201 வயாவும்
வருத்தமும் ஈன்றக்கால் நோவும்
கவாஅன் மகற்கண்டு தாய்மறந் தாஅங்கு
அசாஅத்தான் உற்ற வருத்தம் உசாஅத்தன்
கேளிரைக் காணக் கெடும்.
(பொ-ள்.) வயாவும் வருத்தமும்ஈன்றக்கால் நோவும் கவாஅன் மகன் கண்டு
தாய்மறந்தாங்கு - கருவுற்றபோது தோன்றிய வேட்கைத்துன்பமும், இடையிற் கரு சுமந்து வந்த வருத்தமும்,கருவுயிர்த்த அக்காலத்தில் உண்டான இன்னலும்தாய் தன் தொடையில் மகனைக்
கண்டுமறந்துவிட்டாற்போல, அசா தான் உற்ற வருத்தம்
-முயற்சிகளினிடையே தளர்ச்சியால் ஒருவன் அடைந்ததுன்பம், உசா
தன் கேளிரைக் காணக் கெடும் -ஆய்ந்து சூழ்தற்குரிய தன் சுற்றத்தாரைக்கண்டவளவில்
நீங்கும்.
(க-து.) முயற்சிகளினிடையேதோன்றுந் தளர்ச்சியை நீக்குதற்குஅவ்வப்போதும்
ஆராய்ந்து சூழ்தற்குரியசுற்றத்தார் இன்றியமையாது வேண்டியிருத்தலின்,அவரை எஞ்ஞான்றும் தழுவி யொழுகுதல் வேண்டும்.
(வி-ம்.) ‘வயா' வென்பதைத்தொல்காப்பிய
வுரையில் "கருப்பந்தாங்கி வருத்தமுற்று, நுகரப்படும்பொருண் மேற்செல்லும் வேட்கை" என்பர்நச்சினார்க்கினியர்.
ஈன்றக்கால் என்பதைஈண்டு, ஈன்ற அக்கால் என்று பிரிக்க. மகனென
வழக்குநோக்கி ஆண்பாலாகக் கூறினாரேனும் ஏனைப்பாலுக்கும் ஒக்கும். தான்
அசாவினாலுற்றவருத்தமெனவும், தன் உசாக்கேளிரெனவும் கொள்க.
202 அழன்மண்டு
போழ்தின் அடைந்தவர்கட் கெல்லாம்
நிழன்மரம்போல் நேரொப்பத் தாங்கிப் -
பழுமரம்போல்
பல்லார் பயன்றுய்ப்பத் தான்வருந்தி
வாழ்வதே
நல்லாண் மகற்குக் கடன்.
(பொ-ள்.) அழல் மண்டு போழ்தின்அடைந்தவர் கட்கெல்லாம் நிழல்மரம் போல் -வெயிலின்
அழல் மிகுந்த காலத்தில் தன்னைஅடைந்தவர்கட் கெல்லாம் ஒப்ப உதவும் நிழல்மரத்தைப்போல், நேர் ஒப்பத் தாங்கி -வறுமையின் அழல் மிகுந்த
காலத்தில் தன்னைஅடைந்தவர் கட்கெல்லாம் சமம் பொருந்தக்காத்து, பழுமரம்போல் பல்லார் பயன் துயப்ப -பழுத்துள்ள மரம் பலரும் நுகரப்
பழங்கள்உதவுதல்போல் பலரும் பயன் நுகரப் பொருள்உதவி, தான்
வருந்தி வாழ்வதே நல் ஆண்மகற்குக்கடன் - தான் மேன்மேலும் பொருளீட்டும்முயற்சியால்
உழைப்புடையனாய் வாழ்வதே உயர்ந்ததாளாண்மை மிக்க மகனுக்குக் கடமையாகும்.
(க-து.) மிக்க உழைபெடுத்துச்சுற்றந் தழுவி வாழ்தலே சிறந்த
ஆண்மகனதுகடமையாகும்.
(வி-ம்.) உவமைக்கும் பொருளுக்கும்ஏற்பன வருவித்துக் கொள்க. நேரொப்ப என்றார்,பயனும் வேறுபாடுங் கருதாது இடரொன்றே கருதித்தாங்கி
யென்றற்கு. துய்ப்ப எனப் பிறர் வினையாற்கூறினார், அவர்
அத்துணை உரிமையாய் நுகருமாறுபிறர்க்குரியனாய் வாழ்தல் வேண்டுமென்பது கருதி,"என்பும் உரியர் பிறர்க்கு" என்றார் பெருநாவலரும், வருந்தி வாழ்தலாவதுமுயற்சியின் உழைப்போடு வாழ்தல்.
