டார்கள்; முந்திரிமேற்காணிமிகுவதேல்
கீழ் தன்னை எக்காலும் இந்திரனாஎண்ணிவிடும் - ஆனால் முந்திரியளவுக்குமேற்காணியளவாகச்
செல்வம் மிகுவதானால் கீழ்மகன்தன்னை என்றுந் தேவர் கோனாக எண்ணி
இறுமாந்துஉரையாடுவன்.
(க-து.) சிறிது நிலையுண்டானால்கீழ்மக்கள் மிகவுஞ் செருக்குவர்.
(வி-ம்.) அரசாட்சிச் செல்வம்‘ஈண்டுச் சக்கரச் செல்வ' மெனப்பட்டது. "தாங்குமாவண்கைச் சக்கரமிக்குயர்
பிறரும்" என்றார் சிந்தாமணியினும், பெறினுமென்னும்
உம்மைஎச்சம், மிகுதிச்சொல், தன்முனைப்புச்
சொல்;மண்ணுலக வேந்தனாகவுமன்றி விண்ணவர் கோனாகவேஎண்ணி
விடுவனென்றற்கு, ‘இந்திரனா' வென்றார்.சிறு
இன்பத்தையும் பெரிது பாராட்டிக்களிக்குங்கீழ்மையியல்பினை இச் செய்யுள்
விளக்கிற்று.
347 மைதீர்
பசும்பொன்மேல் மாண்ட மணியழுத்திச்
செய்த தெனினுஞ் செருப்புத்தன்
காற்கேயாம்;
எய்திய செல்வத்த ராயினும் கீழ்களைச்
செய்தொழிலாற் காணப் படும்.
(பொ-ள்.) மை தீர்பசும்பொன்மேல் மாண்ட மணியழுத்திச்செய்ததெனினும் செருப்புத்
தன் காற்கேயாம் -குற்றந் தீர்ந்த கிளிச்சிறை என்னும் பசியபொற்றகட்டின்மேல்
மாட்சிமை வாய்ந்தமணிக்கற்களைப் பதித்துச் செய்யப்பட்டதாயினும்செருப்பு ஒருவனது
காலுக்கே அணிந்துகொள்ள உதவும்;எய்திய
செல்வத்தராயினும் கீழ்களைச்செய்தொழிலாற் காணப்படும் - அதுபோலச்சிறக்கப் பொருந்திய
செல்வமுடையரானாலும்கீழ்மக்களை அவர் செய்கின்ற தொழில்களால்இன்னாரென்று
கண்டுகொள்ளுதல் கூடும்.
(க-து.) கீழோர் இயல்பு,நிலைமைகளால்
வேறுபடுதலில்லை.
(வி-ம்.) மைதீர் பசும்பொன்என்றது ‘கிளிச்சிறை' யென்னும் பொன்னாதல்,"வீறுயர் பசும்பொன்" என்
புழிக்காண்க. மாண்டமணியாவது, குணச்சிறப்புடையமணிகளென்க. பிற
வுறுப்புக்கட்கன்றென்றுபிரித்தலின், காற்கேயென்னும்
ஏகாரம்பிரிநிலை. காண என்பது காணல் என்னுந் தொழிற்பெயரின் றிரிபு. முன்வந்த
"பொற்கலத்தூட்டி"யென்னுஞ் செய்யுள் ஈண்டு நினைவுகூர்தற்குரியது.
348 கடுக்கெனச்
சொல்வற்றாம், கண்ணோட்டம் இன்றாம்
இடுக்கண் பிறர்மாட் டுவக்கும், - அடுத்தடுத்து
வேகம் உடைத்தாம், விறன்மலை நன்னாட!
ஏகுமாம் எள்ளுமாம் கீழ்.
(பொ-ள்.) விறல் மலை நல் நாட -ஆற்றல் வாய்ந்த மலைகளையுடைய சிறந்த நாடனே!,கீழ் - கீழ்மகன், கடுக்கெனச்
சொல் வற்று -கடுமையாகப் பேசுதல் வல்லான்: கண்ணோட்டம் இன்று- கண்ணோட்ட மில்லான்;
இடுக்கண் பிறர்மாட்டுஉவக்கும் - பிறரிடத்து நேரும்
இன்னலுக்குமகிழ்வான்; அடுத்தடுத்து வேகம் உடைத்து -
அடிக்கடிசீற்றமுடையான் ; ஏகும் - கண்ட விடங்கட்குச்செல்வான் ;
எள்ளும்-பிறரை இகழ்வான்.
(க-து.) பிறர்க்குத் தொல்லைகள்விளைப்பது கீழ்மக்களின் இயல்பு.
(வி-ம்.) வல்லது என்றது,இகழ்ச்சிக்குறிப்பு.
ஆம் அனைத்தும் அசை. பிறர்மாட்டு என்பதைப் பிறவிடங்கட்குங் கொள்வதுபொருந்தும்.
