மனைவிழைவார் மாண்பயன்
எய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது
வேண்டாப் பொருளும் அது
மு.வ உரை:
மனைவியை விரும்பி அவள்
சொன்னபடி நடப்பவர், சிறந்த பயனை அடையமாட்டார், கடமையைச் செய்தலை விரும்புகின்றவர் வேண்டாத
பொருளும் அதுவே.
சாலமன் பாப்பையா உரை:
மனைவியை விரும்பி அவள்
சொல்லையே கேட்டு வாழ்பவர் சிறந்த அறப்பயனை அடையமாட்டார், செயல் ஆற்ற விரும்புவார் விரும்பாத இன்பம்
அது.
கலைஞர் உரை:
கடமையுடன் கூடிய
செயல்புரியக் கிளம்பியவர்கள் இல்லற சுகத்தைப் பெரிதெனக் கருதினால் சிறப்பான
புகழைப் பெற மாட்டார்கள்
குறள் 902:
பேணாது பெண்விழைவான்
ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்
நாணாக நாணுத் தரும்
மு.வ உரை:
கடமையை விரும்பாமல்
மனைவியின் பெண்மையை விரும்புகின்றவனுடைய ஆக்கம், பெரியதொரு
நாணத்தக்கச் செயலாக நாணத்தைக் கொடுக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
தன் ஆண்மையை எண்ணாமல்
மனைவியின் விருப்பத்தையே விரும்புபவன் வசம் இருக்கும் செல்வம், ஆண்களுக்கு எல்லாம் வெட்கம் தருவதுடன்
அவனுக்கும் வெட்கம் உண்டாக்கும்.
கலைஞர் உரை:
எற்றுக்கொண்ட கொள்கையினைப்
பேணிக் காத்திடாமல் பெண்ணை நாடி அவள் பின்னால் திரிபவனுடைய நிலை வெட்கித் தலைகுனிய
வேண்டியதாக ஆகிவிடும்
குறள் 903:
இல்லாள்கண் தாழ்ந்த
இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்
நல்லாருள் நாணுத் தரும்
மு.வ உரை:
மனைவியிடத்தில் தாழ்ந்து
நடக்கும் இழிந்த தன்மை ஒருவனுக்கு எப்போதும் நல்லவரிடையே இருக்கும் போது நாணத்தைச்
தரும்.
சாலமன் பாப்பையா உரை:
மனைவியிடம் பணிந்து போகும்
பயம் ஒருவனிடம் இருந்தால், இது இல்லாத நல்லவர் முன்னே
அவனுக்கு எப்போதும் வெட்கத்தைக் கொடுக்கும்.
கலைஞர் உரை:
நற்குணமில்லாத மனைவியைத்
திருத்த முனையாமல் பணிந்து போகிற கணவன், நல்லோர்
முன்னிலையில் நாணமுற்று நிற்கும் நிலைக்கு ஆளாக நேரிடும்
குறள் 904:
மனையாளை யஞ்சும் மறுமையி
லாளன்
வினையாண்மை வீறெய்த லின்று
வினையாண்மை வீறெய்த லின்று
மு.வ உரை:
மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற
மறுமைப் பயன் இல்லாத ஒருவன், செயல் ஆற்றுந்தன்மை பெருமை
பெற்று விளங்க முடிவதில்லை.
சாலமன் பாப்பையா உரை:
தன் மனைவிக்குப் பயந்து
நடக்கும் மறுமைப் பயன் இல்லாதவனின் செயல்திறம் நல்லவரால் பாராட்டப்படாது.
கலைஞர் உரை:
மணம் புரிந்து
புதுவாழ்வின் பயனை அடையாமல் குடும்பம் நடத்த அஞ்சுகின்றவனின் செயலாற்றல் சிறப்பாக
அமைவதில்லை
குறள் 905:
இல்லாளை யஞ்சுவா னஞ்சுமற்
றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்
நல்லார்க்கு நல்ல செயல்
மு.வ உரை:
மனைவிக்கு அஞ்சி
வாழ்கின்றவன் எப்போதும் நல்லவர்க்கு நன்மையான கடமையைச் செய்வதற்கு அஞ்சி நடப்பான்.
சாலமன் பாப்பையா உரை:
தன் மனைவிக்குப்
பயப்படுபவன் நல்லார்க்கும் கூட நல்லது செய்ய எப்போதும் அஞ்சுவான்.
கலைஞர் உரை:
எப்போதுமே நல்லோர்க்கு
நன்மை செய்வதில் தவறு ஏற்பட்டுவிடக் கூடாதே என்று அஞ்சுகிறவன் தவறு நேராமல்
கண்காணிக்கும் மனைவிக்கு அஞ்சி நடப்பான்
குறள் 906:
இமையாரின் வாழினும்
பாடிலரே யில்லாள்
அமையார்தோ ளஞ்சு பவர்
அமையார்தோ ளஞ்சு பவர்
மு.வ உரை:
மனைவியின் தோளுக்கு அஞ்சி
வாழ்கின்றவர் தேவரைப் போல் இவ்வுலகில் சிறப்பான நிலையில் வாழ்ந்த போதிலும் பெருமை
இல்லாதவரே ஆவர்.