203 அடுக்கன்
மலைநாட! தற்சேர்ந் தவரை
எடுக்கல மென்னார் பெரியோர்;- அடுத்தடுத்து
வன்காய் பலபல காய்ப்பினும் இல்லையே,
தன்காய் பொறுக்கலாக் கொம்பு.
(பொ-ள்.) அடுக்கல் மலை நாட -ஒன்றன் மேலொன்றடுக்கிய மலைகளையுடைய நாடனே,தன் சேர்ந்தவரை எடுக்கலம் என்னார் பெரியோர் -தம்மைச்
சேர்ந்த சுற்றத்தவரை ஆதரியோம் என்றுகூறார் பெரியோர், அடுத்தடுத்து
வன்காய் பல பலகாய்ப்பினும் இல்லையே தன் காய்பொறுக்கலாக்கொம்பு - மேலுமேலும் வலிமைமிக்ககாய்கள்
பலப்பல காய்த்தாலும் தன்காய்களைத்தாங்கிக் கொள்ளாத கிளைகள் உலகத்தில்இல்லையே.
(க-து.) தம்மைச் சேர்ந்தவரைஆதரித்து நிற்றலே பெருமையும் இயல்புமாகும்.
(வி-ம்.) அடுக்கலாகிய மலையென்க.‘பெரியோர் தற்சேர்ந்தவரை' என்பது ஒருமை பன்மைமயக்கம். எடுக்கலம் என்பதற்கு
நிலையுயர்த்தோம்என்பது பொருள். என்னாரென்பது என்று கைவிடார்என்னுங் கருத்துடையது.
வலிய காய் என்றமையாற்பெரிய காய் என்பதும் பெறப்படும். உவமையிற்காய்க்கு வலிமை
கூறியது, பொருளில்தற்சேர்ந்தவரின் இன்னல் மிகுதியுணர்த்தும்.
பலபல என்னும் அடுக்கு மிகுதிமேற்று, எடுத்துக்காட்டுவமை.
204 உலகறியத்
தீரக் கலப்பினும் நில்லா
சிலபகலாம் சிற்றினத்தார் கேண்மை;- நிலைதிரியா
நிற்கும் பெரியோர் நெறியடைய
நின்றனைத்தால்
ஒற்கமி லாளர் தொடர்பு.
(பொ-ள்.) உலகு அறியத் தீரக்கலப்பினும் - யாவரும். அறியும்படி முழுதும்
இணங்கிநேசங் கொண்டாலும், நில்லா சில பகல்
ஆம்சிற்றினத்தார் கேண்மை - கீழோர் தொடர்புகள்நிலைபெறுதலில்லாதனவாய்ச் சில
நாட்களேநிற்கும் : ஒற்கம் இலாளர் தொடர்பு - பிறரைத்தாங்குதலில்
தளர்ச்சியில்லாதவரது தொடர்பு,நிலைதிரியா நிற்கும்
பெரியோர்நெறியடையநின்றனைத்து - இயல்பாகவே தமதுபெருந்தன்மையான நிலையில் திரியாமல்
நிற்கும்பெரியோர் தமக்கொரு வீடுபேற்றுநெறி வந்துபொருந்த அதன்கண்
அழுந்தநின்றொழுகினாற்போன்ற தன்மையுடையது.
(க-து.) சுற்றத்தாரைத்தாங்குவோர் தொடர்பே உலகுக்கு இனிதாவது.
(வி-ம்.) நில்லா : முற்றெச்சம்.சிற்றினத்தா ரென்றது ஈண்டு, அண்டினாரைஆதரிக்கும் பெருந்தன்மையில்லாத
கீழோரென்க.உலகில் அவரே பலராதலின் அவரது கேண்மையும்நில்லா வெனப் பன்மையாற்
கூறப்பட்டது. பிறரைஆதரிக்கும் வாய்ப்பு நேர்தலைப் பெரியோர் ஒருநற்பேறாகக் கருதி
மகிழ்வராதலின் நெறியடையநின்றனைத்து என உவமிக்கப்பட்டது; இது‘சிறப்பின்
தீராக் குறிப்பின்' வந்தது,ஆல் : அசை.
