இல்வாழ்வான் என்பான்
இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை
நல்லாற்றின் நின்ற துணை
மு.வ உரை:
இல்லறத்தில் வாழ்பவனாகச்
சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற
துணையாவான்.
சாலமன் பாப்பையா உரை:
மனைவியோடு வாழ்பவன்தான்
பிள்ளைகள்,
பெற்றோர், உறவினர் என்னும் மூவர்க்கும் நல்ல
வழியில் உதவுபவன்.
கலைஞர் உரை:
பெற்றோர், வாழ்க்கைத்
துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும்
துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்
குறள் 42:
துறந்தார்க்கும் துவ்வா
தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை
இல்வாழ்வான் என்பான் துணை
மு.வ உரை:
துறந்தவர்கும்
வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கிறவன்
துணையாவான்.
சாலமன் பாப்பையா உரை:
மனைவியோடு வாழ்பவன்தான்
துறவியர்,
வறுமைப்பட்டவர், இறந்து போனவர் என்பவர்க்கும்
உதவுபவன்
கலைஞர் உரை:
பற்றற்ற துறவிகட்கும், பசியால்
வாடுவோர்க்கும், பாதுகாப்பற்றவர்க்கும் இல்லற வாழ்வு
நடத்துவோர் துணையாக இருத்தல் வேண்டும்
குறள் 43:
தென்புலத்தார் தெய்வம்
விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தா றோம்பல் தலை
ஐம்புலத்தா றோம்பல் தலை
மு.வ உரை:
தென்புலத்தார், தெய்வம்
விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற
ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
இறந்து தென்திசையில்
வாழ்பவர்,
தேவர்கள், விருந்தினர், சுற்றத்தார்,
தான் என்னும் ஐந்து பேருக்கும் செய்ய வேண்டிய அறத்தைத் தவறாமல்
செய்வது சிறப்பு.
கலைஞர் உரை:
வாழ்ந்து மறைந்தோரை
நினைவுகூர்தல்,
வாழ்வாங்கு வாழ்வோரைப் போற்றுதல், விருந்தோம்பல்,
சுற்றம் பேணல் ஆகிய கடமைகளை நிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக்
கொள்ளல் எனப்படும் ஐவகை அறநெறிகளும் இல்வாழ்வுக்குரியனவாம்
குறள் 44:
பழியஞ்சிப் பாத்தூண்
உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல
மு.வ உரை:
பொருள் சேர்க்கும் பொது
பழிக்கு அஞ்சிச் சேர்த்து,
செலவு செய்யும் போது பகுந்து உண்பதை மேற்க்கொண்டால், அவ்வாழ்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.
சாலமன் பாப்பையா உரை:
பொருள் தேடும்போது
பாவத்திற்குப் பயந்து தேடிய பொருளை உறவோடு பகிர்ந்து உண்ணும் இல்வாழ்பவனின்
பரம்பரை ஒருகாலும் அழிவதில்லை.
கலைஞர் உரை:
பழிக்கு அஞ்சாமல் சேர்த்த
பொருள் கணக்கின்றி இருப்பினும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்த
பொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலேதான் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது
குறள் 45:
அன்பும் அறனும்
உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது
பண்பும் பயனும் அது
மு.வ உரை:
இல்வாழ்க்கையின் அன்பும்
அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே
ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
மனைவி பிள்ளைகளிடத்தில் அன்பும், தேடிய
பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறமும் இருந்தால் இல்வாழ்க்கையின்
பண்பும் அதுவே; பயனும் அதுவே.
கலைஞர் உரை:
இல்வாழ்க்கை
பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல
செயல்களும் தேவை
குறள் 46:
அறத்தாற்றின் இல்வாழ்க்கை
ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ தெவன்
போஒய்ப் பெறுவ தெவன்
மு.வ உரை:
ஒருவன் அறநெறியில்
இல்வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில்
சென்று பெறத்தக்கது என்ன?
சாலமன் பாப்பையா உரை:
மனைவியோடு கூடிய
வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு அறவழிகளில் நடத்தினால் இல்லறத்திற்கு மாறான பிற
வழிகளில் போய்ப் பெறும் பயன்தான் என்ன?
கலைஞர் உரை:
அறநெறியில் இல்வாழ்க்கையை
அமைத்துக் கொண்டவர்கள் பெற்றிடும் பயனை, வேறு நெறியில் சென்று
பெற்றிட இயலுமோ? இயலாது
குறள் 47:
இயல்பினான் இல்வாழ்க்கை
வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை
முயல்வாருள் எல்லாம் தலை
மு.வ உரை:
அறத்தின் இயல்பொடு
இல்வாழ்கை வாழ்கிறவன்- வாழ முயல்கிறவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகிறவன்
ஆவான்.
சாலமன் பாப்பையா உரை:
கடவுளை அறியவும், அடையவும்
முயல்பவருள் மனைவியோடு கூடிய வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு வாழ்பவனே
முதன்மையானவன்.
கலைஞர் உரை:
நல்வாழ்வுக்கான முயற்சிகளை
மேற்கொள்வோரில் தலையானவராகத் திகழ்பவர், இல்வாழ்வின் இலக்கணமுணர்ந்து
அதற்கேற்ப வாழ்பவர்தான்
குறள் 48:
ஆற்றின் ஒழுக்கி
அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து
நோற்பாரின் நோன்மை உடைத்து
மு.வ உரை:
மற்றவரை அறநெறியில்
ஒழுகச்செய்து தானும்அறம் தவறாத இல்வாழ்க்கை , தவம் செய்வாரைவிட
மிகச்சிறந்த வல்லமை உடைய வாழ்க்கையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
மற்றவர்களை அவர்களின்
வழியில் வாழச்செய்து,
தானும் அறத்திலிருந்து விலகாமல், மனைவியுடன்
வாழும் வாழ்க்கை, துறவறத்தார் காட்டும் பொறுமையிலும் வலிமை
மிக்கது.
கலைஞர் உரை:
தானும் அறவழியில் நடந்து, பிறரையும்
அவ்வழியில் நடக்கச் செய்திடுவோரின் இல்வாழ்க்கை, துறவிகள்
கடைப்பிடிக்கும் நோன்பைவிடப் பெருமையுடையதாகும்
குறள் 49:
அறன்எனப் பட்டதே
இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று
மு.வ உரை:
அறம் என்று சிறப்பித்து
சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல்
விளங்கினால் மேலும் நன்மையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அறம் என்று
சிறப்பிக்கப்பட்டது,
மனைவியுடன் வாழும் வாழ்க்கையே; துறவற
வாழ்க்கையும், பிறரால் பழிக்கப்படாமல் இருக்குமானால் நல்லது.
கலைஞர் உரை:
பழிப்புக்கு இடமில்லாத
இல்வாழ்க்கை இல்லறம் எனப் போற்றப்படும்
குறள் 50:
வையத்துள் வாழ்வாங்கு
வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்
தெய்வத்துள் வைக்கப் படும்
மு.வ உரை:
உலகத்தில் வாழவேண்டிய
அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து
மதிக்கப்படுவான்.
சாலமன் பாப்பையா உரை:
மனைவியுடன் வாழும்
வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் தேவருள் ஒருவனாகவே மதிக்கப்படுவான்.
கலைஞர் உரை:
தெய்வத்துக்கென எத்தனையோ
அருங்குணங்கள் கூறப்படுகின்றன உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன்
வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்
0 Comments