நன்மையும் தீமையும் நாடி
நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்
தன்மையான் ஆளப் படும்
மு.வ உரை:
நன்மையும் தீமையுமாகிய
இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன்
(செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான்.
சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலை நம்மிடம்
செய்யக் கொடுத்தால் அச்செயலின் நன்மை தீமை இரண்டையும் ஆராய்ந்து எது நன்மையோ அதையே
செய்ய வேண்டும்.
கலைஞர் உரை:
நன்மை எது தீமை எது என
ஆராய்ந்து அறிந்த,
நற்செயலில் மட்டுமே நாட்டங் கொண்டவர்கள் எப்பணியினை ஆற்றிடவும்
தகுதி பெற்றவராவார்கள்
குறள் 512:
வாரி பெருக்கி வளம்படுத்
துற்றவை
ஆராய்வான் செய்க வினை
ஆராய்வான் செய்க வினை
மு.வ உரை:
பொருள் வரும் வழிகளைப்
பெருக்கச் செய்து,
அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளைஆராய்ந்து
நீக்க வல்லவனே செயல் செய்ய வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
பொருள் வரும் வழியை
விரிவாக்கி,
வந்த பொருளால் மேலும் செல்வத்தை வளர்த்து, அப்போது
அதனாலும் வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்கக் கூடியவன் பணியாற்றுக.
கலைஞர் உரை:
வருமானம் வரக்கூடிய வழிகளை
விரிவாக்கி,
வளங்களையும் பெருக்கி, இடையூறுகளையும்
ஆராய்ந்து நீக்கிட வல்லவனே செயலாற்றும் திறனுடையவன்
குறள் 513:
அன்பறிவு தேற்றம்
அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு
நன்குடையான் கட்டே தெளிவு
மு.வ உரை:
அன்பு, அறிவு,
ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல், அவா இல்லாமை
ஆகிய இந் நான்கு பண்புகளையும் நிலையாக உடையவனைத் தெளியலாம்.
சாலமன் பாப்பையா உரை:
நிர்வாகத்தின்மேல் அன்பு, நிர்வாகத்திற்கு
நன்மை தருவதை அறியும் அறிவு, அதற்கான செயல்களைச்
செய்யும்போது உறுதி, பணியில் பொருள் வந்தால் அதன்மீது ஆசை
இன்மை இந்த நான்கையும் உடையவனிடத்தே பதவி தருவதுதான் தெளிவு.
கலைஞர் உரை:
அன்பு, அறிவு,
செயலாற்றும் திறமை, பேராசைப் படாத குணம் ஆகிய
நான்கு பண்புகளையும் நிலையாகப் பெற்றிருப்பவரைத் தேர்வு செய்வதே நலம்
குறள் 514:
எனைவகையான் தேறியக்
கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்
வேறாகும் மாந்தர் பலர்
மு.வ உரை:
எவ்வகையால் ஆராய்ந்து
தெளிந்த பிறகும்(செயலை மேற்க்கொண்டு செய்யும் போது) அச் செயல்வகையால் வேறுபடும்
மக்கள் உலகத்தில் பலர் உண்டு.
சாலமன் பாப்பையா உரை:
எல்லா வகையிலும் ஆராய்ந்து
உரிய பதவி வழங்கிய பின்னும்,
செயல் திறத்தால், எதிர்பார்த்த அளவு இல்லாத
மாந்தர் பலராவர்.
கலைஞர் உரை:
எவ்வளவுதான் வழிமுறைகளை
ஆராய்ந்து தெளிந்து தேர்ந்தெடுத்தாலும் செயல்படும் பொழுது வேறுபடுகிறவர்கள் பலர்
இருப்பர்
குறள் 515:
அறிந்தாற்றிச்
செய்கிற்பாற் கல்லால் வினைதான்
சிறந்தானென் றேவற்பாற் றன்று
சிறந்தானென் றேவற்பாற் றன்று
மு.வ உரை:
(செய்யும்
வழிகளை) அறிந்து இடையூறுகளைத்தாங்கிச் செய்து முடிக்க வல்லவனை அல்லாமல், மற்றவனைச் சிறந்தவன் என்றுக் கருதி ஒருச் செயலைச் செய்யுமாறு ஏவக்கூடாது.
சாலமன் பாப்பையா உரை:
செய்யும் வழிமுறைகளை
அறிந்து தடை வந்தாலும் செய்யும் திறமை உடையவனிடம் அன்றி . இவன் நம்மவன் (கட்சி
இனம்) என்று எண்ணி,
ஒரு செயலை ஒப்படைக்கக்கூடாது.
