வகையறிந்து வல்லவை
வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்
தொகையறிந்த தூய்மை யவர்
மு.வ உரை:
சொற்களின் தூய்மை தொகுதி
அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின் வகையினை
அறிந்து, வல்லவறின் அவையில் வாய்ச்
சோர்ந்து பிழை சொல்லமாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:
சொல்லின்வகைகளை
அறிந்துமனத்தால் சுத்தமானவர்கள், கற்றவர் அவை, கல்லாதவர் அவை என அறிந்து பேசும்போது, பயத்தால் சொல் குற்றப்படமாட்டார்கள்.
கலைஞர் உரை:
சொற்களை அளவறிந்து
உரைத்திடும் தூயவர்கள் அவையிலிருப்போரின் வகையறியும் ஆற்றல் உடையவராயிருப்பின்
பிழை நேருமாறு பேச மாட்டார்கள்
குறள் 722:
கற்றாருள் கற்றார்
எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்
கற்ற செலச்சொல்லு வார்
மு.வ உரை:
கற்றவரின் முன் தாம்
கற்றவைகளைச் அவருடைய மனதில் பதியுமாறுச் சொல்லவல்லவர், கற்றவர் எல்லாரிலும் கற்றவராக மதித்துச்
சொல்லப்படுவார்.
சாலமன் பாப்பையா உரை:
தாம் கற்றவற்றை எல்லாம்
பயப்படாமல் கற்றவர் அவையில் அவர் மனம் கொள்ளச் சொல்லும் திறம் பெற்றவர், கற்றவர் எல்லாரிலும் நன்கு கற்றவர் என்று
பலராலும் சொல்லப்படுவார்.
கலைஞர் உரை:
கற்றவரின் முன் தாம்
கற்றவற்றை அவருடைய மனத்தில் பதியுமாறு சொல்ல வல்லவர், கற்றவர் எல்லாரினும் மேலானவராக மதித்துச்
சொல்லப்படுவார்
குறள் 723:
பகையகத்துச் சாவார் எளியர்
அரியர்
அவையகத் தஞ்சா தவர்
அவையகத் தஞ்சா தவர்
மு.வ உரை:
பகைவர் உள்ள
போர்க்களத்தில் (அஞ்சாமல் சென்று) சாகத் துணிந்தவர் உலகத்தில் பலர், கற்றவரின் அவைக்களத்தில் பேச வல்லவர் சிலரே.
சாலமன் பாப்பையா உரை:
பகைவர்களுக்கிடையே
பயப்படாமல் புகுந்து சாவோர் பலர் உண்டு;பேசுவோர்
சிலரேயாவார்.
கலைஞர் உரை:
அமர்க்களத்தில் சாவுக்கும்
அஞ்சாமல் போரிடுவது பலருக்கும் எளிதான செயல், அறிவுடையோர்
நிறைந்த அவைக்களத்தில் அஞ்சாமல் பேசக்கூடியவர் சிலரேயாவர்
குறள் 724:
கற்றார்முன் கற்ற
செலச்சொல்லித் தாங்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்
மிக்காருள் மிக்க கொளல்
மு.வ உரை:
கற்றவரின் முன் தான்
கற்றவைகளை அவருடைய மனதில் பதியுமாறு சொல்லி, மிகுதியாகக்
கற்றவரிடம் அம்மிகுதியான கல்வியைக் அறிந்து கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
பலதுறை நூல்களையும்
கற்றவர் அவையில், அவர்கள் மனங் கொள்ளுமாறு, தான் கற்றவற்றை எல்லாம் சொல்லுக; தான் கற்றவற்றிற்கும் மேலானவற்றை மிகவும்
கற்றவரிடமிருந்து அறிந்து கொள்க.
கலைஞர் உரை:
அறிஞர்களின் அவையில் நாம்
கற்றவைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு எடுத்துச் சொல்லி நம்மைவிட அதிகம்
கற்றவரிடமிருந்து மேலும் பலவற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும்
குறள் 725:
ஆற்றின் அளவறிந்து கற்க
அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு
மாற்றங் கொடுத்தற் பொருட்டு
மு.வ உரை:
அவையில் (ஒன்றைக்
கேட்டவர்க்கு) அஞ்சாது விடைகூறும் பொருட்டாக நூல்களைக் கற்க்கும் நெறியில் அளவை
நூல் அறிந்து கற்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
பெரியோர் அவையில்
பயப்படாமல் பதில் சொல்வதற்கு, சொல்இலக்கண வழியில்
பலவகைப் பிரமாணங்களைச் சொல்லும் தர்க்க சாஸ்திரத்தை விரும்பிக் கற்றுக் கொள்க.
கலைஞர் உரை:
அவையில் பேசும்போழுது
குறுக்கீடுகளுக்கு அஞ்சாமல் மறுமொழி சொல்வதற்கு ஏற்ற வகையில் இலக்கணமும், தருக்கமெனப்படும் அளவைத் திறமும் கற்றிருக்க
வேண்டும்
குறள் 726:
வாளொடென் வன்கண்ண
ரல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு
நுண்ணவை அஞ்சு பவர்க்கு
மு.வ உரை:
அஞ்சாத வீரர் அல்லாத
மற்றவர்க்கு வாளோடு என்ன தொடர்பு உண்டு, நுண்ணறிவுடையவரின்
அவைக்கு அஞ்சுகின்றவர்க்கு நூலோடு என்ன தொடர்பு உண்டு.
