261 அருகல
தாகிப் பலபழுத்தக் கண்ணும்
பொரிதாள் விளவினை வாவல் குறுகா;
பெரிதணிய ராயினும் பீடிலார் செல்வம்
கருதுங் கடப்பாட்ட தன்று.
(பொ-ள்.) அருகலதாகிப் பலபழுத்தக் கண்ணும் பொரிதாள் விளவினை வாவல்குறுகா -
குறையாததாகிப் பல பழங்கள் பழுத்தாலும்பொரிந்த அடிமரத்தையுடைய விளாமரத்தைவௌவால்கள்
அணுகமாட்டா; பெரிது அணியராயினும்பீடுஇலார்
செல்வம் கருதும் கடப்பாட்ட தன்று -அதுபோல. மிக அருகிலுள்ளவராயினும்
பெருந்தன்மையில்லாதவரது செல்வம், தக்கோரால், பயன்படுஞ்செல்வமாகக் கருதப்படும் முறைமையுடையதன்று.
(க-து.) பெருந்தன்மை யில்லாதவரதுசெல்வம் நலம் பயவாது.
(வி-ம்.) அவ்வப்போதும்குறையாததாகி என்றற்கு ‘அருகலதாகி' என்றார்.அருகாமை குறையாமைப் பொருட்டாதல்,
"பருகு வன்னஅருகா நோக்கமொடு" என்பதனாற் காண்க. மேலே,ஓடும் முள்ளுமிருத்தலின், வௌவாற்குப்பயன்படாவாயின,
பெரிதணிமை உவமைக்கும்.அருகாமையும் பன்மையும்
பொருளுக்கும்உரைத்துக்கொள்க. ஒப்புரவினாலேயேபீடுண்டாதலின், ‘பீடிலார் செல்வம்'என்றார்.
262 அள்ளிக்கொள்
வன்ன குறுமுகிழ வாயினும்
கள்ளிமேற் கைந்நீட்டார் சூடும்பூ
அன்மையால்
செல்வம் பெரிதுடைய ராயினும் கீழ்களை
நள்ளார் அறிவுடை யார்.
(பொ-ள்.) அள்ளிக்கொள்வு அன்னகுறுமுகிழவாயினும் கள்ளிமேல் கைநீட்டார்
சூடும்பூஅன்மையால் - அள்ளிக் கொள்ளுதல் போல, நிறையச்சிறிய அரும்புகளுடையன வாயினும் அவை சூடும்மலர்களல்லாமையால் கள்ளிச்
செடியின்மேல்யாரும் கை நீட்டமாட்டார்; செல்வம்
பெரிதுடையராயினும் கீழ்களை நள்ளார் அறிவுடையார் - அதுபோலச் செல்வம் மிக
உடையவர்களானாலும் அதுநன்மை பயவாமையின் கீழ்மக்களை அறிவுடையார்அணுகமாட்டார்.
(க-து.) கீழ்மக்களின் செல்வம்அறிஞர்களால் மதிக்கப்படாத, நலம் பயவாச்செல்வமாகின்றது.
(வி-ம்.) கவர்ச்சியாகவும்மிகுதியாகவும் அரும்பெடுத்திருத்தலின், ‘அள்ளிக்கொள்வன்ன' என்றார்;
"அள்ளிக் கொள்வற்றேபசப்பு" என்றார் நாயனாரும் : கீழ்கள்,அரிதிற் கிடைத்த செல்வத்தைத் தகுதியாகப்பயன்படுத்திக் கொள்ளும் பீடு
இலாதார்.எடுத்துக்காட்டுவமை.
263 மல்கு
திரைய கடற்கோட் டிருப்பினும்,
வல்லூற் றுவரில் கிணற்றின்கட்
சென்றுண்பர்;
செல்வம் பெரிதுடைய ராயினும், சேட்சென்றும்
நல்குவார் கட்டே நசை.
