யாதனின் யாதனின்
நீங்கியான் நோதல்
அதனின் அதனின் அலன்
அதனின் அதனின் அலன்
மு.வ உரை:
ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக
இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன்
துன்பம் அடைவதில்லை.
சாலமன் பாப்பையா உரை:
எந்த எந்தப் பொருள்களின்
மேல் விருப்பம் இல்லாதவனாய் விலகுகிறானோ அவன் அந்த அந்த பொருள்களால்
துன்பப்படமாட்டான்.
கலைஞர் உரை:
ஒருவன் பல வகையான
பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு விட்டாலும், குறிப்பிட்ட
அந்தப் பற்று காரணமாக வரும் துன்பம், அவனை
அணுகுவதில்லை
குறள் 342:
வேண்டினுண் டாகத் துறக்க
துறந்தபின்
ஈண்டியற் பால பல
ஈண்டியற் பால பல
மு.வ உரை:
துன்பமில்லாத நிலைமை
வேண்டுமானால் எல்லாப் பொருள்களும் உள்ள காலத்திலேயெ துறக்க வேண்டும்,துறந்த பின் இங்குப் பெறக்கூடும் இன்பங்கள்
பல.
சாலமன் பாப்பையா உரை:
பொருள்களின் மீதுள்ள
பற்றைத் துறந்தபின் வந்து சேரும் இன்பங்கள் பல; இன்பங்களை
விரும்பினால் துறவு கொள்க.
கலைஞர் உரை:
ஒருவனைத் துன்பம்
துளைத்தெடுக்காமல் இருக்க எல்லாம் இருக்கும் போதே அவற்றைக் துறந்து விடுவானேயானால், அவன் உலகில் பெறக்கூடிய இன்பங்கள் பலவாகும்
குறள் 343:
அடல்வேண்டும் ஐந்தன்
புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு
வேண்டிய வெல்லாம் ஒருங்கு
மு.வ உரை:
ஐம்பொறிகளுக்கும் உரிய
ஐந்து புலன்களின் ஆசையையும் வெல்லுதல் வேண்டும், அவற்றிற்கு
வேண்டிய பொருள்களை எல்லாம் ஒரு சேர விட வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
ஆசைகளைப் பிறப்பிக்கும்
ஐந்து புலன்களையும் அடக்க வேண்டும்; அவற்றை
அடக்குவதற்குத் தனக்குரிய அனைத்தையும் விட்டு விட வேண்டு்ம்.
கலைஞர் உரை:
ஐம் புலன்களையும் அடக்கி
வெல்வதும், அப்புலன்கள்
விரும்புகின்றவற்றையெல்லாம் விட்டுவிடுவதும் துறவுக்கு இலக்கணமாகும்
குறள் 344:
இயல்பாகும் நோன்பிற்கொன்
றின்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து
மயலாகும் மற்றும் பெயர்த்து
மு.வ உரை:
தவம் செய்தவற்கு ஒரு
பற்றும் இல்லாதிருத்தல் இயல்பாகும், பற்று
உடையவராக இருத்தல் மீண்டும் மயங்குவதற்கு வழியாகும்.
சாலமன் பாப்பையா உரை:
உடைமை ஏதும்
இல்லாதிருப்பது துறவின் இயல்பு. உடைமைகளை வைத்திருப்பதோ ஆசை என்னும் மயக்கத்தை
மறுபடியும் தரும்.
கலைஞர் உரை:
ஒரு பற்றும்
இல்லாதிருத்தலே துறவுக்கு ஏற்றதாகும் ஓன்றன் மேல் பற்று வைப்பினும், அது மேன்மேலும் பற்றுகளைப் பெருக்கி மயங்கச்
செய்துவிடும்
குறள் 345:
மற்றுந் தொடர்ப்பா
டெவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க் குடம்பும் மிகை
உற்றார்க் குடம்பும் மிகை
மு.வ உரை:
பிறவித் துன்பத்தைப் போக்க
முயல்கின்றவர்க்கு உடம்பும் மிகையான பொருள் ஆகையால் அதற்கு மேல் வேறு தொடர்பு
கொள்வது ஏனோ.
சாலமன் பாப்பையா உரை:
இனியும் பிறப்பது கூடாது
என்று பிறப்பையே அறுக்க முயன்றவர்க்கு அவரது உடம்பே அதிகம்; நிலைமை இப்படி இருக்க, உடம்பிற்கும் மேலான சுமை எதற்கு?
கலைஞர் உரை:
பிறந்ததால் ஏற்படும்
துன்பத்தைப் போக்க முயல்கின்ற துறவிகளுக்கு அவர்களின் உடம்பே மிகையான ஒன்றாக
இருக்கும்போது, அதற்கு மேலும் வேறு
தொடர்பு எதற்காக?
