தொடங்கற்க எவ்வினையும்
எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்னல் லது
இடங்கண்ட பின்னல் லது
மு.வ உரை:
முற்றுகை செய்வதற்கு ஏற்ற
இடத்தைக் கண்டபின் அல்லாமல் எச் செயலையும் தொடங்கக்கூடாது, பகைவரை
இகழவும் கூடாது.
சாலமன் பாப்பையா உரை:
பகைவரை வளைத்து வெல்லும்
இடத்தைக் காணும் முன் எந்தச் செயலையும் தொடங்க வேண்டா; பகைவரை
அற்பர் என்று இகழவும் வேண்டா.
கலைஞர் உரை:
ஈடுபடும் செயல் ஒன்றும்
பெரிதல்ல என இகழ்ச்சியாகக் கருதாமல், முற்றிலும் சரியான இடத்தைத்
தேர்ந்தெடுத்து அச்செயலில் இறங்க வேண்டும்
குறள் 492:
முரண்சேர்ந்த மொய்ம்பி
னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும்
ஆக்கம் பலவுந் தரும்
மு.வ உரை:
மாறுபாடு பொருந்திய வலிமை
உடையவர்க்கும் அரணோடு பொருந்தி ஏற்படுகின்ற வெற்றியானது பல வகைப் பயன்களையும்
கொடுக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
பகை உணர்வுகள் நிறைந்தும், ஆற்றலில்
மிகுந்தும் இருப்பவர்க்குப் பாதுகாப்பான இடத்துள் இருப்பது பல பயன்களையும் தரும்.
கலைஞர் உரை:
வரும்பகையை எதிர்க்கும்
வலிமை இருப்பினும்,
அத்துடன் அரணைச் சார்ந்து போரிடும் வாய்ப்பும் இணையுமானால்
பெரும்பயன் கிட்டும்
குறள் 493:
ஆற்றாரும் ஆற்றி அடுப
இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்
போற்றார்கண் போற்றிச் செயின்
மு.வ உரை:
தக்க இடத்தை அறிந்து
தம்மைக் காத்துக் கொண்டு பகைவரிடத்திற் சென்று தம் செயலைச் செய்தால், வலிமை
இல்லாதவறும் வலிமை உடையவராக வெல்வர்,
சாலமன் பாப்பையா உரை:
பலம் இல்லாதவர்
என்றாலும்கூட ஏற்ற இடத்தை அறிந்து, தம்மையும் காத்து, பகைவரோடு
மோதுபவர், பலம் உள்ளவராய்ப் பகையை அழிப்பர்.
கலைஞர் உரை:
தாக்குதல் நடத்துவதற்குரிய
இடத்தையும் தேர்ந்து,
தம்மையும் காத்துக்கொண்டு பகைவருடன் மோதினால் வலிமையில்லாதவர்க்கும்
வலிமை ஏற்பட்டு வெற்றி கிட்டும்
குறள் 494:
எண்ணியார் எண்ணம் இழப்பர்
இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்
துன்னியார் துன்னிச் செயின்
மு.வ உரை:
தக்க இடத்தை அறிந்து
பொருந்தியவராய்ச் செயலைச் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணியிருந்த
பகைவர் தம் எண்ணத்தை இழந்துவிடுவார்.
சாலமன் பாப்பையா உரை:
ஏற்ற இடத்தை அறிந்து அதைச்
சூழ்ந்து செயல் செய்வார் என்றால், அவரை வெல்ல எண்ணிய பகைவர். அவ் எண்ணத்தில்
தோல்வி அடைவர்.
கலைஞர் உரை:
ஏற்ற இடமறிந்து தொடர்ந்து
தாக்கினால் பகைவர்கள்,
வெற்றி என்பதை நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள்
குறள் 495:
நெடும்புனலுள் வெல்லும்
முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற
நீங்கின் அதனைப் பிற
மு.வ உரை:
ஆழமுள்ள நீரில் முதலை மற்ற
உயிர்களை வெல்லும்,
ஆனால் நீரிலிருந்து விலகிவந்தால் அந்த முதலையையும் மற்ற உயிர்கள்
வென்றுவிடும்.
சாலமன் பாப்பையா உரை:
முதலை நீரில் வெற்றி
பெறும்;
நீரைவிட்டு வெளியே வந்தால் அதனை மற்றவை வெல்லும்.
கலைஞர் உரை:
தண்ணீரில் இருக்கும் வரையில்தான்
முதலைக்குப் பலம்;
தண்ணீரைவிட்டு வெளியே வந்து விட்டால் ஒரு சாதாரண உயிர்கூட அதனை
விரட்டி விடும்
குறள் 496:
கடலோடா கால்வல் நெடுந்தேர்
கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து
நாவாயும் ஓடா நிலத்து
மு.வ உரை:
வலிய சக்கரங்களையுடைய
பெரியத் தேர்கள் கடலில் ஓடமுடியாது, கடலில் ஓடுகின்ற கப்பல்களும்
நிலத்தில் ஓடமுடியாது.
