செருக்குஞ் சினமுஞ்
சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து
பெருக்கம் பெருமித நீர்த்து
மு.வ உரை:
செருக்கும் சினமும்
காமமும் ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவனுடைய வாழ்வில் காணும் பெருக்கம் மேம்பாடு
உடையதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
தான் என்னும் அகங்காரம், கோபம்,
பெண்ணாசை என்னும் சிறுமை இவை இல்லாத ஆட்சியாளர்களின் செல்வம்
மேன்மையானது.
கலைஞர் உரை:
இறுமாப்பு, ஆத்திரம்,
இழிவான நடத்தை இவைகள் இல்லாதவர்களுடைய செல்வாக்குதான் மதிக்கத்
தக்கதாகும்
குறள் 432:
இவறலும் மாண்பிறந்த
மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு
உவகையும் ஏதம் இறைக்கு
மு.வ உரை:
பொருள் கொடாத தன்மையும்
மாட்சியில்லாத மானமும்,
தகுதியற்ற மகிழ்ச்சியும் தலைவனாக இருப்பனுக்கு குற்றங்களாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நியாயமாகத் தேவைப்படுவோர்க்குத்
தேவையானவற்றைக் கொடாதிருப்பது, பெரியோர் என்று தெரிந்தும் தம் பதவிப்
பெருமை கருதி வணங்காதிருப்பது, தீயவற்றில் மகிழ்வது - இவை
ஆட்சியாளர்க்குக் குற்றங்களாம்.
கலைஞர் உரை:
மனத்தில் பேராசை, மான
உணர்வில் ஊனம், மாசுபடியும் செயல்களில் மகிழ்ச்சி ஆகியவை
தலைமைக்குரிய தகுதிக்கே பெருங்கேடுகளாகும்
குறள் 433:
தினைத்துணையாங் குற்றம்
வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்
கொள்வர் பழிநாணு வார்
மு.வ உரை:
பழி நாணுகின்ற பெருமக்கள்
தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும் அதை பனையளவாகக் கருதிக் (குற்றம்
செய்யாமல்) காத்துக் கொள்வர்.
சாலமன் பாப்பையா உரை:
பழிபாவங்களுக்கு அஞ்சி, நானும்
பெரியோர், தினை என மிகச்சிறிய அளவே குற்றம் வந்தாலும்,
அதனைப் பனை என மிகப்பெரிய அளவாகக் கொள்வர்.
கலைஞர் உரை:
பழிக்கு நாணுகின்றவர்கள், தினையளவு
குற்றத்தையும் பனையளவாகக் கருதி, அதைச் செய்யாமல், தங்களைக் காத்துக் கொள்வார்கள்
குறள் 434:
குற்றமே காக்க பொருளாகக்
குற்றமே
அற்றந் தரூஉம் பகை
அற்றந் தரூஉம் பகை
மு.வ உரை:
குற்றமே ஒருவனுக்கு அழிவை
உண்டாக்கும் பகையாகும்,
ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக்
கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
அரசிற்கு அழிவுதரும் பகை
மனக்குற்றந்தான். அதனால் அக்குற்றம் தன்னிடம் வராமல் காப்பதையே பொருளாகக் கொள்ள
வேண்டும்.
கலைஞர் உரை:
குற்றம் புரிவது அழிவை
உண்டாக்கக் கூடிய பகையாக மாறுவதால் குற்றம் புரியாமல் இருப்பது என்பதையே
நோக்கமாகக் கொள்ள வேண்டும்
குறள் 435:
வருமுன்னர்க் காவாதான்
வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்
வைத்தூறு போலக் கெடும்
மு.வ உரை:
குற்றம் நேர்வதற்கு
முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் முன் நின்ற
வைக்கோல் போர் போல் அழிந்துவிடும்.
சாலமன் பாப்பையா உரை:
தனக்கு ஒரு குற்றம்
வருவதற்கு முன்பே வராமல் காத்துக் கொள்ளாத அரசு, நெருப்பிற்கு முன்
வைக்கப்பட்ட வைக்கோல் போல அழிந்துபோகும்.
கலைஞர் உரை:
முன்கூட்டியே
எச்சரிக்கையாக இருந்து ஒரு தவறான செயலைத் தவிர்த்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கையானது
நெருப்பின் முன்னால் உள்ள வைக்கோல் போர் போலக் கருகிவிடும்
குறள் 436:
தன்குற்ற நீக்கிப்
பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு
என்குற்ற மாகும் இறைக்கு
மு.வ உரை:
முன்னே தன் குற்றத்தைக்
கண்டு நீக்கி பிறகு பிறருடையக் குற்றத்தை ஆராயவல்லவனானால், தலைவனுக்கு
என்ன குற்றமாகும்.
