கண்ணோட்டம் என்னுங்
கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு
உண்மையான் உண்டிவ் வுலகு
மு.வ உரை:
கண்ணோட்டம் என்று
சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு இருக்கும் காரணத்தால் தான், இந்த
உலகம் அழியாமல் இருக்கின்றது.
சாலமன் பாப்பையா உரை:
முகம் பார்த்தல் என்னும்
பேரழகு மனிதருள் இருப்பதால்தான் மக்கள் வாழ்க்கை தொடர்கின்றது.
கலைஞர் உரை:
இந்த உலகம், அன்பும்
இரக்கமும் இணைந்த கண்ணோட்டம் எனப்படுகிற பெரும் அழகைக் கொண்டவர்கள் இருப்பதால்தான்
பெருமை அடைகிறது
குறள் 572:
கண்ணோட்டத் துள்ள துலகியல்
அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை
உண்மை நிலக்குப் பொறை
மு.வ உரை:
கண்ணோட்டத்தினால் உலகியல்
நடைபெறுகின்றது,
கண்ணோட்டம் இல்லாதவர் உயிரோடு இருத்தல் நிலத்திற்குச் சுமையே தவிர
வேறு பயனில்லை.
சாலமன் பாப்பையா உரை:
மக்கள் வாழ்க்கை
கண்ணோட்டத்தால்தான் இயங்குகின்றது அக்கண்ணோட்டம் இல்லாதவர் வாழ்வது இப்பூமிக்கு
பாரமே.
கலைஞர் உரை:
அன்புடன் அரவணைத்து
இரக்கம் காட்டும் கண்ணோட்டம் எனப்படும் உலகியலுக்கு, மாறாக இருப்பவர்கள் இந்தப்
பூமிக்குச் சுமையாவார்கள்
குறள் 573:
பண்ணென்னாம் பாடற்
கியைபின்றேற் கண்ணென்னாங்
கண்ணோட்டம் இல்லாத கண்
கண்ணோட்டம் இல்லாத கண்
மு.வ உரை:
பாடலோடு பொருந்துதல்
இல்லையானால் இசை என்ன பயனுடையதாகும், அதுபோல் கண்ணோட்டம்
இல்லாவிட்டால் கண் என்ன பயனுடையதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பாடப்படும் பாடலுக்குப்
பொருந்தவில்லை என்றால் ராகத்தால் என்ன பயன்? அதுபோல கண்ணோட்டம் இல்லை
என்றால் கண்ணால்தான் என்ன பயன்?
கலைஞர் உரை:
இரக்க உணர்வு, அன்பு
எனும் கண்ணோட்டத்துடன் பொருந்தி வராத கண்ணும், பாடலுடன்
பொருந்தி வராத இசையும் பயன் தராதவையாகும்
குறள் 574:
உளபோல் முகத்தெவன்
செய்யும் அளவினாற்
கண்ணோட்டம் இல்லாத கண்
கண்ணோட்டம் இல்லாத கண்
மு.வ உரை:
தக்க அளவிற்குக்
கண்ணோட்டம் இல்லாத கண்கள் முகத்தில் உள்ளவை போல் தோன்றுதல் அல்லாமல் வேறு என்ன
பயன் செய்யும்.
சாலமன் பாப்பையா உரை:
வரம்பிற்கு உட்பட்ட
கண்ணோட்டம் இல்லாத கண்,
முகத்தில் இருப்பது போல் இருக்கிறதே தவிர, அதனால்
வேறு என்ன பயன் உண்டு?
கலைஞர் உரை:
அகத்தில் அன்பையும்
இரக்கத்தையும் சுரக்கச் செய்யாத கண்கள் முகத்தில் உள்ளவைபோல் தோன்றுவதைத் தவிர, வேறு
எந்தப்பயனும் இல்லாதவைகளாகும்
குறள் 575:
கண்ணிற் கணிகலங்
கண்ணோட்டம் அஃதின்றேற்
புண்ணென் றுணரப் படும்
புண்ணென் றுணரப் படும்
மு.வ உரை:
ஒருவனுடைய கண்ணுக்கு
அணிகலமாவது கண்ணோட்டம் என்னும் பண்பே, அஃது இல்லையானால் புண் என்று
உணரப்படும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் கண்ணிற்கு அணியும்
நகை கண்ணோட்டமே;
அந்த நகை மட்டும் இல்லை என்றால் அது புண் என்று பெரியோரால்
அறியப்படும்.
