பழைமை எனப்படுவ தியாதெனின்
யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு
மு.வ உரை:
பழைமை என்று சொல்லப்படுவது
எது என்று வினாவினால் அது பழகியவர் உரிமைப் பற்றிச் செய்யும் செயலைக்
கீழ்ப்படுத்தாமல் ஏற்கும் நட்பாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பழைமை என்று
சொல்லப்படுவதன் பொருள் என்ன என்றால், நெடுங்கால
நண்பர் நம்மீது உரிமை எடுத்துக் கொண்டு பிழைபட நடந்தாலும் அதைப் பொருட்படுத்தாத
நட்பு எனலாம்.
கலைஞர் உரை:
பழைமை பாராட்டுவது
என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின் உறவை அழியாமல் பாதுகாப்பதுதான்
குறள் 802:
நட்பிற் குறுப்புக்
கெழுதகைமை மற்றதற்
குப்பாதல் சான்றோர் கடன்
குப்பாதல் சான்றோர் கடன்
மு.வ உரை:
நட்பிற்க்கு உறுப்பாவது
நண்பனுடைய உரிமைச் செயலாகும், அந்த உரிமைச் செயலுக்கு
உடன்பட்டவராதல் சான்றோரின் கடமையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நண்பர்கள் உரிமையுடன்
செய்வதே நட்பிற்கு உறுப்பாகும். அவ்வுரிமையை எண்ணி மகிழ்வதே சான்றோர்க்கு
நீதியாகும்.
கலைஞர் உரை:
பழைமையான நண்பர்களின்
உரிமையைப் பாராட்டுகிற சான்றோர்க்குரிய கடமைதான் உண்மையான நட்புக்கு அடையாளமாகும்
குறள் 803:
பழகிய நட்பெவன் செய்யுங்
கெழுதகைமை
செய்தாங் கமையாக் கடை
செய்தாங் கமையாக் கடை
மு.வ உரை:
பழகியவர் உரிமைப்பற்றிச்
செய்யும் செயலைத் தாம் செய்தது போலவேக் கருதி உடன்படாவிட்டால் அவரோடு தாம் பழகிய
நட்பு என்ன பயன் தரும்.
சாலமன் பாப்பையா உரை:
தனக்கு உடன்பாடு இல்லை
என்றாலும், நண்பர் உரிமையாகச்
செய்துவிட்டதைத் தானும் விரும்பிச் செய்தது போலவே காட்டவில்லை என்றால், நெடுங்காலமாகக் கொண்ட நட்பு என்ன பயனைத்
தரும்?
கலைஞர் உரை:
பழைய நண்பர்கள் உரிமையோடு
செய்த காரியங்களைத்தாமே செய்ததுபோல உடன்பட்டு இருக்காவிட்டால், அதுவரை பழகிய நட்பு பயனற்றுப்போகும்
குறள் 804:
விழைதகையான் வேண்டி
இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்
கேளாது நட்டார் செயின்
மு.வ உரை:
உரிமையால் கேளாமலே நண்பர்
ஒன்றைச் செய்தால், அந்த உரிமையைப் போற்றி
விரும்பும் தன்மையோடு அச் செயலையும் விரும்பி உடன்பட்டிருப்பர் அறிஞர்.
சாலமன் பாப்பையா உரை:
தம் நண்பர் உரிமை
எடுத்துக் கொண்டு தம்மைக் கேளாமலேயே ஒரு காரியத்தைச் செய்தால் அக்காரியத்தைத் தாம்
அறிந்திருந்தாலும் நண்பரால் விரும்பிச் செய்யப்படுவது என்பதனால் அறிவுடையார் அதை
ஏற்றுக் கொள்ளவே செய்வர்.
கலைஞர் உரை:
பழகிய நட்பின் உரிமை
காரணமாக தமது நண்பர் தம்மைக் கேளாமலே ஒரு செயல் புரிந்து விட்டாலும்கூட நல்ல
நண்பராயிருப்பவர் அதனை ஏற்றுக் கொள்ளவே செய்வார்
குறள் 805:
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை
என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்
நோதக்க நட்டார் செயின்
மு.வ உரை:
வருந்ததக்க செயல்களை
நண்பர் செய்தால் அதற்குக் காரணம் அறியாமை என்றாவது மிகுந்த உரிமை என்றாவது
உணரவேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
நாம் வருந்தத்தக்கவற்றை
நம் நண்பர் செய்வார் என்றால், அதற்கு அறியாமை
மட்டுந்தானா, பெரும் உரிமையும் காரணம்
என்று அறிக.