சாலமன் பாப்பையா உரை:
வலிய சக்கரங்களை உடைய
நெடிய தேர்கள் கடலில் ஒடமாட்டா; கடலில் ஓடும் கப்பல்கள் நிலத்தில்
ஓடமாட்டா.
கலைஞர் உரை:
ஒரு செயலுக்குரிய இடத்தைத்
தேர்ந்தெடுப்பவர் `தேர் கடலிலே ஓடாது' `கப்பல் நிலத்தில் போகாது'
என்பதையாவது தெரிந்தவராக இருக்க வேண்டும்
குறள் 497:
அஞ்சாமை யல்லால்
துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி யிடத்தாற் செயின்
எண்ணி யிடத்தாற் செயின்
மு.வ உரை:
(செய்யும்
வழிவகைகமைக்) குறைவில்லாமல் எண்ணித் தக்க இடத்தில் பொருந்திச் செய்தால், அஞ்சாமை அல்லாமல் வேறு துணை வேண்டியதில்லை.
சாலமன் பாப்பையா உரை:
செய்யும் செயலை இடைவிடாமல்
எண்ணி,
இடம் அறிந்து செயதால், பகைக்குப் பயப்படாத
மனஉறுதி போதும்; வேறு துணை தேவை இல்லை.
கலைஞர் உரை:
ஒரு செயலுக்குரிய வழி
முறைகளைக் குறையின்றிச் சிந்தித்துச் செய்யுமிடத்து, அஞ்சாமை ஒன்றைத் தவிர,
வேறு துணை தேவையில்லை
குறள் 498:
சிறுபடையான் செல்லிடஞ்
சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்
ஊக்கம் அழிந்து விடும்
மு.வ உரை:
சிறிய படை உடையவனுக்குத்
தக்கதாக உள்ள இடத்தில் பொருந்தி நின்றால், பெரிய படை உடையவன் தன்
ஊக்கம் அழிவான்.
சாலமன் பாப்பையா உரை:
பெரிய படையை உடையவன், சிறிய
படையை உடையவன் ஓடி இருக்கும் இடந்தேடிப் போனால், போனவனின்
பெருமை அழியும்.
கலைஞர் உரை:
சிறிய படை என்றாலும் அது
தனக்குரிய இடத்தில் இருந்து போரிட்டால் பெரிய படையை வென்று விட முடியும்
குறள் 499:
சிறைநலனுஞ் சீறும்
இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோ டொட்ட லரிது
உறைநிலத்தோ டொட்ட லரிது
மு.வ உரை:
அரணாகிய நன்மையும் மற்றச்
சிறப்பும் இல்லாதவராயினும் பகைவர் வாழ்கின்ற இடத்திற்குச் சென்று அவரைத் தாக்குதல்
அரிது.
சாலமன் பாப்பையா உரை:
மனிதர்கள் வலிமையான
கோட்டையும்,
மிகுந்த பலமும் இல்லாதவர்தாம் என்றாலும் அவர்கள் இருக்கும்
இடத்திற்கே சென்று தாக்குவது கடினம்.
கலைஞர் உரை:
பாதுகாப்புக்கான
கோட்டையும்,
மற்றும் பல படைச் சிறப்புகளும் இல்லாதிருப்பினும், அப்பகைவர் வாழும் நிலையான இடத்திற்குப் படையெடுத்துச் சென்று தாக்குவது
எளிதான செயல் அல்ல
குறள் 500:
காலாழ் களரின் நரியடுங்
கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு
வேலாள் முகத்த களிறு
மு.வ உரை:
வேல் ஏந்திய வீரரைக்
கோர்த்தெடுத்த கொம்பு உடைய யானையையும், கால் ஆழும் சேற்று
நில்த்தில் அகப்பட்ட போது நரிகள் கொன்றுவிடும்.
சாலமன் பாப்பையா உரை:
பாகனுக்கு அடங்காததும், தன்னை
எதிர்த்துப் பிடித்த வீரனைத் தன் தந்தத்தால் தாக்கித் தூக்கியதுமான ஆண்யானை,
கால் புதையும் சேற்றில் சிக்கிக் கொண்டால், நரிகூட
அதைக் கொன்றுவிடும்.
கலைஞர் உரை:
வேலேந்திய வீரர்களை
வீழ்த்துகின்ற ஆற்றல் படைத்த யானை, சேற்றில் சிக்கி விட்டால் அதனை நரிகள்
கூடக் கொன்று விடும்
0 Comments