பற்றற்ற கண்ணும் பழைமைபா
ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள
சுற்றத்தார் கண்ணே உள
மு.வ உரை:
ஒருவன் வறியவனான காலத்திலும்
அவனுக்கும் தமக்கும் இருந்த உறவைப் பாராட்டிப் பேசும் பண்புகள் சுற்றத்தாரிடம்
உண்டு.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் பிடிமானம் ஏதும்
இல்லாமல் எல்லாம் இழந்த நிலையில் இருந்தபோதும், அவனுடன் தங்களுக்கு உள்ள
பழந்தொடர்பைக் கூறுவது சுற்றத்தாரிடம் மட்டுமே உண்டு.
கலைஞர் உரை:
ஒருவருக்கு வறுமை வந்த
நேரத்திலும் அவரிடம் பழைய உறவைப் பாராட்டும் பண்பு உடையவர்களே சுற்றத்தார்
ஆவார்கள்
குறள் 522:
விருப்பறாச் சுற்றம்
இயையின் அருப்பறா
ஆக்கம் பலவுந் தரும்
ஆக்கம் பலவுந் தரும்
மு.வ உரை:
அன்பு நீங்காத சுற்றம்
ஒருவனுக்குக் கிடைத்தால்,
அது மேன்மேலும் வளர்ச்சி குறையாத ஆக்கம் பலவற்றையும் அவனுக்குக்
கொடுக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவனுக்கு அன்பு நீங்காத
சுற்றம் மட்டும் அமைந்து விடுமானால், அவனுக்கு அது வளர்ச்சி
குறையாத செல்வங்கள் பலவற்றையும் கொடுக்கும்.
கலைஞர் உரை:
எந்த நிலைமையிலும் அன்பு
குறையாத சுற்றம் ஒருவருக்குக் கிடைத்தால் அது அவருக்கு ஆக்கமும், வளர்ச்சியும்
அளிக்கக் கூடியதாக அமையும்
குறள் 523:
அளவளா வில்லாதான் வாழ்க்கை
குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று
கோடின்றி நீர்நிறைந் தற்று
மு.வ உரை:
சுற்றத்தாரோடு மனம் கலந்து
பழகும் தன்மை இல்லாதவனுடைய வாழ்க்கை, குளப்பரப்பானது கரையில்லாமல்
நீர் நிறைந்தாற் போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
சுற்றத்தாரோடு மனந்திறந்து
உறவாடாதவன் வாழ்க்கை,
கரை இல்லாத குளப்பரப்பில் நீர் நிறைந்திருப்பது போன்றது.
கலைஞர் உரை:
உற்றார் உறவினர் எனச் சூழ
இருப்போருடன் அன்பு கலந்து மகிழ்ந்து பழகாதவனுடைய வாழ்க்கையானது; கரையில்லாத
குளத்தில் நீர் நிறைந்ததைப் போலப் பயனற்றதாகி விடும்
குறள் 524:
சுற்றத்தாற் சுற்றப்
படவொழுகல் செல்வந்தான்
பெற்றத்தாற் பெற்ற பயன்
பெற்றத்தாற் பெற்ற பயன்
மு.வ உரை:
தக்கவழியில் செய்யப்படாத
முயற்சி பலர் துணையாக நின்று(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகிவிடும்.
சாலமன் பாப்பையா உரை:
தன் சுற்றத்தால் தான்
சூழப்படும்படி அவர்களைத் தழுவி வாழ்வதே ஒருவன் செல்வத்தைப் பெற்றதன் பயன் ஆகும்.
கலைஞர் உரை:
தன் இனத்தார், அன்புடன்
தன்னைச் சூழ்ந்து நிற்க வாழும் வாழ்க்கையே ஒருவன் பெற்ற செல்வத்தினால்
கிடைத்திடும் பயனாகும்
குறள் 525:
கொடுத்தலும் இன்சொல்லும்
ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தாற் சுற்றப் படும்
சுற்றத்தாற் சுற்றப் படும்
மு.வ உரை:
பொருள் கொடுத்தலும்
இன்சொல் கூறுதலுமாகிய இரண்டும் செய்யவல்லவனானால் ஒருவன் தொடர்ந்த பலச் சுற்றத்தால்
சூழப்படுவான்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் தன்
சுற்றத்தார்க்கு வேண்டியதைக் கொடுத்தும், அவர்களிடம் இனிய சொற்களைச்
சொல்லியும் வருவான் என்றால், பல்வகைச் சுற்றத்தாராலும் அவன்
சூழப்படுவான்.
கலைஞர் உரை:
வள்ளல் தன்மையும், வாஞ்சைமிகு
சொல்லும் உடையவனை அடுத்தடுத்துச் சுற்றத்தார் சூழ்ந்து கொண்டேயிருப்பார்கள்
குறள் 526:
பெருங்கொடையான் பேணான்
வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத் தில்
மருங்குடையார் மாநிலத் தில்
மு.வ உரை:
பெரிய கொடையாளியாகவும்
சினமற்றவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றத்தாரை உடையவர் உலகத்தில்
யாரும் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் பெருங்கொடையை
உடையவனாய்,
சினத்தை விரும்பாதவனாய் இருப்பான் என்றால் அவனைப் போலச் சுற்றம்
உடையவர் உலகில் இல்லை.
