எள்ளாமை வேண்டுவா னென்பான்
எனைத்தொன்றுங்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு
கள்ளாமை காக்கதன் நெஞ்சு
மு.வ உரை:
பிறரால் இகழப்படால் வாழ
விரும்புகிறவன், எத்தன்மையானப் பொருளையும்
பிறரிடமிருந்து வஞ்சித்துக்கொள்ள எண்ணாதபடி தன் நெஞ்சைக் காக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
அடுத்தவர் நம்மை
இகழக்கூடாது என்று எண்ணுபவன், அடுத்தவர்க்குரிய எந்தப்
பொருளையும் மனத்தால்கூடத் திருட நினைக்கக்கூடாது.
கலைஞர் உரை:
எந்தப் பொருளையும்
களவாடும் நினைவு தன் நெஞ்சை அணுகாமல் பார்த்துக் (காத்துக்) கொள்பவனே இகழ்ச்சிக்கு
ஆட்படாமல் வாழ முடியும்
குறள் 282:
உள்ளத்தால் உள்ளலுந் தீதே
பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வே மெனல்
கள்ளத்தால் கள்வே மெனல்
மு.வ உரை:
குற்றமானதை உள்ளத்தால்
எண்ணுவதும் குற்றமே, அதானால் பிறன் பொருளை அவன்
அறியாதப் வகையால் வஞ்சித்துக்கொள்வோம் என்று எண்ணாதிருக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
அடுத்தவர் பொருளை
அவருக்குத் தெரியாமல் திருடுவோம் என்று மனத்தால் நினைப்பதும் தீமையானது.
கலைஞர் உரை:
பிறருக்குரிய பொருளைச்
சூழ்ச்சியினால் கவர்ந்து கொள்ளலாமா என்று ஒருவன் நினைப்பதேகூடக் குற்றமாகும்
குறள் 283:
களவினா லாகிய ஆக்கம்
அளவிறந்
தாவது போலக் கெடும்
தாவது போலக் கெடும்
மு.வ உரை:
களவு செய்து பொருள்
கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவது போல் தோன்றி இயல்பாக இருக்க வேண்டிய அளவையும்
கடந்து கெட்டு விடும்.
சாலமன் பாப்பையா உரை:
திருடுவதால் வரும் செல்வம், பெருகுவது போலத் தோன்றி விரைவில் அழியும்.
கலைஞர் உரை:
கொள்ளயடித்துப் பொருள்
குவிப்பது, முதலில் பெரிதாகத்
தோன்றினாலும், அந்தச் செயல் ஏற்கனவே
இருந்த செல்வத்தையும் அடித்து கொண்டு போய்விடும்
குறள் 284:
களவின்கண் கன்றிய காதல்
விளைவின்கண்
வீயா விழுமந் தரும்
வீயா விழுமந் தரும்
மு.வ உரை:
களவு செய்து பிறர் பொருள்
கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன்
விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும்.
சாலமன் பாப்பையா உரை:
அடுத்தவர் பொருளைத்
திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத
துன்பத்தைத் தரும்.
கலைஞர் உரை:
களவு செய்வதில் ஒருவனுக்கு
ஏற்படும் தணியாத தாகம், அதனால் உருவாகும்
விளைவுகளால் தீராத துன்பத்தை உண்டாக்கும்
குறள் 285:
அருள்கருதி அன்புடைய ராதல்
பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்க ணில்
பொச்சாப்புப் பார்ப்பார்க ணில்
மு.வ உரை:
அருளைப் பெரிதாகக்கருதி
அன்பு உடையவராய் நடத்தல், பிறருடைய பொருளைக்கவர
எண்ணி அவர் சோர்ந்திருக்கும் நிலையைப் பார்ப்பவரிடத்தில் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
அடுத்தவர் பொருளைத் திருட
எண்ணி, அவர் தளரும் நேரத்தை
எதிர்பார்த்து இருப்போர், அருள் மீது பற்று
உள்ளவராய் வாழ முடியாது.
