அருமை உடைத்தென் றசாவாமை
வேண்டும்
பெருமை முயற்சி தரும்
பெருமை முயற்சி தரும்
மு.வ உரை:
இது செய்வதற்கு
அருமையாகாது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும், அதைச் செய்வதற்க்குத் தக்க
பெருமையை முயற்சி உண்டாக்கும்,
சாலமன் பாப்பையா உரை:
நம்மால் இதைச்
செய்யமுடியாது என்று மனம் தளரக்கூடாது. அதைச் செய்து முடிக்கும் ஆற்றலை முயற்சி
தரும்.
கலைஞர் உரை:
நம்மால் முடியுமா என்று
மனத்தளர்ச்சி அடையாமல்,
முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய
வலிமையாக அமையும்
குறள் 612:
வினைக்கண் வினைகெடல்
ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன் றுலகு
தீர்ந்தாரின் தீர்ந்தன் றுலகு
மு.வ உரை:
தொழிலாகிய குறையைச்
செய்யாமல் கைவிட்டவரை உலகம் கைவிடும், ஆகையால் தொழில் முயற்சி
இல்லாதிருத்தலை ஒழிக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலைச் செய்யும்போதே, அதைத்
தொடர்ந்து செய்வது கடினம் என எண்ணிச் செய்யாது விட்டுவிடாதே. அவ்வாறு
விட்டுவிடுபவரை இந்த உலகமும் விட்டுவிடும்.
கலைஞர் உரை:
எந்தச் செயலில் ஈடுபட்டாலும்
அதனை முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும் இல்லையேல் அரைக்கிணறு தாண்டிய கதையாகி
விடும்
குறள் 613:
தாளாண்மை என்னுந்
தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு
வேளாண்மை என்னுஞ் செருக்கு
மு.வ உரை:
பிறர்க்கு உதவிசெய்தல்
என்னும் மேம்பட்ட நிலைமை முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில்
நிலைத்திருக்கின்றது.
சாலமன் பாப்பையா உரை:
முயற்சி எனப்படும் உயர்ந்த
குணத்தில்தான் பிறர்க்கு உதவுதல் என்னும் மேன்மை, நிலைபெற்றிருக்கிறது.
கலைஞர் உரை:
பிறருக்கு உதவி புரியும்
பெருமித உணர்வு,
விடா முயற்சி மேற்கொள்ளக்கூடிய உயர்ந்த இயல்புடையவர்களிடம் நிலை
பெற்றிருக்கும்
குறள் 614:
தாளாண்மை இல்லாதான்
வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்
வாளாண்மை போலக் கெடும்
மு.வ உரை:
முயற்சி இல்லாதவன்
உதவிசெய்பவனாக இருத்தல்,
பேடி தன் கையில் வாளை எடுத்தும் ஆளும் தன்மைபோல் நிறைவேறாமல்
போகும்.
சாலமன் பாப்பையா உரை:
முயற்சி இல்லாதவன், பிறர்க்கு
உதவுவேன் என்பது, படை கண்டு நடுங்கும் பேடி, களத்துள் நின்று தன் கை வாளைச் சுழற்றுதல் போல ஒரு பயனும் இல்லாமல்
போகும்.
கலைஞர் உரை:
ஊக்கமில்லாதவர் உதவியாளராக
இருப்பதற்கும்,
ஒரு பேடி, கையிலே வாள்தூக்கி வீசுவதற்கும்
வேறுபாடு ஒன்றுமில்லை
குறள் 615:
இன்பம் விழையான்
வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்
துன்பம் துடைத்தூன்றும் தூண்
மு.வ உரை:
தன் இன்பத்தை
விரும்பாதவனாய் மேற்க்கொண்டச் செயலை முடிக்க விரும்புகிறவன், தன்
சுற்றத்தாரின் துன்பத்தைப் போக்கித் தாங்குகின்ற தூண் ஆவான்.
சாலமன் பாப்பையா உரை:
இன்பத்தை விரும்பாதவனாய்ச்
செயல் செய்வதையே விரும்புபவன், தன் உறவும் நட்புமாகிய பாரத்தின்
துன்பத்தைப் போக்கி, அதைத் தாங்கும் தூண் ஆவான்.