சாலமன் பாப்பையா உரை:
தேவர்களைப் போல
வாழ்ந்தாலும் மனைவியின் மூங்கில் போன்ற தோளுக்குப் பயப்படுபவர், ஆண்மையால் வரும் பெருமை இல்லாதவரே.
கலைஞர் உரை:
அறிவும் பண்பும் இல்லாத
மனைவி, அழகாக இருக்கிறாள்
என்பதற்காக மட்டும் அவளுக்கு அடங்கி நடப்பவர்கள், தங்களைத்
தேவாம்சம் படைத்தவர்கள் என்று கற்பனையாகக் காட்டிக் கொண்டாலும் அவர்களுக்கு
உண்மையில் எந்தப் பெருமையும் கிடையாது
குறள் 907:
பெண்ணேவல் செய்தொழுகும்
ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து
பெண்ணே பெருமை உடைத்து
மு.வ உரை:
மனைவியின் ஏவலைச் செய்து
நடக்கின்றவனுடைய ஆண்மையைவிட, நாணத்தை தன் இயல்பாக
உடையவளின் பெண்மையே பெருமை உடையது.
சாலமன் பாப்பையா உரை:
மனைவி ஏவ, அதையே செய்து நடக்கும் ஆண்மையைக் காட்டிலும், வெட்கப்படுதலை உடைய பெண் தன்மையே சிறந்தது.
கலைஞர் உரை:
ஒரு பெண்ணின் காலைச்
சுற்றிக் கொண்டு கிடைக்கும் ஒருவனின் ஆண்மையைக் காட்டிலும், மான உணர்வுள்ள ஒருத்தியின் பெண்மையே
பெருமைக்குரியதாகும்
குறள் 908:
நட்டார் குறைமுடியார்
நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங் கொழுகு பவர்
பெட்டாங் கொழுகு பவர்
மு.வ உரை:
மனைவி விரும்பியபடி செய்து
நடப்பவர், தமது நண்பர்க்கு உற்ற
குறையையும் செய்து முடிக்க மாட்டார், அறத்தையும்
செய்ய மாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:
தம் மனைவி விரும்பியபடியே
வாழ்பவர், தம் நண்பர்க்கு ஏற்பட்ட
குறையைப் போக்கமாட்டார் நல்லதும் செய்யமாட்டார்.
கலைஞர் உரை:
ஒரு பெண்ணின் அழகுக்காகவே
அவளிடம் மயங்கி அறிவிழந்து நடப்பவர்கள், நண்பர்களைப்பற்றியும்
கவலைப்படமாட்டார்கள்; நற்பணிகளையும் ஆற்றிட
மாட்டார்கள்
குறள் 909:
அறவினையும் ஆன்ற பொருளும்
பிறவினையும்
பெண்ணேவல் செய்வார்கண் இல்
பெண்ணேவல் செய்வார்கண் இல்
மு.வ உரை:
அறச் செயலும் அதற்க்கு
காரணமாக அமைந்த பொருள் முயற்சியும், மற்றக்
கடமைகளும் மனைவியின் ஏவலைச் செய்வோரிடத்தில் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
அறச்செயலும் சிறந்த
பொருட்செயலும், பிற இன்பச் செயல்களும்
மனைவி சொல்லைக் கேட்டுச் செய்பவரிடம் இருக்கமாட்டா.
கலைஞர் உரை:
ஆணவங்கொண்ட பெண்கள்
இடுகின்ற ஆணைகளுக்கு அடங்கி இயங்குகின்ற பெண்பித்தர்களிடம் அறநெறிச் செயல்களையோ
சிறந்த அறிவாற்றலையோ எதிர்பார்க்க முடியாது
குறள் 910:
எண்சேர்ந்த நெஞ்சத்
திடனுடையார்க் கெஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்
மு.வ உரை:
நன்றாக எண்ணுதல், பொருந்திய நெஞ்சத்தோடு தக்க நிலையும் உடையார்க்கு
எக்காலத்திலும் மனைவியின் ஏவலுக்கு இணங்கும் அறியாமை இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
சிந்திக்கும் மனமும்
செல்வமும் உடையவர்களிடம் மனைவி சொல்லை மட்டுமே கேட்டுச் செய்யும் அறியாமை
ஒருபோதும் இராது.
கலைஞர் உரை:
சிந்திக்கும் ஆற்றலும்
நெஞ்சுறுதியும் கொண்டவர்கள் காமாந்தகாரர்களாகப் பெண்களையே சுற்றிக் கொண்டு கிடக்க
மாட்டார்கள்
0 Comments