181 ஈத
லிசையா திளமைசே ணீங்குதலால்
காத லவருங் கருத்தல்லர்; - காதலித்து
ஆதுநா மென்னு மவாவினைக் கைவிட்டுப்
போவதே போலும் பொருள்.
(பொ-ள்.) ஈதல் இசையாது - உலகவாழ்க்கையானது வறியவர்க்கு ஒன்று
விரும்பியபடிகொடுத்தல் இயலாததாயிருக்கின்றது; இளமை சேண்நீங்குதலால் காதலவரும் கருத்தல்லர் - இளமைநிலையும் நெடுந்தொலைவில்
நீங்கிப் போதலால்காதலன்புடைய மனைவியரும் வரவர விருப்புடையரல்லர்;காதலித்து ஆதும் நாம் என்னும் அவாவினைக்கைவிட்டு போவதே போலும்.
பொருள்-ஆதலின்உலகவாழ்க்கையிற் பற்றுக்கொண்டு நாம் ஆக்கமுறுவோம் என்னும் அவாவினைக்
கைவிட்டுத்துறவுநெறியில் ஒழுகுவதே பயன்றருவதாகும்.
(க-து.) பற்றில்லாமலிருந்தலேபெருந்தன்மையாகும்.
(வி-ம்.) சேண் நீங்குதல் மீண்டும்பெறற்கருமை தேற்றி நின்றது. காதலவர்: ஒரு
சொல்;‘இளமை நீங்குதலால்' என்னும்
குறிப்பால்,சிறப்பாக அது மனைவியர் மேல் நின்றது. உம்மை,இறந்தது தழீஇயது. கருத்தென்றது ஈண்டு விருப்பம்.போலும் என்பது ஒப்பில்
போலி.
182 இற்சார்வின்
ஏமாந்தேம் ஈங்கமைந்தேம் என்றெண்ணிப்
பொச்சாந் தொழுகுவர் பேதையார்; - அச்சார்வு
நின்றன போன்று நிலையா எனவுணர்ந்தார்
என்றும் பரிவ திலர்.
(பொ-ள்.) இல் சார்வின்ஏமாந்தேம் - மனை வாழ்க்கைச்
சார்பினால்களித்திருக்கின்றேம்; ஈங்கு அமைந்தேம்
-உலகத்தில் அதற்கு வேண்டிய பொன் முதலிய எல்லாநலங்களிலும் நிறைத்திருக்கின்றேம்;
என்று எண்ணிபொச்சாந்து ஒழுகுவர் பேதையர் - என்று கருதிஅறிவிலா
மாந்தர் அவற்றின் பொய்ம்மையை மறந்துஒழுகுவர்; அச் சார்பு
நின்றனபோன்று நிலையா எனஉணர்ந்தார் என்றும் பரிவது இலர் - ஆனால்,அச்சார்புகள் நிலைத்திருப்பனபோற்காணப்பட்டுப் பின் நிலையாமற்போம்
என்றுஉணர்ந்த மேலோர் எக்காலத்திலும் அவற்றைவிரும்புதலின்று யொழுகுவர்.
(க-து.) எல்லா உலக நலங்களும்ஒருங்கமைந்த காலத்தும் அவற்றிற் பற்றின்றிநிற்றலே
பெருந்தன்மை யாகும்.
(வி-ம்.) ஏமாத்தல் - மிகஇன்புறுதல்; அமைதல் - குறைவின்றியிருத்தல்.இரண்டும் தெளிவின் பொருட்டு இறந்த
காலத்தில்வந்தன. "இயற்கையுந் தெளிவுங்கிளக்குங்காலை" என்பதனால்
இதுமுடிக்கப்படும். பேதையாரென்றதனானும் உணர்ந்தார்என்றதனானும் அவ்வவற்றின் உயர்வு
தாழ்வுகள்விளங்கின. என்றும் என்றார், தம் இளமைப்பருவத்தும்
அனைத்து நலங்களும் வாய்ந்த காலத்தும்பரிவதில ரென்றற்கு.
183 மறுமைக்கு
வித்து மயலின்றிச் செய்து
சிறுமைக்குப் படாதேநீர் வாழ்மின் -
அறிஞராய்
நின்றுழி நின்றே நிறம்வேறாங் காரணம்
இன்றிப் பலவு முள.
