ஓர்ந்துகண் ணோடா
திறைபுரிந் தியார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை
தேர்ந்துசெய் வஃதே முறை
மு.வ உரை:
யாரிடத்திலும் (குற்றம்
இன்னதென்று) ஆராய்ந்து,
கண்ணோட்டம் செய்யாமல் நடுவுநிலைமைப் பொருந்தி (செய்யத்தக்கதை)
ஆராய்ந்து செய்வதே நீதிமுறையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
குடிமக்கள் செய்யும் குற்றத்தை
ஆய்ந்து எவரிடத்தும் விருப்பு, வெறுப்பு இல்லாமல், நடுநிலையோடு
நூல்வழி ஆராய்ந்து, குற்றத்திற்கு ஏற்ற தண்டனையை வழங்குவதே
நேர்மையான ஆட்சி.
கலைஞர் உரை:
குற்றம் இன்னதென்று
ஆராய்ந்து எந்தப் பக்கமும் சாயாமல் நடுவுநிலைமை தவறாமல் வழங்கப்படுவதே நீதியாகும்
குறள் 542:
வானோக்கி வாழும்
உலகெல்லாம் மன்னவன்
கோனோக்கி வாழுங் குடி
கோனோக்கி வாழுங் குடி
மு.வ உரை:
உலகத்தில் உள்ள உயிர்கள்
எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய
செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.
சாலமன் பாப்பையா உரை:
உயிர்கள் எல்லாம் மழையை
எதிர்பார்த்தே வாழும்;
குடிமக்களோ ஆளுவோரின் நேர்மையான ஆட்சியை எதிர்பார்த்தே வாழ்வர்.
கலைஞர் உரை:
உலகில் உள்ள உயிர்கள்
வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி
தேவைப்படுகிறது
குறள் 543:
அந்தணர் நூற்கும்
அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்
நின்றது மன்னவன் கோல்
மு.வ உரை:
அந்தணர் போற்றும்
மறைநூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய
செங்கோலாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அறிவை வளர்த்துக்
கொள்பவர்தம் ஞான நூல்களுக்கும், அறத்திற்கும் அடிப்படையாய் இருப்பது
ஆளுவோரின் நேர்மையான ஆட்சியே.
கலைஞர் உரை:
ஓர் அரசின் செங்கோன்மைதான்
அறவோர் நூல்களுக்கும் அறவழிச் செயல்களுக்கும் அடிப்படையாக அமையும்
குறள் 544:
குடிதழீஇக் கோலோச்சு மாநில
மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு
அடிதழீஇ நிற்கும் உலகு
மு.வ உரை:
குடிகளை அன்போடு அணைத்துக்
கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப்பொருந்தி உலகம் நிலை பெறும்.
சாலமன் பாப்பையா உரை:
குடிமக்களை அணைத்துக்
கொண்டு,
நேர்மையான ஆட்சியை நடத்தும் சிறந்த ஆட்சியாளரின் கால்களைச் சுற்றியே
மக்கள் வாழ்வர்.
கலைஞர் உரை:
குடிமக்களை அரவணைத்து
ஆட்சி நடத்தும் நல்லரசின் அடிச்சுவட்டை நானிலமே போற்றி நிற்கும்
குறள் 545:
இயல்புளிக் கோலோச்சு மன்னவ
னாட்ட
பெயலும் விளையுளுந் தொக்கு
பெயலும் விளையுளுந் தொக்கு
மு.வ உரை:
நீதி முறைப்படி செங்கோல்
செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர
ஏற்படுவனவாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அரச நீதிநூல்கள் கூறியபடி, நேர்மையாக
ஆளும் ஆட்சியாளரிடம் பருவமழையும், குறையாத விளைச்சலும்
சேர்ந்தே இருக்கும்.
கலைஞர் உரை:
நீதி வழுவாமல் ஓர் அரசு
நாட்டில் இருக்குமேயானால் அது, பருவகாலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால்
வளமான விளைச்சல் கிடைப்பதற்கு ஒப்பானதாகும்
குறள் 546:
வேலன்று வென்றி தருவது
மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்
கோலதூஉங் கோடா தெனின்
மு.வ உரை:
ஒருவனுக்கு வெற்றி
பெற்றுத் தருவது வேல் அன்று,
அரசனுடைய செங்கோலே ஆகும், அச் செங்கோலும்
கோணாதிருக்குமாயின்.
