கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்ட தமைச்சு
அருவினையும் மாண்ட தமைச்சு
மு.வ உரை:
செயலுக்கு உரிய கருவியும், ஏற்றக் காலமும்,
செய்யும் வகையும் செய்யப்படும் அறியச் செயலும் சிறப்படையச் செய்ய வல்லவன்
அமைச்சன்.
சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலைச் செய்யத் தேவையான பொருள்கள்,
செய்வதற்கு ஏற்ற காலம், செய்யும் முறை, செய்யும் செயல் ஆகிய அனைத்திலும் நன்மை
விளையும்படி எண்ணுபவரே அமைச்சர்.
கலைஞர் உரை:
உரிய கருவி, உற்ற காலம், ஆற்றும் வகை, ஆற்றிடும்
பணி ஆகியவற்றை ஆய்ந்தறிந்த செயல்படுபவனே சிறந்த அமைச்சன்
குறள் 632:
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ
டைந்துடன் மாண்ட தமைச்சு
டைந்துடன் மாண்ட தமைச்சு
மு.வ உரை:
அஞ்சாமையும், குடிபிறப்பும், காக்கும் திறனும்,
கற்றறிந்த அறிவும் முயற்சியும் ஆகிய இவ்வைந்தும் திருந்தப்பெற்றவன் அமைச்சன்.
சாலமன் பாப்பையா உரை:
செயலுக்கு ஏற்ற மன உறுதி, மக்களைக் காத்தல்,
உரிய நீதி நூல்களைக் கற்றல், கற்றாரிடம் கேட்டு அறிதல், முயற்சி ஆகிய ஐந்தையும்
உடையவரே அமைச்சர்.
கலைஞர் உரை:
அமைச்சரவை என்பது, துணிவுடன் செயல்படுதல்,
குடிகளைப் பாதுகாத்தல், அறநூல்களைக் கற்றல், ஆவன செய்திட அறிதல், அயராத முயற்சி
ஆகிய ஐந்தும் கொண்டதாக விளங்க வேண்டும்
குறள் 633:
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்ல தமைச்சு
பொருத்தலும் வல்ல தமைச்சு
மு.வ உரை:
பகைவர்ககு துணையானவரைப் பிரித்தலும், தம்மிடம்
உள்ளவரைக் காத்தலும், பிரிந்து கொண்டவரை மீண்டும் சேர்த்துக்கொள்ளலும் வல்லவன்
அமைச்சன்.
சாலமன் பாப்பையா உரை:
நாட்டிற்கு நெருக்கடி வரும்போது பகையானவரைப்
பிரித்தல், தம்முடன் இருப்பவரைக் கொடையாலும் இன்சொல்லாலும் பிரியாமல் காத்தல்,
தேவைப்பட்டால் முன்னே நம்முடன் இருந்து பிரிந்தவரைச் சேர்த்துக் கொள்ளுதல் என்னும்
இவற்றில் வல்லவரே அமைச்சர்.
கலைஞர் உரை:
அமைச்சருக்குரிய ஆற்றல் என்பது (நாட்டின்
நலனுக்காக) பகைவர்க்குத் துணையானவர்களைப் பிரித்தல், நாட்டுக்குத் துணையாக
இருப்போரின் நலன் காத்தல், பிரிந்து சென்று பின்னர் திருந்தியவர்களைச் சேர்த்துக்
கொளல் எனும் செயல்களில் காணப்படுவதாகும்
குறள் 634:
தெரிதலுந் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்ல தமைச்சு
சொல்லலும் வல்ல தமைச்சு
மு.வ உரை:
(செய்யத்தக்க செயலை) ஆராய்தலும், அதற்குரிய
வழிகளை ஆராய்ந்து செய்தலும், துணிவாகக் கருத்தைச் சொல்லுதலும் வல்லவன் அமைச்சன்.
சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலைப் பற்றி பலவகையிலும் ஆராய்ந்து
அறிதல், வாய்ப்பு வரும்போது ஆராய்ந்தபடி செய்தல், நன்மை தருவனவற்றையே உறுதியாகச்
சொல்லுதல் என்னும் இவற்றில் வல்லவரே அமைச்சர்.
கலைஞர் உரை:
ஒரு செயலைத் தேர்ந்தெடுத்தாலும், அதனை
நிறைவேற்றிட வழிவகைகளை ஆராய்ந்து ஈடுபடுதலும், முடிவு எதுவாயினும் அதனை உறுதிபடச்
சொல்லும் ஆற்றல் படைத்திருத்தலும் அமைச்சருக்குரிய சிறப்பாகும்
குறள் 635:
அறனறிந் தான்றமைந்த சொல்லானெஞ் ஞான்றுந்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை
திறனறிந்தான் தேர்ச்சித் துணை
மு.வ உரை:
அறத்தை அறிந்தவனாய், அறிவு நிறைந்து அமைந்த
சொல்லை உடையவனாய், எக்காலத்திலும் செயல்செய்யும் திறன் அறிந்தவனாய் உள்ளவன்
ஆராய்ந்து கூறும் துணையாவான்.
சாலமன் பாப்பையா உரை:
அறத்தை அறிந்து கல்வியால் நிறைந்து, அடக்கமான
சொல்லை உடையவராய், எப்போதும் செயலாற்றும் முறைகளைத் தெரிந்தவரே கலந்து முடிவு
எடுப்பதற்கு ஏற்ற துணையாவார்.
