பகல்வெல்லுங் கூகையைக்
காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது
வேந்தர்க்கு வேண்டும் பொழுது
மு.வ உரை:
காக்கை தன்னைவிட வலிய
கோட்டானைப் பகலில் வென்றுவிடும், அதுபோல் பகையை வெல்லக்கருதும் அரசர்க்கும்
அதற்கு ஏற்ற காலம் வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
தன்னைவிடப் பலமுள்ள
கோட்டானைக் காக்கை பகலில் வென்றுவிடும்; ஆகவே பகைவரை வெல்ல
எண்ணுபவர்க்கு அதற்கு ஏற்ற காலம் அவசியம்.
கலைஞர் உரை:
பகல் நேரமாக இருந்தால்
கோட்டானைக் காக்கைவென்று விடும் எனவே எதிரியை வீழ்த்துவதற்கு ஏற்ற காலத்தைத்
தேர்ந்தெடுக்க வேண்டும்
குறள் 482:
பருவத்தோ டொட்ட ஒழுகல்
திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு
தீராமை ஆர்க்குங் கயிறு
மு.வ உரை:
காலத்தோடுப் பொருந்துமாறு
ஆராய்ந்து நடத்தல் ( நில்லாத இயல்பு உடைய) செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும்
கயிறாகும்.
சாலமன் பாப்பையா உரை:
காலந் தவறாமல் காரியம்
ஆற்றுவது,
ஓடும் செல்வத்தை ஓடாமல் கட்டும் கயிறு ஆகும்.
கலைஞர் உரை:
காலம் உணர்ந்து
அதற்கேற்பச் செயல்படுதல்,
அந்த நற்செயலின் வெற்றியை நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக
அமையும்
குறள் 483:
அருவினை யென்ப உளவோ
கருவியாற்
கால மறிந்து செயின்
கால மறிந்து செயின்
மு.வ உரை:
(செய்யும்
செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்றக் காலத்தையும் அறிந்து செய்தால்
அரிய செயல்கள் என்பது உண்டோ.
சாலமன் பாப்பையா உரை:
செயலைச் செய்து
முடிப்பதற்கு ஏற்ற திறமைகளுடனும் தந்திரங்களுடனும், உரிய காலத்தைக் கண்டு ஒரு
செயலைச் செய்தால் செய்வதற்கு அரிய செயல் என்று ஏதேனும் உண்டா?
கலைஞர் உரை:
தேவையான சாதனங்களுடன் உரிய
நேரத்தையும் அறிந்து செயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை
குறள் 484:
ஞாலங் கருதினுங் கைகூடுங்
காலம்
கருதி இடத்தாற் செயின்
கருதி இடத்தாற் செயின்
மு.வ உரை:
(செயலை
முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.
சாலமன் பாப்பையா உரை:
ஏற்ற காலத்தையும்
இடத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்தால், பூவுலகம் முழுமையையும்
வேண்டினாலும் அது கைவசப்படும்.
கலைஞர் உரை:
உரிய காலத்தையும்
இடத்தையும் ஆய்ந்தறிந்து செயல்பட்டால் உலகமேகூடக் கைக்குள் வந்துவிடும்
குறள் 485:
காலங் கருதி இருப்பர்
கலங்காது
ஞாலங் கருது பவர்
ஞாலங் கருது பவர்
மு.வ உரை:
உலகத்தைக் கொள்ளக்
கருதிகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டு
பொறுத்திருப்பர்.
சாலமன் பாப்பையா உரை:
பூவுலகம் முழுவதும்
வேண்டும் என்போர்,
ஏற்ற காலத்தை எண்ணித் தவறாமல் காத்து இருப்பர்.
கலைஞர் உரை:
கலக்கத்துக்கு இடம் தராமல்
உரிய காலத்தை எதிர்பார்த்துப் பொறுமையாக இருப்பவர்கள் இந்த உலகத்தையேகூட வென்று
காட்டுவார்கள்
குறள் 486:
ஊக்க முடையான் ஒடுக்கம்
பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து
தாக்கற்குப் பேருந் தகைத்து
மு.வ உரை:
ஊக்கம் மிகுந்தவன்
(காலத்தை எதிர்பார்த்து) அடங்கியிருத்தல் போர் செய்யும் ஆட்டுக்கடா தன் பகையைத்
தாக்குவதற்க்காகப் பின்னே கால் வாங்குதலைப் போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
ஏற்ற காலம் பார்த்து
ஆற்றல் மிக்கவன் காத்திருப்பது சண்டையிடும் ஆட்டுக்கடா, தன்
பகைமீது பாய்வதற்காகப் பின்வாங்குவது போன்றதாகும்.
