251 நுண்ணுணர்
வின்மை வறுமை, அஃதுடைமை
பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்; - எண்ணுங்கால்
பெண்ணவாய் ஆணிழந்த பேடி யணியாளோ,
கண்ணவாத் தக்க கலம்.
(பொ-ள்.) எண்ணுங்கால் -ஆராயுமிடத்து; நுண் உணர்வு இன்மை வறுமை - ஒருவனுக்குநுட்ப அறிவில்லாமையே வறுமையாவது;
அஃது உடைமைபண்ணப் பணைத்த பெருஞ் செல்வம் -அந் நுட்பஅறிவினை உடையவனாயிருத்தலே
அவனுக்குமிகப்பெருகிய பெருஞ் செல்வமாகும்; பெண் அவாய்ஆண்
இழந்த பேடி அணியாளோ கண் அவாத் தக்க கலம் -மற்றுப் பெண்ணியல்பு மிக்கு ஆணியல்பு
நீங்கியபேடியும் கண்கள் விரும்பத்தக்க அழகியஅணிகலன்களை அணிந்து
கொள்ளுதலுண்டன்றோ!அதனையொத்ததே அறிவிலார் ஏனைச்செல்வமுடையராயிருந்து மகிழ்தலென்க.
(க-து.) நுண்ணுணர்வில்லாமை ஏனையெவையிரப்பினும் இல்லாமையையே தரும்.
(வி-ம்.) ‘சின்னஞ் சிறிய'‘பன்னம் பெரிய'
என்றாற்போற், ‘பண்ணப்பணைத்த' வென்பதுங் கொள்க. ஆண் தன்னியல்புகுறைந்து பெண்தன்மை மிக்கபோது பேடி
யெனப்படும்;பெண் அணிதற்குரிய அணிகலன்களைப் பேடியும்
அணிந்துவீண் மகிழ்வு கொள்ளுதலை யொத்ததேநுண்ணுணர்வினர் அடைந்து
பயன்பெறுதற்குரியசெல்வத்தை அஃதில்லாதார் பெற்றுவீணாக்குதலென்க. ‘பேடி அணியாளோ'
என்னும் முடிவு,"உயர்திணை
மருங்கிற்பால்பிரிந்திசைக்கும்" என்பதனாற்கொள்ளப்படும்.
252 பல்லான்ற
கேள்விப் பயனுணர்வார் பாடழிந்து
அல்ல லுழப்ப தறிதிரேல் -
தொல்சிறப்பின்
நாவின் கிழத்தி யுறைதலாற் சேராளே,
பூவின் கிழத்தி புலந்து.
(பொ-ள்.) பல் ஆன்ற கேள்விப்பயன் உணர்வார் பாடு அழிந்து அல்லல்
உழப்பதுஅறிதிரேல் - பல நிறைந்த கேள்விகாளல் உண்டாகும்பயனைத் தமது பழக்கத்தில்
நுகர்ந்து இன்புற்றுவரும்அறிஞர்கள் ஒரோவொருகால் உலகில் தம் பெருமைஅழிந்து
வருந்துவதற்குக் காரணம் நீவிர் தகுதியாகஅறிவீராயின்; தொல்சிறப்பின் நாவின் கிழத்திஉரைதலால் சேராளே பூவின் கிழத்தி புலந்து -
அது,பழைமையாகத் தொடர்புற்றுவருஞ் சிறப்பினையுடையநாமகள்
வாழ்ந்து வருவதால் பூமகள் ஊடல் கொண்டுஅவர்களிடம் சேரமாட்டாள் என்பதேயாம்.
(க-து.) கல்வி கேள்விகளிற்பழகிவரும் உள்ளம் பொருள் நினைவுகள்
படிதற்குஇடம்பெறாமையின், ஒரோவொருகால்அவ்வுள்ளமுடையோர்
வறியராயிருப்பது இயல்பு.
