கடனென்ப நல்லவை யெல்லாம்
கடனறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு
மு.வ உரை:
கடமை இவை என்று அறிந்து
சான்றான்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு நல்லவை எல்லாம் இயல்பான கடமை என்று கூறுவர்.
சாலமன் பாப்பையா உரை:
நாம் செய்யத்தக்க கடமை இது
என்று சான்றாண்மையை மேற்கொண்டு வாழ்பவர்க்கு, நல்ல
குணங்கள் எல்லாம் இயல்பாக இருக்கும் என்று கூறுவர்.
கலைஞர் உரை:
ஆற்ற வேண்டிய கடமைகளை
உணர்ந்து, அவற்றைப் பண்பார்ந்த
முறையில் நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் நல்ல கடமைகள் என்றே
கொள்ளப்படும்
குறள் 982:
குணநலஞ் சான்றோர் நலனே
பிறநலம்
எந்நலத் துள்ளதூஉ மன்று
எந்நலத் துள்ளதூஉ மன்று
மு.வ உரை:
சான்றோரின் நலம் என்று
கூறப்படுவது அவறுடைய பண்புகளின் நலமே, மற்ற
நலம் வேறு எந்த நலத்திலும் சேர்ந்துள்ளதும் அன்று.
சாலமன் பாப்பையா உரை:
சான்றோர் என்பவர்க்கு அழகு, குறங்களால் ஆகிய அழகே; பிற புற அழகெல்லாம் எந்த அழகிலும் சேரா.
கலைஞர் உரை:
நற்பண்பு ஒன்றே
சான்றோர்க்கான அழகாகும் வேறு எந்த அழகும் அழகல்ல
குறள் 983:
அன்புநாண் ஒப்புரவு
கண்ணோட்டம் வாய்மையொ
டைந்துசால் பூன்றிய தூண்
டைந்துசால் பூன்றிய தூண்
மு.வ உரை:
அன்பு, நாணம்,ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை, என்னும் ஐந்து பண்புகளும், சால்பு என்பதைத் தாங்கியுள்ள தூண்களாகும்.
சாலமன் பாப்பையா உரை:
மற்றவரிடம் அன்பு, பழி பாவங்களுக்கு நாணுதல், சேர்த்ததைப் பிறர்க்கும் வழங்கும் ஒப்புரவு, நெடுங்காலப் பழக்கத்தாரிடம் முக தாட்சண்யம், உண்மை பேசுதல் என்னும் ஐந்தும் சான்றாண்மை
என்னும் மாளிகையைத் தாங்கும் தூண்கள்.
கலைஞர் உரை:
அன்பு கொள்ளுதல், பழிபுரிந்திட நாணுதல், உலக ஒழுக்கம் போற்றுதல், இரக்கச் செயலாற்றுதல், வாய்மை கடைப்பிடித்தல் ஆகிய ஐந்தும்
சான்றாண்மையைத் தாங்கும் தூண்களாகும்
குறள் 984:
கொல்லா நலத்தது நோன்மை
பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு
சொல்லா நலத்தது சால்பு
மு.வ உரை:
தவம் ஓர் உயிரையும்
கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது, சால்பு
பிறருடையத் தீமையை எடுத்துச் சொல்லாத நற்பண்பை அடிப்படையாகக் கொண்டது.
சாலமன் பாப்பையா உரை:
பிற உயிர்களைக்
கொல்லாதிருப்பது தனத்திற்கு அழகு; பிறர் குறைகளைப்
பேசாதிருப்பது சான்றாண்மைக்கு அழகு.
கலைஞர் உரை:
உயிரைக் கொல்லாத அறத்தை
அடிப்படையாகக் கொண்டது நோன்பு பிறர் செய்யும் தீமையைச் சுட்டிக் சொல்லாத பண்பைக்
குறிப்பது சால்பு
குறள் 985:
ஆற்றுவார் ஆற்றல் பணிதல்
அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை
மாற்றாரை மாற்றும் படை
மு.வ உரை:
ஆற்றலுடையவரின் ஆற்றலாவது
பணிவுடன் நடத்தலாகும், அது சான்றோர் தம் பகைவரைப்
பகைமையிலிருந்து மாற்றுகின்ற கருவியாகும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலைச் செய்து
முடிப்பவர் திறமை, தம்முடன் பணி ஆற்றுபவரிடம்
பணிந்து வேலை வாங்குதலே; சான்றாண்மை தம் பகைவரையும்
நண்பராக்கப் பயன்படுத்தும் ஆயுதமும் அதுவே.
