281 அத்திட்ட
கூறை அரைச்சுற்றி வாழினும்
பத்தெட் டுடைமை பலருள்ளும் பாடெய்தும்
ஒத்த குடிப்பிறந்தக் கண்ணுமொன்
றில்லாதார்
செத்த பிணத்திற் கடை.
(பொ-ள்.) அத்து இட்ட கூறைஅரைச்சுற்றி வாழினும் பத்து எட்டு உடைமைபலருள்ளும்
பாடு எய்தும் - துவர் ஊட்டிய ஆடையைஇடுப்பில் உடுத்திக்கொண்டு
ஞானவாழ்வில்வாழ்ந்தாலும் பத்தானும் எட்டானும் பொருளுடைமைபலரிடத்திலும்
பெருமையடையும்; ஒத்தகுடிப்பிறந்தக்கண்ணும் ஒன்று
இல்லாதார் செத்தபிணத்தின் கடை - ஏற்ற உயர்குடிக்கண் பிறந்தாலும்ஒரு பொருளில்லாதார்
செத்த பிணத்தினுங்கடைப்பட்டவராவர்.
(க-து.) துறவு நிலையும் உயர்குடிப்பிறப்பும் உடையவராயினும்
வறுமையில்லாமையேபெருமை தரும்.
(வி-ம்.) "அத்துண் ஆடையர்"என்றார் பிறரும் அரைச் சுற்றிவாழினுமென்றார், பற்றற்றிருக்கும் எளிமைதோன்ற. பத்தெட்டென்றது,
ஒரு சிற்றளவான குத்துமதிப்பு.
பெரும்பான்மையோரானும்மதிக்கப்படுமென்றற்குப் பலருள்ளும் எனப்பட்டது.பலர்க்கும்
உடன் பாடான வென்றற்கு ‘ஒத்த'வென்றார். உயர்குடி நலனுந்துறவு
மாண்பு மிருந்தும்பொருளில்லாதார் இத்துணை இழிக்கப்படுவரெனின்,ஏனையோரது வறுமையின் இழிவு கூறவேண்டாதாயிற்று.
282 நீரினும்
நுண்ணிது நெய்யென்பார், நெய்பினும்
யாரும் அறிவர் புகைநுட்பம்;- தேரின்
நிரப்பிடும்பை யாளன் புகுமே, புகையும்
புகற்கரிய பூழை நுழைந்து.
(பொ-ள்.) நீரினும் நுண்ணிது நெய்என்பர் - நெய் நீரைப்
பார்க்கினும்நுட்பமானதென்று அறிந்தோர் கூறுவர்; நெய்யினும்புகை நுட்பம் யாரும் அறிவர் - இனி, நெய்யைப்பார்க்கினும்
புகை நுட்பமென்பதை அனைவரும்அறிவர், தேரின் -
ஆராய்ந்தால்நிரப்பிடும்பையாளன் புகையும் புகற்கு அரிய பூழைநுழைந்து புகும் -
வறுமையாகிய துன்பமுடையோன் அப்புகையும் புகுதற்கு அரிய மிக நுண்ணிய
புழையிலும்நுழைந்து புகுவான்.
(க-து.) வறுமைத் துன்பமுடையோன் மிகமெல்லியனாவான்.
(வி-ம்.) நெய் நீரினும்நுண்ணிதாதலைப் பலரும் அறியாராதலின், புகைநுட்பமென்றதற்கு யாருமறிவரென்று
கூறினாற்போற்கூறாது, பொதுவாக ‘என்பர்' என்றார்.
அதிகாரம்இன்மை குறித்ததாகலின், ‘தேரின் இரப்பிடும்பையாளன்'
எனப் பிரித்துரைத்தல் சிறவாது. "நிச்சநிரப்பிடும்பை" என்றார்
பிறரும்,‘நிரம்பிடும்பை யென்பது, பெரும்பாலும்
பசிமிகுதியால் வயிற்றை நிரப்பும் இன்னலுணர்த்திமிக்க வறுமையை விளக்குமாதலின்,
அவன் மிகமெல்லியன் எனற்குப் புகையும் புகற்கரிய பூழைநுழைந்து
புகுமென்றார். புகுதலென்றது, இரத்தல்.
