அறவினை யாதெனின் கொல்லாமை
கோறல்
பிறவினை எல்லாந் தரும்
பிறவினை எல்லாந் தரும்
மு.வ உரை:
அறமாகிய செயல் எது என்றால்
ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத
செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
அறச்செயல் எது என்றால், பிற உயிர்களைக் கொலை செய்யாது இருப்பதே; கொல்வது அனைத்துப் பாவங்களையும் தரும்.
கலைஞர் உரை:
எந்த உயிரையும்
கொல்லாதிருப்பதே அறச்செயலாகும் கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்
குறள் 322:
பகுத்துணடு பல்லுயி ரோம்புதல்
நூலோர்
தொகுத்தவற்று ளெல்லாந் தலை
தொகுத்தவற்று ளெல்லாந் தலை
மு.வ உரை:
கிடைத்ததைப் பகுந்து
கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள்
எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.
சாலமன் பாப்பையா உரை:
இருப்பதைப் பகிர்ந்து
உண்டு, பல உயிர்களையும் பாதுகாப்பது, நூல் எழுதியவர்கள் தொகுத்த அறங்களுள் எல்லாம்
முதன்மையான அறமாகும்.
கலைஞர் உரை:
இருப்போர் இல்லாதோர்
என்றில்லாமல், கிடைத்ததைப்
பகிர்ந்துகொண்டு, எல்லா உயிர்களும் வாழ
வேண்டும் என்ற சமநிலைக் கொள்கைக்கு ஈடானது வேறு எதுவுமே இல்லை
குறள் 323:
ஒன்றாக நல்லது கொல்லாமை
மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று
பின்சாரப் பொய்யாமை நன்று
மு.வ உரை:
இணையில்லாத ஓர் அறமாகக்
கொல்லாமை நல்லது, அதற்கு அடுத்த நிலையில்
கூறத்தக்கதாகப் பொய்யாமை நல்லது.
சாலமன் பாப்பையா உரை:
உயிர்களைக் கொல்லாத செயல், அறங்களுள் எல்லாம் சிறந்த தனி அறமாம். அதற்கு
அடுத்துச் சிறந்த அறம் பொய்யாமை.
கலைஞர் உரை:
அறங்களின் வரிசையில்
முதலில் கொல்லாமையும் அதற்கடுத்துப் பொய்யாமையும் இடம் பெறுகின்றன
குறள் 324:
நல்லா றெனப்படுவ
தியாதெனின் யாதொன்றுங்
கொல்லாமை சூழும் நெறி
கொல்லாமை சூழும் நெறி
மு.வ உரை:
நல்ல வழி என்று
அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த
உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல வழி எது என்றால், எந்த உயிரையும் கொலை செய்யாமல் அறம் காக்கும்
வழிதான்.
கலைஞர் உரை:
எந்த உயிரையும் கொல்லக்
கூடாது எனும் நெறி காப்பதுதான் நல்லற வழி எனப்படும்
குறள் 325:
நிலையஞ்சி நீத்தாரு
ளெல்லாங் கொலையஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை
கொல்லாமை சூழ்வான் தலை
மு.வ உரை:
வாழ்க்கையின்
தன்மையைக்கண்டு அஞ்சித் துறந்தவர்கள் எல்லாரிலும், கொலைசெய்வதற்க்கு
அஞ்சிக் கொல்லாத அறத்தைப் போற்றுகின்றவன் உயர்ந்தவன்.
சாலமன் பாப்பையா உரை:
வாழ்க்கை நிலைக்கு அஞ்சி
மனத் துறவு கொண்டவருள் எல்லாம் கொலை செய்வதால் வரும் பாவத்திற்கு அஞ்சி வாழ்பவன்
உயர்ந்தவன் ஆவான்.
கலைஞர் உரை:
உலகியல் நிலையை வெறுத்துத்
துறவு பூண்டவர் எல்லோரையும்விடக் கொலையை வெறுத்துக் கொல்லாமையைக் கடைப்பிடிப்பவரே
சிறந்தவராவார்
குறள் 326:
கொல்லாமை மேற்கொண்
டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லா துயிருண்ணுங் கூற்று
செல்லா துயிருண்ணுங் கூற்று
மு.வ உரை:
கொல்லாத அறத்தை மேற்கொண்டு
நடக்கின்றவனுடைய வாழ்நாளின் மேல், உயிரைக்கொண்டு செல்லும்
கூற்றுவனும் செல்லமாட்டான்.
