பெறுமவற்றுள் யாமறிவ
தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற
மக்கட்பே றல்ல பிற
மு.வ உரை:
பெறத்தகுந்த பேறுகளில்
அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப்பேறுகளை
யாம் மதிப்பதில்லை.
சாலமன் பாப்பையா உரை:
அறியவேண்டுவனவற்றை அறியும்
அறிவு படைத்த பிள்ளைச் செல்வத்தைத் தவிர மற்றவற்றை ஒருவன் பெறும் நன்மையாக நான்
எண்ணுவதில்லை.
கலைஞர் உரை:
அறிவில் சிறந்த நல்ல
பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவுமில்லை
குறள் 62:
எழுபிறப்பும் தீயவை தீண்டா
பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்
பண்புடை மக்கட் பெறின்
மு.வ உரை:
பழி இல்லாத நல்ல பண்பு
உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள்
சென்று சேரா.
சாலமன் பாப்பையா உரை:
பழிக்கப்படாத நல்ல
குணங்களை உடைய பிள்ளைகளைப் பெற்றால், பெற்றவளை அவனுடைய
பிறவிகள்தோறும் துன்பங்கள் தொடமாட்டா.
கலைஞர் உரை:
பெற்றெடுக்கும் மக்கள்
பழிபடராத பண்புடையவர்களாக இருப்பின், ஏழேழு தலைமுறை எனும்
அளவுக்குக் காலமெல்லாம் எந்தத் தீமையும் தீண்டாது
குறள் 63:
தம்பொருள் என்பதம் மக்கள்
அவர்பொருள்
தந்தம் வினையான் வரும்
தந்தம் வினையான் வரும்
மு.வ உரை:
தம்மக்களே தம்முடைய
பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின்
பயனால் வந்து சேரும்.
சாலமன் பாப்பையா உரை:
பிள்ளைகளைத் தம் செல்வம்
என்று அறிந்தோர் கூறுவர். அப்பிள்ளைகள் உள்ளபடியே செல்வமாவது அவரவர் செய்யும்
நற்செயல்களால் அமையும்.
கலைஞர் உரை:
தம் பொருள் என்பது
தம்மக்களையேயாம் அம்மக்களின் பொருள்கள் அவரவர் செயல்களின் விளைவாக வரக்கூடியவை
குறள் 64:
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம்
மக்கள்
சிறுகை அளாவிய கூழ்
சிறுகை அளாவிய கூழ்
மு.வ உரை:
தம்முடைய மக்களின் சிறு
கைகளால் அளாவப்பெற்ற உணவு,
பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
தம் பிள்ளைகளின் சிறு
கையால் பிசையப்பட்ட கூழ்,
அமிழ்தைக் காட்டிலும் மிக இனிது.
கலைஞர் உரை:
சிறந்த பொருளை அமிழ்தம்
எனக் குறிப்பிட்டாலுங்கூடத் தம்முடைய குழந்தைகளின் பிஞ்சுக்கரத்தால் அளாவப்பட்ட
கூழ் அந்த அமிழ்தத்தைவிடச் சுவையானதாகிவிடுகிறது
குறள் 65:
மக்கள்மெய் தீண்டல்
உடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு
மு.வ உரை:
மக்களின் உடம்பைத் தொடுதல்
உடம்பிற்கு இன்பம் தருவதாகும்: அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு
இன்பம் தருவதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பெற்ற பிள்ளைகளின் உடலைத்
தழுவுவது உடலுக்கு இன்பம். அவர்களின் பேச்சைக் கேட்பது காதிற்கு இன்பம்
கலைஞர் உரை:
தம் குழந்தைகளைத் தழுவி
மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அந்தக் குழந்தைகளின் மழலை மொழி கேட்பது
செவிக்கு இன்பத்தையும் வழங்கும்
குறள் 66:
குழலினி தியாழினி தென்பதம்
மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்
மழலைச்சொல் கேளா தவர்
மு.வ உரை:
தம் மக்களின் மழலைச்
சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது
என்று கூறுவர்.
சாலமன் பாப்பையா உரை:
பெற்ற பிள்ளைகள் பேசும்
பொருளற்ற மழலைச் சொல்லைக் கேட்காதவர்தாம், குழலும் யாழும் கேட்க இனியவை
என்பர்.
கலைஞர் உரை:
தங்கள் குழந்தைகளின்
மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும்
இனிமையானவை என்று கூறுவார்கள்
குறள் 67:
தந்தை மகற்காற்றும் நன்றி
அவையத்து
முந்தி இருப்பச் செயல்
முந்தி இருப்பச் செயல்
மு.வ உரை:
தந்தை தன் மகனுக்குச்
செய்யத்தக்க நல்லுதவி,
கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக்
கல்வியில் மேம்படச் செய்தலாகும்.
சாலமன் பாப்பையா உரை:
தகப்பன் தன் பிள்ளைக்குச்
செய்யும் நன்மை,
கற்றவர் அவையில் முதன்மைப் பெறச் செய்வதே.
கலைஞர் உரை:
தந்தை தன் மக்களுக்குச்
செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே
ஆகும்
குறள் 68:
தம்மின்தம் மக்கள்
அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது
மன்னுயிர்க் கெல்லாம் இனிது
மு.வ உரை:
தம் மக்களின் அறிவுடைமை
தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கேல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
தம் பிள்ளைகள் அறிவு
மிக்கவராக இருப்பது,
தம்மைக் காட்டிலும், இப்பெரிய பூமியில்
அழியாமல் தொடரும் உயிர்களுக்கு எல்லாம் இனிது.
கலைஞர் உரை:
பெற்றோரைக் காட்டிலும்
பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு
மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும்
குறள் 69:
ஈன்ற பொழுதின்
பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்
சான்றோன் எனக்கேட்ட தாய்
மு.வ உரை:
தன் மகனை நற்பண்பு
நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில்
உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.
சாலமன் பாப்பையா உரை:
தம் மகனைக் கல்வி
ஒழுக்கங்களால் நிறைந்தவன் என்று அறிவுடையோர் கூற அதைக் கேட்ட தாய், அவனைப்
பெற்ற பொழுதைக் காட்டிலும் மிகுதியாக மகிழ்வாள்.
கலைஞர் உரை:
நல்ல மகனைப்
பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த
மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைவாள்
குறள் 70:
மகன் தந்தைக் காற்றும்
உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனும் சொல்
என்நோற்றான் கொல்லெனும் சொல்
மு.வ உரை:
மகன் தன் தந்தைக்குச்
செய்யத் தக்க கைம்மாறு,
இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர்
புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.
சாலமன் பாப்பையா உரை:
தன்னைக் கல்வி அறிவு
உடையவனாய் ஆளாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறு, பிள்ளையின்
ஒழுக்கத்தையும் அறிவையும் கண்டவர், இப்பிள்ளையைப் பெறுவதற்கு
இவன் தகப்பன் என்ன தவம் செய்தானோ என்று சொல்லும் சொல்லைப் பெற்றுத் தருவதே.
கலைஞர் உரை:
``ஆகா!
இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெறும்பேறு'', என்று
ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச்
செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும்
0 Comments