குணத்தால் உயர்குவத்திற் பிறத்தலின் மேன்மை; ஈண்டுக் ‘குலம்’ என்றதுசாதியன்று: ஒவ்வொரு சாதியிலும் உயர்ந்த குலங்கள் உண்டு. திருக்குறளுரையில் உரையாசிரியர் பரிமேலழகர் "உயர்ந்த குடிப்பிறப்பு நால்வகை வருணத்தார்க்கும் இன்றியமையாதாகலின்" என உரையெழுதிச் செல்லுதல் கருத்திற் பதிக்கற்பாலது.

141 உடுக்கை உலறி உடம்பழிந்தக் கண்ணுங்
குடிப்பிறப் பாளர்தங் கொள்கையிற் குன்றார்;
இடுக்கண் தலைவந்தக் கண்ணும் அரிமா
கொடிப்புற் கறிக்குமோ மற்று.

(பொ-ள்.) இடுக்கண் தலைவந்தக்கண்ணும் அரிமா கொடிப் புல் கறிக்குமோ -பசித்துன்பம் மிகுந்து நின்ற போதும் சிங்கம்படர்புல்வைத் தின்னுமோ? அதுபோல்; உடுக்கை உலறிஉடம்பழிந்தக் கண்ணும் குடிப்பிறப்பாளர் தம்கொள்கையின் குன்றார் - உடை பொலிவழிந்து உடல்மெலிவடைந்த காலத்திலும் உயர்குடிப் பிறந்தோர்தமக்குரிய ஒழுகலாற்றிற் குறைவுபடார்.

(க-து.) உயர்குடிப்பிறந்தோராயின், இயல்பாகவேநல்லொழுக்கத்தினின்றும் வழுவார்.

(வி-ம்.) உலறுதல்செழுமைகெடுதலாதலின் பொலிவழிந்தெனப்பட்டது;உடம்பழிந்தக்கண்ணு மென்பதில் உணவில்லாதகாலத்தும் என்னும் பொருள் குறிப்பிற் புலப்படும்கொள்கையென்றது, நல்லுணர்வு நல்லாழுக்கங்கள்,தலைவருதல் ஈண்டு மிகுதிமேற்று. கொடியோடிப் படரும்புல் கூறினார் வளம் உணர்த்தற்கு, "பசிபெரிதாயினும் புல்மேயா தாகும் புலி" என்பர்பிறரும். மற்று : அசை.

142 சான்றாண்மை சாயல் ஒழுக்கம் இவைமூன்றும்
வான்றோய் குடிப்பிறந்தார்க் கல்லது - வான்றோயும்
மைதவழ் வெற்ப! படாஅ பெருஞ்செல்வம்
எய்தியக் கண்ணும் பிறர்க்கு.

(பொ-ள்.) வான் தோயும் மைதவழ்வெற்ப - மேகங்கள் தவழ்கின்ற வானளாவியமலைகளையுடைய நாடனே!, சான்றாண்மை சாயல் ஒழுக்கம்இவை மூன்றும் வான்தோய் குடிப்பிறந்தார்க்கல்லதுபடா பெருஞ் செல்வம் எய்தியக்கண்ணும் பிறர்க்கு -பெருந்தன்மை, மென்மை, கடைப்பிடி என்னும் இவைமூன்றும் உயர்வு பொருந்திய குடியிற்பிறந்தவர்க்கல்லது மிக்க செல்வம் உண்டானகாலத்தும் பிறர்க்கு உண்டாகமாட்டா.

(க-து.) நல்லொழுக்கங்கள்உயர்குடிப்பிறந்தோர்க்கு இயல்பாகவே மலரும்.