கலைஞர் உரை:
கொடுமைகளைக் கண்டும்கூட
உறுதி படைத்தவர்கள் அமைதியாக இருப்பது அச்சத்தினால் அல்ல; அது
ஆட்டுக்கடா ஒன்று தனது பகையைத் தாக்குவதற்குத் தன் கால்களைப் பின்னுக்கு
வாங்குவதைப் போன்றதாகும்
குறள் 487:
பொள்ளென ஆங்கே புறம்வேரார்
காலம்பார்த்
துள்வேர்ப்பர் ஒள்ளி யவர்
துள்வேர்ப்பர் ஒள்ளி யவர்
மு.வ உரை:
அறிவுடையவர் ( பகைவர்
தீங்கு செய்த) அப்பொழுதே உடனே புறத்தில் சினம் கொள்ளமாட்டார், (வெல்வதற்கு
ஏற்ற) காலம் பார்த்து அகத்தில் சினம் கொள்வார்.
சாலமன் பாப்பையா உரை:
தம்பகைவர் அடாது செய்தால்
அவர் அறியத் தம் பகைமையை அறிவுடையவர், விரைந்து வெளியே
காட்டமாட்டார், ஆனால், ஏற்ற காலம்
நோக்கிச் சினத்தை மனத்திற்குள் வைத்திருப்பர்.
கலைஞர் உரை:
பகையை வீழ்த்திட அகத்தில்
சினங்கொண்டாலும் அதனை வெளிப்படுத்தாமல் இடம் காலம் இரண்டுக்கும் காத்திருப்பதே
அறிவுடையார் செயல்
குறள் 488:
செறுநரைக் காணிற் சுமக்க
இறுவரை
காணிற் கிழக்காந் தலை
காணிற் கிழக்காந் தலை
மு.வ உரை:
பகைவரைக் கண்டால்
பொறுத்துச் செல்லவேண்டும்,
அப் பகைவர்க்கு முடிவுகாலம் வந்த போது அவருடைய தலை கீழே விழும்.
சாலமன் பாப்பையா உரை:
பகைவர்க்கு அழிவுகாலம்
வரும்வரை அவரைக் கண்டால் பணிக; அழிவுகாலம் வரும்போது தடை இன்றி
அழிந்தபோவர்.
கலைஞர் உரை:
பகைவர்க்கு முடிவு
ஏற்பட்டு அவர்கள் தாமாகவே தலைகீழாகக் கவிழ்ந்திடும் உரிய நேரம் வரும் வரையில்
தங்களின் பகையுணர்வைப் பொறுமையுடன் தாங்கிக் கொள்ள வேண்டும்
குறள் 489:
எய்தற் கரிய தியைந்தக்கால்
அந்நிலையே
செய்தற் கரிய செயல்
செய்தற் கரிய செயல்
மு.வ உரை:
கிடைத்தற்கறிய காலம் வந்து
வாய்க்குமானால்,
அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரியச்
செயல்களைச் செய்ய வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
அடைவதற்கு அரியதை
அடைவதற்கு ஏற்ற காலம் வந்து விட்டால் அப்பொழுதே தான் செய்வதற்கு அரிய செயல்களைச்
செய்து கொள்க.
கலைஞர் உரை:
கிடைப்பதற்கு அரிய காலம்
வாயக்கும்போது அதைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செயற்கரிய செய்து முடிக்க
வேண்டும்
குறள் 490:
கொக்கொக்க கூம்பும்
பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து
குத்தொக்க சீர்த்த இடத்து
மு.வ உரை:
பொறுத்திருக்கும்
காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும், காலம் வாய்த்த போது அதன்
குத்து போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒடுங்கி இருக்க வேண்டிய
நேரத்தில் கொக்கைப் போல் ஒடுங்கிக் காத்து இரு. செயற்படும் நேரம் வந்தபோது கொக்கு
தவறாமல் தன் இரையைக் குத்திப் பிடிப்பதுபோல் பிழையின்றிச் செய்து முடி.
கலைஞர் உரை:
காலம் கைகூடும் வரையில்
கொக்குபோல் பொறுமையாகக் காத்திருக்கவேண்டும் காலம் வாய்ப்பாகக் கிடைத்ததும் அது
குறி தவறாமல் குத்துவது போல் செய்து முடிக்க வேண்டும்
0 Comments