குறள் 346:
யானென தென்னுஞ்
செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்
குயர்ந்த உலகம் புகும்
மு.வ உரை:
உடம்பை யான் எனக் கருதலும்
தொடர்பு இல்லாத பொருளை எனது எனக்கருதலுமாகிய மயக்கத்தை போக்குகின்றவன், தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான்.
சாலமன் பாப்பையா உரை:
உடல் பற்றி நான் என்றும், பொருள் பற்றி எனது என்றும் வரும் செருக்கை
மனத்துள் இருந்து அறுத்து விட்டவன், வானவர்க்கும்
மேலான வீட்டுலகத்தை அடைவான்.
கலைஞர் உரை:
யான், எனது என்கின்ற ஆணவத்தை அறவே விலக்கி விட்டவன், வான்புகழையும் மிஞ்சுகின்ற உலகப் புகழுக்கு
உரியவனாவான்
குறள் 347:
பற்றி விடாஅ இடும்பைகள்
பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு
பற்றி விடாஅ தவர்க்கு
மு.வ உரை:
யான் எனது என்னும்
இருவகைப் பற்றுக்களையும் பற்றிக் கொண்டுவிடாத வரை, துன்பங்களும்
விடாமல் பற்றிக்கொள்கின்றன.
சாலமன் பாப்பையா உரை:
ஆசைகளைப் பற்றிக்கொண்டு
விட முடியாமல் இருப்பவரைத் துன்பங்கள் பற்றிக் கொண்டு விடமாட்டா.
கலைஞர் உரை:
பற்றுகளைப் பற்றிக்கொண்டு
விடாதவர்களைத் துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன
குறள் 348:
தலைப்பட்டார் தீரத்
துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்
வலைப்பட்டார் மற்றை யவர்
மு.வ உரை:
முற்றத் துறந்தவறே உயர்ந்த
நிலையினர் ஆவர், அவ்வாறு துறக்காத மற்றவர்
அறியாமையாகிய வலையில் அகப்பட்டவர் ஆவர்.
சாலமன் பாப்பையா உரை:
ஆசைகளை முழுவதுமாக விட்டு
விட்டவரே நல்வாழ்விற்கு முயன்றவர். விடாதவரோ மயங்கி, பிறவி
வலைக்குள் அகப்பட்டவரே.
கலைஞர் உரை:
அரைகுறையாக இல்லாமல்
அனைத்தும் துறந்தவர்களே உயர்ந்த நிலையை அடைவார்கள் அவ்வாறு துறவாதவர்கள்
அறியாமையென்னும் வலையில் சிக்கியவர்களாவார்கள்
குறள் 349:
பற்றற்ற கண்ணே
பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்
நிலையாமை காணப் படும்
மு.வ உரை:
இருவகைப் பற்றும்
அற்றபொழுதே அந்நிலை பிறவித் துன்பத்தை ஒழிக்கும், இல்லையானால்
(பிறவித்துன்பம் மாறி மாறி வந்து) நிலையாமைக் காணப்படும்.
சாலமன் பாப்பையா உரை:
ஆசைகளை முழுவதுமாக
விட்டபோதுதான் பிறப்பு என்னும் கட்டு அறுபடும்; விடவில்லை
என்றால், பிறப்பு மறுபடியும்
தொடரும்.
கலைஞர் உரை:
பற்றுகளைத்
துறந்துவிட்டால், பிறப்பில் ஏற்படும் இன்ப
துன்பங்கள் வருவதில்லை இல்லையேல், அந்த இன்ப துன்பங்கள்
மாறிமாறி வரக்கூடிய நிலையாமை தோன்றும்
குறள் 350:
பற்றுக பற்றற்றான் பற்றினை
அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு
பற்றுக பற்று விடற்கு
மு.வ உரை:
பற்றில்லாதவனாகிய
கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும், உள்ள
பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
ஆசை ஏதும் இல்லாதவனாகிய
இறைவன் மீது ஆசை கொள்க; அவன் மீது ஆசை கொள்வது
நம் ஆசைகளை விடுவதற்கே.
கலைஞர் உரை:
எதிலும் பற்றில்லாதவராக
யார் இருக்கிறாரோ அவரிடம் மட்டும் பற்றுக் கொள்ள வேண்டும் துறவறத்தினர் தம்
பற்றுகளை விட்டொழிப்பதற்கு அத்தகையோரிடம் கொள்ளும் பற்றுதான் துணை நிற்கும்
0 Comments