இது பொருளை உணர்த்தும் பகுதி; அறத்தைப்போல் இம்மை மறுமை வீடு என்னும் மூன்றற்கும் நேரே காரணமாதலின்றித், துய்த்தலானும் வழங்குதலானும் முறையே இம்மை மறுமை இரண்டற்கு மட்டும் ஓராற்றால் காரணமாதல் பற்றி, இப் பொருட்பால் அறத்துப்பாலை அடுத்து நின்றது.