அவாவென்ப எல்லா
உயிர்க்குமெஞ் ஞான்றுந்
தவாஅப் பிறப்பீனும் வித்து
தவாஅப் பிறப்பீனும் வித்து
மு.வ உரை:
எல்லா உயிர்களுக்கும்
எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா
என்றுக் கூறுவர்.
சாலமன் பாப்பையா உரை:
எல்லா உயிர்களுக்கும், எந்தக்
காலத்திலும் அழியாமல் வரும் பிறப்பை உண்டாக்கும் விதைதான் ஆசை என்று பெரியோர்
கூறுவர்.
கலைஞர் உரை:
ஆசையை, எல்லா
உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றி
முளைக்கும் விதை என்று கூறலாம்
குறள் 362:
வேண்டுங்கால் வேண்டும்
பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்
வேண்டாமை வேண்ட வரும்
மு.வ உரை:
ஒருவன் ஒன்றை
விரும்புவதனால் பிறவா நிலைமையை விரும்ப வேண்டும், அது அவா அற்ற நிலையை
விரும்பினால் உண்டாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பிறவாமையை எப்போது
விரும்புகிறோமோ அப்போது அந்த நிலை நமக்கு வர வேண்டும். ஆசையற்று இருப்பதை
விரும்பும்போதுதான் அந்த நிலை நமக்கு உண்டாகும்.
கலைஞர் உரை:
விரும்புவதானால்
பிறக்காமலே இருந்திருக்கவேண்டும் என்று ஒருவன் எண்ணுகிற அளவுக்கு ஏற்படுகிற துன்ப
நிலை,
ஆசைகளை ஒழிக்காவிடில் வரும்
குறள் 363:
வேண்டாமை யன்ன
விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்ப தில்
ஆண்டும் அஃதொப்ப தில்
மு.வ உரை:
அவா அற்ற நிலைமை போன்ற
சிறந்த செல்வம் இவ்வுலகில் இல்லை, வேறு எங்கும் அதற்க்கு நிகரான ஒன்று இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
எந்தப் பொருளையும்
விரும்பாமல் இருப்பது போன்ற சிறந்த செல்வம் இப்பூமியில் வேறு ஒன்று இல்லை; வான்
உலகத்திலும் இதற்கு ஒப்பானது இல்லை.
கலைஞர் உரை:
தீமை விளைவிக்கும் ஆசைகளை
வேண்டாம் என்று புறக்கணிப்பதைப் போன்ற செல்வம் இங்கு எதுவுமில்லை; வேறு
எங்கும் கூட அத்தகைய ஒப்பற்ற செல்வம் இல்லையென்றே கூறலாம்
குறள் 364:
தூஉய்மை யென்ப தவாவின்மை
மற்றது
வாஅய்மை வேண்ட வரும்
வாஅய்மை வேண்ட வரும்
மு.வ உரை:
தூயநிலை என்றுக்
கூறப்படுவது அவா இல்லா திருத்தலே யாகும், அவா அற்ற அத்தன்மை
மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.
சாலமன் பாப்பையா உரை:
மனத்தூய்மை என்பது ஆசை
இல்லாமல் இருப்பதே;
ஆசை இல்லாமல் இருப்பதோ மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.
கலைஞர் உரை:
தூய்மை என்பது பேராசையற்ற
தன்மையாகும் அத்தூய்மை வாய்மையை நாடுவோர்க்கே வாய்க்கும்
குறள் 365:
அற்றவ ரென்பார் அவாவற்றார்
மற்றையார்
அற்றாக அற்ற திலர்
அற்றாக அற்ற திலர்
மு.வ உரை:
பற்றற்றவர் என்றுக்
கூறப்படுவோர் அவா அற்றவரே,
அவா அறாத மற்றவர் அவ்வளவாகப் பற்று அற்றவர் அல்லர்.
சாலமன் பாப்பையா உரை:
ஆசை இல்லாதவரே எதுவும்
இல்லாதவர்;
மற்றவரோ முழுவதும் இல்லாதவர் ஆகார்.
