செல்வத்துட் செல்வஞ்
செவிச்செல்வம் அச்செல்வஞ்
செல்வத்து ளெல்லாந் தலை
செல்வத்து ளெல்லாந் தலை
மு.வ உரை:
செவியால் கேட்டறியும்
செல்வம்,
செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும், அச் செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
செவியால் கேட்டுப் பெறும்
செல்வமே சிறந்த செல்வம்;
இது பிற செல்வங்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது.
கலைஞர் உரை:
செழுமையான கருத்துகளைச்
செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும்
குறள் 412:
செவிக்குண வில்லாத போழ்து
சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்
வயிற்றுக்கும் ஈயப் படும்
மு.வ உரை:
செவிக்கு கேள்வியாகிய உணவு
இல்லாத போது (அதற்க்கு துணையாக உடலை ஒப்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு
தரப்படும்.
சாலமன் பாப்பையா உரை:
செவிக்கு உணவாகிய கேள்வி
கிடைக்காதபோது,
வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும்.
கலைஞர் உரை:
செவி வழியாக இன்பம் தரும்
உணவு இல்லாதபோதே சிறிதளவு உணவு வயிற்றுக்குத் தரும் நிலை ஏற்படும்
குறள் 413:
செவியுணவிற் கேள்வி
யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து
ஆன்றாரோ டொப்பர் நிலத்து
மு.வ உரை:
செவியுணவாகிய கேள்வி
உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே ஆயினும் அவி உணவைக் கொள்ளும் தேவரோடு ஒப்பாவார்.
சாலமன் பாப்பையா உரை:
செவி உணவாகிய கேள்வியைப்
பெற்றிருப்பவர் இப்பூமியில் வாழ்பவரே என்றாலும், வேள்வித் தீயில்
கொடுக்கப்படும் நெய் முதலிய உணவைப் பெறும் விண்ணுலகத் தேவர்க்குச் சமமாவர்.
கலைஞர் உரை:
குறைந்த உணவருந்தி நிறைந்த
அறிவுடன் விளங்கும் ஆன்றோர்க்கு ஒப்பாகக் கேள்வி ஞானம் எனும் செவியுணவு
அருந்துவோர் எண்ணப்படுவர்
குறள் 414:
கற்றில னாயினுங் கேட்க
அஃதொருவற்
கொற்கத்தின் ஊற்றாந் துணை
கொற்கத்தின் ஊற்றாந் துணை
மு.வ உரை:
நூல்களைக்
கற்றவில்லையாயினும்,
கற்றறிந்தவர்களிடம் கேட்டறிய வேண்டும், அது
ஒருவனுக்கு வாழ்க்கையில் தளர்ச்சி வந்த போது ஊன்றுகோல் போல் துணையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
கல்லாதவனே என்றாலும்
கற்றவர் கூறும் சிறந்த செய்திகளைக் கேட்க வேண்டும்; அப்படிக் கேட்பது அவனுக்கு
நெருக்கடி வரும்போது பிடிப்பதற்கு ஏற்ற துணையாக உதவும்.
கலைஞர் உரை:
நூல்களைக் கற்காவிட்டாலும், கற்றவரிடம்
கேட்டுத் தெரிந்து கொண்டால், அது நடை தளர்ந்தவனுக்கு
உதவிடும் ஊன்றுகோலைப் போலத் துணையாக அமையும்
குறள் 415:
இழுக்க லுடையுழி ஊற்றுக்கோ
லற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்
மு.வ உரை:
ஒழுக்கமுடைய சான்றோரின்
வாய்ச் சொற்கள்,
வழுக்கல் உடைய சேற்று நிலத்தில் ஊன்றுகோல் போல் வாழ்க்கையில்
உதவும்.
சாலமன் பாப்பையா உரை:
கற்று, ஒழுக்கம்
மிக்கவரின் வாயிலிருந்து பிறந்த சொற்கள் வழுக்கும் தரையில் ஊன்றுகோல் உதவுவது போல்
துன்ப நேரத்தில் உதவும்.