கலைஞர் உரை:
தன்னலம் விரும்பாமல், தான்
மேற்கொண்ட செயலை நிறைவேற்ற விரும்புகின்றவன் தன்னைச் சூழ்ந்துள்ள சுற்றத்தார்,
நண்பர்கள், நாட்டு மக்கள் ஆகிய அனைவரின்
துன்பம் துடைத்து, அவர்களைத் தாங்குகிற தூணாவான்
குறள் 616:
முயற்சி திருவினை ஆக்கும்
முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்
இன்மை புகுத்தி விடும்
மு.வ உரை:
முயற்சி ஒருவனுக்குச்
செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச்
சேர்த்துவிடும்.
சாலமன் பாப்பையா உரை:
முயற்சி செல்வத்தைச்
சேர்க்கும்;
முயலாமல் இருப்பது வறுமைக்குள் சேர்ந்து விடும்.
கலைஞர் உரை:
முயற்சி இல்லாமல் எதுவும்
இல்லை முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும்
குறள் 617:
மடியுளாள் மாமுகடி என்ப
மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள்
தாளுளாள் தாமரையி னாள்
மு.வ உரை:
ஒருவனுடைய சோம்பலில் கரிய
மூதேவி வாழ்கின்றாள்,
சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்.
சாலமன் பாப்பையா உரை:
சோம்பி இருப்பவனிடம்
மூதேவி தங்குவான். சோம்பாதவனின் முயற்சியில் திருமகள் தங்குவாள் என்பர்.
கலைஞர் உரை:
திருமகள், மூதேவி
எனப்படும் சொற்கள் முறையே முயற்சியில் ஊக்கமுடையவரையும், முயற்சியில்
ஊக்கமற்ற சோம்பேறியையும் சுட்டிக் காட்டிப் பயன்படுவனவாகும்
குறள் 618:
பொறியின்மை யார்க்கும்
பழியன் றறிவறிந்
தாள்வினை இன்மை பழி
தாள்வினை இன்மை பழி
மு.வ உரை:
நன்மை விளைவிக்கும் ஊழ்
இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று, அறிய வேண்டியவற்றை அறிந்து
முயற்சி செய்யாதிருத்தலே பழி.
சாலமன் பாப்பையா உரை:
உடல் உறுப்பு, செயலற்று
இருப்பது குறை ஆகாது. அறிய வேண்டியவதை அறிந்து முயற்சி செய்யாது இருப்பதே குறை.
கலைஞர் உரை:
விதிப்பயனால் பழி ஏற்படும்
என்பது தவறு,
அறிய வேண்டியவற்றை அறிந்து செயல்படாமல் இருப்பதே பெரும்பழியாகும்
குறள் 619:
தெய்வத்தான் ஆகா தெனினும்
முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்
மெய்வருத்தக் கூலி தரும்
மு.வ உரை:
ஊழியின் காரணத்தால் ஒரு
செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய
வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
விதி நமக்கு உதவ முடியாது
போனாலும்,
முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும்.
கலைஞர் உரை:
கடவுளே என்று கூவி
அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும் போது அந்த உழைப்புக்
கேற்ற வெற்றியைத் தரும்
குறள் 620:
ஊழையும் உப்பக்கங் காண்பர்
உலைவின்றித்
தாழா துஞற்று பவர்
தாழா துஞற்று பவர்
மு.வ உரை:
சோர்வு இல்லாமல்
முயற்சியில் குறைவு இல்லாமல் முயல்கின்றவர்,(செயலுக்கு இடையூறாக
வரும்)ஊழையும் ஒரு காலத்தில் தோல்வியுறச் செய்யும்.
சாலமன் பாப்பையா உரை:
மனம் தளராமல் இடைவிடாது
முயற்சி செய்பவர்,
விதியையும் புறமுதுகு காட்டக் காண்பர்.
கலைஞர் உரை:
``ஊழ்''
என்பது வெல்ல முடியாத ஒன்று என்பார்கள் சோர்வில்லாமல் முயற்சி
மேற்கொள்பவர்கள் அந்த ஊழையும் தோல்வி அடையச் செய்வார்கள்
0 Comments