(வி-ம்.) "சான்றாண்மை தீயினம் சேரக்கெடும்" என்புழிப்போல ஈண்டும்அச்சொல் பெருந்தன்மைமேற்று, "சாயல் மென்மை” யென்பர்ஆசிரியர் தொல்காப்பியர். ஒழுகுதலாவது ஒன்றைத்தொடர்புறச் செய்தலாதலின். அதுகடைப்பிடியென்றறியற்பாற்று, திருவள்ளுவரில்அன்புடைமை, விருந்தோம்பல், இனிமை கூறல்முதலியவாக நல்லொழுக்கங்கள் பலவுங் கூறிவரும்ஆசிரியர், இடையே ‘ஒழுக்கமுடைமை' எனத்தனியதிகாரம் ஒன்று நிறீஇயதும் இக் கருத்தின்கண்ணதென்க. பெருஞ் செல்வம் எய்தியக்கண்ணும்பிறர்க்குப் படா வெனவே, அஃதெய்தியக்கண்உயர்குடிப் பிறந்தார்க்கு இன்னும் அவ்வியல்புகள்சிறந்து தோன்றுமென்பது பெறப்பட்டது.

143 இருக்கை யெழலும் எதிர்செலவும் ஏனை
விடுப்ப ஒழிதலோ டின்ன-குடிப்பிறந்தார்
குன்றா வொழுக்கமாக் கொண்டார் கயவரோ
டொன்றா வுணரற்பாற் றன்று.

(பொ-ள்.) இருக்கை எழலும்எதிர்செலவும் ஏனை விடுப்ப ஒழிதலோடு இன்ன -பெரியோரைக் கண்டால் தன் இருக்கையிலிருந்துஎழுதலும், சற்று எதிர்சென்று வரவேற்றலும், அவர்பிரியும்போது சற்றுப் பின்சென்று அவர் விடைதரஏனைப் பிரிந்து வருதலுமாகிய இத்தகைய பணிவுக்குணங்களை, சூடிப்பிறந்தார் குன்றா ஒழுக்கமாகக்கொண்டார், உயர்குடிப் பிறந்தார் கைவிடாநல்லொழுக்கமாக மேற்கொண்டொழுகுவர்; கயவரோடுஒன்றா உணரற்பாற்றன்று-இத் தகுதி, கீழ்மக்களாற்சிறந்ததொன்றாக உணர்ந்துகொள்ளுதற்குரியதன்று.

(க-து.) உயர்குடிப் பிறந்தாரேபணிவின் உயர்வை அறிந்துகொள்ளுந் தகுதியுடையர்.

(வி-ம்.) கயவரோடு என்னும் உருபு,"ஊசியொடு குயின்ற தூசும் பட்டும்" என்புழிப்போல நின்றது.

144 நல்லவை செய்யின் இயல்பாகும் தீயவை
பல்லவர் தூற்றும் பழியாகும்; - எல்லாம்
உணருங் குடிப்பிறப்பின் ஊதிய மென்னோ,
புணரும் ஒருவர்க் கெனின்?

(பொ-ள்.) நல்லவை செய்யின்இயல்பாகும் தீயவை பல்லவர் தூற்றும் பழியாகும் -உயர்குடிப் பிறந்தார் நற்காரியங்கள் செய்தால்அஃதவர்க்கு இயல்பென்று. கொள்ளப்படும். தீயவைசெய்தால் பலருந் தூற்றும் பழியாக முடியும்; எல்லாம்உணரும் குடிப்பிறப்பின் ஊதியம் என்னோ புணரும்ஒருவர்க்கெனின் - அவ்வாறானால்,உயர்குடிப்பிறப்பு ஒருவர்க்கு வாய்க்குமாயின்எல்லா நன்மைகளும் இயல்பாகவேஉணர்ந்தொழுகுதற்குரிய தகுதி வாய்ந்த அக்குடிப்பிறப்பினால் அவர் அடையும் ஊதியந்தான்யாதோ!

(க-து.) நல்லவை செய்தலை இயல்பாகஉடையது உயர்குடிப் பிறப்பெனின் அந்நிலையேஆக்கம் என்பது.

