இருந்தோம்பி இல்வாழ்வ
தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு
வேளாண்மை செய்தற் பொருட்டு
மு.வ உரை:
வீட்டில் இருந்து
பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி
செய்யும் பொருட்டே ஆகும்
சாலமன் பாப்பையா உரை:
வீட்டில் இருந்து, பொருள்களைச்
சேர்த்தும் காத்தும் வாழ்வது எல்லாம், வந்த விருந்தினரைப்
பேணி அவர்களுக்கு உதவுவதற்கே ஆம்.
கலைஞர் உரை:
இல்லறத்தைப் போற்றி
வாழ்வது,
விருந்தினரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய
உதவிகளைச் செய்வதற்காகவே
குறள் 82:
விருந்து புறத்ததாத்
தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று
மு.வ உரை:
விருந்தினராக வந்தவர்
வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும்
அது விரும்பத்தக்கது அன்று
சாலமன் பாப்பையா உரை:
விருந்தினர் வீட்டிற்கு
வெளியே இருக்கத் தான் மட்டும் தனித்து உண்பது, சாவைத் தடுக்கும் மருந்தே
என்றாலும், விரும்பத் தக்கது அன்று
கலைஞர் உரை:
விருந்தினராக வந்தவரை
வெளியே விட்டுவிட்டுச் சாகாத மருந்தாக இருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்பது
விரும்பத் தக்க பண்பாடல்ல
குறள் 83:
வருவிருந்து வைகலும்
ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று
பருவந்து பாழ்படுதல் இன்று
மு.வ உரை:
தன்னை நோக்கி வரும்
விருந்தினரை நாள் தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால்
வருந்திக் கெட்டுப் போவதில்லை.
சாலமன் பாப்பையா உரை:
நாளும் வரும்
விருந்தினரைப் பேணுபவனின் வாழ்க்கை வறுமைப்பட்டுக் கெட்டுப் போவது இல்லை.
கலைஞர் உரை:
விருந்தினரை நாள்தோறும்
வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை, அதன் காரணமாகத் துன்பமுற்றுக்
கெட்டொழிவதில்லை
குறள் 84:
அகனமர்ந்து செய்யாள்
உறையும் முகனமர்ந்து
நல்விருந் தோம்புவான் இல்
நல்விருந் தோம்புவான் இல்
மு.வ உரை:
நல்ல விருந்தினராய்
வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள்
வாழ்வாள்.
சாலமன் பாப்பையா உரை:
இனிய முகத்தோடு தக்க
விருந்தினரைப் பேணுபவரின் வீட்டில் திருமகள் மனம் மகிழ்ந்து குடி இருப்பாள்.
கலைஞர் உரை:
மனமகிழ்ச்சியை
முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும்
திருமகள் வாழ்வாள்
குறள் 85:
வித்தும் இடல்வேண்டும்
கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்
மிச்சில் மிசைவான் புலம்
மு.வ உரை:
விருந்தினரை முன்னே போற்றி
உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க
வேண்டுமோ?
சாலமன் பாப்பையா உரை:
விருந்தினர் முதலில் உண்ண, மிஞ்சியவற்றையே
உண்பவனின் நிலத்தில் விதைக்கவும் வேண்டுமா?
கலைஞர் உரை:
விருந்தினர்க்கு முதலில்
உணவளித்து மிஞ்சியதை உண்டு வாழும் பண்பாளன், தன் நிலத்திற்குரிய விதையைக்கூட
விருந்தோம்பலுக்குப் பயன்படுத்தாமல் இருப்பானா?
குறள் 86:
செல்விருந் தோம்பி
வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு
நல்விருந்து வானத் தவர்க்கு
மு.வ உரை:
வந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும்
விருந்தினரை எதிர் பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள
தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்
சாலமன் பாப்பையா உரை:
வந்த விருந்தினரைப் பேணி, வரும்
விருந்தை எதிர்பார்த்து இருப்பவன் மறுமையில் வானத்தவர்க்கு நல்ல விருந்தினன்
ஆவான்.