205 இன்னர்
இனையர் எமர்பிறர் என்னுஞ்சொல்
என்னும் இலராம் இயல்பினால் - துன்னித்
தொலைமக்கள் துன்பந்தீர்ப் பாரேயார்
மாட்டும்
தலைமக்க ளாகற்பா லார்.
(பொ-ள்.) இன்னர் - இவர்இத்தகையவர், இனையர் - இவர் இவ்வளவினர்; எமர் -இவர் எம்மைச்
சேர்ந்தவர், பிறர் - இவர்பிறரைச் சேர்ந்தவர், என்னுஞ் சொல் என்னும்இலராம் இயல்பினால் - என்னுஞ் சொல் சிறிதும்இலராகிய
தன்மையினால், துன்னித் தொலைமக்கள்துன்பம் தீர்ப்பாரே -
நிலையிழந்த மக்களின்இன்னலைத் தாமே அவரையடைந்து தீர்த்து வைப்பவரே,யார்மாட்டும் தலை மக்களாகற்பாலார் -அனைவரிடத்தும் மேன்மக்களாகக்
கருதப்படும்இயல்புடையவராவர்.
(க-து.) அனைவர்க்கும் ஒப்பஇடுக்கண் தீர்த்து ஆதரிப்பவரே
அனைவர்க்குந்தலைவராதற்குரியர்.
(வி-ம்.) அடைந்தாரது இடதுதீர்த்தலொன்றே கருதுவாரென்பது முதலிரண்டுஅடிகளின்
கருத்து. ‘என்னும்' என்பது
சிறிதும்என்னும் பொருட்டாதல், "என்னும் பனியாய்" என்பதனாலுங்
காண்க தொலை மக்கள் - நிலைதொலைந்த மக்கள் ; என்றது
ஆதரவில்லாதவரென்றற்கு. ‘தீர்ப்பாரே' யென்னும் ஏகாரம்பிரிநிலை
தலைமக்கள் - தலைமையுடைய மக்கள்;அயலாரும் அவரைத் தமக்குத்
தலைவராகக்கொள்வரென்றற்கு ‘யார்மாட்டு' மென்றார்.
206 பொற்காலத்துப்
பெய்த புலியுகிர் வான்புழுக்கல்
அக்காரம் பாலோ டமரார்கைத் துண்டலின்
உப்பிலிப் புற்கை உயிர்போற்
கிளைஞர்மாட்டு
எக்கலத் தானு மினிது.
(பொ-ள்.) பொற்காலத்துப் பெய்தபுலிஉகிர் வான் புழுக்கல் - பொன்னாலானஉண்கலத்தில்
இட்டுவைத்த புலியின்நகத்தைப்போன்ற சிறந்த சோற்றை, அக்காரம்பாலொடு - சர்க்கரையோடும் பாலோடும், அமரார்கைத்து
- மனம் பொருந்தாதவரிடத்திலிருந்து,உண்டலின் - உண்ணுதலைவிட,
உப்பு இலிப்புற்கை -உப்பும் இல்லாததான புல்லரிசிக்கஞ்சியை,உயிர்போல் கிளைஞர்மாட்டு - உயிர்போன்றசுற்றத்தாரிடமிருந்து, எக் கலத்தானும் இனிது -எந்தக் கலத்தினாலும் உண்ணுதல் நன்று.
(க-து.) உள்ளன்புடைய சுற்றத்தார்எளியவராயினும் அவரே இன்பந் தருபவராவர்.
(வி-ம்.) புழுக்கல்,அவித்தெடுக்கப்பட்ட
சோறு, அமராரென்பதுஉள்ளன்பில்லாதவரை, உப்பும்
என இழிவுசிறப்பும்மை கொள்க. உயிர் போற்கிளைஞரென்றார். உள்ளன்புடையவரென்னும்
பொருட்டு,உண்ணுதல் என்னுஞ் சொல் இசையெச்சத்தால்
தொக்குநின்றது. உதவும் பொருளே நன்மை தருவதன்று,உதவுவோர் சால்பே
நன்மை தருவதாமாகலின் இங்ஙனங்கூறினார். "உதவிவரைத்தன் றுதவி உதவி செயப்பட்டார்
சால்பின் வரைத்து" என்றார்நாயனாரும், மேல்வருஞ்
செய்யுளும் இக்கருத்துடையது.
