இற்பிறந்தார் கண்ணல்ல
தில்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு
செப்பமும் நாணும் ஒருங்கு
மு.வ உரை:
நடுவு நிமையும் நாணமும்
உயர்குடியில் பிறந்தவனிடத்தில் அல்லாமல் மற்றவரிடத்தில் இயல்பாக ஒருசேர
அமைவதில்லை.
சாலமன் பாப்பையா உரை:
சிறந்த குடும்பத்தில்
பிறந்தவரிடம் மனம்,
சொல், செயல் மூன்றின் சுத்தமும், நாணமும் இயல்பாக இருப்பது போல் மற்றவரிடம் இருக்கமாட்டா.
கலைஞர் உரை:
நடுநிலை தவறாத பண்பும், ஆரவாரமற்ற
அடக்க உணர்வும் கொண்டவர்களையல்லாமல் மற்றவர்களை உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக்
கருத முடியாது
குறள் 952:
ஒழுக்கமும் வாய்மையும்
நாணுமிம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்
இழுக்கார் குடிப்பிறந் தார்
மு.வ உரை:
உயர் குடியில் பிறந்தவர்
ஒழுக்கமும் வாய்மையும் நாணமும் ஆகிய இம் மூன்றிலிருந்தும் வழுவாமல் இயல்பாகவே
நன்னெறியில் வாழ்வர்.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல குடும்பத்தில்
பிறந்தவர் ஒழுக்கம்,
உண்மை, நாணம் என்னும் இம்மூன்றிலிருந்தும்
விலகமாட்டார்.
கலைஞர் உரை:
ஒழுக்கம், வாய்மை,
மானம் ஆகிய இந்த மூன்றிலும் நிலைதவறி நடக்காதவர்களே உயர்ந்த
குடியில் பிறந்தவர்களாகக் கருதப்படுவார்கள்
குறள் 953:
நகையீகை அன்சொல் இகழாமை
நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு
வகையென்ப வாய்மைக் குடிக்கு
மு.வ உரை:
உண்மையான உயர்குடியில்
பிறந்தவர்க்கு முகமலர்ச்சி,
ஈகை, இனிய சொல், பிறரை
இகழ்ந்து கூறாமை ஆகிய நான்கும் நல்லப் பண்புகள் என்பர்.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல குடும்பத்தில்
பிறந்தவர்களுக்கு முகமலர்ச்சி, இருப்பதைக் கொடுத்தல், இனிமையாகப் பேசுதல், கேலி பேசாமை என்னும் நான்கும்
உரிய குணங்களாம்.
கலைஞர் உரை:
முகமலர்ச்சி, ஈகைக்குணம்,
இனியசொல், பிறரை இகழாத பண்பாடு ஆகிய நான்கு
சிறப்புகளும் உள்ளவர்களையே வாய்மையுள்ள குடிமக்கள் என்று வகைப்படுத்த முடியும்
குறள் 954:
அடுக்கிய கோடி பெறினும்
குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்
குன்றுவ செய்தல் இலர்
மு.வ உரை:
பல கோடிப் பொருளைப்
பெறுவதாக இருந்தாலும் உயர்குடியில் பிறந்தவர் தம் குடியின் சிறப்புக் குன்றுவதற்கு
காரணமான குற்றங்களைச் செய்வதில்லை.
சாலமன் பாப்பையா உரை:
கோடி கோடியாகச்
செல்வத்தைப் பெற்றாலும் நல்ல குடும்பத்தில் பிறந்தவர் தம் குடும்பப் பெருமை
குறைவதற்கான செயல்களைச் செய்யமாட்டார்.
கலைஞர் உரை:
பலகோடிப் பொருள்களை
அடுக்கிக் கொடுத்தாலும் சிறந்த குடியில் பிறந்தவர்கள் அந்தச் சிறப்புக்
கெடுவதற்கான செயல்களுக்கு இடம் தரமாட்டார்கள்
குறள் 955:
வழங்குவ துள்வீழ்ந்தக்
கண்ணும் பழங்குடி
பண்பின் தலைப்பிரிதல் இன்று
பண்பின் தலைப்பிரிதல் இன்று
மு.வ உரை:
தாம் பிறர்க்குக்
கொடுத்துதவும் வன்மை வறுமையால் சுருங்கிய போதிலும், பழம் பெருமை உடைய குடியில்
பிறந்தவர் தம் பண்பிலிருந்து நீங்குவதில்லை.
சாலமன் பாப்பையா உரை:
தொடர்ந்து வரும் நல்ல
குடியில் பிறந்தவர் தம் பொருள் கொடுத்துக் குறைந்துவிட்டபோதும், கொடுக்கும்
பண்பிலிருந்து விலகமாட்டார்.