283 கல்லோங்
குயர்வரைமேற் காந்தள் மலராக்கால்
செல்லாவாம் செம்பொறி வண்டினம்; -கொல்லைக்
கலாஅற் கிளிகடியுங் கானக நாட!
இலாஅஅர்க் கல்லை தமர்.
(பொ-ள்.) கல் ஓங்கு உயர் வரைமேல்காந்தள் மலராக்கால் செல்லா செம்பொறிவண்டினம் -
கற்கள் வளர்ந்துள்ள உயர்ந்தமலையின்மேல் காந்தள் முதலிய மலர்கள்மலராவிட்டால் சிவந்த
புள்ளிகளையுடைய வண்டின்திரள் அங்கே செல்லமாட்டா: கொல்லைக்கலால்கிளி கடியும் கானக
நாட! இலார்க்கு இல்லைதமர் -ஆதலால், தினை முதலிய
புனங்களில் கிளி முதலியபறவைகளைச் சிறுசிறு கற்களால் ஒட்டுகின்றகாட்டையுடைய நாடனே,
பொருளில்லாதவறியோரிடத்தில் உறவினர் வருவதில்லை.
(க-து.) வறியோரை எவரும் அணுகார்.
(வி-ம்.) கற்கள் ஓங்குதலென்றது,உயர்ந்து
தெரிதல்; மலர்கள் மலர்தலில்லாதமலையென்றற்குக் கல்லோங்கு வரை
எனப்பட்டது. ஆம்: அசை, கானகமென்றது, மலையையடுத்த
கானகமென்க.நுகர்தற்குரிய பொருள்களில்லாமையின் தமர்வருதலில்லை என்றாராயிற்று.
284 உண்டாய
போழ்தின் உடைந்துழிக் காகம்போல்
தொண்டா யிரவர் தொகுபவே; -வண்டாய்த்
திரிதருங் காலத்துத் தீதிலிரோ என்பார்
ஒருவரும் இவ்வுலகத் தில்.
(பொ-ள்.) உடைந்துழிக்காகம்போல் உண்டாய போழ்தின் தொண்டு ஆயிரவர்தொகுப - ஒருவன்
இறந்து விட்டபோது அவனுடம்பைக்காகங்கள் சூழ்ந்து மொய்த்துக்கொள்வதுபோல்ஒருவற்குச்
செல்வமுண்டான காலத்தில் அவனுக்குஒன்பதனாயிரம் பேர் ஏவல் புரிவோராய் வந்துகூடுவர்; வண்டாய்த்திரிதருங் காலத்துத்தீதிலிரோ என்பார்
ஒருவரும் இவ்வுலகத்து இல் -ஆனால் வறுமையினால் உணவுக்காக ஒருவர்
வண்டுபோற்பலவிடங்களிலும் அலையுங்காலத்தில் அவரைத்தீங்கில்லாம லிருக்கிறீர்களா
என்று நலம்உசாவுவார் இவ்வுலகத்தில் ஒருவரும் இல்லை.
(க-து.) பொருளில்லாதவர்களைஉலகம் பொருள் செய்யாது.
(வி-ம்.) உடம்பு கட்டுத் தளர்ந்துஉயிர் நீங்குதலின் இறத்தல்
உடைதலெனப்பட்டது.தொண்டு, ஈண்டு இரட்டுற
மொழிதல்; தொண்டென்னுஞ்சொல் ஒன்பதென்னும்
பொருட்டுமாதல்"தொண்டுபடு திவவின்" என்னும்மலைபடுகடாத்துட் காண்க.
ஒன்பதினாயிரம் என ஓர்அளவு கூறினார், மிகுதி தேற்றுதற்கு. உணவுநாடிச்சேறற்கும்,
சிறிது சிறிதாகப் பெறுதற்கும்,அலைதற்கும்
வண்டுவமம் வந்தது.
285 பிறந்த
குலமாயும்; பேராண்மை மாயும்
சிறந்ததங் கல்வியும் மாயும் -
கறங்கருவி
கன்மேற் கழூஉங் கணமலை நன்னாட!
இன்மை தழுவப்பட் டார்க்கு.
