வஞ்ச மனத்தான்
படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்
ஐந்தும் அகத்தே நகும்
மு.வ உரை:
வஞ்சமனம் உடையவனது
பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்க்கும் ஐந்து பூதங்களும் கண்டு
தம்முள் சிரிக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
வஞ்ச மனத்தவனின் திருட்டு
நடத்தையைக் கண்டு அவன் உடம்போடு கலந்து இருக்கும் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம்
என்னும் ஐந்து பூதங்களும் தமக்குள் சிரிக்கும்.
கலைஞர் உரை:
ஒழுக்க சீலரைப் போல
உலகத்தை ஏமாற்றும் வஞ்சகரைப் பார்த்து அவரது உடலில் கலந்துள்ள நிலம், நீர், தீ, காற்று, வெளி
எனப்படும் பஞ்சபூதங்களும் தமக்குள் சிரித்துக் கொள்ளும்
குறள் 272:
வானுயர் தோற்றம்
எவன்செய்யுந் தன்நெஞ்சத்
தானறி குற்றப் படின்
தானறி குற்றப் படின்
மு.வ உரை:
தன் மனம் தான் அறிந்த
குற்றத்தில் தங்குமானால் வானத்தைப் போல் உயர்ந்துள்ள தவக்கோலம் ஒருவனுக்கு என்ன
பயன் செய்யும்.
சாலமன் பாப்பையா உரை:
தன் மீது தன் நெஞ்சமே
குற்றம் சொல்லுமானால் மேலான நிலையினால் வரும் பலன்தான் என்ன?
கலைஞர் உரை:
தன் மனத்திற்குக் குற்றம்
என்று தெரிந்தும்கூட அதைச் செய்பவர், துறவுக்கோலம்
பூண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை
குறள் 273:
வலியில் நிலைமையான்
வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று
மு.வ உரை:
மனத்தை அடக்கும் வல்லமை
இல்லாதவன் மேற்கொண்ட வலிய தவக்கோலம், புலியின்
தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை பசு மேய்ந்தாற் போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
கெட்டவன் நல்லவன் போல
நடிப்பது, பசு புலியின் தோலைப்
போர்த்திக் கொண்டு மேய்ந்தது போலாகும்.
கலைஞர் உரை:
மனத்தை அடக்க முடியாதவர்
துறவுக்கோலம் பூணுவது, பசு ஒன்று புலித்தோலைப்
போர்த்திக் கொண்டு பயிரை மேய்வது போன்றதாகும்
குறள் 274:
தவமறைந் தல்லவை செய்தல்
புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று
மு.வ உரை:
தவக்கோலத்தில் மறைந்து
கொண்டு தவம் அல்லாத தீயச்செயல்களைச் செய்தல், புதரில்
மறைந்து கொண்டு வேடன் பறவைகளை வலைவீசிப் பிடித்தலைப் போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
மேலான நிலையில் இருந்தும்
கீழான செயல்களைச் செய்வது, வேட்டை ஆடுபவர்
புதருக்குப் பின் மறைந்து நின்று பறவைகளைப் பிடிப்பது போலாம்.
கலைஞர் உரை:
புதரில் மறைந்து கொண்டு
வேடன் பறவைகளைக் கண்ணி வைத்துப் பிடிப்பதற்கும், தவக்கோலத்தில்
இருப்பவர்கள் தகாத செயல்களில் ஈடுபடுவதற்கும் வேறுபாடு இல்லை
குறள் 275:
பற்றற்றேம் என்பார்
படிற்றொழுக்கம் எற்றெற்றென்
றேதம் பலவுந் தரும்
றேதம் பலவுந் தரும்
மு.வ உரை:
பற்றுக்களைத் துறந்தோம்
என்று சொல்கின்றவரின் பொய்யொழுக்கம் என்ன செய்தோம் என்ன செய்தோம் என்று வருந்தும்
படியான துன்பம் பலவும் தரும்.
சாலமன் பாப்பையா உரை:
எத்தகைய பற்றுகளும்
இல்லாதவர் என்று வாயால் சொல்லிச் செயலால் தவறாக வாழ்பவரின் வாழ்க்கை, பிறகு ஏன் அப்படிச் செய்தோம் ஏன் அப்படிச்
செய்தோம் என்று வருந்தும்படி பல துன்பங்களையும் தரும்.
கலைஞர் உரை:
எத்தகைய செயல்
புரிந்துவிட்டோம் என்று தமக்குத் தாமே வருந்த வேண்டிய துன்பம், பற்றுகளை விட்டு விட்டதாகப் பொய்கூறி, உலகை ஏமாற்றுவோர்க்கு வந்து சேரும்
குறள் 276:
நெஞ்சின் துறவார்
துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணா ரில்
வாழ்வாரின் வன்கணா ரில்
மு.வ உரை:
மனத்தில் பற்றுக்களைத்
துறக்காமல் துறந்தவரைப் போல் வஞ்சனைச் செய்து வாழ்கின்றவரைப் போல் இரக்கமற்றவர்
எவரும் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
மனத்துள் எதையும்
வெறுக்காமல், வெளியே வெறுத்தவர் போல்
ஏமாற்றி வாழும் மனிதரைக் காட்டிலும் கொடியவர், இவ்வுலகத்தில்
இல்லை.
