மிகினும் குறையினும்
நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று
வளிமுதலா எண்ணிய மூன்று
மு.வ உரை:
மருத்துவ நூலோர் வாதம்
பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்று அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய்
உண்டாகும்.
சாலமன் பாப்பையா உரை:
மருத்துவ நூலோர் சொல்லும்
வாதம்,
பித்தம், சிலேட்டுமம் என்னும் மூன்றாம்
ஒருவனின் உணவாலும், செயலாலும் அவற்றுக்கு ஒத்து இல்லாது.
மிகுந்தோ, குறைந்தோ இருந்தால் நோய் உண்டாகும்.
கலைஞர் உரை:
வாதம், பித்தம்,
சிலேத்துமம் என்று மருத்துவ நூலோர் கணித்துள்ள மூன்றில் ஒன்று
அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்
குறள் 942:
மருந்தென வேண்டாவாம்
யாக்கைக் கருந்திய
தற்றது போற்றி உணின்
தற்றது போற்றி உணின்
மு.வ உரை:
முன் உண்ட உணவு செரித்த
தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று
வேண்டியதில்லை.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் முதலில் உண்டது
சீரணமாகிவிட்டதை நன்கு அறிந்து அதன் பிறகு உண்டால், அவன் உடம்புக்க மருந்து
என்று ஒன்று வேண்டியது இல்லை.
கலைஞர் உரை:
உண்ட உணவு செரிப்பதற்கான
கால இடைவெளி தந்து,
உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை
குறள் 943:
அற்றால் அளவறிந் துண்க
அஃதுடம்பு
பொற்றான் நெடிதுய்க்கும் ஆறு
பொற்றான் நெடிதுய்க்கும் ஆறு
மு.வ உரை:
முன் உண்ட உணவு
செரித்துவிட்டால்,
பின் வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும், அதுவே
உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்தும் வழியாகும்.
சாலமன் பாப்பையா உரை:
முன்பு உண்டது
சீரணமாகிவிட்டது தெரிந்தால்,
அடுத்து உண்பதைத் தேவையான அளவு அறிந்து உண்க; அப்படி
அளவாக உண்பதே இந்த உடம்பைப் பெற்றவன் அதை நெடுங்காலம் கொண்டு செல்லும் வழி.
கலைஞர் உரை:
உண்ட உணவு செரித்ததையும், உண்ணும்
உணவின் அளவையும் அறிந்து உண்பது நீண்ட நாள் வாழ்வதற்கு வழியாகும்
குறள் 944:
அற்ற தறிந்து
கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து
துய்க்க துவரப் பசித்து
மு.வ உரை:
முன் உண்ட உணவு செரித்த
தன்மையை அறிந்து மாறுபாடில்லாத உணவுகளைக் கடைபிடித்து அவற்றையும் பசித்த பிறகு
உண்ண வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
முன்பு உண்டது சீரணமாகிவிட்டதை
அறிந்து நன்கு பசிக்கும்போது உடம்பிற்கும் காலத்திற்கும் ஒவ்வாத உணவினை விலக்கி, வேண்டியவற்றை
உண்க.
கலைஞர் உரை:
உண்டது செரித்ததா என்பதை
உணர்ந்து,
நன்கு பசியெடுத்த பிறகு உடலுக்கு ஒத்து வரக்கூடிய உணவை அருந்த
வேண்டும்
குறள் 945:
மாறுபா டில்லாத உண்டி
மறுத்துண்ணின்
ஊறுபா டில்லை உயிர்க்கு
ஊறுபா டில்லை உயிர்க்கு
மு.வ உரை:
மாறுபாடில்லாதா உணவை அளவு
மீறாமல் மறுத்து அளவோடு உண்டால், உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய்
இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் உடம்பிற்கு ஒவ்வொத
உணவுகளை விலக்கி உண்டால்,
அவன் உயிர்க்கு நோயால் வரும் துன்பம் இல்லை.