(வி-ம்.) பல்லவர் என்னும் மிகுதிப்பாடு, தீயவைசிறிது செய்யினும் என்னும் பொருட்குறிப்புஉணர்த்திற்று. இது போல்வன "குறிப்பிற்றோன்றலும்"  என்பதனால் உணரப்படும்.எல்லாம் உணரும் என்றது, குடிப்பிறப்பின்சிறப்பியல்பு உணர்த்திற்று. ஊதியமென்னோஎன்றது, அதனினும் ஊதியம் மற்றென்னோ என்னும்உட்கோளுடையது. புணரும் ஒருவர்க்கெனின் என்றது,அதன் அருமை தோன்ற நின்றது. இச்செய்யுள்,பழித்தது போலப் புகழ்தலாய்க்குடிப்பிறப்பின்உயர்வை விளக்கிற்று. மேல்வருஞ் செய்யுளும்இத்தகைத்து.

145 கல்லாமை அச்சம், கயவர் தொழிலச்சம்,
சொல்லாமை யுள்ளுமோர் சோர்வச்சம், - எல்லாம்
இரப்பார்க்கொன் றீயாமை அச்சம்; மரத்தாரிம்
மாணாக் குடிப்பிறந் தார்.

(பொ-ள்.) கல்லாமை அச்சம்,கயவர் தொழில் அச்சம், சொல்லாமை யுள்ளும் ஓர்சோர்வு அச்சம். எல்லாம் இரப்பார்க்கு ஒன்றுஈயாமை அச்சம் - உயர்குடிப் பிறந்தார்க்குப்,படியாமை ஓர் அச்சம், கீழோர் தொழிலொன்றுசெய்தலும் அச்சம், சொல்லத் தகாதவற்றுள்தவறிச் சொல்லிவிடுதலொன்றும் அச்சம்,இரப்பார்க்கு ஒன்று ஈயாமை முழுவதும் அச்சம்; இம்மாணாக் குடிப் பிறந்தார் மரத்தார் - இவ்வாறுமாட்சிமையில்லா உயர் குடியிற் பிறந்தார்,நடுக்கடலில் மரக்கலத்திற் செல்வாரைஒத்தவராவர்

(க-து.) தீயவற்றிற்கு அஞ்சிவாழ்தற்குரிய உயர் குடிப் பிறப்பே சிறந்தது.

(வி-ம்.) எல்லாம் என்றது முழுமையும்என்னும் பொருட்டு. ஈதல் இல்லொழுக்கங்களுள்தலையானதாதலின், அதற்கு இயலாமை நேரின் அதுமுற்றும் அஞ்சுதற்குரிய  தென்பது கருத்து.மரக்கலம் என்னும் பெயர், கலம் என்னுஞ்சொல்லால் வழங்குமாப்போல் மரம் என்னும்பெயராலும் வழங்குவதாயிற்று. முற்செய்யுளைப் போல்இதுவும் பழித்ததுபோலப் புகழ்தலாதலின்,‘மாணாக்குடி' எனப்பட்டது.

146 இனநன்மை இன்சொல்ஒன் றீதல்மற் றேனை
மனநன்மை என்றிவை யெல்லாம் - கனமணி
முத்தோ டிமைக்கு முழங்குவரித் தண்சேர்ப்ப!
இற்பிறந்தார் கண்ணே யுள.

(பொ-ள்.) கனமணி முத்தோடுஇமைக்கும் முழங்கு உவரித் தண்சேர்ப்ப-சிறப்புடைய மாணிக்க முதலிய மணிகள்முத்துக்களுடன் கிடந்து ஒளிர்கின்றஒலிக்குங்கடலின் குளிர்ச்சியான துறைவனே!இனநன்மை, இன்சொல், ஒன்று ஈதல், ஏனை மனநன்மைஎன்று இவையெல்லாம் இல்பிறந்தார் கண்ணேஉள-நல்லார் கூட்டுறவு, இன்சொல்லுடைமை,வறியார்க்கு ஒன்று ஈதல், ஏனை மனத் தூய்மைஎன இந்நற்பண்புகளெல்லாம் உயர்குடிப் பிறந்தாரிடமேஅமைந்திருக்கின்றன.