வேகம், சினத்தின் வேகம். மலைக்குவிறலாவது, எஞ்ஞான்றும் வளமுடைமை; "உழவர் உழாதனநான்கு பயன்
உடைத்தே" என்பவைமுதலாயின. கீழ் என்னும் அஃறிணைச் சொல்லால்எல்லாம் அஃறிணை
முடிபு கொண்டன. கீழ்மக்களின்இயல்புகள் சிலவற்றை இச்செய்யுள்தொகுத்துணர்த்திற்று.
349 பழைய
ரிவரென்று பன்னாட்பின் நிற்பின்
உழையினிய ராகுவர் சான்றோர்; - விழையாதே
கள்ளுயிர்க்கும் நெய்தற் கனைகடல்
தண்சேர்ப்ப;
எள்ளுவர் கீழா யவர்.
(பொ-ள்.) கள் உயிர்க்கும்நெய்தல் கனை கடல் தண் சேர்ப்ப - தேன்சொரியும்நெய்தல்
மலர்களையுடைய ஒலிக்கின்ற கடலின்குளிர்ந்த கரையை யுடையவனே!, பின் நிற்பின் பல்நாள் பழைய ரிவரென்று உழை இனிய
ராகுவர்சான்றோர் - தமக்குப் பின்னால் வந்து ஒருவர்பணிவுடையராய் நின்றால் இவர்
பலநாள்பழகியவரென்று விரும்பி அவரிடம் சான்றோர்அன்புடையவராவர்; கீழாயவர் விழையாது எள்ளுவர் -ஆனாற் கீழ்மக்கள் அவரைத் தமக்குஅடங்கினவரெனக்
கொண்டு அன்புடன் விரும்பாமல்அதிகாரத்தால் மதியாது ஒதுக்குவர்.
(க-து.) தம்மை விரும்புவோரைத்தாம் மதியாதொதுக்குவது கீழ்மக்களின் இயல்பு.
(வி-ம்.) பின் நிற்றல் ஈண்டுப்பணிவுடையராயிருத்தல் உணர்த்திற்று :
‘பின்நின்றபின் இவர் பன்னாட் பழையரென்று சான்றோர்உழை இனியராகுவ' ரென்று கொள்க. உழை, அவருழையென்க.விழையாதே
என்னும் குறிப்பானும், பின் நிற்பின்என்னும் குறிப்பானும்,
எள்ளுதல்அதிகாரத்தானென்பது பெறப்படும். கீழாயவர்என்பதில்
ஆய்வரென்பது ஆக்க மன்று; நூலானதுஎன்புழிப்போல வினை முதற்
குறிப்பிடைச் சொல்;அதனை எழுவாய்ச் சொல்லுருபு என்ப;
"வேற்றுமைப்பொருள்வயின்" என்பதற்குச்சேனாவரையர் உரைத்த
உரை காண்க.
350 கொய்புல்
கொடுத்துக் குறைத்தென்றுந் தீற்றினும்
வையம்பூண் கல்லா சிறுகுண்டை; - ஐயகேள்,
எய்திய செல்வத்த ராயினும் கீழ்களைச்
செய்தொழிலாற் காணப் படும்.
(பொ-ள்.) கொய் புல்கொடுத்துக் குறைத்து என்றும் தீற்றினும் வையம்பூண்கல்லா
சிறு குண்டை - கொய்தற்குரிய பசும்புல்லைஅறுத்துக்கொடுத்து நாடோறும் உண்பித்து
வந்தாலும்சிற்றெருதுகள் வண்டிகள் பூண்டிழுக்க உதவா; ஐய கேள் -ஐய கேட்பாயாக; எய்திய
செல்வத்தராயினும்கீழ்களைச் செய்தொழிலாற் காணப்படும் -சிறக்கப் பொருந்திய
செல்வமுடையரானாலும் கீழ்மக்களை அவர் செய்கின்ற தொழில்களால்இன்னரென்று
கண்டுகொள்ளுதல் கூடும்.
(க-து.) எவ்வளவு நலமுறச் செய்யினும்கீழ்மக்கள் பிறர்க்குப் பயன்படார்.
(வி-ம்.) கொய் புல் என்பதுபுல்லின் இளம்பதமான தகுதி யுணர்த்திற்று.குறைத்துக் கொடுத்தென்று
மாறுக, பூண்கல்லா: ஒருசொல். ‘சிறு குண்டை' யென்றது, வளர்ச்சியில்லாதுகுறுகி மூத்த எருதுகள்.
"குண்டை குறட்பூதம்" என்றார் தேவாரத்தினும். ‘காணப்படு'மென்பதற்குக், கீழ் ‘மைதீர் பசும்பொன்' என்னுஞ் செய்யுளில் உரைத்தாங்குரைக்க.
0 Comments