சிறப்பீனுஞ் செல்வம்
பெறினும் பிறர்க்கின்னா
செய்யாமை மாசற்றார் கோள்
செய்யாமை மாசற்றார் கோள்
மு.வ உரை:
சிறப்பைத்தருகின்ற பெருஞ்
செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம்
செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம்.
சாலமன் பாப்பையா உரை:
சிறப்பைத் தரும் செல்வத்தைப்
பெறுவதாக இருந்தாலும்கூட அடுத்தவர்க்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின்
கொள்கை.
கலைஞர் உரை:
மிகுந்த செழிப்பைத்
தருகின்ற செல்வத்தைப் பெறக் கூடுமென்றாலும் அதன் பொருட்டுப் பிறருக்குப் கேடு
செய்யாமலிருப்பதே மாசற்றவர்களின் கொள்கையாகும்
குறள் 312:
கறுத்தின்னா செய்தவக்
கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்
செய்யாமை மாசற்றார் கோள்
மு.வ உரை:
ஒருவன் கறுவுகொண்டு
துன்பம் செய்த போதிலும் அவனுக்கு திரும்ப துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின்
கொள்கையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நம்மீது கோபம் கொண்டு தீமை
செய்தாலும், பதிலுக்குத் தீமை
செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை.
கலைஞர் உரை:
சினங்கொண்டு சொல்லாலோ
செயலாலோ ஒருவன் துன்பம் தரும்போது அந்தத் துன்பத்தை அவனுக்குத் திரும்பச்
செய்யாமல் தாங்கிக் கொள்வதே சிறந்த மனிதரின் கொள்கையாகும்
குறள் 313:
செய்யாமற் செற்றார்க்கும்
இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்
உய்யா விழுமந் தரும்
மு.வ உரை:
தான் ஒன்றும்
செய்யாதிருக்கத் தனக்குத் தீங்கு செய்தவர்க்கும் துன்பமானாவற்றைச் செய்தால்
செய்தபிறகு தப்பமுடியாத துன்பத்தையே கொடுக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
நாம் ஒரு தீமையும்
செய்யாதிருக்க, கோபம் கொண்டு நமக்குத்
தீமை செய்தவர்க்கு, நாம் தீமை செய்தால், தப்பிக்க முடியாத அளவு துன்பத்தை அது
நமக்குத் தரும்.
கலைஞர் உரை:
யாருக்கும் கேடு செய்யாமல்
இருப்பவருக்குப் பகைவர் கேடு செய்துவிட்டால் அதற்குப் பதிலாக அவருக்கு வரும் கேடு
மீளாத் துன்பம் தரக் கூடியதாகும்
குறள் 314:
இன்னாசெய் தாரை ஒறுத்தல்
அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்
நன்னயஞ் செய்து விடல்
மு.வ உரை:
இன்னா செய்தவரைத்
தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும்
நன்மையையும் மறந்து விடுதலாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நமக்குத் தீமை செய்தவரைத்
தண்டிக்கும் வழி, அவர் வெட்கப்படும்படி
அவருக்கு நன்மையைச் செய்து அவர் செய்த தீமையையும், நாம்
செய்த நன்மையையும் மறந்துவிடுவதே.
கலைஞர் உரை:
நமக்குத் தீங்கு
செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர்
வெட்கித் தலைகுனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்
குறள் 315:
அறிவினான் ஆகுவ துண்டோ
பிறிதின்நோய்
தந்நோய்போற் போற்றாக் கடை
தந்நோய்போற் போற்றாக் கடை
மு.வ உரை:
மற்ற உயிரின் துன்பத்தை
தன் துன்பம் போல் கருதிக் காப்பாற்றா விட்டால் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன்
உண்டோ.
சாலமன் பாப்பையா உரை:
அடுத்த உயிர்க்கு வரும்
துன்பத்தைத் தமக்கு வந்ததாக எண்ணாவிட்டால், அறிவைப்
பெற்றதால் ஆகும் பயன்தான் என்ன?
