ஆற்று பவர்க்கும்
அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்
போற்று பவர்க்கும் பொருள்
மு.வ உரை:
(படையெடுத்தும்) போர் செய்யச் செல்பவர்க்கும்
அரண் சிறந்ததாகும், (படையெடுத்தவர்க்கு)
அஞ்சித் தன்னை புகழிடமாக அடைந்தவர்க்கும் அது சிறந்ததாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர்மேல் படை எடுத்துச்
செல்பவர்க்கும் சிறந்தது அரண்; பிறருக்குப் பயந்து
உள்ளிருப்பவர்க்கும் அதுவே சிறந்தது.
கலைஞர் உரை:
பகைவர் மீது படையெடுத்துச்
செல்பவர்க்கும் கோட்டை பயன்படும்; பகைவர்க்கு அஞ்சித்
தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முனைவோர்க்கும் கோட்டை பயன்படும்
குறள் 742:
மணிநீரும் மண்ணும் மலையும்
அணிநிழற்
காடும் உடைய தரண்
காடும் உடைய தரண்
மு.வ உரை:
மணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிலமும், மலையும், அழகிய
நிழல் உடைய காடும் ஆகிய இவை நான்கும் உள்ளதே அரண் ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
தெளிந்த நீர், வெட்ட வெளியான நிலம், உயர்ந்த மலை, அடர்ந்த
காடு என்னும் இவையே நீர் அரண், நில அரண், மலை அரண், காட்டு
அரண் என இயற்கை அரண்களாகும்.
கலைஞர் உரை:
ஆழமும் அகலமும் கொண்ட அகழ், பரந்த நிலம், உயர்ந்து
நிற்கும் மலைத்தொடர், அடர்ந்திருக்கும் காடு
ஆகியவற்றை உடையதே அரணாகும்
குறள் 743:
உயர்வகலந் திண்மை
அருமையிந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்
அமைவரண் என்றுரைக்கும் நூல்
மு.வ உரை:
உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க முடியாத அருமை ஆகிய இந்த
நான்கும் அமைந்திப்பதே அரண் என்று நூலோர் கூறுவர்.
சாலமன் பாப்பையா உரை:
பகைவர் ஏற முடியாத உயரம், காவலர் நிற்க இயங்க வசதியான அகலம், இடிக்கமுடியாத வலிமை, கடக்க முடியாத பொறிகளின் அருமை, இந்நான்கையும் மிகுதியாக உடைய கோட்டையையே
செயற்கை அரண் என்று நூல்கள் கூறும்.
கலைஞர் உரை:
உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க இயலாத அமைப்பு ஆகிய நான்கும்
அமைந்திருப்பதே அரணுக்குரிய இலக்கணமாகும்
குறள் 744:
சிறுகாப்பிற் பேரிடத்த
தாகி உறுபகை
ஊக்கம் அழிப்ப தரண்
ஊக்கம் அழிப்ப தரண்
மு.வ உரை:
காக்க வேண்டிய இடம்
சிறியதாய், மற்ற இடம் பெரிய
பரப்புள்ளதாய், தன்னை எதிர்த்துவந்த
பகைவரிருடைய ஊக்கத்தை அழிக்க வல்லது அரண் ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
காவல் செய்யவேண்டிய இடம்
சிறியதாயும், கோட்டையின் சுற்றுப்
பெரியதாயும், சண்டையிட வரும் பகைவர்க்கு
மலைப்பைத் தருவதாயும் அமைவது அரண்.
கலைஞர் உரை:
உட்பகுதி பரந்த இடமாக
அமைந்து, பாதுகாக்கப் படவேண்டிய
பகுதி சிறிய இடமாக அமைந்து, கடும் பகையின் ஆற்றலை
அழிக்கக் கூடியதே அரண் எனப்படும்
குறள் 745:
கொளற்கரிதாய்க்
கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீர தரண்
நிலைக்கெளிதாம் நீர தரண்
மு.வ உரை:
பகைவரால் கைப்பற்ற
முடியாததாய், தன்னிடம் உணவுபொருள்
கொண்டதாய், உள்ளிருப்போர்
நிலைத்திருப்பதர்க்கு எளிதாகிய தன்மை உடையது அரண்.
சாலமன் பாப்பையா உரை:
பலநாள் முற்றுகையிட்டாலும்
பகைவரால் கைப்பற்ற முடியாதது ஆகி, உள்ளிருப்பார்க்கு வேண்டிய
உணவையும் உடையதாய் உள்ளிருப்போர் போரிட வாய்ப்பாகவும் இருப்பதே அரண்.