கலைஞர் உரை:
உடலுக்கு ஒத்துவரக்கூடிய
உணவைக்கூட அதிகமாகும்போது மறுத்து அளவுடன் உண்டால், உயிர் வாழ்வதற்குத் தொல்லை
எதுவுமில்லை
குறள் 946:
இழிவறிந் துண்பான்கண்
இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்
கழிபேர் இரையான்கண் நோய்
மு.வ உரை:
குறைந்த அளவு இன்னதென்று
அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலைநிற்பது போல, மிகப்பெரிதும்
உண்பவனிடத்தில் நோய் நிற்க்கும்.
சாலமன் பாப்பையா உரை:
குறைவாக உண்பதே நல்லது
என்று அறிந்து உண்பவனிடம் இன்பம் விலகாமல் இருப்பது போல் மிக அதிகமாக
விழுங்குபவனிடம் நோய் விலகாமல் இருக்கும்.
கலைஞர் உரை:
அளவோடு உண்பவர் உடல்
நலமுடன் வாழ்வதும் அதிகம் உண்பவர் நோய்க்கு ஆளாவதம் இயற்கை
குறள் 947:
தீயள வன்றித் தெரியான்
பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்
நோயள வின்றிப் படும்
மு.வ உரை:
பசித்தீயின் அளவின் படி
அல்லாமல்,
அதை ஆராயாமல் மிகுதியாக உண்டால் , அதனால்
நோய்கள் அளவில்லாமல் ஏற்ப்பட்டு விடும்.
சாலமன் பாப்பையா உரை:
தன் வயிற்றுப் பசி அளவு
தெரியாமல் மிக அதிகமாக உண்டால் அவன் உடம்பில் நோய்கள் அளவு இல்லாமல் வளரும்.
கலைஞர் உரை:
பசியின் அளவு அறியாமலும், ஆராயாமலும்
அதிகம் உண்டால் நோய்களும் அளவின்றி வரும்
குறள் 948:
நோய்நாடி நோய்முதல் நாடி
அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்
வாய்நாடி வாய்ப்பச் செயல்
மு.வ உரை:
நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின்
காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து,
உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
நோயாளியின்
உடல்மாற்றங்களால் வந்துள்ள நோயை இன்னது என்று அறிந்து அந்த நோய் வருவதற்கான மூல
காரணத்தையும் அதைத் தீர்க்கும் வழியையும் அறிந்து அதைப் போக்குவதில் தவறு
வந்துவிடாமல் மருத்துவர் செயல்பட வேண்டும்.
கலைஞர் உரை:
நோய் என்ன? நோய்க்கான
காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும் (உடல் நோய்க்கு
மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது பொருந்தும்)
குறள் 949:
உற்றான் அளவும் பிணியளவும்
காலமும்
கற்றான் கருதிச் செயல்
கற்றான் கருதிச் செயல்
மு.வ உரை:
மருத்துவ நூலைக் கற்றவன், நோயுற்றவனுடைய
வயது முதலியவற்றையும், நோயின் அளவையும், காலத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
மருத்துவ நூலை நன்கு கற்ற
மருத்துவர்,
நோயாளியின் நோயைப் போக்க முயலும்போது, நோயாளியின்
வயது, அந்நோய் வந்திருக்கும் காலம், நோயைப்
போக்கத் தனக்குத் தேவையாகும் காலம் ஆகியவற்றை எண்ணிச் செயல்பட வேண்டும்.
கலைஞர் உரை:
நோயாளியின் வயது, நோயின்
தன்மை, மருத்துவம் செய்வதற்குரிய நேரம் என்பனவற்றை எல்லாம்
மருத்துவம் கற்றவர் எண்ணிப் பார்த்தே செயல்பட வேண்டும்
குறள் 950:
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச்
செல்வானென்
றப்பானாற் கூற்றே மருந்து
றப்பானாற் கூற்றே மருந்து
மு.வ உரை:
நோயுற்றவன், நோய்
தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை
அங்கிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை அந்த நான்குவகைப் பாகுபாடு உடையது.
சாலமன் பாப்பையா உரை:
நோயாளி, மருத்துவர்,
மருந்து, அதைத் தயாரிப்பவர் என மருந்து நான்கு
வகைப்படும்.
கலைஞர் உரை:
நோயாளி, மருத்துவர்,
மருந்து, அருகிருந்து துணைபுரிபவர் என
மருத்துவமுறை நான்கு வகையாக அமைந்துள்ளது
0 Comments