கலைஞர் உரை:
வழுக்கு நிலத்தில்
நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல் ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும்
குறள் 416:
எனைத்தானும் நல்லவை கேட்க
அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்
ஆன்ற பெருமை தரும்
மு.வ உரை:
எவ்வளவு சிறிதே ஆயினும்
நல்லவற்றைக் கேட்டறிய வேண்டும், கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த
பெருமையைத் தரும்.
சாலமன் பாப்பையா உரை:
சிறிது நேரமே என்றாலும்
உறுதி தரம் நற்பொருளைக் கேட்க வேண்டும். அதுகூட நிறைந்த பெருமையைத் தரும்.
கலைஞர் உரை:
நல்லவற்றை எந்த அளவுக்குக்
கேட்கிறோமோ அந்த அளவுக்குப் பெருமை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்க
வேண்டும்
குறள் 417:
பிழைத்துணர்ந்தும் பேதைமை
சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்
தீண்டிய கேள்வி யவர்
மு.வ உரை:
நுட்பமாக உணர்ந்து நிறைந்த
கேள்வியறிவை உடையவர்,
( ஒரு கால் பொருள்களைத்) தவறாக உணர்ந்திருந்தாலும் பேதைமையானவற்றைச்
சொல்லார்.
சாலமன் பாப்பையா உரை:
நுண்ணிதாக ஆராய்ந்து
அறிந்து,
கேள்வி ஞானத்தால் நிறைந்தவர், பிழைபட
உணர்ந்தபோதும், அறிவற்ற சொற்களைச் சொல்லமாட்டார்.
கலைஞர் உரை:
எதையும் நுணுகி
ஆராய்வதுடன் கேள்வி அறிவும் உடையவர்கள், சிலவற்றைப் பற்றித் தவறாக
உணர்ந்திருந்தாலும் கூட, அப்போதும் அறிவற்ற முறையில்
பேசமாட்டார்கள்
குறள் 418:
கேட்பினுங் கேளாத் தகையவே
கேள்வியால்
தோட்கப் படாத செவி
தோட்கப் படாத செவி
மு.வ உரை:
கேள்வியறிவால் துளைக்கப்
படாத செவிகள்,
( இயற்கையான துளைகள் கொண்டு ஓசையைக்) கேட்டறிந்தாலும் கேளாத
செவிட்டுத் தன்மை உடையனவே.
சாலமன் பாப்பையா உரை:
கேள்வி ஞானத்தால்
துளைக்கப்படாத செவிகள் ஓசைகளைக் கேட்டாலும் அவை செவிட்டுத் தன்மையவே.
கலைஞர் உரை:
இயற்கையாகவே கேட்கக்கூடிய
காதுகளாக இருந்தாலும் அவை நல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள்
என்றே கூறப்படும்
குறள் 419:
நுணங்கிய கேள்விய ரல்லார்
வணங்கிய
வாயின ராத லரிது
வாயின ராத லரிது
மு.வ உரை:
நுட்பமான பொருள்களைக்
கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர், வணக்கமானச் சொற்களைப் பேசும் வாயினை
உடையவராக முடியாது.
சாலமன் பாப்பையா உரை:
நுண்ணிய கேள்வி ஞானம்
இல்லாதவர்,
பணிவுமிக்க சொற்களைப் பேசுபவராக ஆவது கடினம்.
கலைஞர் உரை:
தெளிவான கேள்வியறிவு
இல்லாதவர்கள்,
அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது
குறள் 420:
செவியிற் சுவையுணரா
வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினு மென்
அவியினும் வாழினு மென்
மு.வ உரை:
செவியால் கேள்விச் சுவை
உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும் உடைய மக்கள், இறந்தாலும் என்ன, உயிரோடு வாழ்ந்தாலும் என்ன.
சாலமன் பாப்பையா உரை:
செவியால் நுகரப்படும்
சுவைகளை உணராமல்,
வாயால் அறியப்படும் சுவைகளை மட்டுமே அறியும் மனிதர் இருந்தால் என்ன?
இறந்தால்தான் என்ன?
கலைஞர் உரை:
செவிச்சுவை உணராமல் வாயின்
சுவைக்காக மட்டுமே வாழும் மக்கள் உயிரோடு இருப்பதும் ஒன்றுதான் இல்லாமற் போவதும்
ஒன்றுதான்
0 Comments