கலைஞர் உரை:
பிற உயிர்களுக்கு வரும்
துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதிக் காப்பாற்ற முனையாதவர்களுக்கு அறிவு
இருந்தும் அதனால் எந்தப் பயனுமில்லை
குறள் 316:
இன்னா எனத்தா னுணர்ந்தவை
துன்னாமை
வேண்டும் பிறன்கட் செயல்
வேண்டும் பிறன்கட் செயல்
மு.வ உரை:
ஒருவன் துன்பமானவை என்று
தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
தீமை எனத் தான்
அறிந்தவற்றை அடுத்தவர்க்குச் செய்யாது இருக்க வேண்டும்.
கலைஞர் உரை:
ஒருவன் தன்னுடைய
வாழ்க்கையில் துன்பமானவை என்று அனுபவித்து அறிந்தவற்றை, மற்றவர்க்குச் செய்யாமலிருக்க வேண்டும்
குறள் 317:
எனைத்தானும் எஞ்ஞான்றும்
யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை
மாணாசெய் யாமை தலை
மு.வ உரை:
எவ்வளவு சிறியதாயினும்
எக்காலத்திலும் எவரிடத்திலும் மனதால் எண்ணி உண்டாகின்ற துன்பச்செயலைச்
செய்யாதிருத்தலே நல்லது.
சாலமன் பாப்பையா உரை:
எவ்வளவு சிறிதாயினும், எவருக்கு என்றாலும், எப்பொழுது ஆனாலும் சரி, மனத்தால் கூடத் தீமையைச் செய்யா திருப்பதே
உயர்ந்தது.
கலைஞர் உரை:
எவ்வளவிலும், எப்பொழுதும், எவரையும்
இழிவுபடுத்தும் செயலை மனத்தால்கூட நினைக்காமல் இருப்பதே முதன்மையான சிறப்பாகும்
குறள் 318:
தன்னுயிர்க் கின்னாமை
தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க் கின்னா செயல்
மன்னுயிர்க் கின்னா செயல்
மு.வ உரை:
தன் உயிருக்குத்
துன்பமானவை இவை என்று உணர்ந்தவன், அத் துன்பத்தை மற்ற
உயிருக்குச் செய்தல் என்ன காரணத்தாலோ.
சாலமன் பாப்பையா உரை:
அடுத்தவர் செய்த தீமை
தனக்குத் துன்பமானதை அனுபவித்து அறிந்தவன், அடுத்த
உயிர்களுக்குத் தீமை செய்ய எண்ணுவது என்ன காரணத்தால்?
கலைஞர் உரை:
பிறர் தரும் துன்பத்தால்
தனக்கேற்படும் துன்பத்தை உணர்ந்தவன் அந்தத் துன்பத்தைப் பிற உயிர்களுக்குத் தரவும்
கூடாதல்லவா?
குறள் 319:
பிறர்க்கின்னா முற்பகல்
செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்
பிற்பகல் தாமே வரும்
மு.வ உரை:
முற்பகலில் மற்றவருக்கு
துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து
சேரும்.
சாலமன் பாப்பையா உரை:
அடுத்தவர்க்குத் தீமையைக்
காலையில் செய்தால், நமக்குத் தீமை நம்மைத்
தேடி மாலையில் தானாக வரும்.
கலைஞர் உரை:
பிறருக்குத் தீங்கு
விளைவித்துவிட்டோம் என்று ஒருவர் மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே, அதேபோன்ற தீங்கு அவரையே தாக்கும்
குறள் 320:
நோயெல்லா நோய்செய்தார்
மேலவா நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்
நோயின்மை வேண்டு பவர்
மு.வ உரை:
துன்பம் எல்லாம் துன்பம்
செய்தவரையேச் சார்வன, ஆகையால் துன்பம் இல்லாமல்
வாழ்தலை விரும்புகின்றவர் பிறர்க்கு துன்பம் செய்யார்.
சாலமன் பாப்பையா உரை:
செய்யும் தீமை எல்லாம்
செய்தவர்க்கே, அதனால் நமக்குத் தீமை
வேண்டா என்பவர், அடுத்தவர்க்குத் தீமை
செய்யமாட்டார்.
கலைஞர் உரை:
தீங்கு செய்தவருக்கே
தீங்குகள் வந்து சேரும்; எனவே தீங்கற்ற வாழ்வை
விரும்புகிறவர்கள், பிறருக்குத் தீங்கிழைத்தல்
கூடாது
0 Comments