கலைஞர் உரை:
வந்த விருந்தினரை
உபசரித்து அவர்களை வழியனுப்பி வைக்கும்போதே, மேலும் வரக்கூடிய
விருந்தினரை ஆவலுடன் எதிர்நோக்கி நிற்பவனை, புகழ்வானில்
இருப்போர் நல்ல விருந்தினன் என்று வரவேற்றுப் போற்றுவர்
குறள் 87:
இனைத்துணைத் தென்பதொன்
றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்
துணைத்துணை வேள்விப் பயன்
மு.வ உரை:
விருந்தோம்புதலாகிய
வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்தி கூறத்தக்கது அன்று, விருந்தினரின்
தகுதிக்கு ஏற்ற அளவினதாகும்
சாலமன் பாப்பையா உரை:
விருந்தினரைப் பேணுவதும்
ஒரு யாகமே. அதைச் செய்வதால் வரும் நன்மை இவ்வளவு என்று அளவிட முடியாது; வரும்
விருந்தினரின் தகுதி அளவுதான் நன்மையின் அளவாகும்.
கலைஞர் உரை:
விருந்தினராக வந்தவரின்
சிறப்பை எண்ணிப் பார்த்து விருந்தோம்பலை ஒரு வேள்வியாகவே கருதலாம்
குறள் 88:
பரிந்தோம்பிப் பற்றற்றேம்
என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்
வேள்வி தலைப்படா தார்
மு.வ உரை:
விருந்தினரை ஓம்பி அந்த
வேள்வியில் ஈடுபடாதவர் பொருள்களை வருந்திக்காத்துப் (பின்பு இழந்து) பற்றுக்கொடு
இழந்தோமே என்று இரங்குவர்
சாலமன் பாப்பையா உரை:
விருந்தினரைப் பேணி, அந்த
யாகத்தின் பயனைப் பெறும் பேறு அற்றவர். செல்வத்தைச் சிரமப்பட்டுக் காத்தும் அதனை
இழக்கும் போது, இப்போது எந்தத் துணையும் இல்லாதவராய்ப்
போனோமே என்று வருந்துவர்.
கலைஞர் உரை:
செல்வத்தைச்
சேர்த்துவைத்து அதனை இழக்கும்போது, விருந்தோம்பல் எனும் வேள்விக்கு அது
பயன்படுத்தப்படாமற் போயிற்றே என வருந்துவார்கள்
குறள் 89:
உடைமையுள் இன்மை
விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு
மடமை மடவார்கண் உண்டு
மு.வ உரை:
செல்வநிலையில் உள்ள வறுமை
என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்: அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
செல்வம் இருந்தும்
வறுமையாய் வாழ்வது விருந்தினரைப் பேணாமல் வாழும் மடமையே. இது மூடரிடம் மட்டுமே
இருக்கும்.
கலைஞர் உரை:
விருந்தினரை வரவேற்றுப்
போற்றத் தெரியாத அறிவற்றவர்கள் எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் தரித்திரம்
பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள்
குறள் 90:
மோப்பக் குழையும் அனிச்சம்
முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து
நோக்கக் குழையும் விருந்து
மு.வ உரை:
அனிச்சப்பூ மோந்தவுடன்
வாடிவிடும்: அதுபோல் முகம் மலராமல் வேறு பட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி
நிற்பார்.
சாலமன் பாப்பையா உரை:
தொட்டு மோந்து பார்த்த
அளவில் அனிச்சப்பூ வாடும்;
நம் முகம் வேறுபட்டுப் பார்த்த அளவில் விருந்து வாடும்.
கலைஞர் உரை:
அனிச்சம் எனப்படும் பூ, முகர்ந்தவுடன்
வாடி விடக் கூடியது அதுபோல் சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர்
0 Comments