207 நாள்வாய்ப்
பெறினுந்தந் நள்ளாதா ரில்லத்து
வேளாண்மை வெங்கருனை வேம்பாகும்;- கேளாய்,
அபராணப் போழ்கின் அடகிடுவ ரேனுந்
தமராயார் மாட்டே இனிது.
(பொ-ள்.) நாள்வாய்ப் பெறினும்தம் நள்ளாதார் இல்லத்து வேளாண்மை வெம்
கருனைவேம்பாகும் - காலத்தில் பெற்றாலும் தம்உறவாகாதவர் வீட்டின் ஒப்புரவோடு கூடிய
சூடானகறியுணவு வேப்பங்காயை ஒத்தது; கேளாய் - நீ கேள்;அபராணப் போழ்தின் அடகு இடுவரேனும் தமராயார்மாட்டே இனிது -
பிற்பகற்போழ்தில் கீரையுணவுஇடுவராயினும் உறவினரானோரிடமேஇனிமையாயிருக்கும்.
(க-து.) சுற்றத்தா ருதவியே இன்பந்தரும்.
(வி-ம்.) நாள் என்றது, நாளின்முதற்காலம்;
முற்பகல். நள்ளாதார் -நண்ணாதவர்; அன்பினால்
அணுக்க மில்லாதவரென்க.உதவும் எண்ணத்தோடு கூடியதாயினுமென்றற்கு‘வேளாண்மை' என்னுஞ் சொற்கொடுத்துக்கூறப்பட்டது. ‘நாள்வாய்' என
வந்தமையின்வெங்கருனை யென்னுமிடத்து ‘வெம்' என்பது
வெப்பமுணர்த்திற்று. கருனை - கறிகளோடு கூடிய உணவு. ‘கருனை'யென்பதும்
‘அடகு' என்பதும் முறையே உணவின் உயர்வுதாழ்வு குறித்தற்கு
வந்தன. பெறினும் இடுவரேனும்என்னும் உம்மைகள் எதிர்மறைப் பொருளன.
208 முட்டிகை
போல முனியாது வைகலுங்
கொட்டியுண் பாரும் குறடுபோற்
கைவிடுவர்;
சுட்டுக்கோல் போல எரியும் புகுவரே
நட்டா ரெனப்படு வார்.
(பொ-ள்.) முட்டிகை போல முனியாதுவைகலும் கொட்டியுண்பாரும் குறடுபோல் கைவிடுவர்
-கம்மாளரின் சம்மட்டிபோல் நாடோறும்வெறுத்தலில்லாமல் தம்மை இடித்திடித்து
வயிறுபிழைப்பாரும் நேரத்திற் குறடு போற் கைவிட்டுவிடுவர்; சுட்டுக்கோல்போல எரியும் புகுவர் நட்டாரெனப்படுவார் -
ஆனால் உறவானவரெனப் படுவோர்அங்ஙனம் நேரத்திற் கைவிடாமல் உலையாணிக்கோல்போல் தம்முடன்
எரியும் புகுந்து உடன்துன்புறுவர்.
(க-து.) உறவினர் உற்ற நேரத்திற்கைவிடாதவராதலின் அவரைத் தாமும் என்றுந்
தழுவிநிற்றல் வேண்டும்.
(வி-ம்.) முட்டிகைபோல வென்றார்,பிறரை
இச்சகத்தால் வருத்தி இடித்துண்ணுதலின்.கொட்டி என முட்டிகையின் வினையினாலேயேகூறப்பட்டது.
"கொட்டு வினைக்கொட்டிலும்" என்றது காண்க ஈண்டு உண்ணுதலென்பது, வயிறுபிழைக்கைக்கு வந்தது. உலைக்கூடத்தில் இரும்புமுதலிய பொருள்களைத்
தீயில் இடும்போது குறடு அதனைவிட்டுவிடும்; உலையாணியென்னுஞ்
சுட்டுக்கோல்உடன்புகும். ஆதலின், கைவிடுவோர்க்கும்கைவிடாதோர்க்கும்
முறையே அவை இரண்டும் உவமமாகவந்தன. கம்மாளர் கருவிகளே செய்யுளில் ஒரு சேரஉவமமாக
வந்தமை நயமுடைத்து.
