மனைத்தக்க மாண்புடையள்
ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை
மு.வ உரை:
இல்வாழ்க்கைக்கு ஏற்ற
நற்பண்பு உடையவளாகித் தன்கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகிறவளே
வாழ்க்கைத்துணை ஆவாள்.
சாலமன் பாப்பையா உரை:
பிறந்த, புகுந்த
குடும்பங்களுக்கு ஏற்ற நல்ல குணம், நல்ல செயல்களை
உடையவளாய்த், தன்னை மணந்தவனின் வருவாய்க்கு ஏற்ப வாழ்க்கையை
அமைப்பவளே மனைவி.
கலைஞர் உரை:
இல்லறத்திற்குரிய
பண்புகளுடன்,
பொருள் வளத்துக்குத் தக்கவாறு குடும்பம் நடத்துபவள், கணவனின் வாழ்வுக்குப் பெருந்துணையாவாள்
குறள் 52:
மனைமாட்சி இல்லாள்கண்
இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்
எனைமாட்சித் தாயினும் இல்
மு.வ உரை:
இல்வாழ்க்கைக்கு தக்க
நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு
சிறப்புடையதானாலும் பயன் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல குணமும் நல்ல
செயல்களும் மனைவியிடம் இல்லாமற் போனால் அவ்வாழ்க்கை எத்தனை சிறப்புகளைப்
பெற்றிருந்தாலும் பெறாததே.
கலைஞர் உரை:
நற்பண்புள்ள மனைவி அமையாத
இல்வாழ்க்கை எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும் அதற்குத் தனிச்சிறப்புக் கிடையாது
குறள் 53:
இல்லதென் இல்லவள்
மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை
இல்லவள் மாணாக் கடை
மு.வ உரை:
மனைவி நற்பண்பு
உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன? அவள் நற்பண்பு இல்லாதவளானால்
வாழ்க்கையில் இருப்பது என்ன?
சாலமன் பாப்பையா உரை:
நல்ல குணமும் நல்ல
செயல்களும் உடையவனாய் மனைவி அமைந்துவிட்டால் ஒருவனுக்கு இல்லாததுதான் என்ன? அமையாவிட்டால்
அவனிடம் இருப்பதுதான் என்ன?
கலைஞர் உரை:
நல்ல பண்புடைய மனைவி
அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும் அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில்
எதுவுமே இருக்காது
குறள் 54:
பெண்ணின் பெருந்தக்க யாவுள
கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்
திண்மைஉண் டாகப் பெறின்
மு.வ உரை:
இல்வாழ்க்கையில் கற்பு
என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிட பெருமையுடையவை
வேறு என்ன இருக்கின்றன?
சாலமன் பாப்பையா உரை:
கற்பு எனப்படும் மன உறுதி
மட்டும் பெண்ணிடம் இருக்குமானால் மனைவியைக் காட்டிலும் மேலானவை எவை?
கலைஞர் உரை:
கற்பென்னும் திண்மை கொண்ட
பெண்மையின் உறுதிப் பண்பைப் பெற்றுவிட்டால், அதைவிடப் பெருமைக்குரியது
வேறு யாது?
குறள் 55:
தெய்வம் தொழாஅள் கொழுநற்
றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை
பெய்யெனப் பெய்யும் மழை
மு.வ உரை:
வேறு தெய்வம் தொழாதவளாய்த்
தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை
பெய்யும்.
சாலமன் பாப்பையா உரை:
பிற தெய்வங்களைத் தொழாமல்
கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவி, பெய் என்று சொன்னால் மழை
பெய்யும்.
கலைஞர் உரை:
கணவன் வாக்கினைக் கடவுள்
வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன்
அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்
குறள் 56:
தற்காத்துத் தற்கொண்டாற்
பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்
சொற்காத்துச் சோர்விலாள் பெண்
மு.வ உரை:
கற்பு நெறியில் தன்னையும்
காத்துக்கொண்டு,
தன்கணவனையும் காப்பாற்றி, தகுதியமைந்த
புகழையும் காத்து உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண்.
