அறிவின்மை அன்மையுள் இன்மை
பிறிதின்மை
இன்மையா வையா துலகு
இன்மையா வையா துலகு
மு.வ உரை:
அறியாமையே இல்லாமைப்
பலவற்றுளளும் கொடிய இல்லாமையாகும், மற்ற இல்லாமைகளை உலகம்
அத்தகைய இல்லாமையாகக் கருதாது.
சாலமன் பாப்பையா உரை:
இல்லாமை பலவற்றுள்ளும்
இல்லாமை, அறிவு இல்லாமல் இருத்தலே, பிற இல்லாமையைப் பெரியோர் இல்லாமையாகக்
கருதமாட்டார்.
கலைஞர் உரை:
அறிவுப் பஞ்சம்தான் மிகக்
கொடுமையான பஞ்சமாகும் மற்ற பஞ்சங்களைக்கூட உலகம் அவ்வளவாகப் பொருட்படுத்தாது
குறள் 842:
அறிவிலான் நெஞ்சுவந் தீதல்
பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம்
இல்லை பெறுவான் தவம்
மு.வ உரை:
அறிவில்லாதவவன் மனம்
மகிழ்ந்து ஒரு பொருளைக் கொடுத்தலுக்கு காரணம், வேறொன்றும்
இல்லை, அப் பொருளைப்
பெறுகின்றவனுடைய நல்வினையே ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
அறிவற்றவன் மனம் மகிழ்ந்து
ஒன்றைப் பிறர்க்குத் தந்தால், அது பெறுகின்றவன் செய்த
நல்வினையே.
கலைஞர் உரை:
அறிவில்லாத ஒருவன்
வள்ளலைப்போல ஒரு பொருளை மகிழ்ச்சியுடன் வழங்குவதற்குக் காரணம் வேறொன்றுமில்லை; அது அப்பொருளைப் பெறுகிறவன் பெற்றபேறு
என்றுதான் கருதவேண்டும்
குறள் 843:
அறிவிலார் தாந்தம்மைப்
பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது
செறுவார்க்கும் செய்தல் அரிது
மு.வ உரை:
அறிவில்லாதவர் தம்மைத்தாமே
துன்புறுத்தும் துன்பம் அவருடைய பகைவர்க்கும் செய்யமுடியாத அளவினதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அறிவு அற்றவர், தாமே நம்மை வருத்திக் கொள்ளும் வருத்தம், பகைவராலும்கூட அவருக்குச் செய்வது அரிது.
கலைஞர் உரை:
எதிரிகளால்கூட வழங்க
முடியாத வேதனையை, அறிவில்லாதவர்கள்
தங்களுக்குத் தாங்களே வழங்கிக் கொள்வார்கள்
குறள் 844:
வெண்மை எனப்படுவ
தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு
உடையம்யாம் என்னும் செருக்கு
மு.வ உரை:
புல்லறிவு என்று
சொல்லப்படுவது யாது என்றால் யாம் அறிவுடையேம் என்று ஒருவன் தன்னைத்தான்
மதித்துகொள்ளும் செருக்காகும்.
சாலமன் பாப்பையா உரை:
அறிவின்மை என்று
சொல்லப்படுவது என்ன என்று கேட்டால், அது
தம்மைத் தாமே நல அறிவு உடையவரென்று என்னும் மயக்கமே ஆகும்.
கலைஞர் உரை:
ஒருவன் தன்னைத்தானே
அறிவுடையவனாக மதித்துக் கொள்ளும் ஆணவத்திற்குப் பெயர்தான் அறியாமை எனப்படும்
குறள் 845:
கல்லாத மேற்கொண் டொழுகல்
கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்
வல்லதூஉம் ஐயம் தரும்
மு.வ உரை:
அறிவில்லாதவர் தாம் கற்காத
நூல்களை கற்றவர் போல் மேற்கொண்டு நடத்தல், அவர்
குற்றமறக் கற்றுவல்ல பொருளைப் பற்றியும் மற்றவர்க்கு ஐயம் உண்டாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அறிவற்றவர், தாம் படிக்காத நூல்களையும் படித்தவர் போலப்
பேசிச்செயற்படுவது, அவர் உணமையிலேயே நன்கு
அறிந்த நூல்களின் மேலும் சந்தேகத்தைப் பிறர்க்கு உண்டாக்கும்.
கலைஞர் உரை:
அறிந்து கொள்ளாதவைகளையும்
அறிந்தவர் போல ஒருவர் போலித்தனமாகக் காட்டிக் கொள்ளும் போது, அவர் ஏற்கனவே எந்தத் துறையில் திறமையுடையவராக
இருக்கிறாரோ அதைப் பற்றிய சந்தேகமும் மற்றவர்களுக்கு உருவாகும்
குறள் 846:
அற்ற மறைத்தலோ புல்லறிவு
தம்வயின்
குற்றம் மறையா வழி
குற்றம் மறையா வழி
மு.வ உரை:
தம்மிடத்தில் உள்ளக்
குற்றத்தை அறிந்து நீக்காத போது , உடம்பில் மறைப்பதற்குரிய
பகுதியை மட்டும், ஆடையால் மறைத்தல்
புல்லறிவாகும்.
