சிற்றினம் அஞ்சும் பெருமை
சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்
சுற்றமாச் சூழ்ந்து விடும்
மு.வ உரை:
பெரியோரின் இயல்பு
சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும், சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக எண்ணித்
தழுவிக் கொள்ளும்.
சாலமன் பாப்பையா உரை:
தீய குணத்தாரோடு சேரப்
பெரியோர் அஞ்சுவர்;
சிறியாரோ அவர்களைத் தம் உறவாகவே கருதி விடுவர்.
கலைஞர் உரை:
பெரியோர், கீழ்மக்களின்
கூட்டத்தோடு சேர மாட்டார்கள் ஆனால் சிறியோர்களோ இனம் இனத்தோடு சேருமென்பதுபோல்
அந்தக் கீழ் மக்கள் கூட்டத்துடன் சேர்ந்து கொள்வார்கள்
குறள் 452:
நிலத்தியல்பான் நீர்திரிந்
தற்றாகும் மாந்தர்க்
கினத்தியல்ப தாகும் அறிவு
கினத்தியல்ப தாகும் அறிவு
மு.வ உரை:
சேர்ந்த நிலத்தின்
இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும், அதுபோல்
மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
தான் சேர்ந்த நிலத்தின்
தன்மையால் நீர் தன் இயல்பை இழந்து, நிலத்தின் இயல்பாகவே மாறிவிடும்; மனிதரின் அறிவும் அவர் சேர்ந்த இனத்தின் இயல்பாகவே ஆகிவிடும்.
கலைஞர் உரை:
சேர்ந்த நிலத்தின்
தன்மையால் நீரானது வேறுபட்டு அந்த நிலத்தின் தன்மையை அடைந்துவிடும் அதுபோல
மக்களின் அறிவும்,
தாங்கள் சேர்ந்த இனத்தின் தன்மையைப் பெற்றதாகிவிடும்
குறள் 453:
மனத்தானாம் மாந்தர்க்
குணர்ச்சி இனத்தானாம்
இன்னா னெனப்படுஞ் சொல்
இன்னா னெனப்படுஞ் சொல்
மு.வ உரை:
மக்களுக்கு இயற்கையறிவு
மனத்தால் ஏற்படும்,
இப்படிப் பட்டவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல், சேர்ந்த இனத்தால் ஏற்படும்.
சாலமன் பாப்பையா உரை:
மக்களுக்கு இயல்பான அறிவு
அவர்தம் மனததால் உண்டாகும்;
ஆனால், ஒருவன் இப்படிப்பட்டவன் என்று பெரியோர்
சொல்லும் சொல் அவன் சார்ந்த இனம் காரணமாகவே உண்டாகும்.
கலைஞர் உரை:
ஒருவரின் உணர்ச்சி, மனத்தைப்
பொருத்து அமையும் அவர் இப்படிப்பட்டவர் என்று அளந்து சொல்வது அவர் சேர்ந்திடும்
கூட்டத்தைப் பொருத்து அமையும்
குறள் 454:
மனத்து ளதுபோலக் காட்டி
ஒருவற்
கினத்துள தாகும் அறிவு
கினத்துள தாகும் அறிவு
மு.வ உரை:
ஒருவனுக்கு சிறப்பறிவு
மனத்தில் உள்ளது போலக் காட்டி (உண்மையாக நோக்கும் போது) அவன் சேர்ந்த இனத்தில்
உள்ளதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அறிவு ஒருவன் மனத்துள்
இருப்பது போலத் தோன்றும்;
உண்மையில் அது அவன் சேர்ந்துள்ள இனத்தின்பால் இருந்து பெறப்படுவதே
ஆகும்.
கலைஞர் உரை:
ஒருவரின் அறிவு அவரது
மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றினாலும், அது அவர் சேர்ந்த
கூட்டத்தாரின் தொடர்பால் வெளிப்படுவதேயாகும்
குறள் 455:
மனந்தூய்மை செய்வினை
தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்
இனந்தூய்மை தூவா வரும்
மு.வ உரை:
மனத்தின் தூய்மை செய்யும்
செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே
ஏற்ப்படும்.
சாலமன் பாப்பையா உரை:
மனத்தூய்மை, செய்யும்
செயல் சிறப்பு ஆகிய இரண்டும், ஒருவன் சேர்ந்துள்ள இனத்தின்
தூய்மையை ஆதாரமாகக் கொண்டே பிறக்கும்.