(பொ-ள்.) மறுமைக்கு வித்துமயலின்றிச் செய்து சிறுமை படாதே நீர்
வாழ்மின்அறிஞராய்-மறுமைக்கு வித்தாகிய அறச்செயலைவாழ்க்கையில் மயங்குதலில்லாமற்
செய்துஎஞ்ஞான்றுந் துன்புறாமல் நீவிர் அறிஞராய்வாழுங்கள்; ஏனென்றால், நின்றுழி நின்றே
நிறம்வேறாம் - நின்ற நிலையில் நின்றே உடம்பினஇளமையொளி வேறாய் மாறும்; காரணமின்றிப் பலவும்உள - அன்றியுங் காரணமில்லாமலே பல
இடையூறுகளும்வாழ்க்கையில் உள்ளன.
(க-து.) மறுமை நினைவோடு ஒழுகுதலேபெருந்தன்மையாகும்.
(வி-ம்.) வித்தென்றது,வித்துப்போன்றதை;
அறிஞராய் வாழ்மின் என்க.நம்மையறியாமலே நிறம் வேறாம் என்றற்கு‘நின்றுழி
நின்றே' யென்றும் இம்மைச்செய்காரணம் இன்றாயினும்
என்றற்குக்‘காரணமின்றி, யென்றுங் கூறினார். மற்று, உளவாதல்உம்மைச் செய் காரணத்தாலென்று கொள்க பலவும்என்றது.
"அடைந்தார்ப் பிரிவும் அரும்பிணியும்கேடும்."
184 உறைப்பருங்
காலத்தும் ஊற்றுநீர்க் கேணி
இறைத்துணினும் ஊராற்றும் என்பர்; - கொடைக்கடனும்
சாஅயக் கண்ணும் பெரியார்போல்
மற்றையார்
ஆஅயக் கண்ணும் அரிது.
(பொ-ள்.) உறைப்பு அரு காலத்தும்ஊற்றுநீர்க் கேணி இறைத்து உணினும் ஊர்
ஆற்றும்என்பர்-மழை துளித்தலில்லாத காலத்திலும் ஊற்றுநீரையுடைய சிறிய நீர்நிலை
இறைத்துஉண்ணுவதாயினும் ஊரிலுள்ளாரனை வர்க்கும் உதவும்என்று பெரியோர் கூறுவர், கொடைக் கடனும் - அதுபோலவறியோர்க்கு ஒன்று
கொடுத்தலாகிய கடமையும்,சாயக்கண்ணும் பெரியார்போல்
மற்றையார்ஆயக்கண்ணும் அரிது - தமது நிலைமை குறைவானகாலத்தும் பெரியோர்
மேற்கொள்ளுதல்போலப்பெரியரல்லாதார் தமது நிலைமை நிறைவடைந்தகாலத்தும் மேற்கொள்ளுதல்
அரிதாகும்.
(க-து.) நிலைமை குறைந்த காலத்தும்பிறர்க்கு இயன்றது உதவ
முற்படுதலேபெருந்தன்மையாகும்.
(வி-ம்.) அருமை இரண்டிடத்தும்இன்மைமேற்று, கேணி என்பது மணற்பரப்பில்இயல்பாக அமையும் ஊற்றுடைய சிறிய
நீர்நிலை.தொல்காப்பிய வுரையிற் "சிறுகுளம்" எனப்பட்டது.கொடைக்கடனும்
அரிது என்க. பெரியாரியல்பைஉவமையுடன் உரைக்குங்கால்
மற்றையாரியல்பும்உடனுரைக்கப்பட்டது.
185 உறுபுனல்
தந்துல கூட்டி அறுமிடத்தும்
கல்லூற் றுழியூறும் ஆறேபோல்; - செல்வம்
பலர்க்காற்றிக் கெட்டுலந்தக் கண்ணும்
சிலர்க்காற்றிச்
செய்வர் செயற்பா லவை.
