அறனறிந்து மூத்த
அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்
திறனறிந்து தேர்ந்து கொளல்
மு.வ உரை:
அறம் உணர்ந்தவராய்த் தன்னை
விட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பை, கொள்ளும் வகை அறிந்து
ஆராய்ந்து கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
அறத்தின் நுண்மையை அறிந்து, குறிப்பிட்ட
துறையிலும் வளர்ந்த அறிவுடையவரின் நட்பை, அதன் அருமையையும்,
அதைப் பெறும் திறத்தையும் அறிந்து பெறுக.
கலைஞர் உரை:
அறமுணர்ந்த மூதறிஞர்களின்
நட்பைப் பெறும் வகை அறிந்து,
அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்
குறள் 442:
உற்றநோய் நீக்கி உறாஅமை
முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்
பெற்றியார்ப் பேணிக் கொளல்
மு.வ உரை:
வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனித்
துன்பம் வராதபடி முன்னதாகவே காக்கவல்ல தன்மையுடையவரைப் போற்றி நட்புக் கொள்ள
வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
வந்த துன்பங்களைப்
போக்கும் வழி அறிந்து போக்கி, அவை திரும்பவும் வராமல் முன்னதாகவே
காக்கும் ஆற்றல் மிக்கவரை, அவருக்கு வேண்டியதைச் செய்து,
துணையாகப் பெறுக.
கலைஞர் உரை:
வந்துள்ள துன்பத்தைப்
போக்கி,
மேலும் துன்பம் நேராமல் காக்கவல்ல பெரியோர்களைத் துணையாகக் கொள்ள
வேண்டும்
குறள் 443:
அரியவற்று ளெல்லாம் அரிதே
பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்
பேணித் தமராக் கொளல்
மு.வ உரை:
பெரியாரைப் போற்றி
தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல், பெறத்தக்க அரிய பேறுகள்
எல்லாவற்றிலும் அருமையானதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
துறைப் பெரியவர்களுக்கு
அவர் விரும்புகின்றவற்றைச் செய்து, அவரைத் தமக்கு உரியவராகச் செய்து கொள்வது
அரிய பேறுகளுள் எல்லாம் அரிது.
கலைஞர் உரை:
பெரியவர்களைப் போற்றிப்
பாராட்டி அவர்களுடன் உறவாடுதல் எல்லாப் பேறுகளையும் விடப் பெரும் பேறாகும்
குறள் 444:
தம்மிற் பெரியார் தமரா
ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை
வன்மையு ளெல்லாந் தலை
மு.வ உரை:
தம்மைவிட (அறிவு
முதலியவற்றால் ) பெரியவர் தமக்குச் சுற்றத்தராகுமாறு நடத்தல், வல்லமை
எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அறிவு முதலியவற்றால்
தம்மைக் காட்டிலும் சிறந்த துறை அறிவுடையவரைத் தமக்கு உரியவராகக் கொண்டு, அவர்
காட்டும் வழியில் நடப்பது, வலிமையுள் எல்லாம் முதன்மை
ஆனதாகும்.
கலைஞர் உரை:
அறிவு ஆற்றல் ஆகியவற்றில்
தம்மைக் காட்டிலும் சிறந்த பெரியவராய் இருப்பவரோடு உறவுகொண்டு அவர்வழி நடப்பது
மிகப்பெரும் வலிமையாக அமையும்
குறள் 445:
சூழ்வார்கண் ணாக ஒழுகலான்
மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்
மு.வ உரை:
தக்க வழிகளை ஆராய்ந்து
கூறும் அறிஞரையே உலகம் கண்ணாகக் கொண்டு நடத்தலால், மன்னவனும் அத்தகையாரைக்
ஆராய்ந்து நட்புக்கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
தன்னைச் சூழ இருப்பவரைக்
கண்ணாகக் கொண்டு அரசு இயங்குவதால் அப்படியே சூழும் துறைப் பெரியவரையே துணையாகக்
கொள்க.