209 நறுமலர்த்
தண்கோதாய்! நட்டார்க்கு நட்டார்
மறுமையுஞ் செய்வதொன் றுண்டோ! -
இறுமளவும்
இன்புறுவ இன்புற் றெழீஇ அவரோடு
துன்புறுவ துன்புறாக் கால்.
(பொ-ள்.) நறுமலர்த் தண் கோதாய்- சிறந்த மலர்களாற் றொடுக்கப்பட்ட
குளிர்ந்தமாலையை யணிந்த மாதே, நட்டார்க்கு
நட்டார்மறுமையும் செய்வதொன்று உண்டோ - உறவினர்க்குஉறவினர் மறுமையிலும் செய்வதொரு
நன்மை உண்டோ?;இறுமளவும் இன்புறுவது இன்புற் றெழீஇ அவரோடு
துன்புறுவதுன்புறாக்கால் - இறக்கும் வரையிலும் அவ்வுறவினர்இன்புறுவன தாமும்
இன்புற்று எழுச்சியோடிருந்துஅவரோடு துன்புறுவன துன்புறாவிடின்.
(க-து.) சுற்றந் தழுவுதலால் துன்பம்வரினும் அதுவே செய்யத்தக்கது.
(வி-ம்.) அவரோடு துன்புறாக்கால்மறுமையுஞ் செய்வதொன்றுண்டோ வென்க.
எழீஇயென்றார். கிளர்ச்சியோடு தொடர்ந் தென்னும்பொருட்டு, "ஒள்வாள் தானை உருத்தெழுந்தன்று," என்புழிப்போல.
210 விருப்பிலா
ரில்லத்து வேறிருந் துண்ணும்
வெருக்குக்கண் வெங்கருனை வேம்பாம்; - விருப்புடைத்
தன்போல்வா ரில்லுள் தயங்குநீர்த்
தண்புற்கை
என்போ டியைந்த அமிழ்து.
(பொ-ள்.) விருப்பு இலார் இல்லத்துவேறு இருந்து உண்ணும் வெருகு கண் வெம் கருனை
வேம்புஆகும் - அன்பில்லாதவர் வீட்டில் தனியே இருந்துஉண்ணுகின்ற, பூனைக் கண்போன்ற ஒளிமிக்க சூடானபொறிக்கறியுணவும்
வேப்பங் காய்போல வெறுப்புத்தரும்; விருப்புடைத் தன் போல்வார்
இல்லுள் தயங்குநீர்த் தண்புற்கை என்போடு இயைந்த அமிழ்து -அன்புடைய தன்னொத்தார்
வீட்டில் உண்ணுகின்ற விளங்கும் நீரையுடைய குளிர்ந்த புல்லரிசிக்கஞ்சியும் உடம்போடு
பொருந்திய அமிழ்தமாகும்.
(க-து.) சுற்றத்தாரிற் சிலர் எளியநிலையினரேனும் அவர் அன்புடையவராகலின்
அவர்தழுவுதற்குரியர்.
(வி-ம்.) ‘வெருகு' உயிர்த்தொடர்மொழியாதலின்
வல்லெழுத்து இரட்டிற்று. உடனிருத்தி உணவிடாமையின் "வேறிருந்து"
எனப்பட்டது.தன் போல்வாரென்றார், தன்னை
மதிப்பாரென்னும்பொருட்டு. நீர்க்குத் ‘தயங்கும் என்னும் அடை,புல்லரிசிதானும்
போதிய தின்றி வெறும் நீருணவாய்விளங்குதலையும், புற்கைக்குத்
‘தண்' என்னும் அடை,அக் கஞ்சி தானுஞ்
சூடின்றி ஆறியிருத்தலையுங்குறிப்பானுணர்த்தும். புற்கையும் என இழிவுசிறப்பும்மை
கொள்க. என்பு : ஆகுபெயராய்உடம்புக்காயிற்று. "என்பும் உரியர்பிறர்க்கு" என்புழிப்
போல. எளியஉணவாயினும் அன்பென்னும் அமிழ்தோடு கூடியதாகலின்அதுவே உடம்புக்கு ஊட்டந்
தருமென்றற்கு ‘என்போடியைந்த அமிழ்' தென்றார்.
இச்செய்யுட்கருத்துக்கள் முன்னும் வந்தன.
0 Comments