கலைஞர் உரை:
முற்றுகையிட்டுக் கைப்பற்ற
முடியாமல், உள்ளேயிருக்கும்
படையினர்க்கும் மக்களுக்கும் வேண்டிய உணவுடன், எதிரிகளுடன்
போர் புரிவதற்கு எளிதானதாக அமைக்கப்பட்டுள்ளதே அரண் ஆகும்
குறள் 746:
எல்லாப் பொருளும் உடைத்தா
யிடத்துதவும்
நல்லா ளுடைய தரண்
நல்லா ளுடைய தரண்
மு.வ உரை:
தன்னிடம் (உள்ளவர்க்கு)
எல்லாப் பொருளும் உடையதாய், போர்
நெருக்கடியானவிடத்தில் உதவ வல்ல நல்ல விரர்களை உடையது அரண் ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
உள்ளிருப்போர்க்குத்
தேவையான பொருள் எல்லாம் இருப்பதாய், வெளியே
இருந்து அழிக்க முயலும் பகைவரை வெல்ல உதவும் வீரரைப் பெற்றதாய் இருப்பதே அரண்.
கலைஞர் உரை:
போருக்குத் தேவையான
எல்லாப் பொருள்களும் கொண்டதாகவும், களத்தில் குதிக்கும் வலிமை
மிக்க வீரர்களை உடையதாகவும் இருப்பதே அரண் ஆகும்
குறள் 747:
முற்றியும் முற்றா
தெறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற் கரிய தரண்
பற்றற் கரிய தரண்
மு.வ உரை:
முற்றுகையிட்டும்
முற்றுகையிடாமல் போர் செய்தும், வஞ்சனை செய்தும்
எப்படியும் பகைவரால் கைப்பற்ற முடியாத அருமை உடையது அரண் ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
முழுவதுமாகச் சூழ்ந்து
கொண்டாலும் சூழாமல் வலு இழந்த இடத்தில் நெருங்கிப் போரிட்டாலும் உள்ளிருப்போரில்
சிலரை ஐந்தாம் படை ஆக்கினாலும், பகைவரால் கைப்பற்றுவதற்கு
அரியதே அரண்.
கலைஞர் உரை:
முற்றுகையிட்டோ, முற்கையிடாமலோ அல்லது வஞ்சனைச் சூழ்ச்சியாலோ
பகைவரால் கைப்பற்றப்பட முடியாத வலிமையுடையதே அரண் எனப்படும்
குறள் 748:
முற்றாற்றி முற்றி
யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வ தரண்
பற்றியார் வெல்வ தரண்
மு.வ உரை:
முற்றுகையிடுவதில் வல்லமை
கொண்டு முற்றுகை இட்டவரையும், (உள்ளிருந்தவர் பற்றிய)
பற்றை விடாமலிருந்து வெல்வதற்கு உரியது அரண் ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
கோட்டைக்குள் இருப்போர்
தாம் இருக்கும். இடத்தை விட்டுவிடாமல் நின்று படைமிகுதியால் சூழ்ந்து கொண்ட
பகைவரையும் பொருது, வெல்வதே அரண்.
கலைஞர் உரை:
முற்றுகையிடும் வலிமைமிக்க
படையை எதிர்த்து, உள்ளேயிருந்து கொண்டே போர்
செய்து வெல்வதற்கு ஏற்ற வகையில் அமைந்ததே அரண் ஆகும்
குறள் 749:
முனைமுகத்து மாற்றலர் சாய
வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண்
வீறெய்தி மாண்ட தரண்
மு.வ உரை:
போர் முனையில் பகைவர் அழியும்
படியாக (உள்ளிருந்தவர்செய்யும்) போர்ச் செயல்வகையால் பெருமைப் பெற்றுச்
சிறப்புடையதாய் விளங்குவது அரண் ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
போர் தொடங்கிய உடனே பகைவர்
அழியும்படி உள்ளிருப்போர் செய்யும் போர்த்திறத்தால் சிறந்த விளங்குவதே அரண்.
கலைஞர் உரை:
போர் முனையில் பகைவரை
வீழ்த்துமளவுக்கு உள்nயிருந்து கொண்டே தாக்குதல்
நடத்தும் வண்ணம் தனிச்சிறப்புப் பெற்றுத் திகழ்வதே அரண் ஆகும்
குறள் 750:
எனைமாட்சித் தாகியக்
கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்ல தரண்
இல்லார்கண் இல்ல தரண்
மு.வ உரை:
எத்தகைய பெருமையை உடையதாக
இருந்த போதிலும், செயல்வகையால் சிறப்பு
இல்லாதவரரிடத்தில் அரண் பயனில்லாததாகும். பொருள் செயல்வகை
சாலமன் பாப்பையா உரை:
எத்தனை சிறப்புகளை உடையது
என்றாலும் வெல்லும் பகை அறிந்து செயல்படும் திறம் இல்லாதவர் இருந்தால், அரண் இருந்தும் இல்லாததே ஆகும்.
கலைஞர் உரை:
கோட்டைக்குத் தேவையான
எல்லாவித சிறப்புகளும் இருந்தாலும்கூட உள்ளிருந்து செயல்படுவோர் திறமையற்றவர்களாக
இருந்தால் எந்தப் பயனும் கிடையாது
0 Comments