(பொ-ள்.) உறுபுனல் தந்து உலகுஊட்டி-நீருள்ள காலத்தில் மிக்க நீர்
தந்துஉலகுயிர்களை உண்பித்து, அறுமிடத்தும் கல்
ஊற்றுழிஊறும் ஆறேபோல் - நீர் வறளுங் காலத்தும்தோன்றுகின்ற ஊற்றினிடத்தில்
ஊறியுதவும்ஆறேபோல், செல்வம் பலர்க்கு ஆற்றி-உள்ளகாலத்திற்
பொருளைப் பலர்க்கும் உதவிசெய்து,கெட்டு உலந்தக் கண்ணும்
சிலர்க்கும் ஆற்றிச்செய்வர் செயற்பாலவை - அப் பொருள் கெட்டுநிலையழிந்த காலத்தும்
மேன்மக்கள்,சிலர்க்கேனும் உதவிகள் செய்து தாம்செய்தற்குரிய
கடமைகளைச் செய்துகொண்டிருப்பர்.
(க-து.) எந் நிலையிலுந் தங்கடமைகளைச் செய்தலே பெரியோர் தன்மையாகும்.
(வி-ம்.) கல்லும ஊற்றெனவினைத்தொகையாகக் கொள்க. பலர்க்குமெனவும்,சிலர்க்கேனுமெனவுந் தந்துரைக்க. யாண்டுஞ்செயற்பாலவை
செய்தலே பெரியோரியல்பாதலின்,பலர்க்காற்றி, சிலர்க்காற்றி என்ற பின்னும்‘செய்வர் செயற்பாலவை' என
ஆசிரியர்முடித்துக்காட்டினார். இதனால், உதவுதலென்பது
எந்நிலையிலுஞ் செயற்பாலதாங் கடமையாதலும்பெறப்பட்டது.
186 பெருவரை
நாட! பெரியோர்கட் டீமை
கருநரைமேற் சூடேபோற் றோன்றும்; - கருநரையைக்
கொன்றன்ன இன்னா செயினும் சிறியார்மேல்
ஒன்றானும் தோன்றாக் கெடும்.
(பொ-ள்.) பெரு வரை நாட - பெரியமலைகளையுடைய நாடனே!. பெரியோர்கண் தீமைகருநரைமேல்
சூடேபோல் தோன்றும் -மேன்மக்களிடத்தில் உண்டான குற்றம் சிறந்தவெள்ளையெருதின்மேல்
இட்ட சூடுபோல் விளங்கித்தெரியும்; கருநரையைக் கொன்றன்ன
இன்னா செயினும்- அச் சிறந்த வெள்ளை எருதினைச் சூடிடுதலே யன்றிக்கொன்றாற்போன்ற
துன்பங்களைச் செய்தாலும்,சிறியார்மேல் ஒன்றானும் தோன்றாக்
கெடும் -கீழ்மக்களிடத்தில் ஒரு குற்றமாவது அவ்வாறுவிளங்கித் தெரியாமல்
மறைந்துவிடும்.
(க-து.) மேன்மக்களிடம் சிறுகுற்றமும் உண்டாகாமலிருத்தல் நல்லது.
(வி-ம்.) சூட்டின் வடு நன்குதெரிதல்வேண்டி நரையெருது கூறப்பட்டது. நரை
:ஆகுபெயர் : கருவென்னும் அடைமொழி முதன்மைப்பொருட்டாய்ச் சிறந்த வென்னுங்
கருத்தில்நின்றது. சிறியோர் மிக்க கொடுமைசெய்தாராயினுமென்றற்குக்
‘கருநரையைக்கொன்றன்ன' வென்றது, ‘கருநரைமேற் சூடு' என்றுமுற்கூறியதையே தந்தெடுத்துக்
கொண்டபடி யென்க.பெரியோரை அனைவரும் விளக்கமாகத்தெரிந்திருப்பாராதலின், அவர்பாற் றோன்றுஞ்சிறு குற்றமும் விளக்கமாகத்
தோன்றுவதாயிற்று.‘உயர்ந்தார்ப் படுங்குற்றமும் குன்றின்மேல்இட்ட விளக்கு" என்றார்
பிறரும்.