கலைஞர் உரை:
கண்ணாக இருந்து எதனையும்
கண்டறிந்து கூறும் அறிஞர் பெருமக்களைச் சூழ வைத்துக் கொண்டிருப்பதே ஆட்சியாளர்க்கு
நன்மை பயக்கும்
குறள் 446:
தக்கா ரினத்தனாய்த்
தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்
செற்றார் செயக்கிடந்த தில்
மு.வ உரை:
தக்க பெரியாரின்
கூட்டத்தில் உள்ளனவாய் நடக்கவல்ல ஒருவனுக்கு,அவனுடைய பகைவர்
செய்யக்கூடியத் தீங்கு ஒன்றும் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
தகுதி மிக்க
துறைப்பெரியவரை நட்பாகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பவரைப் பகைவர்
ஏதும் செய்ய இயலாது.
கலைஞர் உரை:
அறிவும், ஆற்றலும்
கொண்ட ஒருவன், தன்னைச் சூழவும் அத்தகையோரையே கொண்டிருந்தால்
பகைவர்களால் எந்தத் தீங்கையும் விளைவிக்க முடியாது
குறள் 447:
இடிக்குந் துணையாரை
யாள்வாரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்
கெடுக்குந் தகைமை யவர்
மு.வ உரை:
கடிந்து அறிவுரைக் கூறவல்ல
பெரியாரின் துணை கொண்டு நடப்பவரை கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் எவர் இருக்கின்றனர்.
சாலமன் பாப்பையா உரை:
தீயன கண்டபோது நெருங்கிச்
சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொண்டு செயல்படுபவரைக் கெடுக்கக் கூடியவர்
எவர்?
கலைஞர் உரை:
இடித்துரைத்து நல்வழி
காட்டுபவரின் துணையைப் பெற்று நடப்பவர்களைக் கெடுக்கும் ஆற்றல் யாருக்கு உண்டு?
குறள் 448:
இடிப்பாரை இல்லாத ஏமரா
மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்
கெடுப்பா ரிலானுங் கெடும்
மு.வ உரை:
கடிந்து அறிவுரைக் கூறும்
பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்ககும் பகைவர்
எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.
சாலமன் பாப்பையா உரை:
தீயன கண்டபோது கடிந்து
சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொள்ளாத பாதுகாப்பு அற்ற அரசு, அதைக்
கெடுப்பார் இல்லாமலேயே தானாகவே கெடும்.
கலைஞர் உரை:
குறையை உணர்த்துவோர்
இல்லாத அரசு தானாகவே கெடும்
குறள் 449:
முதலிலார்க் கூதிய மில்லை
மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை
சார்பிலார்க் கில்லை நிலை
மு.வ உரை:
முதல் இல்லாத வணிகர்க்கு
அதனால் வரும் ஊதியம் இல்லை,
அதுபோல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு
இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
முதல் இல்லாதவர்களுக்கு
அதனால் வரும் லாபம் இல்லை,
அதுபோலவே தன்னைத் தாங்கும் துறைப் பெரியவர் துணை இல்லாத அரசுக்கு
அவர்களால் வரும் பயனும் இல்லை.
கலைஞர் உரை:
கட்டடத்தைத் தாங்கும் தூண்
போலத் தம்மைத் தாங்கி நிற்கக் கூடிய துணையில்லாதவர்களின் நிலை, முதலீடு
செய்யாத வாணிபத்தில் வருவாய் இல்லாத நிலையைப் போன்றதேயாகும்
குறள் 450:
பல்லார் பகைகொளலிற்
பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்
நல்லார் தொடர்கை விடல்
மு.வ உரை:
நல்லவராகிய பெரியாரின்
தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை
உடையதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
துறைப் பெரியவர் நட்பைப்
பெறாமல் அதை விட்டுவிடுவது,
தனியனாய் நின்று, பலரோடும் பகை கொள்வதைக்
காட்டிலும், பல பத்து மடங்கு தீமை ஆகும்.
கலைஞர் உரை:
நல்லவர்களின் தொடர்பைக்
கைவிடுவது என்பது பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடக் கேடு விளைவிக்கக்
கூடியதாகும்
0 Comments