(பொ-ள்.) மல்கு திரையகடற்கோட்டு இருப்பினும் வல்ஊற்று உவர்இல்கிணற்றின்கட்
சென்று உண்பர் - பலவாக நிறைந்தஅலைகளையுடைய கடற்கரையில் தாம்தங்கியிருந்தாலும்
வலிதின் நீருறுதலுடையஉவர்ப்பில்லாத கிணற்றிற் சென்று மக்கள் நீர்பருகுவர்; செல்வம் பெரிதுடையராயினும் சேண்சென்றும்
நல்குவார்கட்டே நசை - கீழ்மக்கள்அருகாமமையே செல்வம் மிக உடையவராயினும்தக்கோரின்
பொருள் விருப்பம் மிகத் தொலைவுசென்றும் உதவுவார் கண்ணதேயாகும்.
(க-து.) செல்வமுடையோர்கீழோராயின், தக்கோர்க்கு அது பயன்படுதலில்லை.
(வி-ம்.) கடலில் இயல்பாக மிக்கநீரிருத்தல் போலின்றிக் கிணற்றிற் சிறுகச்சிறுக
முயற்சியோடு நீர் வந்து கூடுதலின்.‘வல்லூற்றுக்கிணறு' எனப்பட்டது. இயல்பாகப் பெருஞ்செல்வம்
பெற்றிருத்தலின்றித் தாமே தம்முயற்சியாற் சிறுகச் சிறுகப்
பொருளீட்டும்நிலையினராயினும், அவர் நல்குவோராயின்
அவரிடமேதக்கோர் உள்ளஞ் செல்லுமென்பது கருத்து.நல்குவாரென்றார், நல்கும் பேரினிமைக்குணமுடையாரென்றற்கு. உண்பரென்றது பொதுவினை,ஏகாரம் : தேற்றம்.
264 புணர்கடல்சூழ்
வையத்துப் புண்ணியமோ வேறே;
உணர்வ துடையா ரிருப்ப - உணர்விலா
வட்டும் வழுதுணையும் போல்வாரும்
வாழ்வாரே,
பட்டும் துகிலும் உடுத்து.
(பொ-ள்.) புணர் கடல் சூழ்வையத்துப் புண்ணியமோ வேறு - கடல் நாற்புறமுஞ்சூழ்ந்து
பொருந்தியிருக்கும் உலகத்தில் நல்வினைஎன்பது தனி நிலைமையுடையது; உணர்வதுடையார் இருப்பஉணர்விலா வட்டும் வழுதுணையும்
போல்வாரும் பட்டும்துகிலும் உடுத்து வாழ்வார் - ஏனென்றால், நல்லனஉணர்ந்தொழுகுதலுடையார்
வளமின்றியிருக்க, அவ்வுணர்வொழுக்கமில்லாரான
கறிமுள்ளியுங்கத்தரியும் போன்ற கீழோர் பட்டும் உயர்ந்தஆடைகளும்
உடுத்துக்கொண்டுவாழ்வுடையராயிருக்கின்றனர்.
(க-து.) தக்க உணர்வில்லாதவர்நல்வினைவயத்தாற் செல்வமுடையவராயினும்,அச்செல்வம் தக்கோராற் கண்ணியமாகக்கருதப்படாத நிலையினை
யுடையது.
(வி-ம்.) ‘கிழவர் இன்னோர்என்னாது பொருள் தான் பழவினை மருங்கின் பெயர்புபெயர்பு
உறையு' மகாலின், அப்புண்ணியத்துக்கும்
அறிவொழுக்கங்கட்குந்தொடர்பில்லையென்பார், இவ்
‘வையத்துப்புண்ணியமோ வேறு' என்றார். வளக்குறைவால்ஆரவாரமின்றி
யிருக்க வென்னும் பொருட்டு, ‘இருப்ப'என்றார்.
வட்டும் வழுதுணையுஞ் சிறுமை தோன்றநின்றன. போல்வாருமென்னும் உம்மை, அசை, முன்நல்வினையினாற்
செல்வமுடையவராயினும்இப்பிறவியில் மதிக்கத்தக்க நற்சால்புஏதுமின்மையின், அச் செல்வம் நன்மைபயவாச்செல்வமாயிற்றென்பது கருத்து. வருஞ்செய்யுளும்இப்பொருட்டு.
265 நல்லார்
நயவர் இருப்ப நயமிலாக்
கல்லார்க்கொன் றாகிய காரணம், - தொல்லை
வினைப்பய னல்லது வேனெடுங் கண்ணாய்!
