அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி
வழிபயக்கும்
ஊதியமுஞ் சூழ்ந்து செயல்
ஊதியமுஞ் சூழ்ந்து செயல்
மு.வ உரை:
(ஒரு செயலைத்
தொடங்குமுன்) அதனால் அழிவதையும் அழிந்த பின் ஆவதையும், பின்பு
உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலைச் செய்யும்போது
வரும் நட்டத்தையும்,
பின் விளைவையும் பார்த்து, அதற்குப்பின் வரும்
லாபத்தையும் கணக்கிட்டுச் செய்க.
கலைஞர் உரை:
எந்த அளவுக்கு நன்மை
கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று விளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறதே ஒரு
செயலில் இறங்க வேண்டும்
குறள் 462:
தெரிந்த இனத்தொடு
தேர்ந்தெண்ணிச் செய்வார்க்
கரும்பொருள் யாதொன்று மில்
கரும்பொருள் யாதொன்று மில்
மு.வ உரை:
ஆராய்ந்து சேர்ந்த
இனத்துடன் (செயலைப்பற்றி) நன்றாகத் தேர்ந்து, தாமும் எண்ணிப்பார்த்துச்
செய்கின்றவர்க்கு அறிய பொருள் ஒன்றும் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
தாம் தேர்ந்துகொண்ட
நிருவாகச் சுற்றத்தோடு ஒரு செயலை ஆராய்ந்து திட்டமிட்டுச் செய்பவர்க்குச் செய்ய
முடியாத செயல் என்று எதுவும் இல்லை.
கலைஞர் உரை:
தெளிந்து தேர்ந்த
நண்பர்களுடன்,
சேர்ந்து, ஆற்ற வேண்டிய செயலை ஆராய்ந்து,
தாமும் நன்கு சிந்தித்துச் செய்தால் ஆகாதது ஒன்றுமில்லை
குறள் 463:
ஆக்கங் கருதி முதலிழக்குஞ்
செய்வினை
ஊக்கா ரறிவுடை யார்
ஊக்கா ரறிவுடை யார்
மு.வ உரை:
பின் விளையும் ஊதியத்தைக்
கருதி இப்போது கையில் உள்ள முதலை இழந்து விடக் காரணமாச் செயலை அறிவுடையோர்
மேற்க்கொள்ள மாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:
வரும் லாபத்தை எண்ணி, இருக்கும்
முதலையும் இழந்துவிடுவதற்கு ஏற்ற செயலை அறிவுள்ளவர் செய்யமாட்டார்.
கலைஞர் உரை:
பெரும் ஆதாயம்
கிட்டுமென்று எதிர்பார்த்துக் கை முதலையும் இழந்து விடக்கூடிய காரியத்தை
அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள்
குறள் 464:
தெளிவி லதனைத் தொடங்கார்
இளிவென்னும்
ஏதப்பா டஞ்சு பவர்
ஏதப்பா டஞ்சு பவர்
மு.வ உரை:
இழிவு தருவதாகியக்
குற்றத்திற்கு அஞ்சுகின்றவர் (இன்ன ஊதியம் பயிக்கும் என்னும்) தெளிவு இல்லாத
செயலைத் தொடங்கமாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:
தனக்கு அவமானம் என்னும்
குற்றம் வரும் என்று பயப்படுபவர், நம்பிக்கை இல்லாத செயலைச் செய்யத்
தொடங்கமாட்டார்.
கலைஞர் உரை:
களங்கத்துக்குப் பயப்படக்
கூடியவர்கள்தான் விளைவுகளை எண்ணிப் பார்த்து அந்தக் களங்கம் தரும் காரியத்தில்
இறங்காமல் இருப்பார்கள்
குறள் 465:
வகையறச் சூழா தெழுதல்
பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு
பாத்திப் படுப்பதோ ராறு
மு.வ உரை:
செயலின் வகைகளை எல்லாம்
முற்ற எண்ணாமல் செய்யத்தொடங்குதல், பகைவரை வளரும் பாத்தியில் நிலைபெறச்
செய்வதொரு வழியாகும்.