கலைஞர் உரை:
உண்மையிலேயே மனதாரப்
பற்றுகளைத் துறக்காமல் துறந்தவரைப் போல் வாழ்கின்ற வஞ்சகர்களைவிட இரக்கமற்றவர்
யாருமில்லை
குறள் 277:
புறங்குன்றி கண்டனைய
ரேனும் அகங்குன்றி
மூக்கிற் கரியா ருடைத்து
மூக்கிற் கரியா ருடைத்து
மு.வ உரை:
புறத்தில் குன்றிமணிப்போல்
செம்மையானவராய் காணப்பட்டாராயினும் அகத்தில் குன்றிமணியின் மூக்குப்போல்
கருத்திருப்பவர் உலகில் உணடு.
சாலமன் பாப்பையா உரை:
குன்றிமணியின் மேனியைப்
போல் வெளித் தோற்றத்தில் நல்லவராயும், குன்றிமணியின்
மூக்கு கறுத்து இருப்பதுபோல் மனத்தால் கரியவராகவும் வாழ்வோர் இவ்வுலகில் இருக்கவே
செய்கின்றனர்.
கலைஞர் உரை:
வெளித்தோற்றத்துக்குக்
குன்றிமணி போல் சிவப்பாக இருந்தாலும், குன்றிமணியின்
முனைபோலக் கறுத்த மனம் படைத்தவர்களும் உலகில் உண்டு
குறள் 278:
மனத்தது மாசாக மாண்டார்நீ
ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்
மறைந்தொழுகு மாந்தர் பலர்
மு.வ உரை:
மனத்தில் மாசு இருக்க, தவத்தால் மாண்பு பெற்றவரைப்போல், நீரில் மறைந்து நடக்கும் வஞ்சனை உடைய மாந்தர்
உலகில் பலர் உள்ளனர்.
சாலமன் பாப்பையா உரை:
மனம் முழுக்க இருட்டு; வெளியே தூய நீரில் குளித்து வருபவர்போல் போலி
வெளிச்சம் - இப்படி வாழும் மனிதர் பலர் இருக்கின்றனர்.
கலைஞர் உரை:
நீருக்குள் மூழ்கியோர்
தம்மை மறைத்துக் கொள்வது போல, மாண்புடையோர் எனும்
பெயருக்குள் தம்மை மறைத்துக்கொண்டு மனத்தில் மாசுடையோர் பலர் உலவுகின்றனர்
குறள் 279:
கணைகொடியது யாழ்கோடு
செவ்விதாங் கனை
வினைபடு பாலாற் கொளல்
வினைபடு பாலாற் கொளல்
மு.வ உரை:
நேராகத் தோன்றினும் அம்பு
கொடியது; வளைவுடன் தோன்றினாலும்
யாழின் கொம்பு நன்மையானது. மக்களின் பண்புகளையும் செயல்வகையால் உணர்ந்துகொள்ள
வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
வடிவால் நேரானது என்றாலும்
செயலால் அம்பு கொடியது. கழுத்தால் வளைந்தது ஆயினும் செயலால் யாழ் இனிது. அதனால்
தோற்றத்தால் அன்றிச் செயலால் மனிதரை எடை போடுக.
கலைஞர் உரை:
நேராகத் தோன்றும் அம்பு, கொலைச் செயல் புரியும் வளைந்து தோன்றும் யாழ், இசை, இன்பம்
பயக்கும் அது போலவே மக்களின் பண்புகளையும் அவர்களது செயலால் மட்டுமே உணர்ந்து
கொள்ள வேண்டும்
குறள் 280:
மழித்தலும் நீட்டலும்
வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின்
பழித்த தொழித்து விடின்
மு.வ உரை:
உலகம் பழிக்கும்
தீயொழுக்கத்தை விட்டு விட்டால் மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலுமாகிய
புறக்கோலங்கள் வேண்டா.
சாலமன் பாப்பையா உரை:
உயர்ந்தோர் வெறுத்தவற்றை
மனத்தால் ஒதுக்கிவிட்ட பின் தலைமுடியைச் சிரைத்தல், நீள
வளர்த்தல் என்பன பற்றி எண்ண வேண்டா.
கலைஞர் உரை:
உலகத்தாரின் பழிப்புக்கு
உள்ளாகும் செயல்களைத் துறக்காமல் ஒரு துறவி, தனது
தலையை மொட்டையடித்துக் கொண்டோ, சடாமுடி வளர்த்துக் கொண்டோ
கோலத்தை மட்டும் மாற்றிக் கொள்வது ஒரு ஏமாற்று வித்தையே ஆகும்
0 Comments