187 இசைந்த
சிறுமை யியல்பிலா தார்கட்
பசைந்த துணையும் பரிவாம் - அசைந்த
நகையேயும் வேண்டாத நல்லறிவி னார்கண்
பகையேயும் பாடு பெறும்.
(பொ-ள்.) இசைந்த சிறுமைஇயல்பிலாதார்கண் பசைந்த துணையும் பரிவாம் -தமக்குப்
பொருந்திய சிறுமைச் செயல்களையுடையபண்பிலாதாரிடத்தில் நேயங்கொண்ட அளவுந்துன்பமேயாம்; அசைந்த நகையேயும் வேண்டாதநல்லறிவினார்கண் - மாறிய
செயல்களைவிளையாட்டாகவும் விரும்பாத சிறந்தஅறிஞர்களிடத்தில், பகையேயும்
பாடு பெறும் - பகைகொள்ளுதலுங்கூட மாட்சிமைப்படும்.
(க-து.) பெரியோரிடத்துப் பகைசெய்தலினுஞ் சிறியோரிடத்து நட்புச்
செய்தல்பெருந்தீங்கு பயக்கும்.
(வி.-ம்.) இயல்பென்றார்,உலகியல்புக்கேற்ப
வொழுகும் பெருந்தன்மையாகியபண்பை. பசைதல், உள்ளம் நெகிழ்ந்து
சென்றுபற்றுதல். அசைந்த : வினையாலணையும் பெயர்.நகையேயும் பகையேயும் என்னும்
உம்மைகள் இழிவுசிறப்பு.
188 மெல்லிய
நல்லாருள் மென்மை; அதுவிறந்(து)
ஒன்னாருட் கூற்றுட்கும் உட்குடைமை; எல்லாம்
சலவருட் சாலச் சலமே; நலவருள்
நன்மை வரம்பாய் விடல்.
(பொ-ள்.) மெல்லிய நல்லாருள்மென்மை - மென்றன்மையுடைய மகளிரிடம்மென்றன்மையாகவும், அது இறந்து ஒன்னாருள் கூற்றுஉட்கும் உட்கு உடைமை -
பகைவரிடத்தில் அம்மென்றன்மை நீங்கிக் கூற்றுவனும் அஞ்சும்மிடுக்குடைமையாகவும்,
எல்லாம் சலவருள் சாலச்சலமே- முழுதும் பொய்ராயனாரிடத்து
மிக்கபொய்ம்மையாகவும், நலவருள் நன்மை -மெய்யியல்புடைய
மேலோரிடம் மெய்ம்மையாகவும்,வரம்பாய் விடல் - அவ்வவற்றின்
எல்லையாய்நடந்துகொள்க.
(க-து.) மாந்தரின் பல்வேறுநிலைக்கு ஏற்பப் பல்வேறு வகையாக உலகத்தில்நடந்துகொள்ள
வேண்டும்.
(வி-ம்.) முன்னிரு வரிகள்மென்மைக்கும் ஆண்மைக்கும் பின்னிரு
வரிகள்பொய்ம்மைக்கும் மெய்ம்மைக்கும் வந்தன.‘நல்லார்' என்றது, ஈண்டுச் சிறப்பாய்
மகளிரையுணர்த்திற்று. "மகளிர் சாயல் மைந்தர்க்குமைந்து" எனப் பிறரும்
இக் கருத்தியைபுகூறுமிடத்தான் அறிக. உட்கு, ஈண்டு மிடுக்கு;எல்லாம், முழுமையென்னும் பொருட்டு, நன்மை, சலம்என்பதன் மறையாக வந்த மையின்
மெய்ம்மையென்றுரைக்கப்பட்டது. ‘வரம்பாய் விடல்' என்றார்,அவ்வக்குணங்களின் மேனிலையுடை யீராய் நடந்துகொள்க என்றற்கு, பொய்யற்குப் பொய்யராயொழுகுதல், அவர் திருந்தும்
பொருட்டும் அவரால்தாம் ஏதமுறாமைக்கும் என்க.
189 கடுக்கி
யொருவன் கடுங்குறளை பேசி
மயக்கி விடினும் மனப்பிரிப்பொன்
றின்றித்
துளக்க மிலாதவர் தூய மனத்தார்;
விளக்கினுள் ஒண்சுடரே போன்று.