கலைஞர் உரை:
அறநெறி உணர்ந்தவராகவும், சொல்லாற்றல்
கொண்டவராகவும், செயல்திறன் படைத்தவராகவும் இருப்பவரே ஆலோசனைகள் கூறக்கூடிய துணையாக
விளங்க முடியும்
குறள் 636:
மதிநுட்ப நூலோ டுடையார்க் கதிநுட்பம்
யாவுள முன்னிற் பவை
யாவுள முன்னிற் பவை
மு.வ உரை:
இயற்கையான நுட்ப அறிவை நூலறிவோடு ஒருங்கே
உடையவர்க்கு மிக்க நுட்பமான சூழ்ச்சிகளாய் முன் நிற்பவை எவை உள்ளன.
சாலமன் பாப்பையா உரை:
இயல்பான நுண்ணறிவோடு செயற்கை ஆகிய நூல்
அறிவையும் உடைய அமைச்சருக்கு எதிராக, மிகுந்த நுட்பமான சூழ்ச்சிகள் என்று எவை
நிற்கமுடியும்?
கலைஞர் உரை:
நூலறிவுடன் இயற்கையான மதி நுட்பமும் உள்ளவர்களுக்கு
முன்னால் எந்த சூழ்ச்சிதான் எதிர்த்து நிற்க முடியும்? முடியாது
குறள் 637:
செயற்கை அறிந்தக் கடைத்து முலகத்
தியற்கை அறிந்து செயல்
தியற்கை அறிந்து செயல்
மு.வ உரை:
நூலறிவால் செயலைச் செய்யும் வகைகளைச் அறிந்த
போதிலும் உலகத்தின் இயற்கையை அறிந்து அதனோடு பொருந்துமாறு செய்யவேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
பல்வேறு மொழி நாட்டு நூல்களின் வழி, புதிய செயல்
திறங்களை அறிந்திருந்தாலும், தன் நாட்டின் இயற்கை மக்கள் இயல்பு ஆகியவற்றை அறிந்து
அவற்றிற்கு ஏற்பச் செய்க.
கலைஞர் உரை:
செயலாற்றல் பற்றிய நூலறிவைப் பெற்றிருந்தாலும்,
உலக நடைமுறைகளை உணர்ந்து பார்த்தே அதற்கேற்றவாறு அச்செயல்களை நிறைவேற்ற வேண்டும்
குறள் 638:
அறிகொன் றறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்
உழையிருந்தான் கூறல் கடன்
மு.வ உரை:
அறிவுறுத்துவாரின் அறிவையையும் அழித்துத் தானும்
அறியாதவனாக அரசன் இருந்தாலும், அமைச்சன் அவனுக்கு உறுதியானவற்றை எடுத்துக்கூறல் கடமையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அறிந்து சொல்பவர் அறிவையும் மதியாமல்,
செய்யவேண்டிய வழிகளைத் தாமும் தெரியாமல், ஆட்சியாளர் இருந்தால், அக்குற்றம் கண்டு
கோபம் கொள்ளாமல், அஞ்சாமல், அவருக்கு நன்மை தருவதைக் கூற வேண்டியது அமைச்சர்
கடமையாகும்.
கலைஞர் உரை:
சொன்னதையும் கேட்காமல், சொந்த அறிவும் இல்லாமல்
இருப்போர்க்கு, அருகிலுள்ள அமைச்சர்கள்தான் துணிவோடு நல்ல யோசனைகளைக் கூற வேண்டும்
குறள் 639:
பழுதெண்ணும் மந்திரியிற் பக்கத்துள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்
எழுபது கோடி உறும்
மு.வ உரை:
தவறான வழிகளை எண்ணி கூறுகின்ற அமைச்சனை விட
எழுபது கோடி பகைவர் பக்கத்தில் இருந்தாலும் நன்மையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
தன் கட்சிக்காரராய் அருகிலேயே இருந்தும், நாட்டு
நலனை எண்ணாமல் தன்னலமே எண்ணும் அமைச்சர், எழுபது கோடி எதிர்கட்சிக்காரருக்குச்
சமம் ஆவார்.
கலைஞர் உரை:
தவறான வழிமுறைகளையே சிந்தித்துச் செயல்படுகிற
அமைச்சர் ஒருவர் அருகிலிருப்பதை விட எழுபது கோடி எதிரிகள் பக்கத்தில் இருப்பது
எவ்வளவோ மேலாகும்
குறள் 640:
முறைப்படச் சூழ்ந்து முடிவிலவே செய்வர்
திறப்பா டிலாஅ தவர்
திறப்பா டிலாஅ தவர்
மு.வ உரை:
(செயல்களைச் முடிக்கும்) திறன் இல்லாதவர்,
முன்னே எண்ணி வைத்திருந்தும் (செய்யும் போது) குறையானவைகளையேச் செய்வர்.
சாலமன் பாப்பையா உரை:
செயல்திறம் இல்லாத அமைச்சர், செய்ய வேண்டியவற்றை
முறையாக எண்ணி வைத்திருந்தாலும், அவற்றைச் செய்யும்போது அரைகுறையாகவே செய்வார்.
கலைஞர் உரை:
முறைப்படித் தீட்டப்படும் திட்டங்கள்கூடச் செயல்
திறன் இல்லாதவர்களிடம் சிக்கினால் முழுமையாகாமல் முடங்கித்தான் கிடக்கும்
0 Comments