கலைஞர் உரை:
ஆய்ந்தறிந்து செய்து
முடிக்கும் ஆற்றல் உள்ளவர்களை அல்லாமல் வேறொருவரைச் சிறந்தவர் எனக் கருதி ஒரு
செயலில் ஈடுபடுத்தக் கூடாது
குறள் 516:
செய்வானை நாடி வினைநாடிக்
காலத்தோ
டெய்த உணர்ந்து செயல்
டெய்த உணர்ந்து செயல்
மு.வ உரை:
செய்கின்றவனுடைய தன்மையை
ஆராய்ந்து,
செயலின் தன்மையையும் ஆராய்ந்து, தக்கக்
காலத்தோடு பொறுந்துமாறு உணர்ந்து செய்விக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
முதலில் ஒரு செயலைச் செய்ய
வேண்டியவனின் தகுதிகளை எண்ணி அவன் செய்ய வேண்டிய செயலின் தகுதியையும் எண்ணி பிறகு
அவனையும் அச்செயலையும் செய்யப்படும் காலத்தோடு பொருத்தி எண்ணிச் செயல் செய்க.
கலைஞர் உரை:
செயலாற்ற வல்லவனைத்
தேர்ந்து,
செய்யப்பட வேண்டிய செயலையும் ஆராய்ந்த, காலமுணர்ந்து
அதனைச் செயல்படுத்தவேண்டும்
குறள் 517:
இதனை இதனால்
இவன்முடிக்கும் என்றாய்ந்
ததனை அவன்கண் விடல்
ததனை அவன்கண் விடல்
மு.வ உரை:
இந்தச் செயலை இக்கருவியால்
இன்னவன் செய்துமுடிப்பான் என்று ஆராய்ந்த பிறகே அத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க
வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
இந்தச் செயலை இன்ன ஆள்
பலத்தாலும்,
பொருள் பலத்தாலும் இவன் செய்து முடிப்பான் என்பதை நன்கு எண்ணி
அந்தச் செயலை அவனிடம் விடுக.
கலைஞர் உரை:
ஒரு காரியத்தை ஒருவர்
எப்படி செய்து முடிப்பார் என்பதை ஆராய்ந்து பார்த்து, அதற்குப்
பிறகு அந்தக் காரியத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்
குறள் 518:
வினைக்குரிமை நாடிய பின்றை
அவனை
அதற்குரிய னாகச் செயல்
அதற்குரிய னாகச் செயல்
மு.வ உரை:
ஒருவன் ஒரு தொழிலைச்
செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த பிறகு அவனைத் அத் தொழிலுக்கு
உரியவனாகும்படிச் செய்ய வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவனை ஒரு பதவிக்கு
உரியவனாக நியமித்த பிறகு,
அப்பதவிக்கு உரிய செயல்களை அவனே செய்யுமாறு விட்டுவிடுக.
கலைஞர் உரை:
ஒரு செயலில் ஈடுபடுவதற்கு
ஏற்றவனா என்பதை ஆராய்ந்து அறிந்த பிறகே, அவனை அந்தச் செயலில்
ஈடுபடுத்த வேண்டும்
குறள் 519:
வினைக்கண் வினையுடையான்
கேண்மைவே றாக
நினைப்பானை நீங்குந் திரு
நினைப்பானை நீங்குந் திரு
மு.வ உரை:
மேற்க்கொண்ட தொழிலில்
எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத் தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம்
நீங்கும்.
சாலமன் பாப்பையா உரை:
தன் பதவியில் செயல்திறம்
உடையவன் நிர்வாகத்திற்கு வேண்டியவனாக இருக்க, அவனை ஒழிக்க எண்ணிக் கோள்
மூட்டுவார் சொல்லை நிர்வாகம் கேட்குமானால் அந்த நிர்வாகத்தை விட்டுச் செல்வத்
திருமகள் நீக்குவான்.
கலைஞர் உரை:
எடுத்த காரியத்தை
முடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவரின் உறவைத் தவறாக எண்ணுபவரை விட்டுப்
பெருமை அகன்று விடும்
குறள் 520:
நாடோறு நாடுக மன்னன்
வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு
கோடாமை கோடா துலகு
மு.வ உரை:
தொழில் செய்கின்றவன்
கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது, ஆகையால் மன்னன் நாள்தோறும்
அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
மேல் பதவியில் இருப்பவன்
தவறு செய்யாவிட்டால் மக்களும் தவற செய்யார். அதனால் பதவியில் இருப்பவரை நாளும்
கவனித்து நிர்வாகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கலைஞர் உரை:
உழைப்போர் உள்ளம் வாடாமல்
இருக்கும் வரையில் உலகின் செழிப்பும் வாடாமல் இருக்கும் எனவே உழைப்போர் நிலையை
ஒவ்வொரு நாளும் அரசினர் ஆய்தறிந்து ஆவன செய்ய வேண்டும்
0 Comments