தன்னூன் பெருக்கற்குத்
தான்பிறி தூனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்
எங்ஙனம் ஆளும் அருள்
மு.வ உரை:
தன் உடம்பைப் பெருக்கச்
செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக
இருக்க முடியும்.
சாலமன் பாப்பையா உரை:
தன் உடம்பை வளர்ப்பதற்காக
இன்னோர் உடம்பைத் தின்பவன் மனத்துள் இரக்கம் எப்படி இருக்கும்?
கலைஞர் உரை:
தன் உடலை வளர்ப்பதற்காக
வேறொரு உயிரின் உடலை உணவாக்கிக் கொள்பவர் எப்படிக் கருணையுள்ளம் கொண்டவராக இருக்க
முடியும்
குறள் 252:
பொருளாட்சி போற்றாதார்க்
கில்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்றின் பவர்க்கு
ஆங்கில்லை ஊன்றின் பவர்க்கு
மு.வ உரை:
பொருளுடையவராக இருக்கும்
சிறப்பு அப்பொருளை வைத்துக் காப்பாற்றாதவர்க்கு இல்லை, அருளுடையவராக
இருக்கும் சிறப்பு புலால் தின்பவர்க்கு இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
பொருளால் பயன் பெறுவது
அதைப் பாதுகாக்காதவர்க்கு இல்லை; அது போல, இரக்கத்தால்
பயன்பெறுவது இறைச்சி தின்பவர்க்கு இல்லை.
கலைஞர் உரை:
பொருளைப் பேணிக்
காத்திடாதவர்க்குப் பொருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை; புலால்
உண்பவர்க்கும் அருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை
குறள் 253:
படைகொண்டார் நெஞ்சம்போல்
நன்றூக்கா தொன்றன்
உடல்சுவை யுண்டார் மனம்
உடல்சுவை யுண்டார் மனம்
மு.வ உரை:
ஓர் உயிரின் உடம்பைச்
சுவையாக உண்டவரின் மனம் கொலைக்கருவியைக் கையில் கொண்டவரின் நெஞ்சம் போல் நன்மையாகி
அருளைப் போற்றாது.
சாலமன் பாப்பையா உரை:
கத்தியைத் தன் கையில்
பிடித்திருப்பவரின் மனம்,
இரக்கத்தை எண்ணிப் பாராதது போலப் பிறிதொரு உடலைச் சுவைத்து
உண்டவரின் மனமும் இரக்கத்தை எணணாது.
கலைஞர் உரை:
படைக் கருவியைப்
பயன்படுத்துவோர் நெஞ்சமும்,
ஓர் உயிரின் உடலைச் சுவைத்து உண்பவர் நெஞ்சமும், அருளுடைமையைப் போற்றக் கூடியவைகள் அல்ல
குறள் 254:
அருளல்ல தியாதெனிற்
கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்
பொருளல்ல தவ்வூன் தினல்
மு.வ உரை:
அருள் எது என்றால் ஓர்
உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன்
உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.
சாலமன் பாப்பையா உரை:
இரக்கம் எது என்றால் கொலை
செய்யாமல் இருப்பதே;
இரக்கம் இல்லாதது எது என்றால் கொலை செய்வதே; பாவம்
எது என்றால் இறைச்சியைத் தின்பதே
கலைஞர் உரை:
கொல்லாமை அருளுடைமையாகும்; கொல்லுதல்
அருளற்ற செயலாகும் எனவே ஊன் அருந்துதல் அறம் ஆகாது
குறள் 255:
உண்ணாமை யுள்ள துயிர்நிலை
ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யா தளறு
அண்ணாத்தல் செய்யா தளறு
மு.வ உரை:
உயிர்கள் உடம்பு பெற்று
வாழும் நிலைமை,
ஊன் உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது ஊன் உண்டால் நரகம் அவனை
வெளிவிடாது.
சாலமன் பாப்பையா உரை:
இறைச்சியைத் தின்னாது
இருத்தல் என்னும் அறத்தின்மேல் உயிர்நிலை இருக்கிறது. இதை மீறித் தின்னும்
உயிர்களை நரகம் விழுங்கும்;
வெளியே விடவும் செய்யாது.