சாலமன் பாப்பையா உரை:
கொலை செய்யாமல் வாழ்வதைக்
குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவனின் வாழ்நாளின்மேல் உயிர் உண்ணும் கூற்று
குறுக்கிடாது.
கலைஞர் உரை:
கொலை செய்யாமையை வாழ்வில்
அறநெறியாகக் கொண்டவரின் பெருமையை வியந்து, சாவுகூட
அவர் உயிரைப் பறிக்கத் தயங்கி நிற்கும்
குறள் 327:
தன்னுயிர் நீப்பினுஞ்
செய்யற்க தான்பிறி
தின்னுயிர் நீக்கும் வினை
தின்னுயிர் நீக்கும் வினை
மு.வ உரை:
தன் உயிர் உடம்பிலிருந்து
நீங்கிச் செல்வதாக இருந்தாலும், அதைத் தடுப்பதற்காகத் தான்
வேறோர் உயிரை நீக்கும் செயலைச் செய்யக்கூடாது.
சாலமன் பாப்பையா உரை:
தன் உயிரையே இழக்க
நேர்ந்தாலும், பிற இன்னுயிரை அதன்
உடம்பிலிருந்து போக்கும் செயலைச் செய்யவேண்டா.
கலைஞர் உரை:
தன்னுயிரே போவதாக
இருப்பினும்கூட அதற்காக இன்னொரு உயிரைப் போக்கும் செயலில் ஈடுபடக்கூடாது
குறள் 328:
நன்றாகும் ஆக்கம்
பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை
கொன்றாகும் ஆக்கங் கடை
மு.வ உரை:
கொலையால் நன்மையாக
விளையும் ஆக்கம் பெரிதாக இருந்தாலும், சான்றோர்க்குக்
கொலையால் வரும் ஆக்கம் மிக இழிவானதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
வேள்விகளில் கொலை
செய்வதால் நன்மை வரும், செல்வம் பெருகும்
என்றாலும், பிற உயிரைக் கொல்வதால்
வரும் செல்வத்தைச் சான்றோர் இழிவானதாகவே எண்ணுவர்.
கலைஞர் உரை:
பெரிதாக நன்மை தரக்கூடிய
அளவுக்கு ஒரு கொலை பயன்படக் கூடுமெனினும், நல்ல
பண்புடைய மக்கள், அந்த நன்மையை இழிவானதாகவே
கருதுவார்கள்
குறள் 329:
கொலைவினைய ராகிய மாக்கள்
புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து
புன்மை தெரிவா ரகத்து
மு.வ உரை:
கொலைத்தொழிலினராகிய மக்கள்
அதன் இழிவை ஆராய்ந்தவரிடத்தில் புலைத்தொழிலுடையவராய்த் தாழ்ந்து தோன்றுவர்.
சாலமன் பாப்பையா உரை:
கொலை செய்வதைத் தொழிலாகக்
கொண்டு வாழும் மக்கள், அத்தொழிலின் தீமையை
அறியாதவர் என்றாலும், அறிந்த பெரியோர் மனத்துள்
அவர்கள் கீழான செயல் செய்பவராய் எண்ணப்படுவார்.
கலைஞர் உரை:
பகுத்தறிவை இழந்து
செயல்படும் கொலைகாரர்களைச் சான்றோர் உள்ளம், இழிதகைப்
பிறவிகளாகவே கருதும்
குறள் 330:
உயிருடம்பின் நீக்கியா
ரென்ப செயிருடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்
மு.வ உரை:
நோய் மிகுந்த உடம்புடன்
வறுமையான தீய வாழ்க்கை உடையவர், முன்பு கொலை பல செய்து
உயிர்களை உடம்புகளில் இருந்து நீக்கினவர் என்று அறிஞர் கூறுவர்.
சாலமன் பாப்பையா உரை:
நோய் நிறைந்த உடம்புடன், வறுமையால், இழிந்த
வாழ்க்கையை இன்று வாழ்பவர்கள், முற்பிறப்பில் பிற உயிர்களை
உடம்பிலிருந்து நீக்கிக் கொலை செய்தவர் என்று அறிந்தோர் கூறுவர்.
கலைஞர் உரை:
வறுமையும் நோயும் மிகுந்த
தீய வாழ்க்கையில் உழல்வோர், ஏற்கனவே கொலைகள் பல
செய்தவராக இருப்பர் என்று முன்னோர் கூறுவர்
0 Comments