நினைப்ப வருவதொன் றில்.
(பொ-ள்.) நல்லார் நயவர் இருப்பநயமிலாக் கல்லார்க்கு ஒன்று ஆகிய காரணம்
-உயர்ந்த அறிவு செயல்களுடையாரும் இனியருமானமேலோர் உலகத்திதல் வளமின்றியிருக்க,அவ்வினிமையுங் கல்வியறிவுமில்லாக் கீழோர்க்குஒரு
செல்வநிலை உண்டான காரணம், தொல்லைவினைப்பயன் அல்லது வேல்நெடு
கண்ணாய் நினைப்பவருவதொன்று இல் - வேற்படை போன்ற நீண்டகண்களையுடைய மாதே! பழைய
நல்வினையின் பயனேயல்லது வேறு ஆய்ந்து துணிதற்குரிய காரணம் இல்லை.
(க-து.) நற்குணநற்செயல்களில்லார் செல்வராயிருப்பினும்,சான்றோர் அதனை முன்வினைப் பயனென்று கருதிமதியாது
செல்வர்.
(வி-ம்.) தம் இயல்பில்நல்லராதலோடு பழகுதற்கும் இனியரென்றற்கு,நயவரென்றுங் கூறினார். ஒன்றென்று சுட்டாதுசென்றார்,
அது மதிக்கப்படாமையின். ஆராய்ந்துகாணத்தக்க அத்தனை பெரிய
காரணம்யாதுமில்லையென்றற்கு, ‘நினைப்ப வருவதொன்றில்'என்று மேலும் விதந்துரைக்கப்பட்டது. தொல்லைவினைப்பயனென்றது. காரணந்
தெரிவித்தபடி,"தீதில் வினையினால் நந்துவர்
மக்களும்" என்றார் பிறரும்.
266 நாறாத்
தகடேபோல் நன்மலர்மேற் பொற்பாவாய்!
நீராய் நிலத்து விளியரோ - வேறாய
புன்மக்கள் பக்கம் புகுவாய்நீ பொன்போலும்
நன்மக்கள் பக்கம் துறந்து.
(பொ-ள்.) நன் மலர்மேல் பொன்பாவாய் - சிறந்த தாமரை மலரின்மேல்வீற்றிருக்கும்
பொன்னாலான பாவையை ஒத்ததிருமகளே!, நீறாய் நிலத்து
விளியர் - நீசாம்பராய் வெந்து இவ்வுலகத்தில் அழிந்து போகக்கடவாய்; ஏனென்றால், நீ பொன்போலும் நன்மக்கள்பக்கம் துறந்து
நாறாத் தகடேபோல் வேறாய்புன்மக்கள் பக்கம் புகுவாய் - போன் போல்மதிக்கப்படுதற்குரிய
மேன்மக்களின் பக்கம்நீங்கி அவர்க்கு முற்றிலும் இயல்பில் வேறானகீழ்மக்களின் பக்கம்
மணத்தலில்லாதபுறவிதழைப் போற் சேர்ந்து நீ சூழ்ந்துநிற்பாயாதலின்.
(க-து.) கீழ்மக்களிடம்திரண்டிருக்குஞ் செல்வம் - இருப்பதும் இல்லாததும்ஒன்றே.
(வி-ம்.) நாறாத் தகடேபோற்புகுவாய் என்க. நல்லோர் வருந்துதலின் மிகுதியைஇச்
செய்யுள் பழித்துரை கூறுமுகமாக நன்குவிளக்கிற்று. விளியியர் என்னும்
வியங்கோள்விளியர் என நின்றது. உணர்வில்லாரிடம் செல்வம்சேருங்கால் அது நன்றியில்
செல்வமாய் மணமற்றுப்போதலால், புறவிதழ் மலரைச்
சூழ்ந்து அதனைக்காத்து நிற்றல் போற் செல்வம்அவ்வுணர்விலாரைச் சூழ்ந்து திரண்டு
காத்துநிற்றலானும் ‘நாறாத்தகடேபோற் புகுவாய்'என்றார்.
முன்னும் இச் செய்யுட் கருத்துவந்தது.