கலைஞர் உரை:
ஆசையனைத்தும் விட்டவரே
துறவி எனப்படுவார் முற்றும் துறவாதவர், தூய துறவியாக மாட்டார்
குறள் 366:
அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா
வஞ்சிப்ப தோரும் அவா
மு.வ உரை:
ஒருவன் அவாவிற்கு அஞ்சி
வாழ்வதே அறம்,
ஏன் எனில் ஒருவனைச் சோர்வு கண்டுகொடுத்து வஞ்சிப்பது அவாவே.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவனை வஞ்சித்துக்
கெடுப்பது ஆசையே. அதனால் ஆசை உண்டாகி விடாமல் அஞ்சி வாழ்வதே அறம்.
கலைஞர் உரை:
ஒருவரை வஞ்சித்துக்
கெடுப்பதற்குக் காரணமாக இருப்பது ஆசையேயாகும் எனவே, ஆசைக்கு அடிமையாகக் கூடாது
என்ற அச்சத்துடன் வாழ வேண்டும்
குறள் 367:
அவாவினை ஆற்ற அறுப்பின்
தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்
தான்வேண்டு மாற்றான் வரும்
மு.வ உரை:
ஒருவன் ஆசையை முழுதும்
ஒழித்தால்,
அவன் கெடாமல் வாழ்வதற்கு உரிய நல்ல செயல் அவன் விரும்புமாறு
வாய்க்கும்.
சாலமன் பாப்பையா உரை:
ஆசையை முழுவதுமாக அறுத்து
ஒழித்து விட்டால்,
தான் விரும்பும் வண்ணமே அழியாமல் வாழ்வதற்கான செயல் உண்டாகும்.
கலைஞர் உரை:
கெடாமல் வாழ்வதற்குரிய
நிலை,
ஒருவன் விரும்புமாறு வாய்ப்பதற்கு, அவன்
பேராசைக் குணத்தை முற்றிலும் ஒழித்தவனாக இருக்க வேண்டும்
குறள் 368:
அவாவில்லார்க் கில்லாகுந்
துன்பமஃ துண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்
தவாஅது மேன்மேல் வரும்
மு.வ உரை:
அவா இல்லாதவர்க்குத்
துன்பம் இல்லையாகும்,
அவா இருந்தால் எல்லாத் துன்பங்களும் மேலும் மேலும் ஒழியாமல் வரும்.
சாலமன் பாப்பையா உரை:
ஆசை இல்லாதவர்க்குத்
துன்பம் வராது;
இருப்பவர்க்கோ இடைவிடாமல், தொடர்ந்து துன்பம்
வரும்.
கலைஞர் உரை:
ஆசை இல்லாதவர்களுக்குத்
துன்பம் இல்லை ஆசை உண்டானால், அதைத் தொடர்ந்து துன்பமும் மேலும் மேலும்
வந்து கொண்டிருக்கும்
குறள் 369:
இன்பம் இடையறா தீண்டும்
அவாவென்னுந்
துன்பத்துள் துன்பங் கெடின்
துன்பத்துள் துன்பங் கெடின்
மு.வ உரை:
அவா என்று சொல்லப்படுகின்ற
துன்பங்களுள் பொல்லாதத் துன்பம் கெடுமானால் இவ் வுலகில் இன்பம் இடையறாமல்
வாய்க்கும்.
சாலமன் பாப்பையா உரை:
ஆசை எனப்படும்
பெருந்துன்பம் இல்லாது போனால், இன்பம் இடைவிடாமல் வரும்.
கலைஞர் உரை:
பெருந்துன்பம் தரக்கூடிய
பேராசை ஒழிந்தால் வாழ்வில் இன்பம் விடாமல் தொடரும்
குறள் 370:
ஆரா இயற்கை அவாநீப்பின்
அந்நிலையே
பேரா இயற்கை தரும்
பேரா இயற்கை தரும்
மு.வ உரை:
ஒருபோதும் நிரம்பாத தன்மை
உடைய அவாவை ஒழித்தால் ஒழித்த அந்நிலையே எப்போதும் மாறாதிருக்கும் இன்ப வாழ்வைத்
தரும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒரு காலமும் முடிவு பெறாத
குணத்தை உடைய ஆசையை விட்டுவிட்டால், அதுவே ஒருவனுக்கு நிலைத்து
வாழும் இயல்பைக் கொடுக்கும்.
கலைஞர் உரை:
இயல்பாகவே எழும் அடங்காத
பேராசையை அகற்றி வாழும் நிலை, நீங்காத இன்பத்தை இயல்பாகவே
தரக்கூடியதாகும்
0 Comments