(வி-ம்.) ‘கேள்விப் பயன்'என்றார். செல்வத்தில்
அத்தகையபயனில்லாமையின், அறிவு உயிரைப் பற்றித்தொடர்ந்து
வருதலின், நாமகட்குத் தொன்மைகூறப்பட்டது. கல்வி கேள்விகளில்
விரைந்தோடும்நினைவு செல்வத்திற் செல்லாமையின், ‘சேராளேபூவின்
கிழத்தியென்றார். இமயமலையில் மரகதப்பாறையில் பதுமை என்னுங் கயத்திற்பொற்றாமரையில்
திருமகள் சிறப்பின் உறைவள்என்பது, ‘அருமணி மரகதத் தங்கண்
நாறிய எரிநிறப்பொன்னிதழ் ஏந்து தாமரைத் திருமகள்' என்னுஞ்
சிந்தாமணியினாலும் அதனுரையினாலும்அறியப்படுதலின் திரு. பூவின்
கிழத்தியாதல்பெறப்படும்.
253 கல்லென்று
தந்தை கழற அதனையோர்
சொல்லென்று கொள்ளா திகழ்ந்தவன் -
மெல்ல
எழுத்தோலை பல்லார்முன் நீட்ட விளியா
வழுக்கோலைக் கொண்டு விடும்.
(பொ-ள்.) கல் என்று தந்தை கழறஅதனை ஓர் சொல் என்று கொள்ளாது இகழ்ந்தவன்
-இளமையில் தன் தந்தை ‘படி' என்று இடித்துக் கூற
அதனைஒரு நற் சொல் என்று ஏற்காமற் பொருள்செய்யாதுவிட்டவன், மெல்ல
எழுத்தோலைபல்லார்முன் நீட்ட விளியா வழுக்கு ஓலைக்கொண்டுவிடும் - பின்பொருகால்,
எழுத்தெழுதியகடிதமொன்றைப் பலர் முன்னிலையில் ஒருவர்
இதனைப்படியுமென்று மெல்லத் தன் கையிற் கொடுக்கத்தனக்கு அது மாட்டாமையால் நாணத்தாற்
சினந்து கூவிமானத்தால் ஓவென்று அழுதுவிடுவான்.
(க-து.) அறிவின்மை பலர்முன்னிலையில் மானக்குறைவைத் தரும்.
(வி-ம்.) ‘மெல்ல நீட்ட'வென்றார். அஃதவன்
சினத்தை யெழுப்புதலின். வளியா: உடன்பாட்டுவினை. வழுக்கு ஓல்- குறைவினால்உண்டாகும்
அழுகை யொலி; அவ்வொலியைக்கொண்டுவிடும் என்க. ஓல்
ஒலியென்னும்பொருட்டாதல் "அருவி மருங்கு ஓலுறத்த" என்பதிற் காண்க.
254 கல்லாது
நீண்ட ஒருவன் உலகத்து
நல்லறி வாள ரிடைப்புக்கு - மெல்ல
இருப்பினும் நாயிருந் தற்றே, இராஅது
உரைப்பினும் நாய்குரைத் தற்று.
(பொ-ள்.) கல்லாது நீண்ட ஒருவன் -கல்வியறிவு பெறாமல் வளர்ந்து விட்ட ஒருவன்,உலகத்து நல்லறிவான ரிடைப் புக்கு மெல்லஇருப்பினும்
நாய் இருந்தற்று - உலகத்தில் உயர்ந்தஅறிவாளிகளின் அவையில் நுழைந்து
இருக்குமிடம்தெரியாமல் இருந்தாலும் அந்நிலை ஒரு நாய்இருந்தாற் போன்ற
தன்மையையுடையதாகும்; இராதுஉரைப்பினும் நாய் குரைத்தற்று -
அவ்வாறு அடக்கமாகஇராமல் ஏதானும் ஒன்று வாய் திறந்து கூறினும் அதுநாய் குரைத்தாற்
போன்ற தன்மையுடையதாகும்.
(க-து.) கல்வியறிவு பெறாதோர்நாயின் நிலையில் வைத்துக் கருதப்பட்டார்.