சாலமன் பாப்பையா உரை:
நெஞ்சுறுதி இல்லாதவர்க்கு
வாளால் என்ன பயன்? அறிவுத்திறம் மிக்க
அவைகண்டு பயப்படுபவர்க்குத் தர்க்க சாஸ்திர நூலால் பயன் என்ன?
கலைஞர் உரை:
கோழைகளுக்குக் கையில் வாள்
இருந்தும் பயனில்லை; அவையில் பேசிட அஞ்சுவோர்
பலநூல் கற்றும் பயனில்லை
குறள் 727:
பகையகத்துப் பேடிகை
ஒள்வாள் அவையகத்
தஞ்சு மவன்கற்ற நூல்
தஞ்சு மவன்கற்ற நூல்
மு.வ உரை:
அவையினிடத்தில்
அஞ்சுகின்றவன் கற்ற நூல், பகைவரின் போர்க்களத்தில்
அஞ்சுகின்ற பேடியின் கையில் உள்ள கூர்மையான வாள் போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
கற்றவர் கூடிய அவையில்
பேசப் பயப்படுபவன் கற்ற நூல், பகைமுன்னே நடுங்கும்
பேடியின் கையில் இருக்கும் வாளுக்குச் சமம்.
கலைஞர் உரை:
அவை நடுவில் பேசப்
பயப்படுகிறவன், என்னதான் அரிய நூல்களைப்
படித்திருந்தாலும் அந்த நூல்கள் அனைத்தும் போர்க்களத்தில் ஒரு பேடியின் கையில்
உள்ள கூர்மையான வாளைப் போலவே பயனற்றவைகளாகி விடும்
குறள் 728:
பல்லவை கற்றும் பயமிலரே
நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்
நன்கு செலச்சொல்லா தார்
மு.வ உரை:
நல்ல அறிஞரின் அவையில் நல்லப்
பொருளைக் கேட்பவர் மனதில் பதியுமாறு சொல்ல முடியாதவர், பல நூல்களைக் கற்றாலும் பயன் இல்லாதவரே.
சாலமன் பாப்பையா உரை:
நல்லனவற்றை நல்லவர் கூடிய
அவையில் அவர் மனங் கொள்ளச் சொல்லத் தெரியாதவர், பலதுறை
நூல்களைக் கற்றிருந்தாலும் உலகிற்குப் பயன்படாதவரே.
கலைஞர் உரை:
அறிவுடையோர் நிறைந்த
அவையில், அவர்கள் மனத்தில் பதியும்
அளவுக்குக் கருத்துக்களைச் சொல்ல இயலாவிடின், என்னதான்
நூல்களைக் கற்றிருந்தாலும் பயன் இல்லை
குறள் 729:
கல்லா தவரிற் கடையென்ப
கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு வார்
நல்லா ரவையஞ்சு வார்
மு.வ உரை:
நூல்களைக் கற்றிந்த போதிலும்
நல்ல அறிஞரின் அவைக்கு அஞ்சுகின்றவர், கல்லாதவரை
விடக் கடைப்பட்டவர் என்று கூறுவர்.
சாலமன் பாப்பையா உரை:
நூல்களைக் கற்றும்
அவற்றின் பயனை அறிந்தும், நல்லவர் கூடிய அவையைக்
கண்டு பயந்து அங்கே செல்லாதவர், படிக்காதவரைவிடக் கீழானவர்
என்று சொல்லுவர்.
கலைஞர் உரை:
ஆன்றோர் நிறைந்த அவையில்
பேசுவதற்கு அஞ்சுகின்றவர்கள், எத்தனை நூல்களைக்
கற்றிருந்த போதிலும், அவர்கள் கல்லாதவர்களாவிட
இழிவானவர்களாகவே கருதப்படுவார்கள்
குறள் 730:
உளரெனினும் இல்லாரொ
டொப்பர் களனஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்
கற்ற செலச்சொல்லா தார்
மு.வ உரை:
அவைக்களத்திற்கு அஞ்சித்
தாம் கற்றவைகளைக் (கேட்பவர் மனத்தில்) பதியுமாறு சொல்ல முடியாதவர், உயிரோடு வாழ்ந்தலும் இறந்தவர்க்கு ஒப்பாவர்.
சாலமன் பாப்பையா உரை:
அவையைப் பார்த்துப் பயந்து, படித்தவற்றை அவைக்கு ஏற்பச் சொல்லத்
தெரியாதவர், வாழ்ந்தாலும்
வாழாதவர்க்குச் சமமே.
கலைஞர் உரை:
தாம் கற்றவைகளைக்
கேட்போரைக் கவரும் வண்ணம் கூற இயலாமல் அவைக்கு அஞ்சுவோர், உயிரோடு இருந்தாலும்கூட இறந்தவருக்குச்
சமமானவராகவே கருதப்படுவார்கள்
0 Comments