கலைஞர் உரை:
வருந்தக் கூடிய செயலை
நண்பர்கள் செய்தால் அது அறியாமையினாலோ அல்லது உரிமையின் காரணமாகவோ செய்யப்பட்டது
என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்
குறள் 806:
எல்லைக்கண் நின்றார்
துறவார் தெலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு
மு.வ உரை:
உரிமை வாழ்வின் எல்லையில்
நின்றவர், தமக்கு
அழிவுநேர்ந்தவிடத்திலும் பழைமையாய் உறவு கொண்டு நின்றவரின் தொடர்பைக் கைவிட
மாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:
நட்பின் எல்லையைக்
கடக்காமல் வரம்பிற்குள்ளேயே நின்றவர், தம்முடன்
நெடுங்காலமாக நட்புக் கொண்டவரால் கெடுதிகள் என்றாலும் அவரது நட்பினை விடமாட்டார்.
கலைஞர் உரை:
நீண்டகால நண்பர்கள்
தமக்குக் கேடு தருவதாக இருந்தால்கூட நட்பின் இலக்கணம் உணர்ந்தவர்கள் அவர்களது
நட்பைத் துறக்க மாட்டார்கள்
குறள் 807:
அழிவந்த செய்யினும்
அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர்
வழிவந்த கேண்மை யவர்
மு.வ உரை:
அன்புடன் தொன்றுதொட்டு
வந்த உறவை உடையவர், அழிவுதரும் செயல்களை
பழகியவர் செய்த போதிலும் தம் அன்பு நீங்காமலிருப்பர்.
சாலமன் பாப்பையா உரை:
தம் நண்பர் தமக்கு அழிவு
தருவனவற்றையே செய்தாலும் நெடுங்காலமாக நட்பை உடையவர் நண்பர்மீது தாம் கொண்ட அன்பை
விட்டுவிடமாட்டார்.
கலைஞர் உரை:
தம்முடன் பழகியவர்கள்
தமக்கே எதிராக அழிவுதரும் காரியத்தைச் செய்தாலும்கூட அன்பின் அடிப்படையில் நட்புக்
கொண்டவர் அதற்காக அந்த அன்பை விலக்கிக் கொள்ள மாட்டார்
குறள் 808:
கேளிழுக்கங் கேளாக்
கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின்
நாளிழுக்கம் நட்டார் செயின்
மு.வ உரை:
பழகிய நண்பர் செய்த தவறு
பற்றிப் பிறர் சொன்னாலும், கேளாமலிருக்கும் உரிமை
வல்லவர்க்கு, அந்த நண்பர்
தவறுசெய்வாரானால் அது பயனுள்ள நாளாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நண்பன் உரிமை எடுத்துச்
செய்து பிழையை அடுத்தவர் எடுத்துக்காட்டியும் ஏற்றுக் கொள்ளாத நட்புரிமை உடையவர்க்கு
நண்பன் பிழை செய்யும் நாள் பயனுள்ள நாளாம்.
கலைஞர் உரை:
நண்பர்கள் செய்யும்
குற்றத்தைப் பிறர்கூறி அதனை ஏற்றுக் கொள்ளாத அளவுக்கு நம்பிக்கையான நட்புரிமை
கொண்டவரிடத்திலேயே அந்த நண்பர்கள் தவறாக நடந்து கொண்டால் அவர்களுடன் நட்புக்
கொண்டிருந்த நாளெல்லாம் வீணான நாளாகும்
குறள் 809:
கெடாஅ வழிவந்த கேண்மையார்
கேண்மை
விடாஅர் விழையும் உலகு
விடாஅர் விழையும் உலகு
மு.வ உரை:
உரிமை கெடாமல் தொன்று
தொட்டு வந்த உறவு உடையவரின் தொடர்பைக் கைவிடாதவரை உலகம் விரும்பிப் போற்றும்.
சாலமன் பாப்பையா உரை:
உரிமையை விடாது
நெடுங்காலமாக வரும் நட்பினை உடையவர் கேடு செய்தாலும் அந்த நட்பை விட்டு விடாதவரை, அவரது நட்புள்ளம் குறித்து உலகம் விரும்பும்.
கலைஞர் உரை:
தொன்றுதொட்டு உரிமையுடன்
பழகிய நட்புறவைக் கைவிடாமல் இருப்பவரை உலகம் போற்றும்
குறள் 810:
விழையார் விழையப் படுப
பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்
பண்பின் தலைப்பிரியா தார்
மு.வ உரை:
(தவறு செய்த போதிலும்)பழகிய நண்பரிடத்தில் தம்
உரிமை பண்பிலிருந்து மாறாதவர், தம் பகைவராலும்
விரும்பப்படுதற்குறிய சிறப்பை அடைவர்
சாலமன் பாப்பையா உரை:
பழைய நண்பர்கள் பிழையே
செய்தாலும், அவருடன் பகை கொள்ளாது நம்
நட்பை விடாதவர், பகைவராலும்
விரும்பப்படுவர்.
கலைஞர் உரை:
பழமையான நண்பர்கள் தவறு
செய்த போதிலும், அவர்களிடம் தமக்குள்ள
அன்பை நீக்கிக் கொள்ளாதவர்களைப் பகைவரும் விரும்பிப் பாராட்டுவார்கள்
0 Comments