இது காமவின்பத்தின் இயல்பை
யுணர்த்தும் பகுதி. அறம்பொருள் இன்பமென்னும் வழக்கால், காமம் இன்பமென்றே கூறப்படுதல் விளங்கும். விளங்கவே, வீடென்பது இன்பத்தின் வேறென்றுணரப்படும். அஃது, இன்ப துன்ப மற்ற அமைதி நிலையென்று கொள்க.
அந்நிலையையெய்துங்கால் அஃது இவ்வின்பத்தினுஞ் சிறப்புடையதாய் விளங்கலின், அறம் பொருளின்ப மென்னும் இம் மூவகை உறுதிப்பொருளினும்
உயர்வுடையதாய் இவற்றின் விடுதலையேயாம். ஆதலின், துய்த்தற் குரியவாக நூல்களால் உணர்த்தப்படும் பொருள்கள்
அறமுதலிய மூன்றுமே யாகலின் காமத்துப்பால் மூன்றாம் பகுதியாக இறுதியில் நின்றதென்க.
0 Comments