(பொ-ள்.) கடுக்கி ஒருவன்கடுங்குறளை பேசி மயக்கி விடினும் - ஒருவன் முகஞ்சுளித்துப்
பிறரைப்பற்றிக் கொடிய கோளுரை கூறித்தம்மை மயக்கினாலும், மனப் பிரிப்பு ஒன்றுஇன்றித் துளக்கம் இலாதவர் - அப்
பிறர்பால்மனவேறுபாடு சிறிதுமின்றி முற்கொண்டகருத்துறுதியினின்று அசைதலில்லாதவரே,
தூயமனத்தார் விளக்கினுள் ஒண் சுடர் போன்றுவிளக்கினில் எரியும்
ஒள்ளியதீப்பிழம்புபோன்று அழுக்கற்ற நெஞ்சுடையவராவர்.
(க-து.) பிறர் சொல்லுங்கோளுரைகட்குச் செவிகொடாமை பெருந்தன்மையாகும்.
(வி-ம்.) முகத்தின் கடுமைபுலப்படுத்துவதற்குக் ‘கடுக்கி' என்றார்;"மடித்த
செவ்வாய்க்கடுத்த நோக்கின்" என்றார் மணிமேகலையினும், மயங்கிவிடினும்என்றமையாற்
சான்றோர் மயக்கினமை பெறப்படாது;ஒருவன்தான் மயங்குஞ் செயலைத்
தீரநிகழ்த்தினமையே பெறப்படும். அச்செயல்முற்றினமை தெரித்தற்கு ‘விடு' என்னுந்துணிவுப்பொருள் விகுதி நின்றது. துளக்கமின்மைதூய்மையைக்
காட்டுமாகலின், தூயமனத்தாரென்று மேன்மக்களின் பெருமை
கூறப்பட்டது; சுடர், தூய்மைக்குஉவமம்.
சுடரின் ஒண்மை மனத்தின் தூய்மைக்குக்கொள்க.
190 முற்றுற்றுந்
துற்றினை நாளும் அறஞ்செய்து
பிற்றுற்றுத் துற்றுவர் சான்றவர்; -அத்துற்று
முக்குற்றம் நீக்கி முடியும்
அளவெல்லாம்
துக்கத்துள் நீக்கி விடும்.
(பொ-ள்.) முன் துற்றும் துற்றினைநாளும் அறம் செய்து பின் துற்றுத்
துற்றுவர்சான்றவர் - முதலில் உண்ண எடுக்குங் கவளத்தைநாடோறும் பிறர்க்கு உதவி
செய்து அடுத்தகளவத்தைப் பெரியோர் உண்ணுவர்; அத்துற்று-பிறர்க்கு உதவிசெய்த அந்தக் கவளம், முக்குற்றம்
நீக்கி முடியுமளவெல்லாம் துக்கத்துள்நீக்கிவிடும் - அப் பெரியோருடைய காம
வெகுளிமயக்கமென்னும் மூன்று குற்றங்களையுங் கெடுத்துப்பிறவி தீருங் கால முழுமையும்
அவரைத்துன்பத்தினின்று நீக்கிவிடும்.
(க-து.) முதலில் பிறரை உண்பித்துப்பின்பு தாம் உண்டு துயர்
தீர்தலேபெருந்தன்மையாகும்.
(வி-ம்.) துற்றுதல்-உண்ணுதல்;ஆதலின் துற்று,
ஒரு வாய் அளவு உணவுக்காயிற்று;"இகலன்வாய்த்
துற்றிய தோற்றம்" என்றார் பிறரும். முக்குற்றம் நீக்கி அதனால்துக்கத்துள்
நீக்கிவிடும் என்க. முக்குற்றம்நீக்கியவளவே பிறவி தீர்தலின்றி எடுத்த
வினைதீருமளவும் அஃதிருக்குமாகலின், அவ்வாறிருக்குங்கால
முழுமையும் துக்கத்துள் நீக்கிவிடுமென்றார்."உதவிவரைத் தன்றுதவி" யாகலின்,உதவியது ஒரு கவளமாயினும் அது பெரும் பயன் றந்தது.
0 Comments