சாலமன் பாப்பையா உரை:
தம்மிடம் உள்ள குற்றத்தை
அறிந்து அதைப் போக்காதவர், ஆடையால் தம்உடம்பை
மறைக்கக் கருதுவதும் அறிவின்மையே.
கலைஞர் உரை:
நமது குற்றத்தை உணர்ந்து
அதை நீக்காமல் உடலை மறைக்க மட்டும் உடை அணிவது மடமையாகும்
குறள் 847:
அருமறை சோரும் அறிவிலான்
செய்யும்
பெருமிறை தானே தனக்கு
பெருமிறை தானே தனக்கு
மு.வ உரை:
அரிய மறைபொருளை மனத்தில்
வைத்துக் காக்காமல் சேர்த்தும் வெளிபடுத்தும் அறிவில்லாதவன் தனக்குத் தானே
பெருந்தீங்கு செய்து கொள்வான்.
சாலமன் பாப்பையா உரை:
அறிவற்றவன் அரிய
புத்திமதியையும் ஏற்றுக் கொள்ளான்; அதனால் அவன் தனக்குத் தானே
பெரும் துன்பத்தைச் செய்து கொள்வான்.
கலைஞர் உரை:
நல்வழிக்கான அறிவுரைகளைப்
போற்றி அவ்வழி நடக்காத அறிவிலிகள், தமக்குத் தாமே
பெருந்துன்பத்தைத் தேடிக் கொள்வார்கள்
குறள் 848:
ஏவவுஞ் செய்கலான்
தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்
போஒம் அளவுமோர் நோய்
மு.வ உரை:
தனக்கு நன்மையானவற்றை
பிறர் ஏவினாலும் செய்யாதவனாய், தானாகவும் உணர்ந்து
தெளியாதவனாய் உள்ளவனுடைய உயிர் போகுமளவும் ஒரு நோயாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அறிவற்றவன் பிறர்
சொன்னாலும் செய்யமாட்டான்; தானாகவும் அறியமாட்டான்; அவனது உயிர் போகும் வரைக்கும் இப்பூமிக்கு
அவன் ஒரு நோயே.
கலைஞர் உரை:
சொந்தப் புத்தியும்
இல்லாமல் சொல் புத்தியும் கேட்காதவருக்கு அதுவே அவர் வாழ்நாள் முழுதும் அவரை
விட்டு நீங்காத நோயாகும்
குறள் 849:
காணாதான் காட்டுவான்
தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு
கண்டானாம் தான்கண்ட வாறு
மு.வ உரை:
அறிவு இல்லாதவனுக்கு
அறிவிப்பவன் தானே அறிவில்லாதவனாய் நிற்பான், அறிவு
இல்லாதவனோ தான் அறிந்த வகையால் அறிவுடையவனாகத் தோன்றுவான்.
சாலமன் பாப்பையா உரை:
அறிவற்றவனுக்கு அறிவு
காட்ட முயல்பவன் அறிவற்றவனால் அறிவற்றவனாய் எண்ணப்படுவான்; அறிவற்றவன் தான் அறிந்ததே அறிவாக எண்ணுவான்.
கலைஞர் உரை:
அறிவற்ற ஒருவன், தான் அறிந்ததை மட்டும் வைத்துக் கொண்டு, தன்னை அறிவுடையவனாகக் காட்டிக் கொள்வான் அவனை
உண்மையிலேயே அறிவுடையவனாக்க முயற்சி செய்பவன் தன்னையே அறிவற்ற நிலைக்கு ஆளாக்கிக்
கொள்வான்
குறள் 850:
உலகத்தார் உண்டென்ப
தில்லென்பான் வையத்
தலகையா வைக்கப் படும்
தலகையா வைக்கப் படும்
மு.வ உரை:
உலகத்தார் உண்டு என்று
சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன், உலகத்தில்
காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான்.
சாலமன் பாப்பையா உரை:
இருக்கிறது என்று
உயர்ந்தோர் சொல்லும் ஒரு பொருளை இல்லை என்று மறுக்கும் அறிவற்றவன், இப்பூமியில் காணப்படும் பேயாகக்
கருதப்படுவான்.
கலைஞர் உரை:
ஆதாரங்களைக் காட்டி
இதுதான் உண்மை என்று தெளிவாகக் கூறப்படுகிற ஒன்றை, வேண்டுமென்றே
இல்லை என மறுத்துரைப்பவரைப் ``பேய்''களின் பட்டியலின்தான் வைக்க வேண்டும்
0 Comments