267 நயவார்கண்
நல்குரவு நாணின்று கொல்லோ;
பயவார்கட் செல்வம் பரம்பப் பயின்கொல்;
வியவாய்காண் வேற்கண்ணாய் இவ்விரண்டும்
ஆங்கே.
நயவாது நிற்கு நிலை.
(பொ-ள்.) நயவார்கண் நல்குரவுநாணின்றுகொல் - தாழ்ந்தொழுகி இரவாதநன்மக்கள்பால்
உள்ள வறுமைக்குவெட்கமில்லைபோலும்; பயவார்கண்
செல்வம்பரம்பப் பயின்கொல் - பிறர்க்குப்பயன்படுதலில்லாத புன்மக்களிடம்
செல்வம்பரவுவதற்கு அது பிசின்போலும்; வியவாய்
காண்வேற்கண்ணாய் இவ்விரண்டும் ஆங்கே நயவாதுநிற்கும் நிலை - வேற்படையை ஒத்த
கண்களையுடையபெண்ணே! வறுமையும் செல்வமுமென்னும் இவ்விரண்டும்அவ்விடங்களில்
இனிமைப்படாது நிற்கும்இயல்புக்கு நீ வியப்படைவாய்.
(க-து.) கீழ்மக்களின் செல்வம்இனிமைப்படாது.
(வி-ம்.) நயவார் : எதிர்மறை,பயின் பிசினாதல்,
‘‘பல் கிழியும் பயினும்' என்பதனாலுங் காண்க.
இனிமைப் படாமையோடுநிலையாகவும் உள்ள தன்மை வியப்பிற்குரியதாகலின்' ‘வியவாய்காண்' என்றார்.வியவாய், ஈண்டு உடன்பாடு. காண் : முன்னிலையசை.
268 வலவைக
ளல்லாதார் காலாறு சென்று
கலவைகள் உண்டு கழிப்பர்; - வலவைகள்
காலாறுஞ் செல்லார் கருனையால்
துய்ப்பவே
மேலாறு பாய விருந்து.
(பொ-ள்.) வலவைகள் அல்லாதார்கால் ஆறு சென்று கலவைகள் உண்டு கழிப்பர்
-நாணிலிகளல்லாத நல்லோர் தம் வறுமையால் ஊர்விட்டு ஊர் கால்வழி நடந்துபோய்
அங்கங்குக்கிடைக்கும் இழிந்த கலவையுணவுகள் உண்டு காலங்கழிப்பர்; வலவைகள் கால் ஆறுஞ் செல்லார்கருனையால் துய்ப்ப மேல்
ஆறு பாயவிருந்து - ஆனால்நாணிலிகளான புல்லியோர் கால் வழியும் நடந்துசெல்லாராய்த்
தம்மேல் நெய் பால் தயிரென்னும்ஆறுகள் பாய்ந்தொழுகக் கறிகளோடு
விருந்துண்டுஇன்புறுவார். என்னே இவ்வுலகியற்கை!
(க-து.) கீழ்மக்களின் செல்வம்வீண் களியாட்டங்கட்கே செலவாகும்.
(வி-ம்.) பலரிடமிருந்து சிறுகச்சிறுகக் கிடைக்கும் பல்வேறு உணவு கறிகளை
ஒருங்குசேர்க்க அஃது ஒரு வேளை யுணவுக்குப் போதியதாதலின்,கலவையுண வெனப்பட்டது; காலாறுஞ்
செல்லாரெனவேஊர்திகளில் இறுமாந்து செல்வரென்பது பெறப்படும்.கருனையாலென்னும் ஆலுருபு
"பெண்டகையால்பேரமர்க்கட்டு" என்புழிப்போலஉடனிகழ்ச்சிப் பொருளில் வந்தது.
269 பொன்னிறச் செந்நெற் பொதியொடு
பீள்வாட
மின்னொளிர் வானங் கடலுள்ளுங்
கான்றுகுக்கும்;
வெண்மை யுடையார் விழுச்செல்வம்
எய்தியக்கால்
வண்மையும் அன்ன தகைத்து.