கலைஞர் உரை:
மறந்திருக்கும் நேரம்
பார்த்துப் பிறர் பொருளைக் களவாட எண்ணுபவரிடத்தில், அருள்
கருதி அன்பாக நடக்கும் பண்பு இருக்காது
குறள் 286:
அளவின்கண் நின்றொழுக
லாற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்
கன்றிய காத லவர்
மு.வ உரை:
களவு செய்து பிறர் பொருள்
கொள்ளுதலில் மிக்க விருப்பம் உடையவர், அளவு
(சிக்கனம்) போற்றி வாழும் நெறியில் நின்று ஒழுக மாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:
உயிர்களை நேசிக்கும் ஆசை
இல்லாதவரே அடுத்தவர் பொருளைத் திருடும் பேராசை உடையவர் ஆவர்.
கலைஞர் உரை:
ஓர் எல்லைக்குட்பட்டு
வாழ்வைச் செம்மையாக அமைத்துக் கொள்ளாதவர்கள், களவு
செய்து பிறர் பொருளைக் கொள்வதில் நாட்டமுடையவராவார்கள்
குறள் 287:
களவென்னுங் காரறி வாண்மை
அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்க ணில்
ஆற்றல் புரிந்தார்க ணில்
மு.வ உரை:
களவு என்பதற்கு காரணமான
மயங்கிய அறிவு உடையவராயிருத்தல், அளவு அறிந்து வாழ்தலாகிய
ஆற்றலை விரும்பினவரிடத்தில் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
உயிர்களை நேசிக்கும் ஆசை
கொண்டவரிடம், அடுத்தவர் பொருளைத்
திருடும் இருண்ட அறிவு இராது.
கலைஞர் உரை:
அளவறிந்து வாழ்க்கை
நடத்துகிற ஆற்றலுடையவர்களிடம், களவாடுதல் எனும் சூதுமதி
கிடையாது
குறள் 288:
அளவறிந்தார் நெஞ்சத்
தறம்போல நிற்குங்
களவறிந்தார் நெஞ்சில் கரவு
களவறிந்தார் நெஞ்சில் கரவு
மு.வ உரை:
அளவறிந்து வாழ்கின்றவரின்
நெஞ்சில் நிற்கும் அறம் போல் களவு செய்து பழகி அறிந்தவரின் நெஞ்சில் வஞ்சம்
நிற்கும்.
சாலமன் பாப்பையா உரை:
உயிர்களை நேசிக்கும்
உள்ளத்துள் அறம் நிலைத்து இருப்பது போல, அடுத்தவர்
பொருளைத் திருட எண்ணுபவன் உள்ளத்துள் வஞ்சகம் இருக்கும்.
கலைஞர் உரை:
நேர்மையுள்ளவர் நெஞ்சம்
அறவழியில் செல்லும்; கொள்ளையடிப்போர் நெஞ்சமோ
குறுக்குவழியான வஞ்சக வழியில் செல்லும்
குறள் 289:
அளவல்ல செய்தாங்கே வீவர்
களவல்ல
மற்றைய தேற்றா தவர்
மற்றைய தேற்றா தவர்
மு.வ உரை:
களவு செய்தலைத் தவிர மற்ற
நல்லவழிகளைத் நம்பித் தெளியாதவர் அளவு அல்லாத செயல்களைச் செய்து அப்போதே
கெட்டழிவர்.
சாலமன் பாப்பையா உரை:
அடுத்தவர் பொருளைத்
திருடுவதைத் தவிர வேறொன்றும் தெரியாதவர் தகுதி அற்ற அந்தச் செயல்களாலேயே அழிந்து
போவார்.
கலைஞர் உரை:
அளவு என்பதைத் தவிர வேறு
நல்வழிகளை நாடாதவர்கள், வரம்பு கடந்த செயல்களால்
வாழ்விழந்து வீழ்வார்கள்
குறள் 290:
கள்வார்க்குத் தள்ளும்
உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு
தள்ளாது புத்தே ளுலகு
மு.வ உரை:
களவு செய்வார்க்கு உடலில்
உயிர் வாழும் வாழ்வும் தவறிப் போகும், களவு
செய்யாமல் வாழ்வோர்க்கு தேவருலகும் வாய்க்கத் தவறாது.
சாலமன் பாப்பையா உரை:
திருடுபவரை அவரது உயிரும்
வெறுக்கும்; திருடாதவரையோ தேவர்
உலகமும் வெறுக்காது.
கலைஞர் உரை:
களவாடுபவர்க்கு உயிர்
வாழ்வதேகூடத் தவறிப்போகும்; களவை நினைத்தும்
பார்க்காதவர்க்கோ, புகழுலக வாழ்க்கை தவறவே
தவறாது
0 Comments