அன்பிற்கும் உண்டோ
அடைக்குந்தாழ் ஆர்வலர்
புண்கணீர் பூசல் தரும்
புண்கணீர் பூசல் தரும்
மு.வ உரை:
அன்புக்கும் அடைத்து
வைக்கும் தாழ் உண்டோ?
அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே இருக்கும் அன்பைப் ) பலரும்
அறிய வெளிப்படுத்திவிடும்
சாலமன் பாப்பையா உரை:
அன்பிற்கும் கூடப் பிறர்
அறியாமல் தன்னை மூடி வைக்கும் கதவு உண்டோ? இல்லை. தம்மால் அன்பு
செய்யப்பட்டவரின் துன்பத்தைக் காணும்போது வடியும் கண்ணீரே அன்பு உள்ளத்தைக்
காட்டிவிடும்.
கலைஞர் உரை:
உள்ளத்தில் இருக்கும்
அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது அன்புக்குரியவரின்
துன்பங்காணுமிடத்து,
கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டுவிடும்
குறள் 72:
அன்பிலார் எல்லாம்
தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு
என்பும் உரியர் பிறர்க்கு
மு.வ உரை:
அன்பு இல்லாதவர்
எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம்
உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்
சாலமன் பாப்பையா உரை:
அன்பு இல்லாதவர்
எல்லாவற்றாலும் தமக்கே உரிமை உடையவராய் இருப்பர். அன்புள்ளவரோ பொருளால் மட்டும்
அன்று;
உடம்பாலும் பிறர்க்கு உரியவராய் இருப்பர்
கலைஞர் உரை:
அன்பு இல்லாதவர், எல்லாம்
தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல்,
பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென
எண்ணிடுவர்
குறள் 73:
அன்போ டியைந்த வழக்கென்ப
ஆருயிர்க்கு
என்போ டியைந்த தொடர்பு
என்போ டியைந்த தொடர்பு
மு.வ உரை:
அருமையான உயிர்க்கு
உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும்
வாழ்க்கையின் பயன்என்று கூறுவர்.
சாலமன் பாப்பையா உரை:
பெறுவதற்கு அரிய உயிருக்கு
நம் உடம்போடு உண்டாகிய தொடர்பு, அன்போடு கொண்ட ஆசையின் பயனே என்று
அறிந்தவர் கூறுவர்
கலைஞர் உரை:
உயிரும் உடலும்போல்
அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாகும்
குறள் 74:
அன்பீனும் ஆர்வம் உடைமை
அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு
நண்பென்னும் நாடாச் சிறப்பு
மு.வ உரை:
அன்பு பிறரிடம் விருப்பம்
உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும்
அளவற்ற சிறப்பைத் தரும்
சாலமன் பாப்பையா உரை:
குடும்பம், உறவு
என்பாரிடத்துக் கொள்ளும் அன்பு, உலகத்தவரிடம் எல்லாம் உறவு
கொள்ளும் விருப்பை உண்டாக்கும். அதுவே அனைவரையும் நட்பாக்கும் சிறப்பையும்
உண்டாக்கும்
கலைஞர் உரை:
அன்பு பிறரிடம் பற்றுள்ளம்
கொள்ளச் செய்யும் அந்த உள்ளம், நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும்
குறள் 75:
அன்புற் றமர்ந்த வழக்கென்ப
வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு
இன்புற்றார் எய்தும் சிறப்பு
மு.வ உரை:
உலகத்தில் இன்பம் உற்று
வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும்
வாழ்கையின் பயன் என்று கூறுவர்
சாலமன் பாப்பையா உரை:
இவ்வுலகில் வாழ்ந்து
இன்பம் அடைந்தவர் பெறும் சிறப்பே அன்பு கொண்டு இல்வாழ்க்கை நடத்தியதன் பயன்தான்
என்று அறிந்தோர் கூறுவர்
கலைஞர் உரை:
உலகில் இன்புற்று
வாழ்கின்றவர்க்கு வாய்க்கும் சிறப்பு, அவர் அன்புள்ளம் கொண்டவராக
விளங்குவதன் பயனே என்று கூறலாம்
குறள் 76:
அறத்திற்கே அன்புசார்
பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை
மறத்திற்கும் அஃதே துணை
மு.வ உரை:
அறியாதவர், அறத்திற்கு
மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்:ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்க்கும்
அதுவே துணையாக நிற்கின்றது
சாலமன் பாப்பையா உரை:
அறத்திற்கு மட்டுமே அன்பு
துணையாகும் என்று கூறுவோர் அறியாதவரே; மறத்திற்கும் கூட அதுவே
காரணம் ஆகும்.
