பருகுவார் போலினும்
பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது
பெருகலிற் குன்றல் இனிது
மு.வ உரை:
அன்பு மிகுதியால்
பருகுவார் போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பு, வளர்ந்து பெருகுவதை விடத் தேய்ந்து குறைவது
நல்லது.
சாலமன் பாப்பையா உரை:
உயிரால் உருகுவார்போல்
நடிக்கும், உள்ளத்துள் நல்ல பண்பு
இல்லாதவரின் நட்பு வளர்வதைவிடக் குறைவது நல்லது.
கலைஞர் உரை:
நல்ல பண்பு இல்லாதவர்கள்
அன்பு வெள்ளத்தில் நம்மை மூழ்கடிப்பதுபோல் தோன்றினாலும் அவர்களது நட்பை, மேலும் வளர்த்துக் கொள்ளாமல் குறைத்துக்
கொள்வதே நல்லது
குறள் 812:
உறினட் டறினொரூஉம்
ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்
பெறினும் இழப்பினும் என்
மு.வ உரை:
தமக்கு பயன் உள்ள போது நட்பு
செய்து பயன் இல்லாத போது நீங்கிவிடும் தகுதியில்லாதவரின் நட்பைப் பெற்றாலும் என்ன
பயன், இழந்தாலும் என்ன பயன்.
சாலமன் பாப்பையா உரை:
தமக்குப் பயனிருந்தால்
நட்புக் கொண்டும், பயன் இல்லை என்றால் நட்பை
விலக்கியும் வாழ்வதில் தமக்கு இணை இல்லாதவராய் இருப்பாரின் நட்பைப் பெற்றென்ன
இழந்தென்ன?
கலைஞர் உரை:
தமக்குப்
பயன்கிடைக்கும்போது நண்பராக இருந்துவிட்டு பயனில்லாதபோது பிரிந்து
விடுகின்றவர்களின் நட்பு, இருந்தால் என்ன? இழந்தால்தான் என்ன?
குறள் 813:
உறுவது சீர்தூக்கும்
நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்
கொள்வாரும் கள்வரும் நேர்
மு.வ உரை:
கிடைக்கும் பயனை அளந்து
பார்க்கும் நண்பரும், அன்பைக் கொள்ளாமல்
பெறுகின்ற பொருளைக் கொள்ளும் விலை மகளிரும், கள்வரும்
ஒரு நிகரானவர்.
சாலமன் பாப்பையா உரை:
இவரிடம் நட்புக் கொள்வதால்
தமக்கு என்ன கிடைக்கும் என்று எண்ணிப் பார்ப்பவரின் நட்பும், தமக்குத் தரும் கூலியை ஏற்றுக் கொள்ளும்
பாலியல் தொழிலாளரும் திருடர்களும் ஒருவருக்கொருவர் சமமானவர்களே.
கலைஞர் உரை:
பயனை எண்ணிப்பார்த்து
அதற்காகவே நட்புக் கொள்பவரும், விலைமகளிரும், கள்வரும் ஆகிய இந்த மூவரும் ஒரே
மாதிரியானவர்களே ஆவார்கள்
குறள் 814:
அமரகத் தாற்றறுக்கும்
கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை
தமரின் தனிமை தலை
மு.வ உரை:
போர் வந்த போது களத்தில்
தள்ளிவிட்டு ஓடும் அறிவில்லாத குதிரை போன்றவரின் உறவை விட, ஒரு நட்பும் இல்லாமல் தனித்திருத்தலே
சிறந்தது.
சாலமன் பாப்பையா உரை:
போர்க்களத்தே நம்மை
வீழ்த்திவிட்டுப் போய்விடும் கல்வியற்ற குதிரையைப் போன்றவரின் நட்பைக் காட்டிலும்
தனிமையாக இருப்பதே முதன்மையானது.
கலைஞர் உரை:
போர்க்களத்தில் கீழே தள்ளி
விட்டுத் தப்பித்து ஓடிப்போகும் குதிரையைப் போன்றவர்களின் நட்பைப் பெறுவதைக்
காட்டிலும் தனித்து இருப்பது எவ்வளவோ சிறப்புடையதாகும்
குறள் 815:
செய்தேமஞ் சாராச் சிறியவர்
புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று
எய்தலின் எய்தாமை நன்று
மு.வ உரை:
காவல் செய்து வைத்தாலும்
காவல் ஆகாத கீழ்மக்களின் தீய நட்பு, ஒருவனுக்கு
ஏற்படுவதை விட ஏற்படாமலிருப்பதே நன்மையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நாம் பல வகையில் உதவி
செய்தாலும் நமக்குப் பாதுகாப்பாக இராத அற்பர்களின் நட்பு, இருப்பதிலும் இல்லாதிருப்பதே நல்லது.