கலைஞர் உரை:
பழம் பெருமை வாய்ந்த
குடியில் பிறந்தவர்கள் வறுமையால் தாக்குண்ட போதிலும், பிறருக்கு
வழங்கும் பண்பை இழக்க மாட்டார்கள்
குறள் 956:
சலம்பற்றிச் சால்பில
செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்துமென் பார்
குலம்பற்றி வாழ்துமென் பார்
மு.வ உரை:
மாசற்ற குடிப் பண்புடன்
வாழ்வோம் என்று கருதி வாழ்வோர், வஞ்சனைக் கொண்டு தகுதியில்லாதவற்றைக்
செய்யமாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:
குற்றம் இல்லாமல் வரும்
தம் குடும்ப மரபோடு வாழ்வோம் என்பவர், வறுமை வந்தபோதும், வஞ்சகம் கொண்டு, பொருந்தாத செயல்களைச்
செய்யமாட்டார்.
கலைஞர் உரை:
மாசற்ற பண்புடன்
வாழ்வதாகக் கருதிக்கொண்டிருப்பவர்கள், வஞ்சக நினைவுடன் தகாத
காரியங்களில் ஈடுபடமாட்டார்கள்
குறள் 957:
குடிப்பிறந்தார்
கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து
மு.வ உரை:
உயர் குடியில்
பிறந்தவரிடத்தில் உண்டாகும் குற்றம், ஆகாயத்தில் திங்களிடம்
காணப்படும் களங்கம்போல் பலரறியத் தோன்றும்.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல குடும்பத்தில்
பிறந்தவரிடம் ஏதேனும் குறை இருந்தால் அது நிலாவில் தெரியும் களங்கம் போல்
பெரிதாகத் தெரியும்.
கலைஞர் உரை:
பிறந்த குடிக்குப் பெருமை
சேர்ப்பவரிடமுள்ள சிறிய குறைகள், ஒளிவு மறைவு ஏதுமின்றி, வானத்து நிலவில் உள்ள குறைபோல வெளிப்படையாகத் தெரியக் கூடியதாகும்
குறள் 958:
நலத்தின்கண் நாரின்மை
தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்
குலத்தின்கண் ஐயப் படும்
மு.வ உரை:
ஒருவனுடைய நல்லப்
பண்புகளுக்கிடையில் அன்பற்றத் தன்மைக் காணப்பட்டால், அவனை அவனுடைய குடிப் பிறப்பு
பற்றி ஐயப்பட நேரும்.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல குடும்பத்திலிருந்து
வருகின்றவனிடம் அன்பு இல்லாது இருந்தால் அக்குடும்பத்தைச் சேர்ந்தவன் தானா என்று
அவனை இந்த உலகம் சந்தேகப்படும்.
கலைஞர் உரை:
என்னதான் அழகும் புகழும்
உடையவனாக இருந்தாலும் அன்பு எனும் ஒரு பண்பு இல்லாதவனாக இருந்தால் அவன் பிறந்த
குலத்தையே சந்தேகிக்க வேண்டிய நிலை ஏற்படும்
குறள் 959:
நிலத்திற் கிடந்தமை
கால்காட்டும் காட்டும்
குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்
குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்
மு.வ உரை:
இன்ன நிலத்தில் இருந்து
முளைத்தது என்பதை முளை காட்டும், அதுபோல் குடியிற் பிறந்தவரின் வாய்ச் சொல்
அவருடைய குடிப்பிறப்பைக் காட்டும்.
சாலமன் பாப்பையா உரை:
நிலத்தின் இயல்பை அதில்
விளைந்த பயிர்காட்டும்;
அதுபோலக் குடும்பத்தின் இயல்பை அதில் பிறந்தவர் பேசும் சொல்
காட்டும்.
கலைஞர் உரை:
விளைந்த பயிரைப்
பார்த்தாலே இது எந்த நிலத்தில் விளைந்தது என்று அறிந்து கொள்ளலாம் அதேபோல்
ஒருவரின் வாய்ச் சொல்லைக் கேட்டே அவர் எத்தகைய குடியில் பிறந்தவர் என்பதை உணர்ந்து
கொள்ளலாம்
குறள் 960:
நலம்வேண்டின் நாணுடைமை
வேண்டும் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு
வேண்டுக யார்க்கும் பணிவு
மு.வ உரை:
ஒருவனுக்கு நன்மை
வேண்டுமானால் நாணம் உடையவனாக வேண்டும், குடியின் உயர்வு
வேண்டுமானால் எல்லோரிடத்தும் பணிவு வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் தனக்கு நன்மை
வேண்டும் என்று எண்ணினால் அவனிடம் நாணம் இருக்க வேண்டும். நற்குடும்பத்தவன் என்ற
பெயர் வேண்டும் என்றால்,
எல்லாரிடமும் பணிவு இருக்க வேண்டும்.
கலைஞர் உரை:
தகாத செயல் புரிந்திட
அஞ்சி நாணுவதும்,
எல்லோரிடமும் ஆணவமின்றிப் பணிவுடன் நடந்து கொள்வதும் ஒருவரின்
நலத்தையும் அவர் பிறந்த குலத்தையும் உயர்த்தக் கூடியவைகளாகும்
0 Comments