சாலமன் பாப்பையா உரை:
ஆட்சியாளருக்கு வெற்றி
தருவது ஆயுதம் அன்று;
அவரின் நேரிய ஆட்சியே; அதுவும் தவறான ஆட்சியாக
இல்லாதிருக்க வேண்டும்.
கலைஞர் உரை:
ஓர் அரசுக்கு வெற்றியைத்
தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல; குடிமக்களை வாழவைக்கும் வளையாத
செங்கோல்தான்
குறள் 547:
இறைகாக்கும் வையகம்
எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்
முறைகாக்கும் முட்டாச் செயின்
மு.வ உரை:
உலகத்தை எல்லாம் அரசன்
காப்பாற்றுவான்,
நீதிமுறை கெடாதவாறு ஆட்சி செய்வானாயின் அரசனை அந்த முறையே
காப்பாற்றும்.
சாலமன் பாப்பையா உரை:
ஆட்சியாளர் பூமியைக்
காப்பர்;
அவரையோ அவரது குறையற்ற நேர்மையான ஆட்சி காக்கும்.
கலைஞர் உரை:
நீதி வழுவாமல் ஓர் அரசு
நடைபெற்றால் அந்த அரசை அந்த நீதியே காப்பாற்றும்
குறள் 548:
எண்பதத்தான் ஓரா
முரறசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்
தண்பதத்தான் தானே கெடும்
மு.வ உரை:
எளிய செவ்வி உடையவனாய்
ஆராய்ந்து நீதி முறை செய்யாத அரசன், தாழ்ந்த நிலையில் நின்று
(பகைவரில்லாமலும் ) தானே கெடுவான்.
சாலமன் பாப்பையா உரை:
நீதி தேடி வருவார்க்கு
எளிய காட்சியாளனாய்,
நீதி தேடுவார் சொல்வதைப் பலவகை நூலாரோடும், ஆராய்ந்து
நீதி வழங்காத ஆட்சியாளன். பாவமும் பலியும் எய்தித் தானே அழிவான்.
கலைஞர் உரை:
ஆடம்பரமாகவும், ஆராய்ந்து
நீதி வழங்காமலும் நடைபெறுகிற அரசு தாழ்ந்த நிலையடைந்து தானாகவே கெட்டொழிந்து
விடும்
குறள் 549:
குடிபுறங் காத்தோம்பிக்
குற்றங் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்
வடுவன்று வேந்தன் தொழில்
மு.வ உரை:
குடிகளைப் பிறர்
வருந்தாமல் காத்து,
தானும் வருந்தாமல் காப்பாற்றி, அவற்களுடைய
குற்றங்களைத் தக்க தண்டனையால் ஒழித்தல், அரசனுடைய தொழில் பழி
அன்று.
சாலமன் பாப்பையா உரை:
அயலவர் அழிக்காமல்
குடிமக்களையும் தன்னையும் காத்து, குடிகளின் குறைகளைக் களைந்து நேரிய ஆட்சி
செய்வது, ஆட்சியாளருக்குக் குறை ஆகாது. அது அவர் தொழில்.
கலைஞர் உரை:
குடிமக்களைப் பாதுகாத்துத்
துணை நிற்பதும்,
குற்றம் செய்தவர்கள் யாராயினும் தனக்கு இழுக்கு வரும் என்று
கருதாமல் தண்டிப்பதும் அரசின் கடமையாகும்
குறள் 550:
கொலையிற் கொடியாரை
வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்
களைகட் டதனொடு நேர்
மு.வ உரை:
கொடியவர் சிலரைக்
கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்க்கு நிகரான
செயலாகும்.
சாலமன் பாப்பையா உரை:
கொடியவர்களுக்கு மரண
தண்டனை கொடுத்துத் தக்கவரைக் காப்பது, உழவன் களையைக் களைந்து
பயிரைக் காப்பதற்குச் சமம்.
கலைஞர் உரை:
கொலை முதலிய கொடுமைகள்
புரிவோரை,
ஓர் அரசு தண்டனைக்குள்ளாக்குவது பயிரின் செழிப்புக்காகக் களை
எடுப்பது போன்றதாகும்
0 Comments