இன்சொலால் ஈரம் அளைஇப்
படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்
மு.வ உரை:
அன்பு கலந்து வஞ்சம்
அற்றவைகளாகிய சொற்கள்,
மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அறம் அறிந்தவர்
வாயிலிருந்து பிறந்து,
அன்பு கலந்து உள்நோக்கம் இல்லாது வருவதே இனிய சொல்.
கலைஞர் உரை:
ஒருவர் வாயிலிருந்து வரும்
சொல் அன்பு கலந்ததாகவும்,
வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும்
இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்
குறள் 92:
அகன்அமர்ந் தீதலின் நன்றே
முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்
இன்சொலன் ஆகப் பெறின்
மு.வ உரை:
முகம் மலர்ந்து இன்சொல்
உடையவனாக இருக்கப்பெற்றால்,
மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
முகத்தால் விரும்பி, இனிய
சொற்களைக் கூறுகிறவனாகவும் ஆகிவிட்டால், உள்ளம் மகிழ்ந்து
பொருளைக் கொடுப்பதைக் காட்டிலும் அது நல்லது
கலைஞர் உரை:
முகம் மலர்ந்து இனிமையாகப்
பேசுவது,
அகம் குளிர்ந்து ஒன்றைக் கொடுப்பதை விட மேலான பண்பாகும்
குறள் 93:
முகத்தான் அமர்ந்தின்து
நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்
இன்சொ லினதே அறம்
மு.வ உரை:
முகத்தால் விரும்பி-
இனிமையுடன் நோக்கி- உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பிறரைப் பார்க்கும்போது
முகத்தால் விரும்பி,
இனிமையாகப் பார்த்து, உள்ளத்துள் இருந்து
வரும் இனிய சொற்களைச் சொல்வதே அறம் ஆகும்.
கலைஞர் உரை:
முகம் மலர நோக்கி, அகம் மலர
இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்
குறள் 94:
துன்புறூஉம் துவ்வாமை
இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு
மு.வ உரை:
யாரிடத்திலும்
இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது
இல்லையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
எவரிடமும் இன்பம் தரும்
இனிய சொற்களைப் பேசுபவர்க்குத் துன்பம் தரும் வறுமை வராது.
கலைஞர் உரை:
இன்சொல் பேசி
எல்லோரிடத்திலும் கனிவுடன் பழகுவோர்க்கு `நட்பில் வறுமை' எனும் துன்பமில்லை
குறள் 95:
பணிவுடையன் இன்சொலன் ஆதல்
ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற
அணியல்ல மற்றுப் பிற
மு.வ உரை:
வணக்கம் உடையவனாகவும்
இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும் மற்றவை அணிகள் அல்ல.
சாலமன் பாப்பையா உரை:
தகுதிக்குக்
குறைவானவரிடமும் பணிவுடன் இனிய சொற்களைச் சொல்பவனாக ஆவது ஒருவனுக்கு ஆபரணம் ஆகும்; பிற
அணிகள் அணி ஆகா
கலைஞர் உரை:
அடக்கமான பண்பும், இனிமையாகப்
பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு
இருக்க முடியாது
குறள் 96:
அல்லவை தேய அறம்பெருகும்
நல்லவை
நாடி இனிய சொலின்
நாடி இனிய சொலின்
மு.வ உரை:
பிறர்க்கு நன்மையானவற்றை
நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய
அறம் வளர்ந்து பெருகும்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர்க்கு நன்மை தரும்
இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும்.
கலைஞர் உரை:
தீய செயல்களை அகற்றி
அறநெறி தழைக்கச் செய்ய வேண்டுமானால், இனிய சொற்களைப் பயன்படுத்தி
நல்வழி எதுவெனக் காட்ட வேண்டும்
குறள் 97:
நயன்ஈன்று நன்றி பயக்கும்
பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்
பண்பின் தலைப்பிரியாச் சொல்
மு.வ உரை:
பிறர்க்கு நன்மையான பயனைத்
தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள்,வழங்குவோனுக்கும் இன்பம்
தந்து நன்மை பயக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர்க்கு நன்மையைத் தந்து, இனிய
பண்பிலிருந்து விலகாத சொல், இம்மைக்கு உலகத்தாரோடு
ஒற்றுமையையும், மறுமைக்கு அறத்தையும் கொடுக்கும்.
கலைஞர் உரை:
நன்மையான பயனைத் தரக்கூடிய
நல்ல பண்பிலிருந்து விலகாத சொற்கள் அவற்றைக் கூறுவோருக்கும் இன்பத்தையும், நன்மையையும்
உண்டாக்கக் கூடியவைகளாகும்
குறள் 98:
சிறுமையுள் நீங்கிய இன்சொல்
மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்
இம்மையும் இன்பம் தரும்
மு.வ உரை:
பிறர்க்குத் துன்பம்
விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும்
வழங்குவோனுக்கு இன்பம் தரும் .
சாலமன் பாப்பையா உரை:
பிறர்க்கு மனத்துன்பம்
தராத இனிய சொல் ஒருவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தரும்.
கலைஞர் உரை:
சிறுமைத்தனமற்ற இனியசொல்
ஒருவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத்
தரக்கூடியதாகும்
குறள் 99:
இன்சொல் இனிதீன்றல்
காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது
வன்சொல் வழங்கு வது
மு.வ உரை:
இனிய சொற்கள் இன்பம்
பயத்தலைக் காண்கின்றவன்,
அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?
சாலமன் பாப்பையா உரை:
பிறர் சொல்லும் இனிய
சொற்கள்,
இன்பம் தருவதை உணர்ந்தவன், பிறர்க்கும்
தனக்கும் துன்பம் தரும் கடும் சொற்களைப் பேசுவது என்ன பயன் கருதியோ?
கலைஞர் உரை:
இனிய சொற்கள் இன்பத்தை
வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்கு மாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த
வேண்டும்?
குறள் 100:
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று
மு.வ உரை:
இனிய சொற்கள் இருக்கும்
போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை
விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது .
சாலமன் பாப்பையா உரை:
மனத்திற்கு இன்பம் தரும்
சொற்கள் இருக்க,
அவற்றை விட்டுவிட்டுத் துன்பம் தரும் சொற்களைக் கூறுவது, நல்ல பழம் இருக்க நச்சுக்காயை உண்பது போலாகும்.
கலைஞர் உரை:
இனிமையான சொற்கள்
இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக்
காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்
0 Comments