சாலமன் பாப்பையா உரை:
முறையாகத் திட்டமிடாது ஒரு
செயலைத் தொடங்குவது,
வளரும் நிலத்திலே எதிர் அணியினரை நிலைபெறச் செய்யும் வழியாகும்.
கலைஞர் உரை:
முன்னேற்பாடுகளை முழுமையாக
ஆராய்ந்து செய்யாமல் பகைவரை ஒடுக்க முனைவது அந்தப் பகைவரின் வலிமையை நிலையாக
வளர்க்கும் வழியாக ஆகிவிடும்
குறள் 466:
செய்தக்க அல்ல செயக்கெடுஞ்
செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்
செய்யாமை யானுங் கெடும்
மு.வ உரை:
ஒருவன் செய்யத்தகாத
செயல்களைச் செய்வதனால் கெடுவான், செய்யத்தக்க செயல்களை செய்யாமல்
விடுவதனாலும் கெடுவான்.
சாலமன் பாப்பையா உரை:
செய்யக்கூடாதவற்றைச்
செய்தாலும் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் விட்டாலும் அழிவு வரும்.
கலைஞர் உரை:
செய்யக் கூடாததைச்
செய்வதால் கேடு ஏற்படும்;
செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டாலும் கேடு ஏற்படும்
குறள் 467:
எண்ணித் துணிக கருமந்
துணிந்தபின்
எண்ணுவ மென்ப திழுக்கு
எண்ணுவ மென்ப திழுக்கு
மு.வ உரை:
(செய்யத்
தகுந்த) செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும், துணிந்த பின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலைச் செய்து
முடிக்கும் வழியை அறிந்து தொடங்குக. தொடங்கியபின் அது பற்றி எண்ணிக் கொள்வோம்
என்பது குற்றம்.
கலைஞர் உரை:
நன்றாகச் சிந்தித்த பிறகே
செயலில் இறங்க வேண்டும்;
இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு
குறள் 468:
ஆற்றின் வருந்தா வருத்தம்
பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்
போற்றினும் பொத்துப் படும்
மு.வ உரை:
தக்கவழியில் செய்யப்படாத
முயற்சி பலர் துணையாக நின்று(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகிவிடும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலை முடிக்கும் வழி
அறியாது தொடங்கினால்,
பலர் சேர்ந்து துணை செய்தாலும், அச்செயல்
கெட்டுப் போகும்.
கலைஞர் உரை:
எத்தனை பேர்தான் துணையாக
இருந்தாலும் முறையாகச் செய்யப்படாத முயற்சி இறுதியில் முடங்கிப் போய்விடும்
குறள் 469:
நன்றாற்ற லுள்ளுந் தவறுண்
டவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை
பண்பறிந் தாற்றாக் கடை
மு.வ உரை:
அவரவருடைய இயல்புகளை
அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு
உண்டாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அவர் அவர் குணநலன்களை
அறிந்து செயல் ஆற்றாவிட்டால் நல்லது செய்வதிலும் பிழை நேர்ந்து விடும்.
கலைஞர் உரை:
ஒருவருடைய இயல்பைப்
புரிந்து கொண்டுதான் நன்மையைக் கூடச் செய்ய வேண்டும் இல்லாவிட்டால் அதுவே
தீமையாகத் திருப்பித் தாக்கும்
குறள் 470:
எள்ளாத எண்ணிச்
செயல்வேண்டுந் தம்மொடு
கொள்ளாத கொள்ளா துலகு
கொள்ளாத கொள்ளா துலகு
மு.வ உரை:
தம் நிலையோடு பொருந்தாதவற்றை
உலகம் ஏற்றுக்கொள்ளாது,
ஆகையால் உலகம் இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
தன் தகுதிக்குப் பொருந்தாத
வழிமுறைகளைச் செய்தால் மக்கள் அதை இகழ்வர்; அதனால் மக்கள் இகழாத
வழிமுறைகளை எண்ணிச் செய்ய வேண்டும்.
கலைஞர் உரை:
தம்முடைய நிலைமைக்கு மாறான
செயல்களை உயர்ந்தோர் பாராட்டமாட்டார்கள் என்பதால், அவர்கள் பழித்துரைக்காத
செயல்களையே செய்திடல் வேண்டும்
0 Comments