கலைஞர் உரை:
கீழ்மக்களின் நட்பு, பாதுகாப்பாக அமையாத தீயதன்மை கொண்டது
என்பதனால், அவர்களுடன் நட்பு
ஏற்படுவதைவிட, ஏற்படாமல் இருப்பதே நலம்
குறள் 816:
பேதை பெருங்கெழீஇ நட்பின்
அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்
ஏதின்மை கோடி உறும்
மு.வ உரை:
அறிவில்லாதவனுடைய மிகப்
பொருந்திய நட்பை விட அறிவுடையவரின் நட்பில்லாத தன்மை கோடி மடங்கு நன்மை
தருவதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அறிவற்றவனின் மிக
நெருக்கமான நட்பைக் காட்டிலும் அறிவுடையார்களின் பகை, கோடி நன்மையாம்.
கலைஞர் உரை:
அறிவில்லாதவனிடம் நெருங்கிய
நட்புக் கொண்டிருப்பதை விட, அறிவுடைய ஒருவரிடம் பகை
கொண்டிருப்பது கோடி மடங்கு மேலானதாகும்
குறள் 817:
நகைவகைய ராகிய நட்பின்
பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்
பத்தடுத்த கோடி உறும்
மு.வ உரை:
(அகத்தில் அன்பு இல்லாமல் புறத்தில்)
நகைக்கும் தன்மை உடையவரின் நட்பை விட, பகைவரால்
வருவன பத்துகோடி மடங்கு நன்மையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
சிரித்துச் செல்லும்
இயல்பினராகிய நட்பைக் காட்டிலும், பகைவரால் வருவன பத்துக்
கோடி மடங்கு நன்மையாம்.
கலைஞர் உரை:
சிரித்துப் பேசி
நடிப்பவர்களின் நட்பைக் காட்டிலும் பகைவர்களால் ஏற்படும் துன்பம் பத்துக்கோடி மடங்கு
நன்மையானது என்று கருதப்படும்
குறள் 818:
ஒல்லும் கருமம் உடற்று
பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்
சொல்லாடார் சோர விடல்
மு.வ உரை:
முடியும் செயலையும்
முடியாத படி செய்து கெடுப்பவரின் உறவை, அவர்
அறியுமாறு ஒன்றும் செய்யாமலே தளரச் செய்து கைவிட வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
தம்மால் செய்யக்கூடிய
உதவியையும் செய்ய முடியாதவர் போல் நடித்துச் செய்யாமல் விடுபவரின் நட்பை அவரிடம்
சொல்லாமலேயே விட்டுவிடுக.
கலைஞர் உரை:
நிறைவேற்றக் கூடிய செயலை, நிறைவேற்ற முடியாமல் கெடுப்பவரின் உறவை, அவருக்குத் தெரியாமலேயே மெல்ல மெல்ல விட்டு
விட வேண்டும்
குறள் 819:
கனவினும் இன்னாது மன்னோ
வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு
சொல்வேறு பட்டார் தொடர்பு
மு.வ உரை:
செய்யும் செயல் வேறாகவும்
சொல்லும் சொல் வேறாகவும் உள்ளவரின் நட்பு, ஒருவனுக்கு
கனவிலும் துன்பம் தருவதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
சொல் ஒன்று, செயல் வேறாக இருப்பவரின் நட்பு கனவிலும் கூடத்
துன்பமானதாகும்.
கலைஞர் உரை:
சொல்லுக்கும் செயலுக்கும்
தொடர்பில்லாதவரின் நட்பு கனவிலேகூடத் துன்பத்தைத்தான் கொடுக்கும்
குறள் 820:
எனைத்துங் குறுகுதல்
ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றிற் பழிப்பார் தொடர்பு
மன்றிற் பழிப்பார் தொடர்பு
மு.வ உரை:
தனியே வீட்டில் உள்ளபோது
பொருந்தியிருந்து, பலர் கூடிய மன்றத்தில்
பழித்து பேசுவோரின் நட்பை எவ்வளவு சிறிய அளவிலும் அணுகாமல் விட வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
நம் வீட்டுக்குள் வந்து
நட்புக் கொண்டாடிப் பலர் இருக்கும் சபையில் நம்மைப் பழிப்பவரின் தொடர்பைச்
சிறிதளவும் சேரவிட வேண்டா.
கலைஞர் உரை:
தனியாகச் சிந்திக்கும் போத
இனிமையாகப் பழகிவிட்டுப் பொது மன்றத்தில் பழித்துப் பேசுபவரின் நட்பு தம்மை
அணுகாமல் விலக்கிக் கொள்ளப்படவேண்டும்
0 Comments