(பொ-ள்.) கறங்கு அருவி கல்மேல்கழூஉம் கணமலை நல் நாட - பாய்ந்து
ஒலிக்கின்றஅருவிநீர் கற்களின் மேற்புறத்தைக் கழுவுகின்றகூட்டமான மலைகளையுடைய
சிறந்த நாடனே!. இன்மைதழுவப்பட்டார்க்குப் பிறந்த குலம் மாயும்பேராண்மை மாயும்
சிறந்த தம் கல்வியும் மாயும் -உலகத்தில் வறுமை பொருந்தியவர்க்கு அவர்
பிறந்தகுலத்தின் பெருமை கெடும்; அவருடைய
பேராற்றல்கெடும்; எல்லாவற்றிற்கும் மேலான அவர்தம்
கல்விநிலையுங் கெடும்.
(க-து.) வறுமை பொருந்தியவர்க்குஇருமை நலங்களுங் கெடும்
(வி-ம்.) குலமென்றது ஈண்டுக் குடி;ஆண்மையென்றது
திறமை. கல்வி எழுமையும்ஏமாப்புடைத்தாகலின் ‘சிறந்த கல்வி'யெனப்பட்டது. இன்மையால் என உருபு விரித்துக்கொள்க.
286 உள்கூர்
பசியால் உழைநசைஇச் சென்றார்கட்கு
உள்ளூ ரிருந்துமொன் றாற்றாதான்; உள்ளூர்
இருந்துயிர் கொன்னே கழியாது தான்போய்
விருந்தின னாதலே நன்று.
(பொ-ள்.) உள் கூர் பசியால் உழைநசைஇச் சென்றார்கட்கு உள்ளூர் இருந்தும்
ஒன்றுஆற்றாதான் - உடம்பில் மிகுகின்ற பசித்துன்பத்தால் தான் இருக்குமிடத்தை
நாடிவந்தவர்கட்குத் தான் உள்ளூரிலிருந்தும் நன்று உதவஇயலாதவன், உள்ளூர் இருந்து உயிர்கொன்னே கழியாதுதான் போய்
விருத்தினனாதலே ஒன்று-அவ்வாறுஉள்ளூரில் இருந்து தனது உயிர் வாழ்க்கையை
வீணேகழிக்காமல் தான் வெளியூர்கட்குப் போய்ப்பிறர் இல்லத்தில் விருந்தினனாயிருந்து
உண்ணுதலேநலமாகும்.
(க-து.) பிறர்க்கொன்று உதவ இயலாதவறியோனது உயிர்வாழ்க்கை வீண் என்க.
(வி-ம்.) நேரத்தில் உணவுகிட்டாமை தோன்ற ‘மிகுகின்ற பசி' யென்றார்:நாடி வருவோர்க்கு இல்லை யென்றால்
பெருந்தீதாகலின், ‘நசைஇச் சென்றார் கட்கு' என்றுவிதந்தார்; "இரப்போர்க்கு ஈயா இன்மை"
என்றார் பிறரும். வறுமை மிகுதி தேற்றுதற்கு‘உள்ளூர் இருந்தும்' எனப்பட்டது. உயிர் என்றது,ஈண்டுயிர் வாழ்க்கை.
‘இரத்தலே நன்' றென்றற்கு,‘விருந்தினனாதலே
நன்' றென்றது, இகழ்ச்சி.உள்ளூரில்
ஒருவர்க்கொருவர் விருந்தினராதல்செல்லாமையின், ‘போய்
விருந்தினனாதல் நன்'றென்று கூறினார். பிறர்க்கு
விருந்தினராகுமுகமாகவேனும் அவர்க்குப் புண்ணியம் விளைய ஏதுவாகித்தனதுயிர்
வாழ்க்கையைப் பயனுடையதாக்குகவெனஇகழ்ந்து கூறுவார். ‘கொன்னே கழியாது'என்றாரென்க. கொன் ஈண்டுப் பயனின்மைப்பொருட்டு.
287 நீர்மையே
யன்றி நிரம்ப எழுந்ததங்
கூர்மையும் எல்லாம் ஒருங்கிழப்பர்; -கூர்மையின்
முல்லை அலைக்கும் எயிற்றாய்!