கலைஞர் உரை:
பெரிய கொடையுள்ளம்
கொண்டவனாகவும்,
வெகுண்டு எழும் சீற்றத்தை விலக்கியவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப்
போல் சுற்றம் சூழ இருப்போர் உலகில் யாரும் இல்லை எனலாம்
குறள் 527:
காக்கை கரவா கரைந்துண்ணும்
ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள
அன்னநீ ரார்க்கே உள
மு.வ உரை:
காக்கை (தனக்கு கிடைத்ததை)
மறைத்து வைக்காமல் சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும். ஆக்கமும் அத்தகைய இயல்பு
உடையவர்க்கே உண்டு.
சாலமன் பாப்பையா உரை:
காக்கை தன் உணவை
மறைக்காமல்,
தன் இனத்தைச் சத்தமிட்டு அழைத்து உண்ணும்; இதுபோன்ற
குணம் உடையவர்க்கே செல்வமும் உள ஆகும்.
கலைஞர் உரை:
தனக்குக் கிடைத்ததை
மறைக்காமல் தனது சுற்றத்தைக் கூவி அழைத்துக் காக்கை உண்ணும் அந்தக் குணம்
உடையவர்களுக்கு மட்டுமே உலகில் உயர்வு உண்டு
குறள் 528:
பொதுநோக்கான் வேந்தன்
வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்
அதுநோக்கி வாழ்வார் பலர்
மு.வ உரை:
அரசன் எல்லாரையும்
பொதுவகையாக நோக்காமல்,
அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால், அதை
விரும்பி சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர்.
சாலமன் பாப்பையா உரை:
சுற்றத்தார் எல்லாரையும்
ஒன்று போலவே எண்ணாமல்,
அவரவர் தகுதிக்கு ஏற்ப ஆட்சியாளன் உபசரிப்பான் என்றால், அச்சிறப்பை எண்ணி அவனை விடாமல் வாழும் சுற்றத்தார் பலராவர்.
கலைஞர் உரை:
அனைத்து மக்களும் சமம்
எனினும்,
அவரவர்க்குரிய ஆற்றலுக்கேற்ப அவர்களைப் பயன்படுத்திக் கொண்டால்,
அந்த அரசை அனைவரும் அரணாகச் சூழ்ந்து நிற்பர்
குறள் 529:
தமராகித் தற்றுறந்தார்
சுற்றம் அமராமைக்
காரண மின்றி வரும்
காரண மின்றி வரும்
மு.வ உரை:
முன் சுற்றத்தாறாக இருந்து
பின் ஒருக் காரணத்தால் பிரிந்தவரின் உறவு, அவ்வாறு அவர்
பொருந்தாமலிருந்த காரணம் நீங்கியபின் தானே வந்து சேரும்.
சாலமன் பாப்பையா உரை:
முன்பு தன் அரசியல்
இயக்கத்தில் இருந்து,
ஆட்சியாளனிடம் உள்ள ஒழுக்கமின்மை காரணமாகப் பிரிந்து போனவர்கள்,
ஆட்சியாளனிடம் அந்தக் குற்றம் இல்லாது போனதைக் கண்டு அவர்களாகவே
திரும்ப வருவர்.
கலைஞர் உரை:
உறவினராக இருந்து ஏதோ ஒரு
காரணம் கூறிப் பிரிந்து சென்றவர்கள், அந்தக் காரணம் பொருந்தாது
என்று உணரும்போது மீண்டும் உறவு கொள்ள வருவார்கள்
குறள் 530:
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை
வேந்தன்
இழைத்திருந் தெண்ணிக் கொளல்
இழைத்திருந் தெண்ணிக் கொளல்
மு.வ உரை:
தன்னிடமிருந்து பிரிந்து
சென்று பின் ஒருக் காரணம்பற்றித் திரும்பிவந்தவனை, அரசன் அவன் நாடிய உதவியைச்
செய்து ஆராய்ந்து உறவு கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒரு காரணமும் இல்லாமல், தானே
இயக்கத்தை விட்டுப் பிரிந்து போன ஒருவன் ஏதோ ஒரு காரணத்தோடு திரும்ப வந்தாள்
என்றால், ஆட்சியாளன் பொறுத்து இருந்து, ஆராய்ந்து அவனைச் சேர்த்துக் கொள்க.
கலைஞர் உரை:
ஏதோ காரணம் கற்பித்துப்
பிரிந்து போய்,
மீண்டும் தலைவனிடம் தக்க காரணத்தினால் வந்தவரை, நன்கு ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளல் வேண்டும்
0 Comments