சாலமன் பாப்பையா உரை:
முதலில் தன் குற்றத்தைக்
கண்டு விலக்கிப் பிறகு அடுத்தவர் குற்றத்தைக் காணும் ஆற்றல் மிக்க அரசிற்குக்
குற்றம் ஏதும் வராது!
கலைஞர் உரை:
முதலில் தனக்குள்ள குறையை
நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குறையைக் கண்டு சொல்லும் தலைவனுக்கு என்ன குறை
நேரும்?
குறள் 437:
செயற்பால செய்யா திவறியான்
செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்
உயற்பால தன்றிக் கெடும்
மு.வ உரை:
செய்யத்தக்க நன்மைகளைச்
செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவனுடைய செல்வம், உய்யுந்
தன்மை இல்லாமல் அழியும்.
சாலமன் பாப்பையா உரை:
செல்வத்தால் தனக்குச்
செய்து கொள்ள வேண்டியவற்றைப் பொருள்மீது கொண்ட பற்றினால் செய்யாமல், கஞ்சனாய்
வாழும் ஆட்சியாளனின் செல்வம் வீணே கெட்டு, அழிந்து போகும்.
கலைஞர் உரை:
நற்பணிகளைச் செய்யாமல்
சேமித்து வைக்கப்படும் கருமியின் செல்வம் பயன் ஏதுமின்றிப் பாழாகிவிடும்
குறள் 438:
பற்றுள்ள மென்னும் இவறன்மை
எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று
எண்ணப் படுவதொன் றன்று
மு.வ உரை:
பொருளினிடத்தில் பற்றுக்
கொள்ளும் உள்ளமாகிய ஈயாத்தன்மை, குற்றம் எதனோடும் சேர்ந்து எண்ணத்தகாத ஒரு
தனிக் குற்றமாகும்.
சாலமன் பாப்பையா உரை:
செலவிட வேண்டியவற்றிற்குச்
செலவிடாமல் செல்வத்தின் மீது ஆசை கொண்ட கஞ்ச மனத்தைப் பெற்றிருப்பது குற்றங்கள்
எல்லாவற்றிலும் கொடிய குற்றமாகும்.
கலைஞர் உரை:
எல்லாக்
குற்றங்களையும்விடத் தனிப்பெருங் குற்றமாகக் கருதப்படுவது பொருள் சேர்ப்பதில்
பற்றுக்கொண்டு எவருக்கும் எதுவும் ஈயாமல் வாழ்வதுதான்
குறள் 439:
வியவற்க எஞ்ஞான்றுந் தன்னை
நயவற்க
நன்றி பயவா வினை
நன்றி பயவா வினை
மு.வ உரை:
எக்காலத்திலும் தன்னை மிக
உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக் கூடாது, நன்மை தராத செயலைத்தான்
விரும்பவும் கூடாது.
சாலமன் பாப்பையா உரை:
எவ்வளவு பெரிதாக
வளர்ந்தாலும் அகங்காரம் கொண்டு பெரிதாகப் பேசாதே; நாட்டுக்கும் ஆட்சிக்கும்
நன்மை தராத செயல்களைச் செய்ய விரும்பாதே.
கலைஞர் உரை:
எந்தவொரு காலகட்டத்திலும்
தன்னைத்தானே உயர்வாக எண்ணிடும் தற்பெருமைகொண்டு நன்மை தராத செயல்களில் ஈடுபடக்
கூடாது
குறள் 440:
காதல காதல் அறியாமை
உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்
ஏதில ஏதிலார் நூல்
மு.வ உரை:
தன் விருப்பம் பிறர்க்கு
தெரியாதபடி விருப்பமான வற்றை நுகர வல்லவனானால், பகைவர் தன்னை
வஞ்சிப்பதற்காகச் செய்யும் சூழ்ச்சிகள் பலிக்காமல் போகும்.
சாலமன் பாப்பையா உரை:
தான் செய்ய எண்ணியவற்றைப்
பிறர் முன்னதாகவே அறிந்துவிடாதபடி காத்தால், அவனை அழிக்க எண்ணும் பகைவர்
எண்ணம் பழுதுபடும்.
கலைஞர் உரை:
தமது விருப்பத்தைப் பகைவர்
அறிந்து கொள்ள முடியாமல் நிறைவேற்றுபவரிடம் அந்தப் பகைவரின் எண்ணம் பலிக்காமற்
போய்விடும்
0 Comments