கலைஞர் உரை:
ஆணவமின்றிப் பணிவுடன்
நடத்தலே, ஆற்றலாளரின் ஆற்றல்
என்பதால் அதுவே பகைமையை மாற்றுகின்ற படையாகச் சான்றோர்க்கு அமைவதாகும்
குறள் 986:
சால்பிற்குக் கட்டளை
யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்
துலையல்லார் கண்ணும் கொளல்
மு.வ உரை:
சால்புக்கு உரைகல் போல்
மதிப்பிடும் கருவி எது என்றால் தமக்கு ஒப்பில்லாத தாழ்ந்தோரிடத்திலும்தோல்வியை
ஏற்றுக் கொள்ளும் பண்பாகும்.
சாலமன் பாப்பையா உரை:
சான்றாண்மையை உரைத்துப்
பார்த்துக் கண்டு அறியப்படும் உரைகல் எதுவென்றால், சிறியவர்களிடம்
கூடத் தன் தோல்வியை ஒத்துக் கொள்வதே ஆகும்.
கலைஞர் உரை:
சமநிலையில் இல்லாதவர்களால்
தனக்கு ஏற்படும் தோல்வியைக்கூட ஒப்புக் கொள்ளும் மனப்பக்குவம்தான் ஒருவரின்
மேன்மைக்கு உரைகல்லாகும்
குறள் 987:
இன்னாசெய் தார்க்கும்
இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு
என்ன பயத்ததோ சால்பு
மு.வ உரை:
துன்பமானவற்றைச்
செய்தவர்க்கும் இனிய உதவிகளைச் செய்யா விட்டால், சான்றோரின்
சால்பு என்ன பயன் உடையதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
தமக்குத் தீமை
செய்தவர்க்கும் நன்மையே செய்யா விட்டால் சான்றான்மையினால் பயன்தான் என்ன?
கலைஞர் உரை:
தமக்குத் தீமை
செய்வதற்கும் திரும்ப நன்மை செய்யாமல் விட்டுவிட்டால் சான்றாண்மை எனும் நல்ல பண்பு
இருந்தும் அதனால் என்ன பயன்?
குறள் 988:
இன்மை ஒருவற் கிளிவன்று
சால்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்
திண்மையுண் டாகப் பெறின்
மு.வ உரை:
சால்பு என்னும் வலிமை
உண்டாகப் பெற்றால் ஒருவனுக்குப் பொருள் இல்லாத குறையாகிய வறுமை இழிவானது அன்று.
சாலமன் பாப்பையா உரை:
சான்றாண்மை எனப்படும் மன
ஆற்றல் மட்டும் ஒருவனிடம் இருந்து விடுமானால், வறுமை
அவனுக்கு இழிவு ஆகாது.
கலைஞர் உரை:
சால்பு என்கிற உறுதியைச்
செல்வமெனக் கொண்டவருக்கு வறுமை என்பது இழிவு தரக் கூடியதல்ல
குறள் 989:
ஊழி பெயரினும் தாம்பெயரார்
சான்றாண்மைக்
காழி யெனப்படு வார்
காழி யெனப்படு வார்
மு.வ உரை:
சால்பு என்னும்
தன்மைக்குக் கடல் என்று புகழப்படுகின்றவர், ஊழிக்காலத்தின்
வேறுபாடுகளே நேர்ந்தாலும் தாம் வேறுபடாமல் இருப்பர்.
சாலமன் பாப்பையா உரை:
சான்றாண்மை எனப்படும்
கடலுக்குக் கரை எனப்படும் சான்றோர், காலம்
மாறினாலும் தாம் மாறமாட்டார்.
கலைஞர் உரை:
தமக்குரிய கடமைகளைக்
கண்ணியத்துடன் ஆற்றுகின்ற சான்றோர் எல்லாக் கடல்களும் தடம் புரண்டு மாறுகின்ற
ஊழிக்காலம் ஏற்பட்டாலும்கூடத், தம்நிலை மாறாத கடலாகத்
திகழ்வார்கள்
குறள் 990:
சான்றவர் சான்றாண்மை
குன்றின் இருநிலத்தான்
தாங்காது மன்னோ பொறை
தாங்காது மன்னோ பொறை
மு.வ உரை:
சான்றோரின் சால்பு நிறைந்த
பண்பு குறைபடுமானால் இந்தப் பெரிய நிலவுலகமும் தன் பாரத்தைத் தாங்க முடியாமற் போய்
விடும்.
சாலமன் பாப்பையா உரை:
சான்றோர் தம் சான்றாண்மைப்
பண்பிலிருந்து விலகிக் குறைவுபடுவார் என்றால், இப்பூவுலகம்
தன் பாரம் தாங்காமல் அழியும்.
கலைஞர் உரை:
சான்றோரின் நற்பண்பே
குறையத்தொடங்கினால் அதனை இந்த உலகம் பொறுமையுடன் தாங்கிக் கொள்ளாது
0 Comments