(வி-ம்.) நீண்ட என்றார்,ஓரறிவுயிர்போற் கருதி
அதன் இழிவு தோன்ற.அறிவாளரின் அறிவொளிமுன் தன் வலியடங்கிஅடக்கமுடையான் போல்
திகைத்திருத்தலின்,‘மெல்ல இருப்பினும்' என்றார். நாய் என்றது, இழிவுகருதி ; "நவையின் அகல" என்னுமிடத்துநச்சினார்க்கினியர்" நாயுடம்பி
னீங்க"என உரைத்த உரையினால் இதனை யறிக.
255 புல்லாப்புன்
கோட்டிப் புலவ ரிடைப்புக்குக்
கல்லாத சொல்லுங் கடையெல்லாம் - கற்ற
கடாஅயினும் சான்றவர் சொல்லார்
பொருண்மேல்
படாஅ விடுபாக் கறிந்து.
(பொ-ள்.) புல்லாப் புன்கோட்டிப்புலவரிடைப் புக்குக் கல்லாத
சொல்லும்கடையெல்லாம் - அறிவு நிரம்பாதகீழ்மக்களெல்லாரும் அவ்வாறே
மெய்யறிவோடுபொருந்தாத புல்லறிவுக் கூட்டத்தவரான தாழ்ந்தபுலவர் நடுவிற் புகுந்து
தாம் தெளிவாகக் கல்லாதகருத்துக்களையெல்லாம் ஆரவாரமாகவிரித்துரைப்பர்; கற்ற கடாயினும் சான்றவர்சொல்லார் பொருள்மேல் படா
விடுபாக்கு அறிந்து -ஆனால் அறிவு நிரம்பிய பெருமக்களோ, தாம்
கற்றகருத்துக்களைப் பிறர் வினவினாலும் அந்நுண்பொருள்கள் மேல் அவரறிவு
கூரிதாகச்செல்லமாட்டாமல் விட்டுப் போதல் தெரிந்துஅவற்றைக் கூறாமல்
அடக்கமாயிருப்பர்.
(க-து.) அறிவின்மையுடையார்அறிவுடையாரைப் போல் அடக்கமாயிரார்.
(வி-ம்.) புலவரில் தாழ்தரமானவர்,ஈண்டுப்
‘புல்லாப் புன்கோட்டிப் புலவ'ரெனப்பட்டார். கடையெல்லாம் -
கீழ்மக்களெல்லாரும்; சொல்லும் : முற்று. விடு பாக்கு :தொழிற்
பெயர்ப் பொருளில் வந்தது. "அஞ்சுதும்வேபாக்கறிந்து" என்புழிப் போல. 'படாவிடுபா' கென்றமையான், பொருள்
நுண்பொரு ளெனப்பெறப்பட்டுச் சான்றவர்தம் நுண்ணறிவைப்புலப்படுத்தா நின்றது.
256 கற்றறிந்த
நாவினார் சொல்லார்தம் சோர்வஞ்சி
மற்றைய ராவார் பகர்வர் பனையின்மேல்
வற்றிய ஓலை கலகலக்கும் , எஞ்ஞான்றும்
பச்சோலைக் கில்லை யொலி.
(பொ-ள்.) கற்றறிந்த நாவினார்சொல்லார் தம் சோர்வு அஞ்சி -
கற்றுத்தெளிந்தநாவன்மையினையுடைய மேலோர் தம் தவறுதலுக் கஞ்சிமிகுதியாகப் பேசார்; மற்றையராவார் பகர்வர் -ஆனால், கற்றறிவில்லா
ஏனைய ராவோர்அவ்வச்சமின்றி யாதானும் பேசிக்கொண்டிருப்பர்;பனையின்மேல்
வற்றிய ஓலை கலகலக்கும்எஞ்ஞான்றும் பச்சோலைக்கில்லை ஒலி -பனைமரத்தில் நீர்வற்றிய
உலர்ந்த ஒலைகலகலவென்று ஓசையிட்டபடி யிருக்கும், ஆனால்நீர்ப்பசைபோடு
கூடிய பச்சை ஓலைக்கு எப்போதும்ஒலி இல்லையாதல் காண்க.
(க-து.) அறிவில்லாதார்எப்போதும் ஆரவாரித்துக் கொண்டிருப்பார்.