நிரப்பென்னும்
அல்லல் அடையப்பட் டார்.
(பொ-ள்.) கூர்மையின் முல்லைஅலைக்கும் எயிற்றாய் - தமது
கூர்மையால்முல்லையரும்புகளை வெல்லும் பற்களையுடைய பெண்ணே!,நிரப்பு என்னும் அல்லல் அடையப்பட்டார்நீர்மையே,
யன்றி நிரம்ப எழுந்து தம் கூர்மையும்எல்லாம் ஒருங்கு இழப்பார் -
வறுமை என்னும்இன்னலால் தாக்குண்டவர் தமது இயற்கையறிவையேயன்றி நிரம்ப வளர்த்த தமது
கூரியசெயற்கையறிவையும் என எல்லாம் ஒருங்கேஇழந்துவிடுவர்.
(க-து.) பொருளில்லாதவர்க்குத்தம் இயற்கை செயற்கை யறிவுகளும் மழுங்கிவிடும்.
(வி-ம்.) நீர்மையென்றதுஇயற்கையியல்பு ; "நெறியிற்றிரியா நீர்மை" என்புழிப்போல. நிரம்ப எழுந்த கூர்மையென்று
மேல்வருதலின் ; இஃது இயற்கை யறிவினை உணர்த்திநின்றது;
எனவே, கூர்மையென்பது
செயற்கையறிவெனக்கொள்ளப்படும்; இனி, இயற்கைநல்லியல்புகளேயன்றி
நன்கு மலர்ந்த தம் கூரியஅறிவினையும் என எல்லாம் ஒருங்கிழப்பர்என்றுரைத்தலும்
ஒன்று. ஒருங்கிழப்பரென்றார்,எல்லாவற்றின் மலர்ச்சிக்கும்
உலகத்திற்பொருளே ஏதுவாயிருத்தலின் என்க; "பொருள்துன்னுங்காலைத்
துன்னாதன இல்லையே" என்றார் பிறரும்.
288 இட்டாற்றுப்
பட்டொன் றிரந்தவர்க் காற்றாது
முட்டாற்றுப் பட்டும் முயன்றுள்ளூர்
வாழ்தலின்
நெட்டாற்றுச் சென்று நிரைமனையிற்
கைந்நீட்டுங்
கெட்டாற்று வாழ்க்கையே நன்று.
(பொ-ள்.) இட்டு ஆற்றுப்பட்டு ஒன்றுஇரந்தவர்க்கு ஆற்றாதுமுட்டு ஆற்றுப்பட்டு
முயன்றுஉள்ளூர் வாழ்தலின் - சிறுமையாகிய வறுமை வழியில்அகப்பட்டுத் தம்மிடம் ஒன்று
இரந்தவர்கட்கு உதவமாட்டாமல் முட்டுப்பாடான முறைமையில்இருந்துகொண்டு முயற்சியோடு
உள்ளூரில் உயிர்வாழ்தலைவிட, நெடு ஆற்றுச் சென்று
நிரை மனையில்கை நீட்டும் கெடு ஆறு வாழ்க்கையே நன்று - தொலைவழிநடந்துபோய்
அங்கங்கும் வரிசையாக உள்ளவீடுகளிற் கை நீட்டி இரந்துண்ணுங் கெடுவழிவாழ்க்கையே
நன்றாகும்.
(க-து.) பிறர்க்கொன்றுஉதவமாட்டாத வறுமை வாழ்வினும் நாடு
கடந்துபோய்இரந்துண்ணும் இழிவு வாழ்வே நன்று.
(வி-ம்.) இட்டாறு-சிறுமை வழி;"இட்டிய குயின்ற
துறை" என்புழிப்போல; என்றது,ஈண்டு
வறுமை. வாழ்க்கை எளிதாக நடவாமையின்,‘முயன்று' என்றார். இரந்துண்ணும் வாழ்வில்உயிர்ப்பண்பு கிளர்ந்தெழாமையாலும், தமக்கும்பிறர்க்கும் இன்னாமை தருவதானாலும் அது "கெட்டாற்றுவாழ்க்கை" யென்று விதந்து கூறப்பட்டமைபெரிதுங்
கருத்திருத்தற்பாலது "இன்னாமைவேண்டின் இரவெழுக" என்றார் பிறரும்.நன்று
என்றார் வினையொழியும் வரையில் உயிரேனும்உடம்பில் நிலைத்திருக்க உதவுதலின் என்க.