கலைஞர் உரை:
ஒருவன் கொண்டுள்ள தொடர்பு
தூய்மையானதாக இருந்தால்தான் அவனுடைய மனமும் செயலும் தூய்மையானவையாக இருக்கும்
குறள் 456:
மனந்தூயார்க் கெச்சநன்
றாகும் இனந்தூயார்க்
கில்லைநன் றாகா வினை
கில்லைநன் றாகா வினை
மு.வ உரை:
மனம் தூய்மையாகப்
பெற்றவர்க்கு ,
அவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலியவை நன்மையாகும்,
இனம் தூய்மையாக உள்ளவர்க்கு நன்மையாகாத செயல் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
மனத்தால் நல்லவர்க்கு அவர்
விட்டுச் செல்வனவே நல்லவை;
இனத்தால் நல்லவர்க்கோ நல்லதாக அமையாத செயல் என்று எதுவுமே இல்லை.
கலைஞர் உரை:
மனத்தின் தூய்மையால்
புகழும்,
சேர்ந்த இனத்தின் தூய்மையால் நற்செயல்களும் விளையும்
குறள் 457:
மனநலம் மன்னுயிர்க்
காக்கம் இனநலம்
எல்லாப் புகழுந் தரும்
எல்லாப் புகழுந் தரும்
மு.வ உரை:
மனதின் நன்மை உயிர்க்கு
ஆக்கமாகும்,
இனத்தின் தன்மை (அவ்வளவோடு நிற்காமல்) எல்லாப் புகழையும்
கொடுக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
நிலைபெற்று வரும்
உயிர்களுக்கு மனநலம் சிறந்த செல்வம் தரும்; இன நலமோ எல்லாப் புகழையும்
தரும்.
கலைஞர் உரை:
மனத்தின் நலம் உயிருக்கு
ஆக்கமாக விளங்கும் இனத்தின் நலமோ எல்லாப் புகழையும் வழங்கும்
குறள் 458:
மனநலம் நன்குடைய ராயினுஞ்
சான்றோர்க்
கினநலம் ஏமாப் புடைத்து
கினநலம் ஏமாப் புடைத்து
மு.வ உரை:
மனதின் நன்மையை உறுதியாக
உடையவராயினும் சான்றோர்க்கு இனத்தின் நன்மை மேலும் நல்ல காவலாக அமையும்.
சாலமன் பாப்பையா உரை:
மனநலத்தைச் சிறப்பாகப்
பெற்றவரே ஆயினும்,
நல்ல குணம் உடையவர்க்கு இனநலம் பாதுகாப்பாக இருக்கும்.
கலைஞர் உரை:
மனவளம் மிக்க சான்றோராக
இருப்பினும் அவர் சேர்ந்துள்ள கூட்டத்தினரைப் பொருத்தே வலிமை வந்து வாய்க்கும்
குறள் 459:
மனநலத்தி னாகும் மறுமைமற்
றஃதும்
இனநலத்தி னேமாப் புடைத்து
இனநலத்தி னேமாப் புடைத்து
மு.வ உரை:
மனத்தின் நன்மையால் மறுமை
இன்பம் உண்டாகும்,
அதுவும் இனத்தின் நன்மையால் மேலும் சிறப்புடையதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவனுக்கு மனநலத்தால்
மறுமை இன்பம் கிடைக்கும். அதுவுங்கூட இனநலத்தால் வலிமை பெறும்.
கலைஞர் உரை:
நல்ல உறுதியான உள்ளம்
படைத்த உயர்ந்தோராக இருந்தாலும் அவர் சார்ந்த இனத்தின் உறுதியும் அவருக்கு
வலிமையான துணையாக அமையக் கூடியதாகும்
குறள் 460:
நல்லினத்தி னூங்குந்
துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉ மில்
அல்லற் படுப்பதூஉ மில்
மு.வ உரை:
நல்ல இனத்தைவிடச்
சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை, தீய இனத்தைவிடத்
துன்பப்படுத்தும் பகையும் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவனுக்கு நல்ல இனத்தைக்
காட்டிலும் பெரிய துணையும் இல்லை; தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தருவதும்
இல்லை.
கலைஞர் உரை:
நல்ல இனத்தைக் காட்டிலும்
துணையாக இருப்பதும்,
தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தரக்கூடியதும் எதுவுமே இல்லை
0 Comments