(வி-ம்.) சொல்வன்மையுடையாரேசொல்வார் என்றற்கு நாவினாரென்று
விதந்தார்.பனையின்மேல் என்றது. பனையில் என்றற்கு: இஃதுஎடுத்துக்காட்டுவமை.
கலகலக்கும் என்றது இரட்டைக்கிளவி.
257 பன்றிக்கூழ்ப்
பத்தரில் தேமா வடித்தற்றால்;
நன்றறியா மாந்தர்க் கறத்தா
றுரைக்குங்கால்;
குன்றின்மேற் கொட்டுந் தறிபோல்
தலைதகர்ந்து
சென்றிசையா வாகுஞ் செவிக்கு.
(பொ-ள்.) பன்றிக் கூழ்ப்பத்தரில் தேமா வடித்தற்று நன்றி அறியாமாந்தர்க்கு
அறத்தாறு உரைக்குங்கால் -நன்மையறியாத கீழ்மக்கட்கு அறமுறைமைஅறிவுறுக்குமிடத்து அது, பன்றிக்குக் கூழ்வார்க்குந்தொட்டியில் தேமாம்பழத்தைச்
சாறுபிழிந்தாற்போல் தகுதியற்றதாகும்;குன்றின்மேல் கொட்டுந்
தறிபோல் தலை தகர்ந்துசென்று இசையாவாகும் செவிக்கு - அன்றியும், ஒருமலைப்பாறையின்மேல் அறையப்படும் மரத்தாற்செய்யப்பட்ட முளைக்குச்சி நுனி
சிதைந்து அதனுள்இறங்கிப் பொருந்தாமைபோல அவ்வறவுரையும் அவர்செவிக்கு நுழைந்து
பொருந்தாதனவாகும்.
(க-து.) அறிவில்லாதார்அறிவுரைகள் ஏற்று ஒழுகும் வாய்ப்பில்லாதவராவர்.
(வி-ம்.) தேமா, இன்சுவை
மிக்கமாங்கனியின் வகை; முதலில் தகுதியில்லாமை கூறிப்பின்
பயன்படாமையுங் கூறினார். குன்றின்மேலென்றது, கல்லிலென்னும்
பொருட்டு, தறி, துண்டாகநறுக்கியெடுக்கப்பட்ட
முளைக்குச்சி, அறச்சுவைஅறியாது, மறச்சுவை
பயின்றிருக்கும்மனத்தியல்பும், அறிவுரைகள் ஏலாது
பாறைப்பட்டுக்கிடக்கும் செவிகளின் வன்மையும் ஈண்டு நன்குவிளக்கப்பட்டன. குழிந்த
இடம்பத்தரெனப்படுமாகலின்; ஈண்டுத்தொட்டிக்காயிற்று;
"நீர்வாய்ப் பத்தல்" என்பதுங் கருதுக.
258 பாலாற்
கழீஇப் பலநாள் உணக்கினும்
வாலிதாம் பக்கம் இருந்தைக்
கிருந்தன்று!
கோலாற் கடாஅய்க் குறினும் புகலொல்லா
நோலா உடம்பிற் கறிவு.
(பொ-ள்.) பாலால் கழீஇப் பலநாள்உணக்கினும் வாலிதாம் பக்கம்
இருந்தைக்குஇருந்தன்று - பலநாள் பாலினாற் கழுவிஉலர்த்தினாலும் வெண்ணிறம் உடையதாம்
நிலைமைகரிக்கு இல்லை; கோலால் கடாய்க்
குறினும் புகல்ஒல்லா நோலா உடம்பிற்கு அறிவு - அவ்வாறே,கோலால்
அதட்டிக் குத்திக் கூறினும் புண்ணியஞ்செய்யாத உடம்பில் அறிவு ஏறாது.
(க-து.) அறிவில்லார் -புண்ணியமில்லாதவராதலின் அவர்
திருந்துதல்அருமையாயிருக்கும்.
(வி-ம்.) உவமையால் நன்முறையாற்றிருத்துதலும் பொருளால் அச்சுறுத்தித்
திருத்தலும்பெறப்பட்டன - இருந்தை என்பது கரி : இருமைகருமையாகலின் அப்பெயர்
பெற்றது. இருந்தன்று :எதிர்மறைப்பொருட்டு. குறினும்; குற்றினும்;குத்தினும் என்க. புகலொல்லா : ஒரு சொல்
.கீழ்மக்களின் இழிவு கருதி அவரை ‘நோலா உடம்'பென்று
விதந்தார்.