289 கடகஞ்
செறிந்ததங் கைகளால் வாங்கி
அடகு பறித்துக்கொண் டட்டுக்-குடைகலனா
உப்பிலி வெந்தைதின் றுள்ளற்று வாழ்பவே,
துப்புரவு சென்றுலந்தக் கால்.
(பொ-ள்.) துப்புரவு சென்றுஉலந்தக்கால் - நுகரப்படும் பொருள்கள் நீங்கிவறுமையுற்றவிடத்து, கடகம் செறிந்த தம் கைகளால் -முன்பு
செல்வராயிருந்தபோது கடகம் செறிந்திருந்ததம் கைகளினால், வாங்கி
அடகு பறித்து - தூறுகளைவளைத்து அதிலுள்ள கீரைகளைப் பறித்து, கொண்டுஅட்டு
- அதனையே முதன்மையாகக் கருதி உப்பில்லாமல்அவித்து, குடை கலனா
உப்பு இலிவெந்தை தின்று உள்அற்று வாழ்ப - பனையோலையின் முடக்கே உண்கலானகஅவ்
வுப்பில்லாததான அவியலைமென்று வாயாறிஅமைதியற்று உயிர் வாழ்வார்கள்.
(க-து.) வறுமை நிலையினும்அமைதியிழந்த இழிந்த நிலை வேறில்லை.
(வி-ம்.) குடைவாகக்கட்டப்படுதலின் ஓலைப்பட்டை ‘குடை' யெனப்பட்டது;"வேள்நீர் உண்ட
குடை" என்றார்கலியினும்; இழிவு தோன்ற ‘வெந்தை' என்றும்,பசியாறாது வாளா மெல்லுதல் தோன்றத் ‘தின்று'என்றும் விதந்தார். வெந்தை, அவியலெனப்படும்;"பராரை வேலை" யென்றார் பிறரும்,உலத்தல் ஈண்டு
நிலைகெடுதல்.
290 ஆர்த்த
பொறிய அணிகிளர் வண்டினம்
பூத்தொழி கொம்பின்மேற் செல்லாவாம்; -நீர்த்தருவி
தாழா உயர்சிறப்பின் நண்குன்ற நன்னாட!
வாழாதார்க் கில்லை தமர்.
(பொ-ள்.) ஆர்த்த பொறியஅணிகிளர் வண்டினம் பூத்து ஒழி கொம்பின்மேல்செல்லா -
நிறைந்த புள்ளிகளையுடைய அழகுமிக்கவண்டுக்கூட்டங்கள், பூத்தல் மாறியபூக்கொம்புகளிடத்திற் செல்லமாட்ட, நீர்த்துஅருவி
தாழாது உயர் சிறப்பின் தண் குன்ற நல் நாட -இனிய நீரருவி அறாது ஒழுகுகின்ற
மிக்கசிறப்பினையுடைய குளிர்ச்சியான மலைகளையுடையஉயர்ந்த நாடனே!. வாழாதார்க்கு இல்லை
தமர் -ஆதலாற் பொருள் மலர்ச்சியில்லாத வறியோர்க்குஉறவாவோர் இல்லை.
(க-து.) நுகர்பொருள்கள் மாறியவறியோரை எவரும் நாடார்.
(வி-ம்.) பூத்து: தொழிற்பெயர்ப்பொருளினின்றது. சிலகாலம் வரையிற் பூத்துப், பின்பூவெடுத்தலே மாறிப் போன பூங்கொம்புகள்
இங்குக்குறிக்கப்பட்டன. ஆம்: அசை. உவமையின் கருத்தாற்,பொருள்
மலர்ச்சியும் பிறர்க் குதவுதலுமுடையராய்உயிர் வாழ்தலே வாழ்தலாகும்மென்பது
பெறப்படும்.இச்செய்யுட் பொருள், முன்னும் வந்தது.
0 Comments