கலைஞர் உரை:
வீரச் செயல்களுக்கும்
அன்பு துணையாகத் திகழ்கிறது என்பதை அறியாதவர்களே, அறச் செயல்களுக்கு மட்டுமே
அன்பு துணையாக இருப்பதாகக் கூறுவார்கள்
குறள் 77:
என்பி லதனை வெயில்போலக்
காயுமே
அன்பி லதனை அறம்
அன்பி லதனை அறம்
மு.வ உரை:
எலும்பு இல்லாத உடம்போடு
வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம்
வருத்தும்.
சாலமன் பாப்பையா உரை:
எலும்பு இல்லாத புழுவை
வெயில் காய்ந்து கொள்வது போல அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள் காய்ந்து கொல்லும்.
கலைஞர் உரை:
அறம் எதுவென அறிந்தும்
அதனைக் கடைப்பிடிக்காதவரை,
அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும் அது வெயிலின் வெம்மை புழுவை
வாட்டுவதுபோல இருக்கும்
குறள் 78:
அன்பகத் தில்லா
உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று
வற்றல் மரந்தளிர்த் தற்று
மு.வ உரை:
அகத்தில் அன்பு இல்லாமல்
வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
மனத்தில் அன்பு இல்லாமல்
குடும்பத்தோடு வாழும் வாழ்க்கை, வறண்ட பாலை நிலத்தில் காய்ந்து சுக்காகிப்
போன மரம் மீண்டும் இலை விடுவது போலாம்.
கலைஞர் உரை:
மனத்தில் அன்பு
இல்லாதவருடைய வாழ்க்கை,
பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது
குறள் 79:
புறத்துறுப் பெல்லாம்
எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப் பன்பி லவர்க்கு
அகத்துறுப் பன்பி லவர்க்கு
மு.வ உரை:
உடம்பின் அகத்து
உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன்
செய்யும்.
சாலமன் பாப்பையா உரை:
குடும்பத்திற்கு அக
உறுப்பாகிய அன்பு இல்லாவதர்களுக்கு வெளி உறுப்பாக விளங்கும் இடம், பொருள்,
ஏவல் என்பன என்ன பயனைத் தரும்?
கலைஞர் உரை:
அன்பு எனும் அகத்து
உறுப்பு இல்லாதவர்க்குப் புறத்து உறுப்புகள் அழகாக இருந்து என்ன பயன்?
குறள் 80:
அன்பின் வழிய துயிர்நிலை
அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
என்புதோல் போர்த்த உடம்பு
மு.வ உரை:
அன்பின் வழியில் இயங்கும்
உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்: அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத்
தோல்போர்த்த வெற்றுடம்பே ஆகும்
சாலமன் பாப்பையா உரை:
அன்பை அடிப்படையாகக்
கொண்டதே உயிர் நிறைந்த இந்த உடம்பு, அன்பு மட்டும் இல்லை என்றால்
இந்த உடம்பு வெறும் எலும்பின்மேல் தோலைப் போர்த்தியது போன்றது ஆகும்
கலைஞர் உரை:
அன்புநெஞ்சத்தின் வழியில்
இயங்குவதே உயிருள்ள உடலாகும்; இல்லையேல், அது
எலும்பைத் தோல் போர்த்திய வெறும் உடலேயாகும்
0 Comments