259 பொழிந்தினிது
நாறினும் பூமிசைதல் செல்லாது
இழிந்தவை காமுறூஉம் ஈப்போல், இழிந்தவை
தாங்கலந்த நெஞ்சினார்க் கென்னாகும்
தக்கார்வாய்த்
தேன்கலந்த தேற்றச்சொல் தேர்வு.
(பொ-ள்.) பொழிந்து இனிதுநாறினும் பூமிசைதல் செல்லாது இழிந்தமை காமுறும்ஈப்போல்
-தேன் சொரிந்து இனிது மணந்தாலும் மலரைஉண்ணுதற்குச் செல்லாமல் இழிந்த
பொருள்களையேவிருப்பும் ஈயைப்போல், இழிந்தவை தாம் கலந்தநெஞ்சினார்க்கு
என்னாகும் தக்கார்வாய்த் தேன்கலந்த தேற்றச் சொல் தேர்வு - இழிந்த
குணங்களேபொருந்திய மனமுடையார்க்குத் தகுதியுடையார்வாயினின்று வரும் இனிமை
பொருந்திய தெளிந்தஅறிவுரைகளின் தெரிவுநிலை என்ன பயனைத் தரும்?
(க-து.) அறிவில்லார் இழிந்தஇயல்புகளையே நாடுவர்.
(வி-ம்.) பூமிசைதலென்பதுதேன்மிசைதல், "பூவுண் வண்டு" என்பழிப்போல. தாம்; சாரியை.
நெஞ்சினார்க்கு,புல்லறிவினார்க்கு; தெரிந்தெடுக்கப்பட்ட
தகுதிநிலை ஈண்டுத் தேர்வெனப்பட்டது. சொற்களுள் இவைஉயர்வென்று சிறந்தோரால் தெரிந்தெடுக்கப்பட்டஅவற்றின்
தகுதிநிலை, இழிந்தவை கலந்தநெஞ்சினார்க்கு யாது பயன்றரும்
என்பது பொருள்.
260 கற்றா
ருரைக்குங் கசடறு நுண்கேள்வி
பற்றாது தன்னெஞ் சுதைத்தலால், - மற்றுமோர்
தன்போ லொருவன் முகநோக்கித் தானுமோர்
புன்கோட்டி கொள்ளுமாம் கீழ்.
(பொ-ள்.) கற்றார் உரைக்கும் கசடுஅறு நுண் கேள்வி பற்றாது தன் நெஞ்சு
உதைத்தலால் -கல்வியறிவு பெற்றோர் தெரிந்து சொல்கின்றகுற்றமில்லாத நுண்ணிய
கேள்விப்பொருளைக்கடைப்பிடியாமல் தனது மனம் இகழ்ந்துதள்ளிவிடுதலால், மற்று தன்போல் ஒருவன் முகம்நோக்கித் தானும் ஓர்
புன்கோட்டி கொள்ளும்கீழ் - மற்றுக் கீழ்மகன், தன்போற்கீழ்மகனொருவன்
முகத்தைப் பார்த்துத் தானும்உரையாடுதற்கு ஒரு புல்லிய அவையைஅமைத்துக்கொள்வன்.
(க-து.) அறிவில்லாதவர்அறிவில்லாதவரோடு கூடியே வாழ்நாளை வறிதாக்குவர்.
(வி-ம்.) மற்று : வினைமாற்று. ஓர் :அசை - பேரறிஞர் தம் அறவுரைகளை
அறிவுறுத்துதற்குஅவை கூட்டிக் கோடல் போல் இவனும் ஒரு புன்கோட்டிகொள்ளும் என்றார்; பலர் சேராமையின் அதன் இழிவுதோன்ற, ‘ஒருவன் முகநோக்கி' எனப்பட்டது."வெள்ளைக்கோட்டியும்
விரகினில் ஒழிமின்" என்றார் பிறரும்.
0 Comments