கலைஞர் உரை:
கருணையுள்ளம் கொண்டவருடைய
கண்ணே கண் என்று கூறப்படும் இல்லையானால் அது கண் அல்ல; புண்
குறள் 576:
மண்ணோ டியைந்த மரத்தனையர்
கண்ணோ
டியைடந்துகண் ணோடா தவர்
டியைடந்துகண் ணோடா தவர்
மு.வ உரை:
கண்ணோட்டதிற்க்கு உரிய
கண்ணோடுப் பொருந்தி இருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர் (கண் இருந்தும் காணாத ) மரத்தினைப்
போன்றவர்.
சாலமன் பாப்பையா உரை:
கண் பெற்றிருந்தும்
கண்ணோட்டம் இல்லாதவர் இயங்கினாலும் மண்ணோடு சேர்ந்து இயங்காமல் நிற்கும் மரம்
போன்றவரே.
கலைஞர் உரை:
ஒருவர்க்குக் கண்
இருந்தும்கூட அந்தக் கண்ணுக்குரிய அன்பும் இரக்கமும் இல்லாவிட்டால் அவர்
மரத்துக்கு ஒப்பானவரே ஆவார்
குறள் 577:
கண்ணோட்டம் இல்லவர்
கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்
கண்ணோட்டம் இன்மையும் இல்
மு.வ உரை:
கண்ணோட்டம் இல்லாத மக்கள்
கண் இல்லாதவரே ஆவர்,
கண் உடைய மக்கள் கண்ணோட்டம் இல்லா திருத்தலும் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
கண்ணோட்டம் இல்லாதவர் கண்
இல்லாதவரே;
கண் இருப்பவர் கண்ணோட்டம் இல்லாதவராக இருப்பதும் இல்லை.
கலைஞர் உரை:
கருணை மனம் கொண்டவர்க்கு
இருப்பதே கண்கள் எனப்படும்;
கருணையற்றோர் கண்ணற்றோர் என்றே கருதப்படுவார்கள்
குறள் 578:
கருமஞ் சிதையாமற் கண்ணோட
வல்லார்க்
குரிமை உடைத்திவ் வுலகு
குரிமை உடைத்திவ் வுலகு
மு.வ உரை:
தம் தம் கடமையாகிய தொழில்
கெடாமல் கண்ணோட்டம் உடையவராக இருக்க வல்லவர்க்கு இவ்வுலகம் உரிமை உடையது.
சாலமன் பாப்பையா உரை:
தம் செயலுக்குச் சேதம்
வராமல் கண்ணோட்டம் கொள்ளும் ஆற்றல் உடையவர்க்கு இந்த உலகம் சொந்தமாகும்.
கலைஞர் உரை:
கடமை தவறாமையிலும், கருணை
பொழிவதிலும் முதன்மையாக இருப்போருக்கு இந்த உலகமே உரிமையுடையதாகும்
குறள் 579:
ஒறுத்தாற்றும் பண்பினார்
கண்ணுங்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை
பொறுத்தாற்றும் பண்பே தலை
மு.வ உரை:
தண்டித்தற்குரிய தன்மை
உடையவரிடத்திலும் கண்ணோட்டம் செய்து ( அவர் செய்த குற்றத்தைப்) பொருத்துக்
காக்கும் பண்பே சிறந்தது.
சாலமன் பாப்பையா உரை:
தம்மை வருத்தும்
இயல்புடையவரிடத்திலும் கண்ணோட்டம் கொண்டு, அவர்தம் பிழையைப் பொறுக்கும்
பண்பே சிறந்தது.
கலைஞர் உரை:
அழிக்க நினைத்திடும்
இயல்புடையவரிடத்திலும் பொறுமை காட்டுவது மிக உயர்ந்த பண்பாகும்
குறள் 580:
பெயக்கண்டு நஞ்சுண் டமைவர்
நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்
நாகரிகம் வேண்டு பவர்
மு.வ உரை:
எவராலும் விரும்பத்தக்க
நாகரிகமான கண்ணோட்டத்தை விரும்புகின்றவர், பழகியவர் தமக்கு நஞ்சு
இடக்கண்டும் அதை உண்டு அமைவர்.
சாலமன் பாப்பையா உரை:
எல்லாராலும் விரும்பத்தக்க
நாகரிகத்தை விரும்புபவர்,
தமக்கு நெருக்கமானவர் நஞ்சையே தருகிறார் என அறிந்தும் கண்ணோட்டம்
காரணமாக அதை உண்டு அவருடன் பழகுவர்.
கலைஞர் உரை:
கருணை உள்ளமும் பண்பாடும்
உள்ளவர்கள்,
தம்முடன் பழகியவர்கள் நஞ்சு கொடுத்தாலும் அதை அருந்திக்
களிப்படைவார்கள்
0 Comments