கலைஞர் உரை:
உயிர்களை உணவாக்கிக்
கொள்ளச் சகதிக்குழியும் வாய் திறவாது; புலால் உண்ணாதவர்கள்
இருப்பதால், பல உயிர்கள் கொல்லப்படாமல் வாழ்கின்றன
குறள் 256:
தினற்பொருட்டால் கொல்லா
துலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்
மு.வ உரை:
புலால் தின்னும் பொருட்டு
உலகத்தார் உயிர்களைக் கொல்லா திருப்பாரானால், விலையின் பொருட்டு ஊன்
விற்பவர் இல்லாமல் போவார்.
சாலமன் பாப்பையா உரை:
தின்பதற்காகவே கொலை
செய்பவர் இல்லை என்றால்,
இறைச்சியை விலைக்குத் தருபவரும் உலகில் எங்கும் இருக்கமாட்டார்.
கலைஞர் உரை:
புலால் உண்பதற்காக உலகினர்
உயிர்களைக் கொல்லாதிருப்பின், புலால் விற்பனை செய்யும் தொழிலை எவரும்
மேற்கொள்ள மாட்டார்
குறள் 257:
உண்ணாமை வேண்டும் புலாஅல்
பிறிதொன்றன்
புண்ண துணர்வார்ப் பெறின்
புண்ண துணர்வார்ப் பெறின்
மு.வ உரை:
புலால் உண்ணாமலிருக்க வேண்டும், ஆராய்ந்து
அறிவாரைப் பெற்றால், அப் புலால் வேறோர் உயிரின் புண் என்பதை
உணரலாம்.
சாலமன் பாப்பையா உரை:
இறைச்சி, இன்னோர்
உடம்பின் புண்; அறிந்தவர் அதை உண்ணக்கூடாது.
கலைஞர் உரை:
புலால் என்பது வேறோர்
உயிரின் உடற்புண் என்பதை உணர்ந்தோர் அதனை உண்ணாமல் இருக்கவேண்டும்
குறள் 258:
செயிரின் தலைப்பிரிந்த
காட்சியா ருண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்
மு.வ உரை:
குற்றத்திலிருந்து நீங்கிய
அறிவை உடையவர்,
ஒர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ணமாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:
பிழையற்ற அறிவினை உடையவர், உயிர்
பிரிந்த இறைச்சியை உண்ணமாட்டார்.
கலைஞர் உரை:
மாசற்ற மதியுடையோர், ஓர்
உயிரைப் பிரித்து அதன் ஊனை உண்ண மாட்டார்கள்
குறள் 259:
அவிசொரிந் தாயிரம்
வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று
உயிர்செகுத் துண்ணாமை நன்று
மு.வ உரை:
நெய் முதலியப் பொருள்களைத்
தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத்
தின்னாதிருத்தல் நல்லது.
சாலமன் பாப்பையா உரை:
(மந்திரம்
சொல்லித் தேவர்களுக்கு இடும் உணவாகிய) அவிகளைத் தீயில் போட்டு ஆயிரம் வேள்வி
செய்வதைக் காட்டிலும் ஓர் உயிரைப் போக்கி அதன் உடம்பை உண்ணாமல் இருப்பது நல்லது.
கலைஞர் உரை:
நெய் போன்ற பொருள்களைத்
தீயிலிட்டு ஆயிரம் வேள்விகளை நடத்துவதைவிட உண்பதற்காக ஓர் உயிரைப்
போக்காமலிருப்பது நல்லது
குறள் 260:
கொல்லான் புலாலை
மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்
எல்லா உயிருந் தொழும்
மு.வ உரை:
ஓருயிரையும் கொல்லாமல்
புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.
சாலமன் பாப்பையா உரை:
எந்த உயிரையும்
கொல்லாதவனாய்,
இறைச்சியைத் தின்ன மறுத்தவனாய் வாழ்பவனை எல்லா உயிர்களும் கை
குவித்துத் தொழும்.
கலைஞர் உரை:
புலால் உண்ணாதவர்களையும், அதற்காக
உயிர்களைக் கொல்லாதவர்களையும் எல்லா உயிரினங்களும் வணங்கி வாழ்த்தும்
0 Comments