சாலமன் பாப்பையா உரை:
உடலாலும் உள்ளத்தாலும்
தன்னைக் காத்து,
தன் கணவனின் நலன்களில் கவனம் வைத்து, குடும்பத்திற்கு
நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில்
சோர்வடையாமல் இருப்பவளே மனைவி.
கலைஞர் உரை:
கற்புநெறியில் தன்னையும்
தன் கணவனையும் காத்துக் கொண்டு, தமக்குப் பெருமை சேர்க்கும் புகழையும்
காப்பாற்றிக் கொள்வதில் உறுதி குலையாமல் இருப்பவள் பெண்
குறள் 57:
சிறைகாக்கும் காப்பெவன்
செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை
நிறைகாக்கும் காப்பே தலை
மு.வ உரை:
மகளிரைக் காவல் வைத்துக்
காக்கும் காப்பு முறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும்
பண்பால் தம்மைத் தான் காக்கும் கற்பே சிறிந்தது.
சாலமன் பாப்பையா உரை:
இத்தனை குணங்களும்
இருக்கும்படி பெண்ணைச் சிறை வைத்துக் காவல் காப்பதில் பயன் என்ன? பெண்கள்
தங்களைத் தாங்களே மன அடக்கத்தால் காக்கும் காவலே முதன்மையானது.
கலைஞர் உரை:
தம்மைத் தாமே
காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது
அறியாமையாகும்
குறள் 58:
பெற்றாற் பெறின்பெறுவர்
பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு
புத்தேளிர் வாழும் உலகு
மு.வ உரை:
கணவனைப் போற்றிக் கடமையைச்
செய்யப்பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலகவாழ்வைப் பெறுவர்.
சாலமன் பாப்பையா உரை:
பெண்கள் இத்தனை
சிறப்புகளையும் பெறுவார்கள் என்றால் தேவர்கள் வாழும் உலகில் மிகுந்த மேன்மையை
அடைவார்கள்.
கலைஞர் உரை:
நற்பண்பு பெற்றவனைக்
கணவனாகப் பெற்றால்,
பெண்டிர்க்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ் சிறப்பாக
அமையும்
குறள் 59:
புகழ்புரிந் தில்லிலோர்க்
கில்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை
ஏறுபோல் பீடு நடை
மு.வ உரை:
புகழைக் காக்க விரும்பும்
மனைவி இல்லாதவர்க்கு,
இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளை போல் நடக்கும் பெருமித நடை இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
புகழை விரும்பிய மனைவியைப்
பெறாதவர்க்கு அவர்களை ஏளனம் செய்வார் முன்னே ஆண் சிங்கமாய் நடக்கும் பெருமித நடை
இல்லை.
கலைஞர் உரை:
புகழுக்குரிய இல்வாழ்க்கை
அமையாதவர்கள்,
தம்மைப் பழித்துப் பேசுவோர் முன்பு தலைநிமிர்ந்து நடக்க முடியாமல்
குன்றிப் போய் விடுவார்கள்
குறள் 60:
மங்கலம் என்ப மனைமாட்சி
மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு
நன்கலம் நன்மக்கட் பேறு
மு.வ உரை:
மனைவியின் நற்பண்பே
இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்: நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம்
என்று கூறுவர்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவனுக்கு நற்குண
நற்செயல்களை உடைய மனைவியே அழகு என்று அறிந்தோர் கூறுவர். அந்த அழகிற்கு ஏற்ற
அணிகலன்கள் நல்ல பிள்ளைகளைப் பெறுவதே.
கலைஞர் உரை:
குடும்பத்தின் பண்பாடுதான்
இல்வாழ்க்கையின் சிறப்பு;
அதற்கு மேலும் சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது
0 Comments