(பொ-ள்.) பொன் நிறச் செந்நெல்பொதியொடு பீள் வாட மின் ஒளிர் வானம்கடலுள்ளும்
கான்று உகுக்கும் - பொன்னின்நிறத்தையுடைய உயர்ந்த செந்நெல் என்னும் பயிர்மேல்
மூடிய தாளுடன் உள்ளிருக்குங் கருவும் வாட,மின்னல்
மிளிரும் மேகம் கடலுள்ளும் நீர்சொரிந்து பெய்யும்; வெண்மையுடையார்
விழுச்செல்வம் எய்தியக் கால் வண்மைவும் அன்ன தகைத்து- அறியாமையுடைய புன்மக்கள்
சிறந்த செல்வத்தைஅடைந்தால் அவர் கொடைத்திறமும் அதுபோன்றஇயல்பினதேயாகும்.
(க-து.) புன்மக்கள் செல்வம்தேவையற்றோர்க் கெல்லாங் கொடுக்கும்படிநேர்ந்து
வீணாகச் செலவழியும்.
(வி-ம்.) கடலுள்ளு மென்றார்களருள்ளுமென்றற்கு. மேகம் பயிரின்மேற்செல்லும்போது
நீரை வெளிப்படுத்தாமற் கடலுலிங்களரிலுஞ் செல்லுங்கால் வீணாய்வெளிப்படுத்துதலின், உகுக்கும் என்னாதுகான்றுகுக்கும் என்றார்; கான்றல்,வெளிப்படுத்துதல். "இன்மை யரிதே
வெளிறு" என்புழிப் போல. வெண்மை அறியாமையுணர்த்திற்று.பெய்தற்குரிய தகுதியான
இடத்தில் பெய்யாமற்காற்றால் ஈர்ந்து அலைப்புண்ட விடத்தே மேகம்நீரைக்
கக்கிவிடுதலின், அவ்வாறே உதவுதற்குரியதகுதியாளர் இன்னா
ரென்றறியாமல் தம்மைவன்கண்மை செய்யுந் தறுகணாளர்க்கும் வீணர்க்குமேகயவர் தமது
செல்வத்தை உகுத்து விடுவாரென்றார்,‘வண்மையும் அன்ன தகைத்து'
என்றார். "ஈர்ங்கைவிதிரார் கயவர் கொடிறுடைக்குங்
கூன்கையரல்லாதவர்க்கு" என்றார் நாயனாரும்.
270 ஓதியும்
ஓதார் உணர்விலார் ஓதாதும்
ஓதி யனையார் உணர்வுடையார்;- தூய்தாக
நல்கூர்ந்தும் செல்வர் இரவாதார், செல்வரும்
நல்கூர்ந்தார் ஈயா ரெனின்.
(பொ-ள்.) ஓதியும் ஓதார்உணர்விலார் ஓதாதும் ஓதி யனையார் உணர்வுடையார்
-இயற்கையறிவில்லாதவர் நூல்களை ஓதினாராயினும்ஓதாதவரேயாவர், இயற்கை யறிவுடையார் நூல்களைஓதாதிருந்தும் ஓதினாரோ
டொப்ப விளங்குவர்.தூய்தாக நல்கூர்ந்தும் செல்வர் இரவாதார்செல்வரும் நல்கூர்ந்தார்
ஈயாரெனின் -வறுமையுற்றும், மனத்தூய்மையோடிருநது பிறரை
ஒன்றுஇரவாதவர் செல்வரேயாவர், செல்வரும் பிறர்க்குஒன்று
உதவாரென்றால் வறுமையாளரேயாவர்.
(க-து.) அறிவும் உதவுங் குணமும்இல்லாமற் செல்வம் மாண்புறாது.
(வி-ம்.) உணர்வென்றது, ஈண்டு
உலகநடையறிந்தொழுகும் இயற்கை யுணர்வு. கல்வியுடைமைசெல்முடைமை யென்னும் இரண்டும்
முறையேஉலகநடையறிந்தொழுகல், உதவுதல்
என்னும்ஒப்புரவியல்புகளாலேயே மாட்சிமைப்படும் என்பதுபொருள்; கல்வியும்
ஒரு செல்வமாகலின் உடன் உரைக்கப்பட்டது. இவ்விருவகைச்செல்வங்களும் நன்றியுள்
செல்வமாம் வாயில்உணர்த்திற்று இச்செய்யுளென்க.
0 Comments