(க-து.) உயர்குடிப் பிறப்புநற்பண்புகட்கு இடமானது.

(வி-ம்.) எல்லாவற்றிற்கும்அடிப்படையாகிய மன நன்மையை வேறு பிரித்தற்கு‘ஏனை' யென்றார். மற்று ஏனை என்னும் இரண்டும்ஈண்டுப் பிறிதென்னும் ஒரு பொருட்கண் வந்தன.கடலுக்கு முத்துச் சிறப்பாதலின், வேறு பிரித்துக்கூறினார். இமைக்கும் சேர்ப்ப என்க. ஏகாரம்:பிரிநிலை.

147 செய்கை யழிந்து சிதல்மண்டிற் றாயினும்
பொய்யா ஒருசிறை பேரில் உடைத்தாகும்;
எவ்வ முழந்தக் கடைத்துங் குடிப்பிறந்தார்
செய்வர் செயற்பா லவை.

(பொ-ள்.) செய்கையழிந்து சிதல்மண்டிற்றாயினும்பொய்யா ஒரு சிறை பேர் இல் உடைத்தாகும் - வளமானபெரிய வீடு வளங்குறைந்த காலத்தில்கட்டுக்குலைந்து கறையான் கவ்விற்றாயினும் அது மழைஒழுக்கில்லாத ஒரு பக்கத்தை உடையதாயிருக்கும்,அதுபோல; எவ்வம் உழந்தக்கடைத்தும்குடிப்பிறந்தார் செய்வர்செயற்பாலவை-வறுமையினால் மிக்க துன்பத்திற்சிக்கி அலைப்புண்ட காலத்தும் உயர்குடியிற்பிறந்த நல்லோர் தாம் செய்தற்குரியநற்செயல்களைச் செய்துகொண்டேயிருப்பர்.

(க-து.) வறுமையிலுங் குடிப்பிறந்தார் தம் கடமைகள்செய்தலில் வழுவார்.

(வி-ம்.) செய்கை - செய்த அமைப்பு; என்றது,கட்டுக்கோப்பு; செயற்பாலவை என்பன,"அறவோர்க் களித்தல் அந்தணரோம்பல்" முதலிய கடமைகள்.

148 ஒருபுடை பாம்பு கொளினும் ஒருபுடை
அங்கண்மா ஞாலம் விளக்குறூஉந் - திங்கள்போல்
செல்லாமை செவ்வனேர் நிற்பினும் ஒப்புரவிற்
கொல்கார் குடிப்பிறந் தார்.

(பொ-ள்.) ஒரு புடை பாம்புகொளினும் ஒரு புடை அங்கண்மா ஞாலம் விளங்குறூஉம்திங்கள்போல் - ஒரு பக்கம் இராகுவென்னும் பாம்புபற்றிக் கொண்டாலும் தனது மற்றொரு பக்கத்தால்அழகிய இடமகன்ற பெரிய உலகத்தை ஒளிவிளங்கச்செய்யுந் திங்களைப்போல, செல்லாமை செவ்வன்நேர் நிற்பினும் ஒப்புரவிற்கு ஒல்கார்குடிப்பிறந்தார் - வறுமையினால் மாட்டாமைநிலைநன்றாக முன்நிற்பினும் உயர்குடிப் பிறந்தார்பிறர்க்கு உதவி செய்யும் வகைக்குத்தளரமாட்டார்.

(க-து.) பிறர்க்கு உதவும் வகையில்வறுமையிலும் - குடிப்பிறந்தார் தளரார்.

(வி-ம்.). "இடனில் பருவத்தும்ஒப்புரவிற்கு ஒல்கார்"  என்றார்திருவள்ளுவரும். பாம்பு கொளல் என்பது, திங்களைக்கோள்பிடித்து அதனொரு பகுதியை மறைத்தல்.வறுமையுடையார் சொல்லுஞ் செயலும் உலகில்செல்லாமை நினைந்து, அவ் வறுமை நிலையை ஆசிரியர்‘செல்லாமை' யென்றே விதந்தார்.

149 செல்லா விடத்துங் குடிப்பிறந்தார் செய்வன
செல்லிடத்துஞ் செய்யார் சிறியவர்; - புல்வாய்
பருமம் பொறுப்பினும் பாய்பரி மாபோல்
பொருமுரண் ஆற்றுதல் இன்று.

(பொ-ள்.) செல்லாவிடத்தும்குடிப்பிறந்தார் செய்வன செல்லிடத்தும்செய்யார் சிறியவர் - வறுமையினால் மாட்டாநிலையிலும் உயர்குடிப்பிறந்தார்செய்யுங்கடமைகளைச் செல்வாக்கு நிலையிலுங்கீழ்குடிப் பிறந்தார் செய்யமாட்டார்; புல்வாய்பருமம் பொறுப்பினும் பாய் பரிமாபோல் பொரும்முரண் ஆற்றுதல் இன்று-மான். சேணந் தாங்கினாலும்பாயும் இயல்பினையுடைய குதிரையைப்போல்மாறுபட்டுப் போர் செய்யும் செருக்கினைச்செய்தல் இல்லை.

(க-து.) வறுமையிலும்குடிப்பிறந்தார் தங் கடமைகளைச் செய்யும்ஆற்றலுடையராவர்.

(வி-ம்.) பருமம், சேணம் என்னும்பொருட்டு; "பருமம் களையாப் பாய்பரிக்கலிமா"  என்னும் நெடுநல்வாடையினும்இப்பொருள் காண்க. பொருதற்குரிய சேணந்தாங்கினும் பொருகின்ற முரணுள்ளம் மானுக்குஇல்லாமைபோல, உதவுதற்குரிய செல்வம் பெறினும்உதவுகின்ற வண்மையுள்ளம் கிழோர்க்கில்லையெனக்கொள்க. மேல், ‘கயமை' என்னும் அதிகாரத்தில்வரும் ‘ஏட்டைப் பருவத்தும்' என்னுஞ்செய்யுளுங் கருதற்பாலது. எடுத்துக்காட்டுவமை.

150 எற்றொன்றும் இல்லா இடத்துங் குடிப்பிறந்தார்
அற்றுத்தற் சேர்ந்தார்க் கசைவிடத் தூற்றாவர்;
அற்றக் கடைத்தும் அகல்யா றகழ்ந்தக்கால்
தெற்றெனத் தெண்ணீர் படும்.

(பொ-ள்.) எற்று ஒன்றும்இல்லாவிடத்தும் குடிப்பிறந்தார் அற்றுத் தன்சேர்ந்தார்க்கு அசைவிடத்து ஊற்று ஆவர் - கையில்எத்தகையதொரு பொருளும் இல்லாத காலத்தும்உயர்குடிப் பிறந்தார் ஆதரவற்றுத்தம்மையடைந்தவர்க்கு அவரது தளர்ச்சிக்காலத்தில் ஊன்றுகோல் போல் உதவுவர்; அற்றக்கடைத்தும் அகல் யாறு அகழ்ந்தக் கால் தெற்றெனத்தெள்நீர் படும் - நீரற்ற காலத்தும், அகன்ற ஆறுசற்றுக் குழிதோண்டியகாலத்தில் விரைவாகத்தெளிநீர் ஊறி உதவும்.

(க-து.) குடிப்பிறந்தார்எந்நிலையிலும் தம்மை அண்டியவரின் தளர்ச்சிக்காலத்தில் ஊன்றுகோல் போல் உதவுவர்.

(வி-ம்.) எற்றொன்று மென்றார், சிறிதுமென்றற்குஊன்றுகோல் ஊன்றெனநின்று பின் ஊற்று என வலித்தது."உடம் புயிர்க்கு ஊற்றாக" என்றார்பிறரும். மேல், பெருமை'  யென்னும்அதிகாரத்தில் வரும் ‘உறைப்பருங்காலத்தும்'என்னுஞ் செய்யுளையுங் கருதுக.